Sunday 31 July 2016

கவிதையினாலே

ஏமாற்றி ஏமாற்றி ஏணி ஏறவே
நினைப்போர் தான் நிறைந்து
வருகின்றார்கள் உலகினிலே

  ஊரார் பணத்தை ஓடி வாரி
சுறுட்டுவோர்  விலாசம் கிடைத்தால்
காட்டிக் கொடுப்பேன் கவிதையினாலே 

பொய் முகம் காட்டி பொய் உரைக்கும் 
ஆசாமிகளின் முகத்திரை 
கிழிப்பேன் கவிதையினாலே  

ஊதி அனைக்க. நின்று எரியும்
தீபம் இல்லை என்றும் நின்று
ஒளி கொடுக்கும் கதிரவன்  என
உணர்த்துவேன் கவிதையினாலே 

தீச்சுடர் போல் வரிகளினாலே
அனல் பறக்கும் சொல் எடுத்து
எரிமலை போல்  வார்த்தை கொண்டு
சுட்டெரிப்பேன் நான் கவிதையினாலே.

                     

எனது நூல் பற்றியவை

http://www.importmirror.com/2016/07/blog-post_829.html

Friday 29 July 2016

விடை தெரியாமலே


எனக்கும் காதல் ஆசை
வந்தவை தப்பா
இல்லை அந்த
ஆசை உன் மேல்
வந்தது தப்பா நான்
அறியாத விடையெடா....!!

ஆசையோடு உன்னை
நெருங்கி நாளு வார்த்தை
அன்பாகப் பேச வரும்
போது நீ காட்டும்
அலட்சியமோ என் மனதை
ரணமாக்குதடா...!!!

ஆசையைக் கூறவும்
முடியாமல் உன்னிடம்
மறக்கவும் முடியாமல்
உன்னை நான்
உயிரோடு நடமாடும்
பிணம் போல்
ஆனேனடா ....!!!!

இரத்தமும் தசையுமாக
இருந்த என் இதயம்
இன்று உன்
வெறுப்பையும்
முறைப்பையும்
பார்த்துப் பார்த்து
கொஞ்சம் கொஞ்சமாக
ஏங்கியே இறக்கின்றதுதட.!!!

மன வளர்ச்சி
இல்லாதவர்களுக்கு
மறு வாழ்வு உள்ளதட..
என் வாழ்வோ உன்
இல்லமட...

என் ஆசை  தஞ்சமானதோ
உன் நெஞ்சமட.இவை
இல்லை என்றால்
இந்த வஞ்சி நெஞ்சம்
பஞ்சாக  ஆனதுடா....

  

திராட்சைப் பழம்

திராட்சைப்பழம் சின்ன
சின்ன திராட்சைப்பழம் .
கொத்துக் கொத்தாய்
காய்க்கும் குலை
குலையயாகத்
தொங்கும் திராட்சைப்பழம் .

கட்டிய துணைப் பந்தலின்
மேலே தொங்கும் திராட்சைப் பழம்.

கீழ் அமர்ந்த நரியுமே
எட்டிடாமலே பழத்தை
தொட்டிடாமல் நகர்ந்த
போதும் உதிர்ந்திடாமல்
தொங்கிய திராட்சைப் பழம்.

பார்க்கப் பார்க்க ஆசை
வரும் காசைக் கொடுத்து
வாங்கி உண்ணவே
சுவையைத் தரும் திராட்சைப்பழம்.

காற்றில் கொடி ஆடவே
கொடியோடு சேர்ந்து
ஊஞ்சல் ஆடி கண்ணுக்கு
அழகு காட்சி கொடுக்கும்
திராட்சைப்  பழம்.

வண்ணங்கள்
இரண்டைக் கொண்டவை
இனிப்பு நிறைந்த
திராட்சைப் பழம்.

சத்துக்கள் தான்
நிறைந்த பழம் சரம்போல்
தொங்கி சிறியோர்
முதல் பெரியோர் வரை
சுவைக்க முள் இல்லா திராட்சைப்பழம் .

விதை இல்லாப் பழம்
உண்டு விதை
நிறைந்த பழம்
உண்டு இரண்டுக்கும் வேற்றுமை
விலை ஏற்றம்  இறக்கம்
கொண்டு சந்தையிலே
விற்பனையாகிறதே திராட்சை பழம்
எச்சில் ஊற வைக்கும் திராட்சைப் பழம்.

