Wednesday 9 December 2015

திருத்தங்கள்

மழை மேகம் கூடுவதைக் கண்டாலே
 உருளுகின்றது கரு விழி கொஞ்சம் ....///

சில நாட்களாக அவை கொடுத்த
கொடுமை கண்டு நடுங்குகின்றது
கால்கள் நின்று ....///

காற்ரோடு சேர்ந்து கரு மேகமும்
கை கோர்க்கையிலே
  நிமிர்ந்து பார்த்து ஏங்குகின்றது
மனம் ஓட்டு வீட்டையும்
 குணிந்து பார்த்து கலங்குகின்றது
தரையையும் மெதுவாக ..///


கையில் கிடைத்த துணிகளை
பையில் அடுக்குவதும்
பதபடுத்திய உணவை டப்பாவில்
 அடைப்பதும் முக்கிய பத்திரங்களை
 கைப் பற்றுவதுமாக. பர பரப்பாகவும்
 பட படப்புடன் இல்லத்தரசிகள் ....////


எச்சரிக்கை மணி இப்போது
எல்லோரின் மூளையிலும்
கட்சிதமாக பணியாற்றுகின்றது ...///

No comments:

Post a Comment