Thursday 24 November 2022

சோளக்கதிரு வெளஞ்சிருக்கு 
சோடிக்கிளி காத்திருக்கு.
**-***************************

கிழக்கால உதிச்சிக்கும் 
சூரியன் என்னாலும் /
மேக்கால மறஞ்சிக்கப்
போகுது தன்னால /

ஒங்களுக்கு  இப்பாக்கும்
புரியலயே யென்நில/
மஞ்சள் குளிச்சி 
நானும் மாசங்களாச்சி /

குலவ போட்டவங்க 
பல்லும் கொட்டியாச்சி/
கொழுந்தனார் பொண்டாட்டிக்கும்
மாசமோ பத்தாச்சி/

மூத்தார் புள்ள 
நோக்கு என்னாச்சி/
நேக்கு காத்திருந்து
தேயுது மூச்சி /

கண்ணாலம் முன்னாக்க
யேனாக்கும் மூஞ்சு  கடுப்பாச்சி/
காலத்தால கவலையிலே
கஞ்சியும் சிக்கிடிச்சி/

வெளஞ்ச சோலக்கதிரும் 
சந்தைக்குப் போயாச்சி/
காத்திருக்கும் சோடிக்கிளிக்கு
வாழ்க்கையே நாசமாச்சி/

   ஆர் எஸ் கலா

Wednesday 23 November 2022

பேசும் சிலையே
**--**************
ஏந்திழையாள் சிற்றிடையில் 
சிறு  பொற்குடமோ /
செதுக்கிய சிற்பிக்கு 
ஏற்றிடலாம் மகுடமே/

நகராத பாதங்கள் 
நகர்த்துகின்றது கற்பனைகளை/
கடல் மலை 
தாண்டி வெகுதூரம் /

இமைத்திடாத விழிகளும் 
அசைந்திடாத கரங்களும்/
அசைத்துப் பார்க்கின்றது
அசராதவன் நெஞ்சத்தை/

மூச்சும் பேச்சும் 
கிடைத்திடாப் பெண்ணாயிருந்து  /
ஆயிரம் கவிதைகள் படைத்திடும்
கவிஞன் ஆக்கினாள் என்னை/

பேசும் சிலையே நீயும்
ஆசைகளை மௌனமாகவே/
நோக்கிய நொடியே
தேக்கி  விட்டாயடி/

ஆர் எஸ் கலா
மாமா நான் மயங்குறேன்
****************************
மல்லு வேட்டி  ராசாவே
மல்லுக்கட்டிக்காதே/
பல்லு கொட்டிப்புடும் 
ஒன்னு விட்டாலே /

நேக்குப் புடிக்கல
அவ சகவாசம் /
சொன்னாக்கா கேட்டுக்கோ
சிக்கிக்காதே கைவசம் /

கறந்தபாலாக
நெனைச்சுக்காதே அது விசம் /
புலம்பிக்கும் என்னைய
பாருங்களேன் ஒரு நிமிசம் /

ஆளான காலமாய் 
நூலாக போறேன் /
அகண்ட மார்புல
மாலையா வாறேன் /

சிறுக்கி நானும் 
மாமா மயங்குகிறேனே/
திரும்பி நோக்கிக்காம 
போய்கிறேயே ஏனோ/

ஆர் எஸ் கலா
அன்றொரு-நாள் இதே நிலவில்
**********************************
அன்றொரு நாள் இதே நிலவில்/
பகல் போல் ஒளியானாள் 
பௌர்ணமியாள்/
பாண்டியாட தோழிகள் மெதுவாக
அழைத்திட/

வெள்ளிக்கொலுசு ஒலிபெருக்கி சங்கதி 
பாடா/
துள்ளிக் குதித்து வந்தாள் 
தேவதையொருத்தி/

பனிக் குளிர் உடலைக் 
கிள்ளியது/
மணிக்குயிலின் அழகு கண்ணைக் கிள்ளியது/

நளினமாய்ப் பேசினாள் நாகரிகமாய் அனுகினாள்/
அயல்நாட்டுப் புறா மறுநாள் 
புறப்பட்டாள்/
ஒவ்வொருவரு பௌர்ணமியும்  
தவறாமல் நெஞ்சத்தில் உதிக்கின்றாள்  /

