Thursday 24 September 2020

சொல்லத் துடிக்குது மனசு


வண்ண உடை கலக்களடி.
அன்ன நடை மயக்குதடி.
சின்ன இடை இழுக்குதடி.
கண்ணாடிக் கண்கள் போதை ஏற்றுதடி.

முன்னாடி பாத்துப்புட்டா மோகமடி 
பின்னாடி நின்னுப்புட்டா தாகமடி.
ஓர விழி உள்ளே நுழையுதடி.
ஒய்யாரப் பேச்சு கொள்ளையடிக்குதடி.

வளைந்த புருவம் வளைத்துப் போடுதடி.
நெளிந்த முடி நெஞ்சை அள்ளுதடி.
ஏர் நெற்றி திகைப்பில் ஆழ்த்துதடி.
செவ்விதழ் வசியம் பண்ணுதடி.

உன் அங்க அசைவுகள் எல்லாம் 
இந்த ஆண் மனசை எங்கங்கோ
தள்ளுதடி. 
சொல்லிக்க ஏதேதோ தோணுதடி.
சொல்லிப்புட்டா பொல்லாத 
வம்பாகிப் போகுமடி.

(ஓவியருக்கு வாழ்த்துகள்)


Monday 21 September 2020

இன்ப வெள்ளம்


விழியும் மொழியும் நாணும்-மனம் 
மலரையும் நிலவையும் நாடும்.
இரவும் பகலும் ஒன்றாகத் தோணும்.
இணைந்த  நெஞ்சம் பந்தாக மோதும்.
இருவரின் இதயமும் இடமாறிய பின்னே.

அறிவு அரிய சிந்தனையில் இறங்கும்.
அது அன்னையையும் தந்தையையும்.
யாந்திரை நோக்க அறிவுறுத்துதம்.
அதற்கு ஏதேதோ நாடகம் நடிக்கும்.
இரண்டு  ஜீவனும் விரைந்த பின்னே .

கள்ள மூளை இறக்கை விரிக்கும்.
வீட்டுத் தோட்டம் ஆத்தோர ஆலமரம்.
தெருக் கோயில் சின்னாத்தா இல்லம்.
எது சிறந்த இடமமென  குறிப்பெடுக்கும். 
அத்தனையும் சாதகமான பின்னே.

தேர்வான இடத்துக்கு தோர்வான 
உடையை கரம் விரைந்து எடுக்கும்.
மூன்று முழம் மல்லிகை முடியில் ஏறும்.
அயல் நாட்டு சாயம் இதழில் சாயும்.
அலங்காரம் பரபப்பாக ஆன பின்னே.

கண்ணோரம் கண்டு .
நரம்போடு கொண்டு.
உணர்வோடு இணைத்தவனை 
எத்தனை மணி வரை தன்னோடு 
நிறுத்தலாம்  என ஆத்ம ஜீவன்
கடிகாரம் திருப்பி நாவோடு  
கணக்குப் படிக்கும்.

இத்தனையும் ஈருள்ளம் ஓர் 
உள்ளமான உண்மைக் காதலாக
உருவெடுத்த பின்னே.
உருவாகிடும் புது வெல்லம்.
நிறைவாகிடும் இன்ப வெள்ளம்.

(ஓவியருக்கு வாழ்த்துகள்)

Tuesday 15 September 2020

பருவக் காற்று

#ஓவியக்கவிதை
*******************

வயசுக்குப் பசி தீர்க்க
மனதாரத் தழுவி .
உடலுக்குச் சூடு ஏற்றி.
உள்ளத்தில் காமத் தீ மூட்டி .
உணர்வைக் கொண்டு சிறையில் பூட்டி
உணர்ச்சியை விடுவித்து 
உலாவிடும் பாதையைக் காட்டி./

பின்னிய நரம்பில் நெஞ்சம் எண்ணியவையெல்லாம் செலுத்தி.
வெப்ப மூச்சு வீசையிலே 
அச்சம் கொள்வாயா? 
என்று வினா எழுப்பி 
ஓடும் குருதியை நிறுத்தி 
உறுதிமொழி எடுத்து./

கணை தொடுத்திடும் கண்களுக்கு 
பஞ்சணை மயக்கப் பட்டம் பெற்று
பூவாக நான் மலர்ந்து .
பொன்வண்டாக உன்னை அழைக்க  
உன் இதழ் கொண்டு எனை நீ அளந்து.

