Wednesday 31 August 2022

வாழ்த்துப் பா

வினை தீர்க்கும்  யானை 
முகதோனுக்கு ஒரு தாலாட்டு /
மோதகப் படையலிட்டு 
நான்  பாடுவேன்  ஒரு பாட்டு/

தொந்தி விநாயகருக்கு  
உரக்கப் பாடிடுவேன் 
தந்திப் பாட்டு /
சந்தி அமர்ந்த 
தனையனுக்கு வேதம் 
ஓதும் முதல் பாட்டு/

ஆறுமுகன் அண்ணனிடம் 
ஆசிர்வாதம்  கேட்டு /
இசைத்திடுவேன் பணிவுடன் 
எத்தயோ  பாட்டு /

சக்தி மைந்தனின் 
சக்தியிலே  மகிழ்ந்து 
பாடிடுவேன் நானும் 
ஓர் புராணப் பாட்டு /

ஐங்கரனை அழைத்து 
அரோகரா கோசமிட்டு /
ஐம்புலனையும்  அடைக்கி 
பாடிடுவேன் 
செந்தமிழில் புதுப் பாட்டு/

முக்கண்ணனுக்கு 
முந்திய இறைவா /
அள்ளியிறைத்திடு
கருணைக் கடலை தலைவா /

என கருணை மனுவோடு 
கண் கலங்கிப் பாடிடுவேன் 
பிள்ளை உனக்கான துதிப்பாட்டு /

அம்பிகையின் மகனே 
நம்பி ஆண்டான் நம்பியே
தும்பிக்கை கொண்டு  
ஆசிர்வதித்து  துயர் துரத்தி 
நம்பிக்கை கொடுத்திடும் கஜமுகனே  /

நீ அவதரித்த. இந்நாளை
ஆராதனையோடு
வண்ணப் பூ தூவி வணங்கி நின்று பாடுகின்றேன் உமக்காக 
வாழ்த்துப் பாட்டொன்று /

Tuesday 30 August 2022

வேற்றுமை போக்கிடு

அழிந்து வரும் தமிழர் 
கலாச்சாரத்தைக் காத்திடு. 
அறியாத கலாச்சாரத்தைக் கற்று விடு. நீ அறிந்தவையை பலருக்கு போதித்து விடு. உன் அறிவினையைக் கொண்டு 
அதை வளர்த்து விடு .....!

பண்டைக்கால உணவை மறவாதிரு. 
கண்ட கண்ட உணவை உண்ணாதிரு. பண்டம் மாற்றும் வியாபாரத்தை அருந்திரு. பண்பாடு மறக்காமல் வாழ்ந்திரு .....!

வாழ்க்கையின் அர்த்தம் புரிந்திடு. 
வாழும் போதே பல காரியத்தை நிறைவேற்றிடு. 
வழி தவறியவர்களை திருத்த முயன்றிடு. வயது வரம்பறிந்து உரையாற்றவே கற்றிடு ....!

தொல்லைகளைக் கண்டால் நகர்ந்திரு. வெற்றியின் எல்லையை சேர்ந்திரு. சிந்தனைச் சிகரமாக முயற்சித்திரு.
சிறப்புக்கள் பல கண்டு மகிழ்ந்திரு .....!

உலக மாற்றத்தை நங்கு உணர்ந்திடு. 
உதவும் குணத்தை வளர்த்திடு. 
ஒரே இனம் நாம் மனித இனம் 
என்று போற்றிடு 
வேற்றுமை கொள்வோரை எதிர்த்திடு.....!!

            

முதலிடம்

வளர்த்து விட்ட கைகளை
விலத்தி விட்டுப் போவோரும்.
வளரும் போதே
துணையாக இருந்தவர்களை
வளர்ந்த பின்னே தூக்கி 
வீசி விட்டுப் போவோரும்.

ஆதியிலே இருந்த உறவை
பாதியிலே துரத்தி விடுவோரும்.
ஆள் சேகரிப்புக்காக மட்டும் 
கூடவே வைத்திருப்போரும்.

பெரும் பெரும் புள்ளிகள் 
நெருங்கிய பின்னே.
முன்பு வந்த காதை 
பின்பு வந்த கொம்பு 
மறைப்பது போன்று நடப்போரும்.
சுயநலவாதிகளின் பட்டியலில் 
முதலிடம் பெறுவோர்.


