Thursday 26 August 2021

சோறு கொண்டு போறவளே


சோறு கொண்டு போற 
புள்ள /
சோக்கான சின்னப் 
புள்ள /
சோடி போட்டுக்கத்தான் ராசி 
இல்ல நமக்குள்ள /
சோகமும் வந்து 
தேங்குது நெஞ்சுக்குள்ள /

உம் பேச்சோ கருவாட்டு வாசம் 
புள்ள/
ஒம் பின்னாடி நானும் நாயி போல 
புள்ள /
ஒங் கை பட்ட சாதமும் அமிர்தம் 
புள்ள/
உக்காந்து உண்ணத் தான் 
நேக்கும் கொடுப்பன 
இல்ல/

மின்னல் பார்வையும் அன்ன
 நடையும் அள்ளுது 
புள்ள /
மினுக்கிய சேலையும் 
தழுக்குடம்பும் கொல்லுது 
புள்ள/
பின்னிய சடையும் 
கிள்ளிச் செருகிய பூவும்  மயக்குது 
புள்ள/
பிரிஞ்சுட்ட சொந்தத்தில் 
புறந்ததை எண்ணி வருந்துறேன் 
புள்ள/

மாமன் மகளே காத்திருப்பேன் 
மாமாங்கம் ஆனாலும் 
புள்ள/
மாற்றான் மவ கழுத்துக்கு 
மாலை ஏற்றிக்க மாட்டேன் 
புள்ள /
மாசி படியா மனசு
புள்ள /
மச்சான் யென்னை நேசி 
புள்ள/
ஒன் தூக்கு சட்டிக்க மாட்டிக்கிட்ட 
பிடி கொழுக்கட்டையானேன் 
புள்ள /

சட்டையிலே ஒட்டிக்கிட்ட நாயுருவி 
போல/
கட்டையிலே பூத்துக்கிட்ட காளான் 
போல /
மட்டையிலே கிறுக்கிக்கிட்ட ஓவியம் 
போல/
தட்டையான ஏன்  மார்பில் நீயும்  
பச்ச குத்திகிட்டாய் கன்னிப்  
புள்ள/



(தவறுகள் தென் பட்டால் கூறுங்கள் 😊/

Sunday 11 July 2021

உள்ளத்தை கொன்றுவிட்டாய்

நத்தை போல் வார்த்தைகளால்
ஊர்ந்து/
மெத்தை வரை அன்பை 
வளர்ப்போம் /
எனக் குறும்பாய் சுவையோடு வம்பளர்ந்து /
அரும்பு மனசை தூண்டியாய் 
இழுத்தவனே/

கொத்தோடு மலர்களைக் கையினில் கொடுத்து /
கண்ணாலே மயக்கி முன்னாலும் பின்னாலும் நோக்கி/
மத்தாப்பு பேச்சினால் நெஞ்சத்தை அணைத்தவனே /

பத்தாம் வகுப்புப் பாடத்தை சுத்தமாய் அழித்தாய் /
சிந்தனைக்குள் கொண்டு வந்து உன்னை நுழைத்தாய் /
சின்னப் பொண்ணு இதயத்தை உன் மாளிகையாக்கினாய்/

பக்கம் வந்து வெட்கம் பரப்பி/ சொன்னாயே ஒரு சொல்  /
சொத்துச் சுகம் வேண்டாம் /
சொந்தமென வந்து விடு என்று /

இணைந்தோம்  வேலியின் அகலம் பார்த்தோம்/
காதலை வளர்த்து ஆழத்தை ஆழியோடு ஒப்பிட்டோம்/
அழகாய் சொல் எடுத்து  கவிதை சமைத்தோம் /
கடலை  விட நம் காதலே ஆழமென களிப்புற்றோம் /

அத்தனையும் இப்போது என்னாச்சு
இன்னொருத்தியோடு கொடுத்தாயே நெருக்கமாய் காட்சி /
உணர்வைக் கெடுத்து  உயிரை 
எரித்து /
உள்ளத்தைக் கொன்று விட்டாய் /
பித்தனே உமக்கில்லையோ மனச்சாட்சி/

Thursday 8 July 2021

கிராமியக் கவிதை


ஒங் கட்டழகில் கண்ண
வச்சேன்.
மொட்டாய் நெஞ்சமும் 
மலர்ந்திடிச்சு.
ஒங் கட்டு மீச
மேல ஆச  வச்சேன்.
கட்டுக் கரும்பாட்டம் 
மோகமும் வளர்ந்திடிச்சு.

அய்யனார் சாமியாட்டம் நீ எண்ணு 
பொய் சொல்லிக்க மாட்டேன் நானும்.
வீச்சருவாள் பார்வ  எண்ணு
கத வீசிக்கவும் மாட்டேன் நானும்.
ஆனாலும் யென் நெஞ்சத்திலே
மஞ்சமிட்ட சிங்கமடா நீயும்.

பேச்சுக்குள்ளே  காந்தம் வச்ச
வார்த்தையாலே வளைச்சிப் போட்ட.
உசுரைக் கொள்ளையிட்டு.
மூச்சைக் கொன்னு போட்டாயடா நீயும்.

பாதமும் தடுமாறி பாதையும் 
தடம் மாறி போனாயே நீயெடா.
பேதை இவ உள்ளத்திலே
நீ சொல்லால் நட்டுக்கிட்ட
செடியோ முள்ளாய்க் குத்துவதைப் பாரடா.



(ஓவியருக்கு வாழ்த்துகள்)