 இன்புறும் வேளையிலே 
நெஞ்சணை எடை கொண்டு 
உன்னை நான் எடை பாத்திட 
வேண்டும் என்று பருவக் காற்று 
பரிசம் போட்டுச்  சென்றதடா நேற்று./

(ஓவியருக்கு வாழ்த்துகள்)
கிளுகிளுப்புக் கவிதை😜

நான் சாய்ந்த தோள்கள்

#ஓவியக்கவிதை
******************

உன்னையும் 
என்னையும் தழுவிய 
வாடைக் காற்று
முதுமை நோக்குகின்றது .

நீயும் நானும் 
குதித்த ஓடை நீரும் 
இளமை இழக்கின்றது.

நாம் இருவரும் நட்ட 
தோட்டத்து மல்லிகை 
மலர்களும் 
பள்ளியறை கேட்கின்றது.

உன் கரமும் என் கரமும்
தொட்டுப்  பதியமிட்ட 
பருத்திப் பஞ்சும் குடித்தனம் 
நடத்த அழைக்கின்றது.

அன்னையின் தேர்வான
சுடிதார் விடுதலை கேட்கின்றது.
விருப்போடு நீ கொடுத்த 
பட்டுச் சேலை கசங்கிடத் துடிக்கின்றது .

கூடி ஓடி நாம் விளையாடிய
தெருவெல்லாம்.
கெட்டி மேளம் கேட்கின்றது.

படியேறிடும் கால்கள் இரண்டும் 
மெட்டியொலிக்குக் 
கட்டளையிடுகின்றது.

மருதாணி விரல்கள் 
மாற்று மோதிரத்தைக் 
காத்து இருக்கின்றது.

ஏர் நெற்றி குங்குமத் 
திலகத்திற்கு ஏங்குகின்றது.
வகுத்த உச்சியும்  நெற்றிச்சுட்டி
போட்டுக்கத் துள்ளுகின்றது.

நீ பிடித்து இழுத்து 
அடித்துப் பார்த்த கரங்கள்
வண்ண வளையல்கள் 
போட்டுக்கச் சொல்லுகின்றது.

இத்தனையும் இங்கிட்டு
நடக்கின்றதே .
அங்கிட்டு நான் சாய்ந்த
தோள்கள் 
இன்னும் மாலை மாற்றிக்கக் கேட்டுக்கவில்லையோ அய்யனே.

(ஓவியருக்கு வாழ்த்துகள்)
  

    

தோழியோடு சில நிமிடம்

#ஓவியக்கவிதை
*******************

நெடு நாள் தோழியே 
நெருங்கிய தோழியே
சற்று இடைவேளையின் பின்னே
உன் முகம் கண்டேனடி தோழியே.

கலகலப்பைக் காணோமடி 
கிளுகிளுப்பு இல்லாமல் இருக்காயேடி 
என்னாச்சு ஏதாச்சு என் நெஞ்சம்  பதறுதடி  சொல்லிக்கக் கூடாதா எங்கிட்ட 
எனதருமைத் தோழியே.

சொல்லி அழ அன்று நீ இல்லையடி
சொல்லிக் கொள்ள இன்று #நா எழவில்லையடி.
புளுவாய்த் துடித்தேன் 
அனலாய் எரிந்தேன் 
கானல்நீர் வடித்தேன்.
நினைவு வாழ்க்கைகக்குள் 
இறுதியில் வீழ்ந்தேனடி 
இன்னும் என்ன சொல்ல வேணுமடி
என் அன்புத்  தோழியே.

கவிதை ஒன்று கிறுக்குகின்றேன்
கலங்காமல் படித்திடு  
கன்னி என் கடந்த காலக்  கதை 
அதற்குள்ளே உண்டம்மா தோழியே. 

(#கவிதை)

செவ்இளநீர்  #நீர் எடுத்து.
செங்கரும்பின் சார் எடுத்து.
செவ்வாழைக் கனி உரித்தெடுத்து.
செய்து வைத்தேன் பாணமொன்று.
சேர்த்தணைத்திட வந்திடும் மாமானுக்காக.

கருவாப்பட்டை பொடி போட்டு.
கருப்பட்டி இடித்துப் போட்டு.
கரகப்பான சோள மாவைப் போட்டு.
கரந்த பாலை சூடோடு போட்டு.
கரம் கொண்டு பிடித்தேன். 
இனிப்பான பண்டமொன்று.
கட்டியணைக்கும் மாமனுக்காக.