  

புரிகிறதா

தடம் புரண்டு ஓடும் நீர்
தண்டபாலம் தாண்டி ஓடும்
தவறாமல் பள்ளம் சேரும்
இடம் தேடி ஓடையிலே ஓடை
நீரை தழுவியே ஓடையை
நிறைப்பியே ஓயாமல் ஓடும்
ஓடும் வளியில் மோதும்
மலையில்  தடங்கள் வந்தாலும் 
பெருக்கு எடுத்த நீர் பொறுத்து நிற்காது 
தென் படுவது அனைத்தையும்
நொறுக்கியாவது கடக்க நினைக்கும்
கிணற்று நீரை போல் அடை படாமலே
ஆறு குளம் காணும் வரை ஓடும் நீரைப்போல்
நீயும் துணிந்து ஓடு நிலத்தின் மேல்
வாழும் போதே நினைவில் இருக்கும் படி
உன் பெயரைப் பதிய விடு நல்லோர்
சான்றோர் நெஞ்சினிலே...

      

நொந்த உள்ளம்


வாழ்க்கையை மனம்
வெறுக்கின்றது
இருந்தும் மரணத்தை
நெருங்க அது பயம்
கொள்கின்றது...!!!

வேதனை நிறைந்து
விட்டதாலே நெஞ்சில்
இன்பத்துக்கு இடம்
இல்லாமல் போய்
விட்டது.....!!!

ஆசையோ அளவு
இல்லாமல் வருகின்றது
சிறு துளி யேனும் நிறை
வேறாமல்
மறைகின்றது...!!

சோகம் என்னை
விலை கொடுத்து
வாங்கி விட்டதோ
நான் அறியேன்
சந்தோசம் என்னை
வெறுக்கின்றது...!!!

காதல் கொள்ள
முடியாத பதுமை
நான்  வாழ்க்கை
இல்லா வாழ்கையாக
வாழும் ஜீவன்ஆனேன்...!!

ஓ...இறைவா நீ
கொடுத்த வரமா
இது இல்லை நான்
பெற்ற சாபமா இது
சொல்வாயா..??

உன்னை நான்
நேசிக்கும் பெண்
இருந்தும் சொல்ல
முடியாத நிலமையை
கொண்ட பாவி நான்
அன்பே நீ என் உயிர்
நான் உன்னை சுமக்கும்
உடலானேன்....!!

உன்னை நினைத்து
நினைத்து நொந்த
உள்ளம் வெந்த பின்னும்
உன் பெயரையே மெதுவாக
உச்சரிக்கின்றது....!!

காதலா இல்லை
கானலா  எதுவாக
இருப்பின் உன்
நினைவே என் வாழ்வு
நொந்த உள்ளத்துக்கு
மருந்தாக உன்னுடைய
பெயர் தான் அன்பே...!!!

    

உன்னாலே எல்லாம் உன்னாலே


தேள் கொட்டியதும்
தெரியாமல் அமர்ந்து
இருக்கின்றேன்..
உன்னாலே..எல்லாம்
உன்னாலே....!!!

தேள் ஒன்று ஓடுது
என்று காட்டி விட்டு
அது கொட்டும் போது
வந்த வலி கூடத்
தெரியலயே...
உன்னாலே எல்லாம்
உன்னாலே....!!!

என் உள்ளத்தின் வலி
அதிகரித்ததால் உடலின்
வலி தெரியலயே..
உன்னாலே..எல்லாம்
உன்னாலே...!!!

வலி...வலி..என்று
வரி..வரியாக
வரைகின்றேன் எழுது
கோலின் வலியையும்
மறந்து...உன்னாலே
எல்லாம்...உன்னாலே...!!!

நினைத்து..நினைத்து
நினைவயும் இழந்து
நிம்மதி என்னும்
சொல்லையும் மறந்தேன்
உன்னாலே..எல்லாம்
உன்னாலே...!!!

உயிர் உள்ளது தெரிகின்றது
உணர்வு உள்ளதும்
புரிகின்றது உணர்ச்சியும்
வருகின்றது எல்லாம்
என்னைப் பார்த்து கேலி
செய்கின்றது..உன்னாலே
எல்லாம்..உன்னாலே...!!

