Tuesday 30 July 2019

வேசம் கலைந்ததே

உறக்கம் திறக்கும் இமைகள்/
ஏக்கம் நிறைக்கும் இதயம்/
சிரிக்க மறக்கும் இதழ்கள்/
சிதறிப் போன சிந்தனைகள் /

#குணமாய்ப்-பேசி -இனமாய்க்
#கொடுத்தாயே- நீ -எனக்கு /

கறக்கக் கறக்க நீர்
சுரக்கும் விழிகள்/
பறக்கப் பறக்க சோகம்
பிறக்கும் நெஞ்சம் /
எடுக்க எடுக்கக்
குறையாத கவலைகள்/
துடைக்கத் துடைக்க தீராத வலிகள்/

#பரிவோடு -வந்து -பரிசாகக்
#கொடுத்தாய் -நீ -எனக்கு /

தேய்க்கத் தேய்க்கத் தேயாத
உன் எண்ணம் /
வறுக்க வறுக்க கருகாத காதல்/
துரத்தத் துரத்த ஓடாத ஆசைகள்/
கசக்கக் கசக்க கசங்காத மோகங்கள்/

#மெது- மெதுவாய் - மனம் -நுழைந்து
#அள்ளிக்-கொடுத்தாய் -எதற்கு /

நான் கிள்ளுக்கீரை போல்
வாடி வதங்கி மடியவா?
பிடிவாதம் பண்ணி
நேசப் படியேறி வந்தாயோ?
பிடி கொடுக்காமலே  உமது
வேசம் கலைத்து சென்றாயோ?

Monday 29 July 2019

அதுதானே வரம்

பூவே பூவே உன் புன்னகை எங்கே..?
காதல் புயலடித்துப் போனதோ ...?
சோகப் புயல் புரட்டிப் போட்டதோ.... ?
கொடும் கோபம் கடும் சொற்கள்.... ?
கடுகு போல் தெறிக்கின்றதே ....?

பூவே பூவே கரு வண்டு சுற்ற வில்லையோ ...?
கரு மேகம்  மழை நீர் கொட்ட வில்லையோ ...?
காத்திருக்கும் நேரத்திலே
சேர்த்தணைக்க கரம் நீளவில்லையோ....?

பூவே பூவே புதையுண்டு போன
புன்னகையை விதை என்று
நினைத்து  விடு அன்புக் கதை
கொண்டு நீர் இடு முளையிட்டு வளர்ந்திடுமே ...../

பூவே பூவே வாடாதிரு
பனி தொட்ட மலராய் மலந்திரு  கனி பிறக்கும் காலம் வரும் காய்த்து கனிந்து விட்டால் பூவுக்கு அதுதானே வரம் ...../

Saturday 27 July 2019

கடுதாசி இன்னும் வரக் காணலேயே மச்சான்<$$


மச்சான் நினைவில் ஆசை வச்சான்
மச்சம் மேல் கண்ணை வச்சான்
மச்சினிச்சி என் மேல் உசுரை வச்சான்
மச்சினி என் பெயரை பச்சை குத்தி வச்சான்....♥

புல் அறுக்கப் போகையிலே கையைத் தொட்டுப்புட்டான்
புல்லாங் குழல் மன்னன் போல் என்னை மயங்கிப்புடடான்..♥

கள்ளி நான் நகைக்கையிலே
தள்ளி நின்று ரசிக்கையிலே
முள்ளி வாய்க்கால் வரை நான் பார்க்கையிலே
பள்ளி கொண்டான் நெஞ்சினிலே.....♥

பார்த்துப்  பார்த்து துணியை அடுக்கி வச்சேன்
பாவி நினைவையும் சேர்த்து வச்சேன்
பாதி வழி வந்து பட்டணம் அனுப்பி வச்சேன்
பாவி மனசை மட்டும் பூட்டி வச்சேன்....♥

