Saturday 31 August 2019

மனதோடு மழைக் காலம்

அந்தி மழை
பொழியும்  வேளையிலே /
முந்தானை கொண்டு  
தலை மறைத்து
மெதுவாக நகர்ந்த
சின்ன மயிலே/

அந்த வேளையிலே/
எந்தன் கரம் அமர்ந்த
வண்ணக் குடை/
உந்தன் கரம் கிடைத்தனவே 
பொன்மயிலே நினைவிருக்கா ?

உன்னைத் தொட்டு விடவே
துள்ளிய மழைத் தூறல் /
வண்ணக் குடையினில்  பட்டுத்
தெறித்தவை நினைவிருக்கா?
வேகமாக வந்த மின்னல்
படம் பிடித்து  மறைந்தவை நினைவிருக்கா?

ஒளியோடு வந்த இடிக்குப்
பயந்து நீ என்னோடு  ஒட்டிக்
கொண்டவை நினைவிருக்கா?
கருமேகக் கூட்டமெல்லாம்
திரண்டு வந்து 
மிரட்டியவை நினைவிருக்கா?

புயல் காற்று சொடுக்குப்
போடும் நொடிக்குள்
குடையைப் பறித்துச்
சென்றவை நினைவிருக்கா?
கொட்டிய மழைத் துளி இருவரையும்
குட்டியவை  நினைவிருக்கா?

உன்
உள்ளம் நான் அறியேன் /
நானோ
நனைகின்றேன்  இன்னும்
அன் நாள் நினைவில்/
மனதோடு மழைக்காலமாய்/

   

(போட்டிக்காக எழுதியவை அனுப்பவில்லை)

No comments:

Post a Comment