ஒரு முறை நான் கேட்ட
வரம் கிடைத்தால் அதுகும்
உன்னாலே..உன்னாலே..
மட்டுமே  கிடைக்க வேண்டும்
என்பதே..என்நாளும்..
என்நாளும் என் ஆசையே...!!!

    

மனிதம் இல்லா மனிதன்


படிப்பு அறிவு
இல்லாத சில
பாமர மக்களை
பணத்தைக் காட்டி
மனதை மாத்தும்
சில முதலாளிகள்...!!

இவர்கள் கொடுமை
உலகில் பல பாகங்களில்
தலை விரித்தாடுகின்றது
எமனுக்கு ஓலை அனுப்பும்
இவர்களை முட்டாள்
மக்கள் இறைவனாகப்
பார்வையிடுவது தான்
மனதில் வேதனை...!!

அவர்களின் அறியாமைத்
தனத்தால்  எத்தனையோ
மழலைகளையும்  சில
முதியோரையும் வாரி
சுருட்டி தூக்கி எமனிடம்
கொடுக்கும் நிலமை...!!

உழைப்பின் ஊதியக்
குறைவால் ஏழைகள்
தங்கள் உடல் நலம்
பற்றிக் கவலை கொள்வது
இல்லை  எங்கே மலிவான
விலையில் பொருட்கள்
கிடைக்கின்றதோ அதையே
விரும்பி வாங்குகின்றனர்...!!

ஐம்பது பைசா மிச்சம்
பிடிப்பதாக நினைத்து
ஐம்பதாயிரம் செலவு
செய்ய வேண்டிய ஒரு
நோயைத் தேடி எடுத்து
விடுகின்றனர்...!!!

ஆம் எங்கு கோழிப்
பண்ணை இருக்கின்றதோ
அங்கே இந்த(..ஈ)த் தொல்லை
இருக்கும்  இதைப் படித்த
மக்கள் அறிந்துள்ளதால்
அவர்கள் குடியிருக்கும்
குடிருப்பு பகுதியில்
பண்ணை கட்ட அணுமதி
கொடுப்பது இல்லை...!!!

இதனாலயே  சில
முதலாளிமார்களின்
பார்வை கிராமத்தின்
பக்கம் சாய்கின்றது
ஆசை வார்த்தை பேசி
அவர்களை ஏமாற்றி
விடுகின்றனர் வேலை
தருவதாகவும் விலை
குறைவாக கோழி..முட்டை
கொடுப்பதாகவும்  கூறியே...!!

பாவம் அவர்களும்
இதை நம்பி ஏமாந்து
விடுகின்றனர் (ஈ)யால்
வரும் நோயை அறியாத
மக்கள் இது கொடுமையிலும்
கொடுமையானது...!!!

        

தினுசுகளை

நேரமும் காலமும்
எனை விட்டு விரைந்து
செல்கின்றது  .

கவலையும் சோகமும்
எனை நெருங்கியே
வருகின்றது.

கற்பனையும்
கனவும் கலைந்தும்
மறைந்தும் செல்கின்றது.

காதலும் ஓவியமும்
தொடர மறுக்கின்றது.

ஆனால் உன் நினைவு மட்டும்
என்னை இறுக்கப்
பிடித்து முறுக்காய்
நொறுக்குதுடா என்
இதயத் தினுசுகளை.

   

என் உயிர் கலந்த சொந்தம்


ஊரார்  முகம்  சுளிக்கையில்
உறவுகள் ஒதிங்கி  நிற்கையில்
பெற்ற பிள்ளையும் பார்க்காது வெறுக்கையில்
நான்  மட்டும் ஒட்டிக்
கொண்டேன்  அவர் தோள் சாய்ந்துகொண்டேன் .!!!

சுகம்  கொடுக்காமல் போனாலும்
என் சுமையை அவர் தோள் தாங்கும்
என்னும்  நம்பிக்கையில்...!!

ஊரார் கண்ணுக்குத் தெரிவது
உடலில் உள்ள அசிங்கம் என் கண்ணுக்குத்
தெரிவது அவர் உள்ளம்...!!