ஆசை வந்து என்னை ஆட்டுது புள்ள
ஆனால் நான் கைநாட்டுப் புள்ள...♥

நாளு எழுத்து எழுதிக் கொடுத்துப்புட்டு போடியம்மா
நாளு நாளாய் தூக்கம் இல்லையடியம்மா....♥

கடுகு டப்பாவில் அம்மா சேர்த்த சில்லறையில்
நடுக்கத்தோடு எடுத்தேன் என் கையில்
கடுதாசி போடபணம் தேவையெனில்
கடு கடுப்பார் அம்மா பெரும் பாடாய்ப் போகும் சமளிக்கையில்....♥

முத்திரை வாங்கி ஒட்டிப்புட்டேன்
முத்தையாக் கிட்ட கொடுத்துப்புட்டேன்...♥

மச்சாங்கிட்ட இருந்து மறு பதிலைக் காணோமே
மச்சாங்கிட்ட இருந்து கடுதாசியைக் காணோமே....♥

காத்திருக்கேன் நான் வழி பார்த்திருக்கேன்
காத்தாடி போல் நான்கு பக்கத்துத் தெருவையும் பார்த்திருக்கேன்...♥

காணவில்லைடி பொன்னம்மா
காணவில்லையிடி அன்னம்மா
காணவில்லையே கடுதாசியை
ஆத்தா மங்கம்மா
ஏங்கவச்சமச்சானே ஏனோ
தாமதம் கடுதாசிபோட பட்டணம்
கொடுக்கும் நடுக்கமா பதை
தெரியாத தயக்கமா
கடுதாசியை இன்னும் வரக் காணலையே
மச்சானே என்னை  ஏங்க வச்சானே...♥

    

Friday 26 July 2019

கடந்து போன காதல்

உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி, ஆடி 2017
போட்டி - 02வது மாதம்
போட்டிக்கவிதை எண்- 26...

#உலகப்பாவலர்மன்றம்.

தலைப்பு-கடந்து போன காதல்

............................................

பாதை வழி வந்த காதல்./
பாதியிலே போனதனாலே./
விழியும்
குளிக்குதையா கானல்நீரில் /

பத்திரமாய் வைத்திருந்த மனம். /
உனக்கு  மட்டும்  சத்திரமாக மாற்றியதனாலே. /
செத்து செத்து பிழைக்குதையா
என் ஜீவன் தன்னாலே/

இடம் பார்த்து தடம் பதித்து. /
இடது வலது என்று நம் பெயர் பதித்து. /
சின்ன வீடு நான் கட்ட /
செல்லமாக. நீ உடைக்க /
துரத்தி அடித்து /
பின்னர் பிடித்தணைத்து. /
முத்தமிட்ட அந்த நாளை /
கடல் அலையும்
சொல்லி விட்டு போகுதையா./

கரம் பிடித்த படி நின்றோம் /
கருமாரியம்மன் ஆலயத்தில். /
பல கற்பனைகளை வளர்த்த படியே./ கனவிலும் நினையாத காலம் வந்து/ கொடுத்ததையா பிரிவு
என்னும்  வாசல்ப்  படியை./

பூங்கா வனத்திலே /
சோடி போட்டு சுத்தும் /
காதலர்களைப் பார்க்கையிலே /
எரிச்சல் மூட்டுதையா/

கண்ணுக்குள்ளே. /
கொதித்த படியே உப்பு நீரும் /
சூடாகவே வடிந்து நீ முத்தமிட்ட /
கன்னத்தை தொட்ட படியே /
விழுந்து  மடியுதையா /

மாற்றான்  வீட்டுக்கு /
உறவாகப் போவாய் /
என்று நினையாத என் நெஞ்சம்/ தவிக்குதையா /
தீ பட்டு எரியும் பஞ்சாய் /

அன்றொருநாள்
நீ மொட்டை மாடியிலே
நின்ற படி வட்ட நிலவு பார்த்து /
எனக்காக என்று கூறியவாறு /
அள்ளி விட்ட பொய்க்
கவிதையெல்லாம்/
எண்ணிப் பார்க்கின்றேனையா. /

