Saturday 31 August 2019

மனதோடு மழைக் காலம்

அந்தி மழை
பொழியும்  வேளையிலே /
முந்தானை கொண்டு  
தலை மறைத்து
மெதுவாக நகர்ந்த
சின்ன மயிலே/

அந்த வேளையிலே/
எந்தன் கரம் அமர்ந்த
வண்ணக் குடை/
உந்தன் கரம் கிடைத்தனவே 
பொன்மயிலே நினைவிருக்கா ?

உன்னைத் தொட்டு விடவே
துள்ளிய மழைத் தூறல் /
வண்ணக் குடையினில்  பட்டுத்
தெறித்தவை நினைவிருக்கா?
வேகமாக வந்த மின்னல்
படம் பிடித்து  மறைந்தவை நினைவிருக்கா?

ஒளியோடு வந்த இடிக்குப்
பயந்து நீ என்னோடு  ஒட்டிக்
கொண்டவை நினைவிருக்கா?
கருமேகக் கூட்டமெல்லாம்
திரண்டு வந்து 
மிரட்டியவை நினைவிருக்கா?

புயல் காற்று சொடுக்குப்
போடும் நொடிக்குள்
குடையைப் பறித்துச்
சென்றவை நினைவிருக்கா?
கொட்டிய மழைத் துளி இருவரையும்
குட்டியவை  நினைவிருக்கா?

உன்
உள்ளம் நான் அறியேன் /
நானோ
நனைகின்றேன்  இன்னும்
அன் நாள் நினைவில்/
மனதோடு மழைக்காலமாய்/

   

(போட்டிக்காக எழுதியவை அனுப்பவில்லை)

Friday 30 August 2019

காதலே என்னைக் காதலி

காதலே என்னைக் காதலி .
காதோரமாக ரகசியம்
பேச என்னைக் காதலி .
காந்தக் கண்ணாலே எனைச்  சாய்த்தவனே என்னைக் காதலி .
கசக்கிப் போட்ட காகிதம்
படகாகி தத்தளிப்பது போல்
தத்தளிக்கின்றது
என் மனம்  என்னைக் காதலி.

கரும்பான வாழ்வை குறும்பாக அனுபவிப்போம்
என்னைக் காதலி
உன்னை நினைத்து வரும்
பெரும் மூச்சும் கரைந்து
போச்சு என்னைக் காதலி.

உடலும் துரும்பாக இளச்சுப்
போச்சு என்னைக் காதலி.
உன் மணிக்குரலால்
வார்த்தை ஒன்று கூறி
என்னைக் காதலி.

உனக்கும் எனக்கும்
இடைவெளி  சிறு தூரம் தான்
என்னைக் காதலி.
தொடத் தடை போடுவது
பஞ்சபூதத்தில் ஒன்று தான்
என்னைக்  காதலி.
உன் அடந்த தாடியில்
அடங்கிப் போனேன் என்னைக்  காதலி .

நீ கிறுக்கிய கவிதையில்
மயங்கிப் போனேன்
என்னைக் காதலி.
உன் இரும்பு இதயம் கண்டு
ஏங்கிப் போனேன்
என்னைக்  காதலி.

இதயம்  திறப்பாய் அன்பால்
என்று நம்வுகிறேன்
என்னைக் காதலி.
ஒன்றை ஒன்று தொட்டு
விட துடிக்கும் அலை போல் தொடர்கின்றேன் என்னைக் காதலி.

தொட்டு அணைப்பாய் என்று
நம்பிக்கை உண்டு
என்னைக் காதலி
உள்ளத்தின் உணர்வுகளைக்
கொட்டி விட்டேன்
கவிதையிலே என்னைக்  காதலி.

உன் மேல் கொள்ளைப் பிரியமடா
என்னைக் காதலி
உன் பிடிவாதம்  தழர்த்தி
முறைப்படி கரம் பிடி
என்னைக்  காதலி.

வயது வரம்பு பாராது
உன்னை நேசித்து விட்டேன்
என்னைக் காதலி.
தலை நரைத்து தாடி சிரைத்து இருந்தாலும்
என் பாசம்  மாறாது என்னைக் காதலி
கேடிபோல் காட்சி கொடுத்து
ஞானி போல் மாறாமல் என்னைக் காதலி.

