Friday 29 November 2019

தடம் மாறும் தளிர்கள்



பிறப்பிலும் வளர்ப்பிலும் பெற்றவர்களிடம் குறையில்லை.
அறிவிலும் ஊக்கத்திலும்  
பிள்ளையிடம் குறையில்லை.
படிப்பிலும் திறமையிலும் 
நிறைகுடமான  பிள்ளை.
அன்பிலும் பண்பிலும் 
கோபுரமான கிள்ளை.
தனக்கான சுதந்திரம் தேடிடும் வேளை.


பாதையை மாற்றும் நண்பர்கள் 
பழக்கம் .
போதை  ஏற்றும் தோழியர் 
நெருக்கம்.
ஆசையைக் கூட்டிடும் பருவ 
மாற்றமும்.
அகந்தையை வளர்க்கும் வயதின் ஏற்றமும்.
தாயின் பாசத்தை நெஞ்சில் 
கரைக்கும் .
தந்தையின்  அறிவுரையை ஏற்றுக்க மறுக்கும்.


கிளை பற்றாக்  கொடியும் 
சொல் கேளாப் பிள்ளையும் 
பலன் அளிப்பதில்லை.
இணைய தளமும் சினிமாவும்  கொள்ளியிடும்
வாழ்க்கை  இளமையிலே கருகிய பின்னே .
நினைத்துக் கதறுவதால்  பயனில்லை கண்ணே.


Wednesday 27 November 2019

சான்றிதழ்

ஆக்கத்தின் ஊக்கம்

நினைப்பதெல்லாம நடந்து விட்டால்.



நினைவுக்கும் பெரும் 
வலிமை  உண்டு/
நடத்தி முடி அதனைச் 
செயலாய்க்  கொட்டு/

கற்பனையில் எத்தனையோ 
நித்தமும் தோன்றும்/
அத்தனையும் வெற்றிக் கனி கொடுப்பதில்லை/

முயற்சியும் வீழ்ச்சி 
காண்பதுண்டு/
வீழ்ந்தவன் எழுந்து 
வெல்வதும் உண்டு/

சக்திக்கு மீறிய 
ஆசைகளை  வளர்ப்பதும்/
நிறைவேற்ற முடியாமல் 
நின்று தவிப்பதும்/

மானிடப் பிறவியின் 
கொள்கையில் ஒன்று/
நித்தமும் நினைவுகள்  
நிகழ்வுகளானால் /
இறைவனை மனம் 
மறந்திடும் என்றும்/


Monday 25 November 2019

#ஓ முதல் எழுத்துக் கவிதை**************************#தலைப்பு (ஓடுகின்றது காலம் )


ஓடம் ஏறி ஓடையில் 
போனவரே/
ஓடும் முகிலை தூதாக 
விடவா?

ஓராயிரம் ஆசைகளை 
நெஞ்சில் அடைத்தவரே/
ஓயாமல் கனவில் 
வந்து விடுவாயா?
ஓங்கி அடிக்கும் 
அலையிடம் புலம்பிடுவாயா?

ஓலைக் குடிசையில்  
நினைவோடு காத்திருக்கேன் /
ஓசையிடும் நாயும் 
காவலுக்கு விழித்திருக்கு/

ஓட்டாண்டியான  வாழ்க்கையே 
நிலையானது மீனவனுக்கு /
ஓட்டைப் பானையும் 
அணைந்த அடுப்புமாக /
ஓடுகின்றது காலம் 
நம்மையும் அழைத்து /



முதல் எழுத்துக் கவிதை #சொ********************************தலைப்பு #சொல்வேந்தன்



சொற்களை செம்மையாய் நீ 
உரைத்து/
சொல்லுக்குள் நற் பொருளைத்
திணித்து/

சொல்லுக்கும் வலிமை 
இருப்பதைப் புரிந்து/
சொல்லிலே நேர்மையை 
எப்போதும் வகுத்து/

சொர்க்க வைக்கும் பேச்சினை 
வளர்த்து/
சொன்ன வாக்குகளை மறவாமல்
காத்து/

சொந்தக் கற்பனையில் 
கவிதைகளைப் புனைந்து/
சொற்தொடரிலும் பாடல்களிலும் 
புதுமையை இணைத்து/

சொல்லாத சொல்லாடல்களை
அதற்குள்ளே புகுத்திடு/
சொல் வேந்தனாகவே எந்நாளும் 
வாழ்ந்திடு/

மீண்டு வர வழி வேண்டும்



பட்ட வலி தான் கண்ட கோலம் தான்.
கொண்ட வேதனை தான் நெஞ்யினில் 
தீப்பிழம்பாக எரியும் கொடுமை தான்.
மனம் பட படத்த தர்னங்கள் தான்  
கண்ட அனுபவம்  பெரியவை தான் 
சிறு வயது முதல் உள் நாட்டிலே .........//////

இருந்தும் மனம் பதைக்கின்றது 
என் மகனை இழந்து விட்டேன் 
என் கணவரை கொன்று  விட்டனர் 
என் அப்பாவை காணவில்லை 
தங்கை  கண்ணை இழந்து விட்டாள் 
பிறந்த  சிசு இறக்கும் நிலையில் கரங்களிலே என்று கதறும் போது...///

உடையைக் காணோம்  உறவைக் காணோம் என்று  கண்ணீரோடு  கொடுத்த பேட்டியை செய்தித் தாழில்  படிக்கும் போதும் புதிதாய்  பிறக்கின்றது மீண்டும் ஒரு வலி
இந்த உயிர்ப் பலிக்கு முடிவு  காண இன்னும் பிறக்க  வில்லையே ஒரு வழி ......../////