Monday 22 August 2022

அந்த மகமாரி

என்னிடம் நீ இல்லை 
என்பதைத் தவிர 
வேறு அவப்பெயர் ஒன்றும் 
விட்டுச் செல்லவில்லையடா 
மகனே நீ எனக்கு.

ஐம்பது  பேர் 
மத்தியிலும் மகனே
உன் பெயர் சொல்லி 
தலை நிமிர்ந்து நடப்பேன் நானடா.

ஐந்து பேர் முன்நிலையிலும் 
அச்சம் கொண்டு 
அவமான சிக்கலில் சிக்குண்டு 
தலை குனிந்து நடப்பாள் 
நீ கொண்டு 
வந்தவளைப்  பெற்றவளடா.

என் வார்த்தை  
வேலி கட்டி விட்டதோ 
இல்லை நீ உமக்கு 
வேலியிட்டாயோ
தடம்புரளாத 
வாழ்க்கை வாழ்ந்து காட்டியே
தடயம் அழித்து 
போய் விட்டாயடா. 

குடிகாரன் பெத்த பிள்ளை 
குடிகாரன் ஆவன் 
என்னும் சொல்லை 
முறியடித்து 
என் ஆசை போல் 
போதை என்னும் 
பாதை போகாது 
என் செல்லமே 
நீ வாழ்ந்தாயடா.
நினைக்கையிலே 
உன்னை ஈன்ற பாக்கியம் 
அடைந்தேன் நானடா.

உன் இளகிய மனமும் 
ஏமாளிக் குணமும்
தொட்டதெல்லாம் தங்கமென 
நம்பிடும் எண்ணமும் தானடா 
உன்னை எங்களது 
குடும்பத்திலே
தங்கிட தடையாய்  
மண் மறைத்து விட்டதடா 

பொன் போல் காத்தாய் 
பொண்டாட்டி எனப்  பார்த்தாய் 
கண்ணைக் கட்டி கருமாரி 
செய்ய வைத்து விட்டாளேடா 
உருமாரி தட்டிப்பாள் நிச்சயம்
பாதகக்தியை அந்த மகமாரி தாயடா😡😭

Friday 19 August 2022

பூ பொலிவு அழகு
*******************
பூவோடு ஒப்பிட்டேன்
நாணம் கொண்டாள் //
பூவையவள் புன்னகையிலே
எனைக் கொன்றாள்  //

பொலிந்த சிலையாய்
மெலிந்து நின்றாள்  //
பொழியும் மழையில்
மெய்மறந்து சென்றாள் //

அழகு ஓவியமாய்
என்னைக் கவர்ந்தாள் //
ஆழியலையாய்   வந்து
நெஞ்சத்தில்  அமர்ந்தாள்//

பூத்த காதல்
சொட்டுது தேனாய் //
பொலிவு  கொடுக்கிறது
கவிதையும்  தானாய் //


Wednesday 17 August 2022

நிலவே முகம் காட்டு
---------------------------------
நிழலாக ஆசை 
இதயத்தில் குட்டுதடி /

நில்லாமல் வார்த்தைகள் 
பட்டம் கட்டுதடி  /

நிலவே நீ 
முகம் காட்டு/

கனவில் விரல்கள் 
உனை மீட்ட /

பொல்லாத மனசு பொங்குது மாமா
***************************************

மாமோய் நீ அள்ளாத ஏக்கம்
தாக்கியதால். /
சொல்லாத காதல் கிள்ளுது
ஆமா /
நில்லாமல் தாகம் உன்னைத் தேடுது
மாமா /
புல்லாக நானும் நின்று வாடுறேன்
ஆமா /

அட ஊற்றெடுக்கும் ஆசை ஊர்ருது
ராமா/
சேர்த்தணைக்  விரைந்து வந்திடு
ராமா/
பார்த்திட விழி தினம் நோக்குது வழி
ராமா/
ஆற்று வழியே வந்து காட்டிடு முகம்
ராமா /

திறந்த இதயம் பரப்புது சூடு
ஏனோ?
பிறக்கும் மோகம் இறகு விரிக்கிறதே
அது தானோ?
சுரக்கும் வியர்வை நனைக்குது  உடலை வீணா /
கடந்திடும் நாட்கள் கொடுக்குது துயரக்
கனா /