கடந்து போன காதல் /
உள்ளக் கிடங்கில் /
இருந்து உருகுதையா. /
சொல்லி அழ துணையும் இல்லை./ தனிமையிலே நின்ற படியே /
உனை நினைத்து அழுகின்றேனையா/

Thursday 25 July 2019

ஒத்தையில காத்திருக்கேன்

ஒத்தையில காத்திருக்கேன்/
ஒவ்வொரு நாளும்
வழி பார்த்திருக்கேன்/
ஒத்தச்சொல்
உரைத்து விரைந்தவரே/
ஒண்ணொண்ணா
நாள் எண்ணிக் காத்திருக்கேன் /

பெத்தவங்க மத்தவங்க
பார்த்து வச்ச வரனையும்/
வேணாமுன்னு சொன்ன
படி காத்திருக்கேன்/
ஏ -அத்த பெத்த சின்னமவ
உனக்காகக் காத்திருக்கேன் /

ஏரிக்கரை தோப்புக்குள்ளும் /
ஏற்றம் இறைக்கையிலும் /
ஈர உடையோடு இறுக்கிப் பிடித்து
அந்த ஓர் வாத்தை உரைத்தவரே /

ஒத்தைப் பாதை
பாலம் கடக்கையிலே/
ஊர் அடங்கும் வேளையிலே/
ஓடி வந்து ஒத்த
மலரைக் கொடுத்தவரே/

நீர் அற்று நா வறண்டு கிடக்க/
கண்ணீர் வடித்த படி விழி இருக்க/
உணர்வு இழந்த உடலோடும்/
உள்ளத்திலே ஓட விட்ட
உன் நினைவோடும்/
திண்ணை ஓரத்தில்
ஒத்தையிலே காத்திருக்கேன்/

Wednesday 24 July 2019

நானும் ஒருவனடி

தட்டான்பூச்சி போல் /
கிட்ட வந்து காதல் நெஞ்சை
தட்டி விட்ட சுந்தரியே/

கொட்டாம் பட்டி
பாதையிலே/
நீ கொட்டைப்
பாக்கு விற்கையிலே/

நோட்டம் போட்ட
காளையர்களில் /
நாட்டாம மகன்
நானும் ஒருவனடி/

போட்டாக
வேணும் உமக்கு/
தட்டான் செய்த
பொன் தாலியடி  /

காட்டாறு கடந்து வந்தேன் /
வீட்டாரைக் கேட்டு வந்தேன்/
தோட்டம் துறவும் வேண்டாமடி /
சேட்டுக் கடையும்  ஏற வேண்டாமடி /

பட்டு மெத்தை
விரிப்பும் வேண்டாமடி /
கட்டழகு மேனியது போதுமடி /
தொட்டணைக்க வேண்டுமடி/

கண்டாங்கி கட்டிக்கோடி /
குண்டுமல்லி சூடிக்கோடி /
வண்டுக் கண்ணுக்கு
மை போட்டுக்கோடி/

தட்டுவேன் வாசல்க் கதவை /
வெட்கத்தை விட்டெறிந்து விட்டு /
ஓடி வந்து என்னோடு ஒட்டிக்கோடி/

Tuesday 23 July 2019

தாடி மச்சானே

தாடி  மச்சான் வாரும்.
என் கதையைக் கேளும்.
தாவணிப் பொண்ணுக்கு
சேலை ஒன்று தாரும். ...///

பட்டு உடுத்து பக்கம்
வர வேணும் நானும்.
என்னைப் பாடாய்ப்
படுத்த வேணும்  நீயும்.....///

பட்டுச் சேலை கசங்க வேணும். 
சூடிய பூவும் உதிர வேணும்.
கல கலக்கும்
வளையல் மாட்ட வேணும் உறவும்.....///

குலப்பெருமை பேச வேணும்
ஊரும் தினம் முறைப்போடு
கர கர புறு புறு என இருக்கும்
வெட்டி மாமியாரும் தாலாட்டு
ஒன்று  பாட வேணும் .....///