காதலே உன்மேல் தானடா நீ தான் உலகமடா
ஆகையால் காதலே என்னைக் காதலி
கவிதைகளால் தூது விட்டேன்
கனவில் சம்மதம் கேட்டேன் இன்னும்
ஏன் மௌனம் காதலே என்னைக் காதலி.



குவளை மலர் கண்ணழகி

செந்தாமரை முகத்தழகி./
செந் தேன் தமிழழகி./
செவ்வாழை இதழழகி./
கொண்டையிலே செம்பருத்தி  பூவழகி /

வாழைத்தாரை விரலழகி ./
பொன்னால் வார்த்தது போல் உடலழகி./
வளைந்து நெளியும் இடையழகி./
வளையல் மாட்டிய கரத்தழகி./
மனசை கொள்ளையிட்டு விட்டாள் /
குவளை மலர் விழியழகி /

வட்ட முகத்தழகி./
வளைவான புருவத்தால்
வளைத்துப் போட்டழகி /
வாய் வெடித்த மொட்டாய் மூக்கழகி./
கலைந்திருக்கும் கார்க் கூந்தலழகி./
சொக்க வைத்து விட்டாள் சொக்குப் பொடி
போடாமலே செக்கச் சிவந்தழகி/

சர்க்கரை சொல்லழகி./
சடு குடு ஆடும் நடையழகி./
சங்குப் பல்லழகி./
நதிகள் சங்கமிக்கும் குளிர்ந்த உள்ளத்தழகி. /
மாம்பழக் கன்னத்திலே நான்
மயங்கினேனடி அழகி /

கீற்றுப் போல்  பாட்டழகி/
கிளி  போல் பேச்சழகி./
அசைந்து வரும் மயிலழகி ./
நாணத்திலே தலை குனியும் நாற்றழகி/
நாள் தோறும் எனை மயக்கும்
குவளை மலர் கண்ணழகி/

   

     தேர்வுக் குழுமத்ற்கு நன்றிகள் 😊❤🙏🙏

Sunday 18 August 2019

காதல் செய் கள்வனே

நான்கு  விழி நோக்கிய வேளையிலே /
மான் விழி வழியே என் உயிர் நுழைந்தவனே /
இரவு தூக்கத்திலே கனவோடு கலந்து வருபவனே /
கசங்காத என்  சேலை கசங்கிட வேண்டுமடா சின்னவனே /
யானை சுவைக்காத செங்கரும்பு உடலடா மன்னவனே /
நுகர்ந்தவாறே மலர் மீது ஊரும் தேனி போல் /
நுகர்ந்து சுவைத்திட நீ வந்து விடு நாயகனே /
செவ்வாழை நானடா உன் கரம் கொண்டு மாலை மாத்தடா மாதவனே/
உள்ளமதை கொள்ளையிட்டு உணர்ச்சியை திறந்து விட்ட  சேவகனே /
நித்தம் நான் முத்தமழையிலே குளிக்க வேண்டுமடா/
யுத்தமின்றி காதல் செய் கள்வனே /

Thursday 15 August 2019

"ஒற்றை ரோஜா", - பிரதிலிபியில் படிக்க : https://tamil.pratilipi.com/story/yvpbfy9agnba?utm_source=android&utm_campaign=content_share இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம்

Monday 12 August 2019

முள்ளி #வாய்க்கால் #சுவடுகள்

முல்லி வாய்க்கால்
போர் பலருக்கு/
கொள்ளி வைக்க
வைத்து திட்டது./
உறவுகளை தொலைத்து
உணர்வுகளை பறித்து /
உள்ளத்தால் நொந்து 
இரத்த வெள்ளத்தில் /
துவைந்து துன்பத்தில்
துவண்டு வாழவைத்ததே /
நீர் ஓடிய ஓடை எங்கும் /
செங்குருதியும்
சேர்ந்து ஓட விட்டதே /
உண்ண உணவின்றி
உறங்க இடமின்றி /
பதுங்கு குழியில்
இறங்க வைத்ததே /
சொத்து இழந்து சுகம் இழந்து /
பெற்ற பிள்ளைகளையும்
சேர்த்து இழந்து /
ஈழமண் மீட்பு கனவாய் போனதே /