உருவம் இல்லாத காதலோடு நாங்கள்
வாழ்க்கை நடத்துவதால் உருவத்தில்
உள்ள குறையை என் கண் கண்டு
கொள்வது இல்லை....!!

அவர் என் உயிர் அவர் என் வாழ்வு
அவர் என் கணவன் அவர்தான்
என் உலகம் கணவனே கண் கணட
தெய்வம் என்பார்கள் அது நிஜமா
பொய்யா அதை நான் அறியேன்  ஆனால்
என் உயிரே இவர்தான்  என் மூச்சே
இவர்தான் ....!!

அன்பான மனைவியின்
ஆரோக்கியமான வார்த்தை.

         

ஏற்புரை

பெற்றோரை வணங்கி
தமிழைப் போற்றி
தமிழ் மண்ணை மதித்து
தமிழை வளர்க்கவும்
தமிழை வாழ்த்தவும்
மிகத் தொலை தூரத்தில்
இருந்து வருகை
தந்திருக்கும் தமிழ்
நெஞ்சங்கள் அனைவருக்கும்
இந்த சிறிய தமிழ் மகளின்
இனிய வணக்கங்கள்  

கரை சேராத படகு  என்னும் என் 
கற்பனைக் கருக்குழந்தையை
கரை சேர்க்க துடுப்பாய் துடிப்போடு
கூடியுள்ள உறவுகளே 

குயில் குப்பம் போல்
குடிசைகளும் கூட்டமாய்  பறவைகள்
வாழும் பச்சைக் காடுகளையும்
ஓயாது ஓசை கொடுக்கும்  ஆழ் கடலையும்
நிரை நிரையான பனை மரங்களையும்
கொண்ட அழகிய சிறிய கிராமத்துக்
குயில் தான் உங்கள் கலா 

அப்படியான ஓர் இடத்தில் இருந்து வந்திருக்கும்
என் எழுத்து வடிவை ரசித்தோரையும்
சுவைத்தோரையும் தூற்றியோரையும்
போற்றியோரையும்  விமர்சனம் செய்தோரையும்
வாழ்த்தியோரையும் வரவேற்கின்றேன்
உங்கள் கருத்துக்களை நான் முழுமனதோடு
ஏற்றுக்கொள்கின்றேன் 

தடக்காத கால்கள் இல்லை தடக்கி விழுந்து
எழுவதுதான் முயற்சிக்கு முதல் புள்ளி
அதுபோல் தான் எனது இலக்கியப் பயணமும்  
தட்டிக் கொடுப்போரை மட்டும் இல்லை தட்டி
வீழ்த்துவோரையும் நான் மதிக்கின்றேன்
காரணம் எனக்குள் இருக்கும் தன் நம்பிக்கையை
தட்டி விடும் உறவு அவர்கள் தான் 

ஆம் இன்று உங்கள் முன் நான் மேடையில்
என்றால்  என்னை தட்டிக் கொடுத்தோரை விட
தட்டி வீழ்த்த நினைத்தோரோ காரணமாக
இருப்பார்கள்  என்னை வார்த்தையாலும்
கருத்தாலும் சிப்பமாக்கியவர்கள்  அவர்களே தான்
என் ஆசான்கள் .

முகநூலில் கிடைத்த முத்து  நட்பாகக் கிடைத்த
சொத்து இந்த துறை முகத்தில்
பிறந்தவளுக்கு துறை முகத்தில்
இருந்து கிடைத்த அன்பு தோழன் துரை
முகநூலில் கவிப்பயணத்துக்கு பாதை
போட்டான்  உலகுக்கு என்னை அடையாளம்
காட்டியது  சகோதரி  ஹிதாயா   இவர்களுக்கு
என்றும் கூறுவேன் நன்றிகள்

தூக்கம் விழித்து தொலைவில்
இருந்து வாழ்த்த வந்த அனைவருக்கும்
தடாகம் கலை இலக்கியவட்டத்துக்கும்
எனது மனநிறைவோடு இரு கரம் கூப்பிய நன்றிகள் 

(என் நூல் வெளியீட்டின் போது நான் உரைத்த ஏற்புரை
உள்ளத்தில் இருந்து வந்தவை) )

