பல சாதனைகள்
பல சோதனைகள்
பல இழப்புக்கள்
பல சந்திப்புக்கள்
பல இன்பங்கள்
பல துன்பங்கள்
பல உறவுகளின் பிரிவுகள்.
பல உறவின் அறிமுகங்கள்.
பல நோய்கள்
பல ஆயிரம் செலவுகள்
பல ஆயிரம் வரவுகள்
பலபேருடன் மோதல்கள்.
இவைகளையும் கொடுத்து .....////
ஆகாய விமானத்தை
ஆட்டிக் குழுக்கி போட்டு
உடைத்து கூடி அமர்ந்த
மக்களின் கூக் குரலின் ஒசையை
கேட்டு மகிழ்ந்து .....////
இறுதி மூச்சுக் காற்றை
இழுத்துப் பிடித்து ஆண்டு
தோறும் மறக்காத வாறு
படம் பிடித்துக்காட்டியும் ..../////
கெங்கை நீரை அழைத்து
மனித வாழ்வோடு விளையாடி
தங்கி உண்ண உறங்க வழியில்லா
வண்ணம் வெள்ளத்தை உயரவிட்டு
இயற்கையின் சீற்றத்தை மனிதனுக்கு
பாடமாக புகட்டி விட்டும்......./////
எண்ணில் அடங்கா விபத்துக்களையும்
சொல்லி முடிக்க இயலாவண்ணம் அதிர்ச்சி
களையும் தாங்க முடியா வேதனையையும்.
வேண்டும் வரம் கேட்டவனின் வேண்டு
கோலையும் நிறைவேற்றி விட்டும் ...///
ஆளவு இல்லாத அன்பின் வலிகளையும்
போலி உறவுகளின் பிரிவுகளையும்
புரியவைத்து விட்டும்......////
பல இலட்சியவாதிகளையும்
சாதனையாளர்களையும் தன்னோடு
எடுத்துக்கொண்டு நிரந்தர விடுமுறை
பெற்று புறப்படத் தயாராகி விட்டது
பழய வருடம் ......//////
வாழ்த்தி வழி அனுப்பி விட்டு
நம்மோடு இணைந்து வாழ வருகை தரும்
புத்தாண்டை வணங்கி போற்றி
வரவேற்போம்........//////
ஏங்கும் ஏழைகளின் வாழ்வுக்கு ஓங்கும்
வண்ணம் வாழ்வு கொடு என்று கட்டளை
ஒன்றை முன் வைப்போம்.......////
அன்பு உறவுகள் அனைவருக்கும்
என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.