நடக்காத விளையாட்டுக்கு நெஞ்சம்
கேட்குது பன்னீர் /
தொடுக்காத விரல்கள் தொடைக்குது கண்ணீர்/
நீதானே என்னுடலோடு கலந்தோடும்
செந்நீர் /

இன்னும் மௌனம்  தேவை தானா
மாமா/
நெல்லா கல்லா முள்ளா உன் மனசு
மாமா/
எரியும் அடுப்பில் ஏற்றிய கொதி நீராய் இன்னும்/
பொல்லாத  யென் மனசு பொங்குது
மாமா/

Monday 8 August 2022

என்னுயிர் போய் விட
எத்தனை யுகமாகிடுமோ இல்லை
இந்நொடியே  மாண்டிடுவேனோ
நான் அறியேன் கண்மணியே.

இறக்கும் வரை எனது
கண் மணிக்குள் உன் ஒளியே 
எனது கரம் தவறவட்ட சின்ன மணியே.

என் விழிகளுக்குள் 
நித்தமும் மழைத்துளியே
அத்துளியிலே முளையிடுன்கிறது
நெஞ்சத்திலே கொலைவெறியே
இருப்பினும் கொல்லும் நோக்கம்
என்னில் இல்லையடா  கண்மணியே .

உன்னைக் கொன்று கொள்ளையிட்டவர்
துன்பத்தில் தவிர்த்து தெள்ளாகத் துடித்து
வெளியே சொல்லாது துயரத்தை மென்று
தன்னைத் தானே மாய்த்திடும் வரை
அடியும் பிடியும் தடியும் எமக்குத் தேவையில்லையடா கண்மணியே.

விடியும் ஒவ்வொரு பொழுதும்
எனக்காகவும் விடிந்திடும் 
என்னும் நம்பிக்கையில் 
தேடிச் சென்று  இறைவனிடம்
பிராத்தனையின் பிடியில் நகர்ந்து
நாளைக் கழித்திடுவேனடா கண்மணியே.

 

Friday 5 August 2022

இப்போதெல்லாம்
கொழுத்திருக்கின்றதாம் உடம்பு
இருக்காதா பின்ன.

பூரிப்பிலும் இடை
பூரி போல் பொங்கிடுமாம்
நாறிப் போன
பணியில் இறங்கி விட்டால்
தேடிப் போடும்
ஔடதம் ஊறிப் போய்
ஊதிப் போன
பலூனாக உடலை மாற்றிடுமாம்

தொடரும் போது எதுவாயினும் 
பாணிப்பூரி போல் இனித்திடுமாம்
பாலாய்ப் போன காலம் கை விட்டால்
பல இடத்தினிலே  ஊரார்
மூக்கில் நாத்தம் அடித்திடுமாம்.

படுக்கப் பாய் இல்லாத வீட்டில் 
பகட்டு வாழ்க்கை பட்டு விரிக்குதாம்.
எடுத்த எடுப்பினிலே இழவு வீட்டிலும்
இரட்டை மாலை ஜொலிக்கிதாம்.

கடுகளவும் தங்கம் இல்லாதவள்
காதினிலே சுளகளவு தோடு மின்னுதாம்.
உழைத்துச் சேகரித்தவனுக்கு
இவை பெருமைதானம்மா
எடுத்துக் கொண்டோருக்கு
இது சிறுமையான செயலம்மா .

கடகடவென
நினைப்பதெல்லாம் நடக்குதாம்
தேக்கி வைத்த ஆசையெல்லாம்
படபடவென பறக்குதாம்.
தோண்டிய குழி நீரும்  உன் பெயர் 
சொல்லி தாகம் தீர்க்குதாம்.

மழை வெயில் பாராமல்
பசி பட்டினியோடு  நோய் தாங்கி
உழைத்துச்  சேகரித்த உனக்கென
கட கடவென பரிகாரமாய்  ஒவ்வொரு
யுகமும் புண்ணியம்  படி கட்டுதாம்
கேட்டறிந்ததுமே பெற்றவள்  விழியினிலே ஆதங்கத்திலும் ஆனந்தத்திலும்
கண்ணீர் அருவி  கொட்டுதம்மா