 

Saturday 20 July 2019

இடம் பிடித்திடு

அடுத்தடுத்து வரும்
சவால்களை வென்றுவிடு./
அதற்கு உன்னுள் எழும்
முன் கோபத்தைக் கொன்று விடு/

அதிர வைக்கும்
சோதனைகளையும் /
எதிரும் புதிருமாக வரும்
எதிரிகளையும் /
அறிவால் வென்று விடு. /
அதற்கு உரியவனாக
உன்னை மாற்றி விடு ./

வெற்றிப் பாதையை
விரைவாகத் தேடி விடு. /
பணத்தை விரையமாக்காது
திருந்தி விடு /

மனதில் உறுதியை பதியமிடு. /
தோல்விகளைக் கண்டு /
ஏங்காது கலங்காது அடுத்த
படியை நோக்கி விடு ./

சிறு சிறு தொல்லைகளை
முறியடித்திடு./
அதற்கு  முற்போக்கு
சிந்தனையை வளர்த்திடு ./

புதிய சரித்திரம் படைத்திடு. /
சாதனைப் புத்தகத்திலும்
இடம் பிடித்திடு ../

Friday 19 July 2019

அரளி

செவ்வரளி /
வெண்ணரளி /
சேர்த்தெடுத்து /
கூடவே மஞ்சரளியும்/
பறித்தெடுத்து /
பூ மாலை  கட்டிப்புட்டு /

மூவரளிப் பால் எடுத்தேன் /
வெள்ளிக்கிண்ணம் /
நிறைத்தெடுத்தேன் /
கன்னி என் கையாலே /
சிந்தும் புன்னகையோடு /
பருகக் கொடுக்கக் காத்திருக்குன் /

யாருக்கு ? எவருக்கு/
என்னும் கேள்வி /
உமக்குண்டு  /
கேட்டுக்கோ /
உன் காதில் போட்டுக்கோ /

வேறு யாருக்கு /
நாக்கைப் புரட்டிப்  போட்டு /
பொய்யுரைத்த படியே /
வாசல் படியேறி வரும் /
திருட்டு அரசியல் வாதிக்கு /

பூமாலையோடு பாலும்/
பாசம் போல் பாசாங்கு செய்து/
அருந்தச் சொல்லி/
அவசரமாய்க் கொடுத்திடவே /😜

Thursday 18 July 2019

காதல்

மயக்கி விட்ட மன்னவனே
தயக்கம் கொண்டு நான்
இருக்கையில்
மயங்கி விட்ட நீயோ
தயங்கி இருப்பதும் ஏனோ==?

விருப்புக்  காட்டிய நீயோ
வெறுப்புக் காட்டினால்
வெறுப்புக் காட்டிய நான்
விருப்பம் கூறுவது எப்படி..?

அடுக்கு மொழி பேசிய நீ
இடைவெளி விட்டு இருந்தால்
இடைவெளி விட்டு நடந்த நான்
அன்பு மொழி பேசுவது எப்படி..??


ஆசையைத் தூண்டி விட்ட நீ
நிராசையாக  அமர்ந்து இருந்தால்
நிராசையை வரவேற்ற நான்
ஆசையைக் கூறுவது எப்படி..??

சாதனையா இது சோதனையா
சோதனையில் வரும் சாதனையா
வெற்றியோடு வரும் வேதனையா
வேதனையோடு வரும் வெற்றியா

    (நம் காதல்)
அறியாத புரியாத
புதிராய் நீ இருக்கையில்..!!!!