Wednesday 7 August 2019

சொன்னாலும் புரியாத துயரம்

பயணச்சீட்டு கரங்களில்
கிடைத்ததுமே/
பிறக்கிறது மகிழ்ச்சி /
பறக்கிறது அந்த நொடியே
இன்பப் பெருமூச்சு/

புறப்படத் தயாராகும்/
அந்தச் சில. நாட்களிலே/
பாதம் மண்ணை மறந்து /
விண்ணில் பறப்பதாக /
நினைத்து சிறகு விரிக்கிறது/

இரண்டு மூன்று நாட்கள்/
தடபுடலான விருந்து நடக்கிறது /
வழியனுப்புவதற்காக வருகை தரும் /
தூரத்தின் உறவுகளின் வரவும் அதிகரிக்கிறது/

விருந்தோடு மருந்து கேட்டு /
முன்னும் பின்னும் நண்பர்களின் /
சுரண்டல் நாடகம் அரங்கேறுகிறது /
மது அடித்த மயக்கத்தில் /
அந்த இடத்திலே பல வாக்குறுதி காற்றிலே கலக்கின்றது/

ஆட்டோட்டம் எல்லாம் முடிகிறது /
பயணம் தொடர்கின்றது /
பாதமோ அயல் நாட்டு
மண்ணை மிதிக்கிறது/

வட்டிக்கு வாங்கிய பணத்திலே /
பெட்டியை நிறைத்து கொண்டு /
நாடு கடந்தாச்சு /
நாள் செல்லச் செல்ல /
பணியிடத்தில் தொல்லைகள்
தலை தூக்குகிறது/

பணவரவு தாமதம் /
வாங்கிய பணத்தின் வட்டியின்
பெயரால் /
குடும்பத்திலே  குட்டிக் 
குட்டி சச்சரவு பெருகிறது /

பட்ட கடன் கட்ட வக்கில்லை/
வட்டிக்காரன் நாக்கு வசப்பாடுகிறது/. ஊரைப்பிரிந்து உறவைப் பிரிந்து /
வந்தும் ஊதியம்  பற்றாக்குறை/ அழுத்தத்திலே மூழ்கிறது மனம் /
இரவு பகல் பாராது/

வட்டிக்கு குட்டி கட்ட ஒரு வருடம். ;
வட்டி கட்ட ஒரு வருடம் /
கை நீட்டிப் பெற்ற பணம்
கட்ட ஒரு வருடம் /
தொடர்கிறது அயல் நாட்டு வாழ்வு/ பட்டத்து  வால் போல் நீள்கிறது/

இளமை கரைகிறது /
முதுமை அணைக்கிறது /
வறுமை குறையவில்லை /
வளர்ச்சி காணவில்லை /

சுட்ட பழம் போல் போச்சு வாழ்வு /
ஊதி ஊதி தட்டித் தட்டி எடுத்தாலும் /
சுவைக்கவில்லை /
அயல் நாட்டு உழைப்பாளியாகப் போனோருக்கு  வாழ்வு /

ஆலமரத் தொட்டிலிலே

உதிரத்தில் உருவெடுத்த
சின்ன மணித் தேரே -ஆரிராரோ/
என் மடி ஏந்த வானத்து நட்சத்திரம்/
வந்திறங்கியதோ ?மானே-ஆராரோ/

இழுப்பைப் பூ எண்ணெய் எடுத்து/
இடுப்பு வலிக்குப் போட்டுத் தேய்த்து/
ஈன்று நான் எடுத்த செல்லமே/

ஏழை என் குடிசைக்கு /
நிழலென முன் வாசலில்
நிற்கும் ஆழங்கிளையிலே/
ஆத்தா என் சேலை தனைத் தொட்டிலிட்டு /
ஆராரிரோ நான் பாட/