வரும் காலம் கழியுக காலம் என்று 
கணித்து வைத்தான்  அன்று 
கனியும் மனங்களை  மறைத்து 
மனிதனை படைத்து  விட்டான்  இன்று ....//////

ஒன்றை ஒன்று அடித்து  வீழ்த்தி 
இன்பம் காண்பது மனித இனம் தான் 
என்று  பலராளும் (நம் )  நாவாலும்
கூறும் போது சுருக்கென  குத்துகின்றது ஊசி போன்று  நடு நெஞ்சினிலே ...../////

தினமும் நாள் இதழ்  புரட்டும் வேளையிலே 
ஏதோ ஒரு பக்கத்தில்  இருக்கும் செய்தி பறிக்கின்றது  கண்ணீர்த் துளிகளை
விழியை வெறுத்து விடு  என்று கூறுகின்றது  அச்சடித்த ஒரு மொழி  வெறுக்க முடியாமல் கேள்விகளைத்  தொடுக்கின்றேன் நான் தமிழ்  மொழியில் மீள முடியா வலிகளுக்கு தேடுகின்றேன் மீண்டு வர புது வழி...........////

                

எரியும் திரியல்ல

நாதாரி பெத்தவனே 
உன் தாயாரு உத்தமியோடா.
உன் தந்தை யார் என்று 
கேட்டறிந்து கூறடா 
மறவாமல் எத் தேசத்து  மைந்தன் 
அவன் என்று சொல்லடா ....!

ஈழத்தின் சுடர் விளக்காய்  
அணையாத ஒளி விளக்காய்.
தமிழன் போற்றுவது 
பிரபாகரனைத் தானடா ....!
விரால் இல்லாத குளத்துக்கு 
குறட்டை மீன் அதிகாரி என்னும்  தோரணையோடா....!

நல்ல பாம்பு  ஆடிய இடத்தில் 
நாக்குப்பூச்சி நீ வந்து நெளியாதேடா.
உருக்குலைந்து போய் விடுவாயெடா 
நின்ற இடம் தெரியாமல் அழிந்து விடுவாயடா.....!

ஈழத்தமிழன் இதயத்தில் 
எரிவது மெழுகு திரி இல்லையடா
விரைந்து அணைந்து விட
அது தீப் பிளம்படா 
நின்று நீ  புலம்பி அதில் வெந்து 
கருகாமல் கிளம்படா....!

     

Thursday 21 November 2019

நில்லாயோ சோலைக் கிளியே



பாராயோ என்னை 
பச்சைக்கிளியே /
பால் வடியும் 
முகமடி கண்மணியே/

உன் சொல்லு 
எனக்கு நெல்லுமணி /
நீ யும் ஓடாதே 
என் பொன்மணி/
கலங்கிடும் எந்தன் 
இரு கண்ணுமணி/

எட்டி  வாரேன்டி 
ஒட்டிக்க வாடி/
தொடர்ந்து வாரேன்டி  
தொட்டுக்க வாடி/

குசும்பாகப் பேசிக்கலாம் 
ஒண்ணாக சிரிச்சுக்கலாம்/
கண்ணாம் பூச்சி ஆடிக்கலாம் கட்டியணைச்சுக்கலாம் /
நீ நில்லாயோ சோலைக் கிளியே/


Thursday 14 November 2019

அருக்காணிப் பொண்ணு



செப்புக் கொடம் 
மேனி சிலிச்சுகிறது /  
இடுப்பாண்டக்க அமர்ந்து 
ஏதோ பேசிக்கிறது/

மொத்தத்திலே நேக்கும்
 தாகம் ஏத்திக்கிறது /
பக்கத்திலே போய்த்தான் 
கேட்டுக்க வெட்கமும் தடுத்துகிறது/

ஆல மரநிழலும் 
அருக்காணிப் பொண்ணும்/
பாத்துக்கிட்ட கண்ணுக்கு 
குளுகுளுப்பாக்க இருக்கிறது/

நாட்டம வருமுன்னே 
கேட்டுக்கணும் /
வீட்டான்ட வந்துட்டு 
போகவா எண்ணு /

விளக்கு வைச்சுக்கும் நேரத்த சொல்லிப்புட்டா/
அவ விபரமான 
ஆளு பொன்னையா/

Monday 11 November 2019

உசுருக்கு உசுரானவனே



அரச்ச மஞ்சள் பூசட்டுமா? 
அழகைக் கொஞ்சம் கூட்டட்டுமா?
இளைத்த  உடலைத் தேத்தட்டுமா?
இளம்பிறையாக மாறட்டுமா?

முகத்தைப் பார்த்துப் பேசட்டுமா?
சுவற்றைப் பார்த்துச் சிரிக்கட்டுமா?
வெட்கத்தில் முகம் மறைக்கட்டுமா?
பக்கத்தில் உன்னை அழைக்கட்டுமா?

நகத்தைக் கொஞ்சம் கோதட்டுமா?
நிலத்தில் கோலம் காலால் போடட்டுமா?
நிழலைக் கண்டு நாணட்டுமா/
நிசப்தம் இன்றி ஓடட்டுமா?

உருக்கெண்ணெய் போடட்டுமா?
திருக்குச் சடை வாரட்டுமா?
திருத்திக் கொண்டை போடட்டுமா?
உதிர்ந்த மலரைக் கட்டட்டுமா?
கொண்டை மேலே செருகட்டுமா?

உமக்கு நானு யாரு மாமா?
உன்னோட தங்கத் தேர் ஆமா/
எனக்கு நீ யாரு மாமா?
உசுருக்கு உசுரான புருசன் ஆமா/