 

விரைந்து வாடா

நெஞ்சத்தில் பச்சை குத்திய
உன் பெயர் மாறாதடா/
இந்த மச்சினி மனசும் மூடாதுடா/
தேவையோ இந்தச்  சந்தேகம்
நீ  தேடி வா சந்தோசம் /

முன்னாலே நீ
வந்து முறைத்தாலூம்/
கண்ணாலே
காதலை உரைப்பேனடா/
முகம் காட்டாமல்
நீ மறைந்தே சென்றாலூம்/
உனது உடல் வாசைனையிலே
உமைக் கண்டு பிடிப்பேனடா/

உனது மச்சினிச்சி நான் மருதாணி
இட்ட கரத்தோடு கரம் கோர்த்தாலே/
என்னுள்ளே ஆனந்தம்
வெள்ளோட்டமாய் ஓடுமடா/

ஆசை ஓயாமலே
உன்னைத் தேடுகிறது மச்சானே/
கலந்திடவே காலம் பார்த்துக்கோடா/
இணைந்திடவே நீயும் விரைந்து வாடா/

   

Wednesday 17 July 2019

கைம்பெண்ணின் காதல்

வார்த்தெடுத்த
வார்த்தையெல்லாம் /
சேர்த்தெடுத்தேன் கவிதைகளாக /
எனது ஆசையினை
உன்னிடம் சொல்லிடவே/

அந்தப் பாக்கியம் 
எனக்கில்லை /
என்று  நினைத்து
கரைத்து விட்டேன்/
கண்ணீரால் மெல்ல/

சேர்த்தெடுத்த
சொற்கள் எல்லாம் /
சேதமாய்ப்  போனதையா  /
நான் தாரை
தாரையாய் கண்ணீர்
வடித் ததையை என் சொல்ல ./

எட்டி எட்டி நீ போகின்றாய்
என்னுள்ளே குட்டிக் குட்டி
நினைவுகளை விதைத்து விட்டு./

கட்டிப் போட்ட மனம் தான் 
கயிறு அறுத்து விட்டதையா /
பசுவைக் கண்ட கன்று போல் /
உன் அன்பான வார்த்தை
தனைக் கேட்டதுமே /

விலகி விடுவாய் என்று
அறியாத நெஞ்சம் /
தவிக்கிறது இன்று
ஏக்கத்தில் கொஞ்சம் /

பத்தினியாக
இருந்து என்ன பயன் /
பணத்தோடு
வாழ்ந்து என்ன பயன் /
கன்னியாக இல்லையே
காதலைச்  சொல்லவே /


அது காலம் கொடுத்த தண்டனை/
இதனாலே நீ கொடுத்தாயே?
பிரிவு என்னும்
சொல்லோடு இதயமதை /

           

Sunday 14 July 2019

சாமத்து ஏக்கம்

சாமத்திலே
சேவல் கறுபுறுக்குது /
கம்பிக்
கூட்டுக்குள்ளே சரசரப்பு கேட்குது/
ஏன் -மாமா அது ஏன்- மாமா?
கொக்கரிக்கும் கோழியும்
கூடவே குறுகுறுக்குது /
ஏன் -மாமா அது -ஏன் மாமா/

என் நெஞ்சுக்குள்ளும்
தாகம் இன் நேரத்தில் /
ஏன் -மாமா அது ஏன்- மாமா/
வெட்கம் திறக்கும் நேரம்
எவை அதைச் சொல்லி
விட்டுப் போ மாமா -போ மாமா/

தாகத்துக்கும் மோகத்துக்கும்/
யாரிடமோ சாவியுண்டு மாமா/
இந்தப் பொண்ணுக்கிட்ட சொல்லிச் சென்றால் தேவையில்லை மாமா/

வட்ட நிலவை
எட்டிப் பிடிக்கலாமா? மாமா
வெட்ட வெளியிலே  முத்தமிட்ட படி
நாம் வட்டமிட்டு ஆடலாமா? மாமா /
தொட்டுத் தொட்டு பாடலாமா? மாமா/
தொடரும் ஏக்கம் தீர்க்கலாமா? மாமா/
பக்கம் அமர்ந்த மாமா இன்னும்
மௌனம் காக்கலாமா ?
தேக்க மரத் தேகமதைக் காகக்க வைக்கலாமா ? மாமா ஏன்-மாமா/