கருவிழியிரண்டும் நீ மூடி /
ஆழ்ந்த உறக்கத்தை
சூழ்ந்திருக்க வேண்டுமம்மா
ஆரிரரிராராரோ -ஆரிவரோ/

பொன் மயிலே அள்ளி அணைப்பேன்/ மெல்ல முத்தம் பதிப்பேன் /
செல்ல மொழி பேசி /
சின்னதாய் கன்னம் கிள்ளி/
உன்  பசி தீரப்  பால் கொடுப்பேன்/

ஆலமரத் தொட்டிலிலே/
அனுதினமும் உறங்க வைப்பேன் /
இந்த ஏழ்மை வாழ்வை
ஆள வந்த என் ஏழை விட்டு இளவரசியே- கண்ணுறங்கம்மா  பொன்னு ரதமே -ஆரீரிரராரீரோ /

Saturday 3 August 2019

எப்போது

ஜோடி கிளி அங்கே
இணைக் கிளி இங்கே
பேசும் கிளி தானே நீ
பேசும்  என நான்  கெஞ்சும் போது
மௌனம்  ஏனோ ஏனோ /

பாசம்  கொண்ட நெஞ்சம்
பேசு என்று கெஞ்சும் போது
மோசம் செய்யலாமோ நீயும் நீயும் /

நேசம் கொண்டபெண்மை உள்ளம்
காசிக்காக. தன்னை விற்கும்
தாசி இல்லம் இல்லை /
இதை  நீ யோசிக்காமல் போவதும்
ஏனோ ஏனோ /

என் சுவாசத்துடன் கொஞ்சம்
உன் வாசம் கலக்க /
நான் ஏங்குவது புரிந்தும்
புரியாதது  போல்  நீ போவதும்
ஏனோ ஏனோ ./

ரோசம் கொஞ்சம் அதிகம்
கொண்ட பெண்மை /
இவளும் அது உன்னிடம்
சாதிக்காமல்  போவதுதான்
பெரும் மாயம்  மாயம் ./

வெட்டு ஒன்று துண்டு
இரண்டாக /
வெட்டி விட்டுப் போகும் மங்கை /
உன்னிடம் மட்டும்  வெட்டி வெட்டி
ஒட்டிக் கொள்வது மிக புதினம்  புதினம் /

என் உணர்வை கொன்று விட்டாய்/ உணர்ச்சியை வென்று விட்டாய் /
என் உள்ளே நின்று விட்டாய் /
இதை உணர்வாய்  எப்போ எப்போ ./

            

Thursday 1 August 2019

யாரடா நீ

இன்பக் கடலை வரமாகக்
கொடுக்க வந்த இறைவனா_?
துன்பம் நீக்க வந்த
துணைவனா_?

துயரத்தில் இருந்து கரை
சேர்க்க வந்த உத்தமனா_?
தூரமாக நின்று வேடிக்கை
பார்க்க வந்த வேடுவனா_..?

நீ யாரோ இவரோ  நான்
அறியேன் /
உனையே நாடும் என்
மனதுக்கு வேலியிடவே
முடியாமலே அல்லாடுகிறேன்...\

ஆசை ஒரு புறம் அவஸ்தை
மறு புறம்/
அசையாதோடா   உன்  மனம் ..../

வெள்ளோட்டமாக என் 
கண்ணில் ஓடும் /
நீருக்குப் பாதையாக மாற்றினாய்
என்  கன்னமதையடா.../

தொலை தூரத்தில் நீ


கனவில் முகம் காட்டுகிறாய்/
நினைவில் காதல் பெருக்குகிறாய்/
கற்பனையில் கரம் கோர்க்கிறாய்/
நித்தமும் எனை அழைக்கிறாய் /

துயரத்தில் ஆதரவுக் குரல் கொடுக்கிறாய்/
தொலைபேசி உரையில் உரிமை அளிக்கிறாய் /
ஆழமான அன்பைத் தான்
நீ தொடுக்கிறாய்/
ஆழ் கடல் கடந்து மறைவாகவே இருக்கிறாய்/

மாய உலகினிலே உன்னில்
நான் இணைகின்றேன் /
தொடும் விரலுக்குத்
துணையில்லை/
தொலை தூரத்தில்  நீ/