கொடுமை

போட்டியும் பொறாமையும் ஈட்டியின் முனைபோலே
எதிரியையும் கொல்லும் குறி தவறினால்
நோக்குவோரையும் கொல்லும்  
குறை கூறாத விழா இல்லை குறை கூறவில்லை
என்றால் அது முழுமையான விழாவும் இல்லை
தோள் கொடுப்பான் தோழன் என்ற சொல்
தொலைந்து விட்டது தோள் கொடுக்க
வருவோரையும் துரத்தி அடிக்கும் கரங்கள்
நிறைந்து விட்டது 

வாயாலே வாழ்த்துரைக்கான் (ள் )
வந்து நின்று போற்றி முடிக்கான் (ள் )
சென்ற பின்னே தூற்றி இருக்கான் (ள் )
பொல்லாத உலகமடா நாம் வாழும் சமுதாயமடா 

கொடுவார் கொடுக்க இடையிலே பெகுண்டு
எழுகின்றான் கெடுக்க
நேரம் ஒதிக்கி செய்தி கொடுக்கான் (ள் )
பணம் செலுத்தி தொலைபேசி எடுக்கான் (ள் )
பொறாமை தீயினிலே வெந்து துடிக்கான் (ள் )

வேண்டாம் வேண்டாம் நட்பு என்று
வந்து நட்டப் படுத்த வேண்டாம்
உறவு என்று கூறி குழியில் தள்ள வேண்டாம்
பாசம் என்று உரைத்து
பாசானம் கொடுக்க வேண்டாம்
கொடுமையிலும் கொடுமை நம்பி இருப்போரை
நம்ப வைத்து கழுத்தை அறுப்பவைதான்
பெரும்   கொடுமை.

     

அஞ்சலி

எல்லை இல்லா நிலத்திலே
வற்றாத குளமாக அப்துல் கலாம்

எல்லை தாண்டி விண்ணை நோக்கி
புறப்பட்டது அவர் மூச்சு நில்லாமல்

நிலை இல்லா வாழ்விலே நினைவாக
உலாவுகின்றது அவரின் நிழல் படம்

விஞ்ஞானத்தை அஞ்சாமல் அணைத்துக்
கொண்டது பஞ்சதந்திரம் 

அஞ்சலி தூவ
எஞ்சியது எல்லோருக்கும் அவர் ஞாபகம்

இன்று ஒரு நாள் போதுமா இனி என்றும்
தொடருவது அவரின்  நினைவு ஒன்றேதான்

மானிடர்களே தமிழ் நாட்டுக்கு கிடைத்த
மாணிக்கத்துக்கு மறவாமல் உதிர்த்துவிடுங்கள்
கண்ணீர்ப் பூக்களை.....\

பெண் நிலா

வண்ணம் இல்லா நிலா
என் உள்ளத்தைக் கொள்ளை
கொண்ட நிலா
வண்ணம் தீட்ட எண்ணினேன்
அவள் பெண்மை என்று தள்ளி
நின்றாள்
சொல்லிக் கொள்ள என்னிடம்
வார்த்தை இல்லை
பள்ளி கொண்டேன் அவள் அழகினிலே
கள்ளி அவள் என் கண்ணில் நிறைந்து
விட்டாள்
நித்திரையைப் பறித்து விட்டாள்
அவளை ரசித்த வண்ணம் நானும்
என் வீட்டு முற்றத்திலே.

உள்ளமது

முத்துப் போல் சொத்தாக
உனை நான் சேர்த்தேன்
சத்தம் இன்றி யுத்தம் இன்றி
நீயும் எனை அடைந்தாய்....\

செத்த பின்பும் உனைச்
சுற்றும் என் ஜீவன் இது
தேவலோக தேவதை மேல்
சத்தியமே என் ராசா.....\

உனை மட்டும் என் உள்ளம்
தேடுதே நாடுதே உனை
அடைய பல வழி பார்க்கின்றதே
இது உமக்கு தெரியாதோ என் ராசா....\

துணை ஒன்று தேவை அவை
நீயாக வேண்டும் என்று தொழாத
நாள் இல்லையே நான் ராசா....\

தொட்டு விட மட்டும் இல்லை
தூக்கி விடும் கரமும் உன்
கரமாகவே இருக்க வேண்டும்
என்று கரகாட்டம் போடுதையா
ரோஜா பூ  போன்ற
என் உள்ளமது  ராசா.....\