Tuesday 9 July 2019

ஓசை கொடுக்கும்

வண்ண விளக்குகள் எரியும்
எண்ணப்படி மங்கயர்களும் 
ஆண்களோடு சேர்ந்தே
ஆடுவார்கள் கால்கள்
நில்லாமல் தள்ளாடும் போதையில்
இரவு நேர விடுதியிலே.....//// 

ஒட்டி ஒரசி முட்டி மோதி 
துள்ளிக் குதித்து
தள்ளி வீழ்த்தி
கட்டிப் பிடித்து தொட்டு இழுத்து
அள்ளி அணைத்து ஆடுவார்கள்....///

தொட்டுக்கவோ கட்டிக்கவோ
உரிமை இல்லாத ஆணோடும்
இணைந்தே ஆடிடுவாள்
மயக்க நிலையிலே  ....///

அரை குறை ஆடையும் 
அரை குறை மொழியும் 
அதிகமாகவே தென்படும்
வந்து விழும் கண்ணிலும்
காதிலும்  அந்த வேளையிலே .....///

உள்ளாச வாழ்க்கை 
நல்லாவே இருக்கும்
எல்லை மீறியதும்
பெண்மை வாழ்வோ
தெருவிலே பறக்கும்
பிள்ளையது பாவம் குப்பையிலே
குரல் ஓசை  கொடுக்கும்....////

            

Monday 8 July 2019

பெரும் தொல்லை

கவிதை கொண்டு உன்னை
அழைத்திட நான் கவிஞன் இல்லை//
எழுத்தின் வல்லமையால் உன்னை
ஈர்க்க புலவனும் இல்லை//

சித்திரத்தால் கவர்ந்து விட
ஓவியனும் இல்லை//
சிற்பத்தால் சிறைப்  பிடிக்க
சிற்பியும் இல்லை//

சிறு கதையால் உன்னை
வளைத்துப்  போட நாவல் ஆசிரியருமில்லை//
புன்னகையால் மயக்கிப் போட
புன்னகை அரசி
கே ஆர் விஜயாவும் இல்லை//

நிலவைச்  சுற்றி வட்டமிடும்
நட்சத்திரம் போல் //
நினைவிலே உன் மேல்
காதல் கொண்டவை தான் பெரும் தொல்லை

Thursday 4 July 2019

யார் அவள்

ஏதோ ஒற்றை தொலைத்தது போல்
ஒரு ஏக்கத்தோடும் எதிர் பார்ப்போடும்
அந்த ஜீவன் காத்திருக்கும் தினம்.

நானும் பார்த்திருக்கேன் தினம் தினம்.
என்னைக் கண்டும் காணாது போல்
அமர்ந்திருப்பாள் அவள்.

எனக்குள்ளே எழும் கேள்விகள்
ஏராளம் தான் ஆனால் வாய் திறந்து
கேட்க வில்லை நானும்.

அழகுப் பதுமை என்று சொல்வதற்கும்
இல்லை அலங்கோலமான தோற்றம்
என்று கூறி விடவும் முடியாது.

ஒரு சமயம்  அவள் கண்ணை உற்று
நோக்கினால்  பிரகாசமான ஒளி
தென்படும் ஆனந்தக் கற்பனையில்
அவள் அமந்திருப்பது போன்று
தோன்றும்.

சில நாள் சென்று பார்க்கும் போது
அவளின் கண்கள் சிவந்து கன்னங்கள்
ஒட்டிப் போய்   அழுத முகம் போல் காட்சி
கொடுப்பாள்.

