Sunday 27 December 2015

மாறி விட்டான் மச்சான்

மாந் தோப்புக்குள்ளே
மஞ்சள்  குருவி  ஒன்று
அங்கும் இங்கும் தத்தி
தத்தி  நடக்கையிலே
என்னை அழைத்து  சுட்டிக்
காட்டி  குறும்பு பண்ணி என்
கன்னம்  கிள்ளி  அன்பு முத்தம்
பதிச்ச மச்சான் .......////

பூந் தோட்டத்திலே  பூ  எடுக்கும்
வேளையிலே  பூவரசம் பூவோடு
என்னிரெண்டு கரங்களையும்
இறுக்கப் பற்றி இழுக்கையிலே
தோழி அவள் குறுக்க வந்து
தடுக்கையிலே  சிறு முறைப்போடு
நகர்ந்த மச்சான் ....../////

சல சல என்று ஓடும் ஓடையிலே
குமரிக்கூட்டங்கள் ஒன்றாக
குளிக்கையிலே  கூடவே வந்த
என்னைக் குறி வைத்து நீரின்
உள்ளே மறைந்து இருந்து
இழுத்து அணைத்து நீச்சல்
கற்றுக்கோ என்று அடம்
பிடித்த மச்சான் .......//////

அம்மன் ஆலயத்திலே ஐயனார்
சிலை அருகே  பொய்யான
பத்தியோடு  கண்ணை மூடுவது
போல் பாவனை காட்டிய வாறே
பாதையிலே ஓரப்பார்வை  வீசிய
வண்ணம்  எனக்காகக் காத்திருந்த
மச்சான் ........///////

சந்தைக்கு நான் போகையிலே
தன் தந்தைக்கு தெரியாமல்
மந்தையோடு மந்தையாக வண்டி
ஏறி வந்த மச்சான் ....../////

இன்று சந்தி சந்தியாக
காத்திருக்கின்றேன்  உன்
சங்கதி சொல்ல ஆளையே
காணோம் மச்சான் ..../////

கஞ்சி குடிக்கும் காலத்திலே
இந்த வஞ்சியை சுத்தி சுத்தி
வந்த மச்சான் ...../////

சிறுகச்  சிறுக. பணத்தைப் பார்த்த நீ
கையிலே சொத்து சேர்ந்ததும்
கண்டுக்காமலே போனது
ஏனோ மச்சான் ......////

கொஞ்ச நாளாக நீ மாறி
விட்டாயே மச்சான்  இந்த
வஞ்சி மனம்  பஞ்சாய் எரிகிறது
மச்சான் .......//////

உன் பட்டணத்தின் வாழ்வின்
மாற்றம்  கண்டு  பட்டிக்காட்டு
பொண்ணு உள்ளம் தீ சுட்ட
புண்ணாக போனது மச்சான் ....///

      

No comments:

Post a Comment