மனதை மயக்கிட  மணம் வீசிடவே.
மல்லிகைப் பூ நறுமணம் பூசி.
மந்தாரப்பூ சேலை உடுத்தி.
மகிழம்பூக் கொண்டை போட்டு.
மஞ்சள் வெயில் வேளையிலே.
மாமன் நெஞ்சோடு சாய்ஞ்சிக்கக் காத்திருந்தேன்.

எதிர் பார்ப்பு முற் புதராச்சு.
அத்தனையும் வீணாச்சு.
செய்த பண்டம் நாசமாச்சு.
சேர்ந்த ஆசை செத்துடிச்சு.
அதை என்னவென்று நான் சொல்ல.

கண்ணீரே சேதாரமாச்சு.
உள்ளக் குமுறலே மிச்சமாச்சு.
ஆத்திலே வெள்ளப் பெருக்காச்சு 
அதனோடு என் மாமன் மூச்சும் போச்சு.
ஆத்தாவுக்கும்  பித்துப் பிடிச்சாச்சு.
எல்லாமே என் வாழ்வில் முடிஞ்சு போச்சு.
புதுமையாய் நான் என்ன சொல்ல.

(கவிதையைப்  படித்து முடித்த உயிர்த் 
தோழி ஓவெனக் கதறி அழுதாள்)

(ஓவியருக்கு வாழ்த்துகள்)


இதற்குப் பெயர் தான் காதலா

#ஓவியக்கவிதை
******************


துடிக்கும் இதயம் தூண்டில் போடுகிறது.
படிக்கும் நாவு பாண்டி ஆடுகிறது.
விரட்டும் விழிகள் வெட்கப்படுகிறது.
அதட்டும் இதழ்கள் புன்னகை வீசுகிறது.
இதற்குப் பெயர் தான் காதலா ....?

நெஞ்சம் சல்லாபம் தேடுகிறது.
சங்கதியை கனவுக்குள் போடுகிறது.
உந்தன் ஞாபகம் நித்தம் நீளுகிறது.
எந்தன் ஞாபகம் முற்றாக ஓடுகிறது.
இதற்குப் பெயர் தான் காதலா ...?

கறந்த பாலும் புளிக்கிறது.
அறுசுவை உணவும் கசக்கிறது.
இறுக்கிய இமையும் தூக்கம் மறக்கிறது.
நிறுத்திய நினைவும் எங்கங்கோ அலைகிறது.
இதற்குப் பெயர் தான் காதலா ...?

இதயம் எங்கும் ஆசை பொங்குகிறது.
அங்கமெல்லாம் மோகம் தங்குகிறது.
வார்த்தையெல்லாம் தேனாய் இனிக்கிறது.
கற்பனையெல்லாம் கடல் கடக்கிறது.
இதற்குப் பெயர் தான் காதலா ....?

தனிமையும் வெறுமையும் பிடிக்கிறது.
அதிலே தவிப்பும் துடிப்பும் கலக்கிறது.
தொலைந்ததாக மனம் நினைக்கிறது.
தொலைந்த நிலை  அறியாமல் முழிக்கிறது.
இதற்குப் பெயர் தான் காதலா ....?

(ஓவியருக்கு வாழ்த்துகள்)


மனிதன்



மனமும் குணமும் 
மாறுவது மனிதனிடமே. 
முன்னாடி விட்டு பின்னாடி 
பேசுவதும் இந்த இனமே.

கூட்டி விட்டும் காட்டி விட்டும் 
கூடவே நின்று கை 
கொடுப்பதும் அந்த இனமே.

பகட்டு வாழ்வில் 
புரண்டு எழுந்து
முரட்டுத்தனமாய் நடப்பதும்
மானிடர் இனமே.

குடி கெடுப்பதும் குடியால் 
கெடுவதும்
மூட்டி விடுவதும் காட்டிக் 
கொடுப்பதும்
பழகும் போதே விசத்தைக் 
கலப்பதும்
பழகியவரின் முகத்தை 
முறிப்பதும்.

இத்தனையும் முற்றும் 
முழுமையாக
செய்து முடிக்கும் 
திறன் கொண்ட இனம் 
ஒரே ஒரு இனமே 
அது நம் இனமே.
உயிர் இனத்திலே 
மாறுபட்டவன்  இவனே.

(#மனிதன் #மனிதன் #மனிதன்)