இன்று வரை நான் அவளிடம் பேச்சுக்
கொடுத்ததில்லை அவளிடம் சிக்கி
உள்ள மர்மத்தை அறிய என் மனம்
துடிக்கும் துடிப்புக்கும் எல்லை இல்லை

என்னுள் நுழைந்த காதல் செந்தேனே

கனவோடு வந்து கலந்தவளே./

காதல் நரம்பின் 

வழியே நுழைந்தவளே./

கலைந்து விடாத கலைமுகத்தழகானவளே./

கரைந்து வருகிறது எனது மோகமடி என்னவளே ...../


இரவெல்லாம் உறக்கத்திலே 

இதழ் கடிக்கின்றாய்./

இதமான இன்பத்துக்கு 

என்னை அழைக்கிறாய்./

இச்சையெல்லாம்  காதோரம் சொல்லி முடிக்கிறாய்./

இமை திறந்து பார்த்தால் இருட்டறைக் காட்சியே கொடுக்கிறாய் ..../


 வெட்கம் துறக்க பக்கம் 

நெருங்கி வாயேன்டி./

பட்டுக் கன்னத்தில் முத்தம் பதிக்க /பத்தினியே என் அருகே வாயேன்டி./

பருவ காலப் பனியும் படர்ந்திருக்குதடி./

பட்டு மெத்தை தான் விரித்து 

பர பரப்புடன் நான் காத்திருக்கின்றேனடியே ....../



இடை தொட தடை போடுவாயோ?

சடை போட்ட கூந்தலிலே 

என் விரல்  நடை போட விடுவாயோ.?

படையில்லா காதல் மன்னன்  நானடி /

சிற்பச்சிலையே உன்னை நான் விடுவேனோடி? 

இரு விழி வழியே இதயம்  நுழைந்த கிளியே /

காத்திருக்கின்றேன் நான் 

ஏரிக் கரை தனிலே தனியே ...../ 

Wednesday 3 July 2019

தில்லு முல்லு மனிதன்

உறவாக வருவோர் எல்லாம் 
உண்மையாக இருப்பதில்லை
உரிமையென்று வருவோர் எல்லாம் உதவியாக இருப்பதில்லை ....///

உள்ளதை உள்ளபடி உரைப்பதில்லை 
உறவாடிக் கெடுப்போரும்  குறைவதில்லை
குறை கூற நிறையவே உண்டு
சொன்னாலும் ஏற்றுக் கொள்ளும்
பக்குவம் இல்லை......///

நெருங்கிப் பழகியே நிறைப்பான்
அவன் சட்டப் பைகளை 
நல்லவனாகவே நடிப்பான் பிறர்  மத்தியிலே 
திருட்டுக் கூட்டங்கள் கை கோர்த்த பின்னே
திருத்தி எடுக்க முடியாது....///

அடித்துச் சொல்லி முறைத்துச்  சொல்லி
திருட்டை மறைக்க எத்தனையோ
கதைகள் சொல்லி முடிப்பான்
ஏமாற்றியே வாழ்க்கையைக் கடப்பான்
தில்லு முள்ளு  வேலை செய்யும் வழியையே
தேடிப் பிடிப்பான்....///

              

Tuesday 2 July 2019

உன்னோடுதான்

பட்டுச்சேலை ஸ்த்திரி
போட்டெடுத்தேன் /
குண்டு மல்லிச்
சரமும் சேர்த்தெடுத்தேன் /
எதற்காகத்தான் அத்தானே உனக்காகத்தான் /

கிச்சுகிச்சு மூட்டவேணும்
இச்சு இச்சு கொடுக்கவேணும் /
யாருக்குத் தான்
அத்தானே உமக்குத்தான்/

நெல்லு மணி வரப்புல
முல்லை மலர் தோப்புல /
நிற்று உலாவுகின்றேன் /
யாருக்காகத் தான்
அத்தானே உமக்காகத்தான் /

பட்ட போட்ட மொட்ட
மாமா கிட்டக்கிட்ட வந்தா
எட்டி எட்டிப் போகின்றேன் /
எதற்காகத் தான் கட்டம்
போட்ட சட்டைக் கார
அத்தானே உமக்காகத்தான்/

காத்திருக்கேன் பூத்திருக்கேன்
வழி பார்த்திருக்கேன் /
யாருக்காகத் தான் அத்தானே உனக்காகத்தான் /

பேசிக்கவேணும் உரசிக்கவேணும்
தழுவிக்கவேணும் /
யாரோடு தான் அத்தானே
உன்னோடு தான் /