Tuesday 8 December 2015

எச்சரிக்கை


மழை மேகம்  கூடுவதைக்
கண்டதுமே பிதுங்குகின்றது
கரு விழி கொஞ்சம் ....///

சில நாட்களாக அவை
கொடுத்த கொடுமை
 கண்டு நடுங்குகின்றது
 கால்கள் நின்று ....////

காற்ரோடு சேர்ந்து
கரு மேகமும் கை
கோர்க்கையிலே
 நிமிர்ந்து பார்த்து
ஏங்குகின்றது மனம்
ஓட்டு வீட்டையும்
குணிந்து பார்த்து
கலங்குகின்றது
தரையையும்மெதுவாக ..///

கையில் கிடைத்த
 துணிகளை பையில்
அடுக்குவதும் பதபடுத்திய
 உணவை டப்பாவில்
அடைப்பதும் முக்கிய
பத்திரங்களை கைப்
 பற்றுவதுமாக. பர பரப்பாக
 பட படப்புடன் இல்லத்தரசிகள் ....////

எச்சரிக்கை மணி இப்போது
 எல்லோரின் மூளையிலும்
கட்சிதமாக பணியாற்றுகின்றது ...///

No comments:

Post a Comment