திறமையானவன் நீ என்றாலும்
அறிவாளி என்றாலும்
பல படைப்புக்கள் கொடுத்த
கவிஞன் என்றாலும்
விருதுகளை குவித்த
கலைஞன் என்றாலும் .....////
புகழின் உச்சியில் அமர்ந்த
அறிஞன் என்றாலும்
பொறுமை காக்காவிட்டால்
சிறுமையாகி விடும்
உன் புகழ் அங்கே......./////
கிரீடம் ஏறினாலும்
உன் தலைதான்
தாங்குகின்றது
தலைக்கணம்
கூடினாலும்
உன் தலைதான்
தாங்குகின்றது ......////
இரண்டுக்கும்
வேறுபாடு உண்டு
இரண்டில் ஒன்று
வந்து அமர்வது
உன்தலையில்
உன் நன் நடத்தையின்
பயன் கண்டு.....////
என்னை விட சிறந்தவன் இல்லை
என்னை விட அறிந்தவன் இல்லை
என பிறரை துஷ்ரமாக நினைத்து
தூக்கி ஏறிந்தால் இறுதியில்
நீ அனாதை .....////
தன் அடக்கம் நாவு அடக்கம்
கற்று நல்லோர் வல்லோர் அறிந்து
உண்மை உள்ளத்தைப் புரிந்து
நன்மைக்கு துணை நின்று
தீமைக்கு தலை அசைத்து ......////
மோதல் புலம்பல் என கவிதையாலே
சாடாது விடுத்து உள்ளதை உள்ள
படி கூறி உன்னதமான வாழ்வை
விரும்பிப் பார் அன்று
கிடைக்கும் நிம்மதிதான்
நிலையான பரிசு ......./////
பகை என்று விட்டு ஒதிங்கி விட்டு
பட்டத்துக்காக கால் தொட்டால்
கவிஞன் என்ற பெயர் உன்னிடம்
தங்கிடுமோ கெட்ட நாக்குகள்
இதைக் காட்டி சொல்லிக்
கொட்டாமல் விட்டு விடுமோ...../////
No comments:
Post a Comment