ஆர் எஸ் கலா
காதோர லோலாக்கு சங்கதி பாட
************************************

அங்கிட்டும் இங்கிட்டும்
நீயும் ஓடிக்கையிலே/
ஆடிக்கும் தொங்கட்டானில் 
எம்மனசும் தங்கிடிச்சு மயிலே/

காதோர லோலாக்கு 
சங்கதி பாட/  
எந்நாளும் ஒன்னய 
அள்ளிக்கத்  என் நெஞ்சம் தேட/ 

தன்னால கணக்கொன்னு
போட்டுக் கிட்டேன் /
நானும் கண்ணால 
நாளக் காத்துக்கிட்டேன்/

கற்றாழை முள்ளு
கண்ணுக் காரியே/
அத்திப்பழ சிவப்பழகியே 
நிச்சயதார்த்தம் 
பண்ணிக்க வந்துடிச்சு வேலையே  /

இந்தாப் பொண்ணு 
சற்று நின்னுக்கோடி/
ஆத்தாளப்  பார்த்தாக்கா
தித்திப்பா பேசிக்கோடி/

ஆர் எஸ் கலா
என் தேவதை  (படக்கவிதை )
+++++++++++++++++++++++

வெட்கம் திறக்கவா?
ஏக்கம் பறக்கவே
பக்கம் வரட்டுமா?

பருவப் 
பெண்ணொருத்தி .
இருவிழிப் 
பார்வையை நிறுத்தி.
தூதொன்று  விட்டாள் .
வெட்கம் திறக்கவா?
பக்கம் வரட
ஏக்கம் பறந்திடவே. 

நோக்கிய விழியோ 
என் கர்வம் உடைத்தது /
ஆணவம் தகத்தது /
வேகமாய் நுழைந்து/
இதயச் 
சிம்மாசனம் அமர்ந்தாள் /

அன்றிருந்து 
இன்று வரையிலும்/
என்னுள்ளே ஆட்சி புரியும் 
தேவைதையா
மயங்குகிறாள் ஒருமாது
*-************************
பூமுகம் காட்டியே  
மோகம் விதைக்கிறாள்/
கெஞ்சிப் பேசி 
நெஞ்சைக் கரைக்கிறாள்/

மதுவிழியால் பெரும் 
போதை ஏற்றுகிறாள்/
கன்னம் தொட்டு
ஆசைத் தீ  மூட்டுகிறாள்/

இளசு மனதை உரசியே 
உசுப்பேத்துகிறாள்/
கொவ்வை இதழால்களால்
முத்தம் பதிக்கிறாள்/

மூர்க்கமாய்ப் பேசி
கேலியாய் நகைக்கிறாள்/
ஏக்க மூச்சோடு
எந்நேரமும் நோக்குகிறாள்/

என்னிடம் மயங்குகிறாள் 
ஒரு மாது/
வியக்குறேன் நானும்
காரணங்கள் ஏது/

ஆர் எஸ் கலா
மதுரை மல்லி
****-****-*****

ஆளைத் தூக்கிடும் குண்டு
மல்லி.
வாழாக் குமாரி நட்ட
மல்லி.
வாழைத் தோப்பு பக்கத்து 
மல்லி.
என்னை வளைச்சுப் போட்ட 
சின்னமல்லி.

வாடைக் காற்று தொட்ட 
மல்லி.
பருவ மழை முத்தமிட்ட 
மல்லி.
காலைப் பனி போர்த்திய 
மல்லி.
மாலையிலே மலர்ந்திருந்த 
வெள்ளை மல்லி.

சாரைச் சடையில் ஏறிடும் 
மல்லி.
சாமத்துச் சல்லாபம் கண்டிடும்
மல்லி.
சங்கதியின் போது கசங்கிடும் 
மல்லி.
சங்கோசம் கொண்டு உதிர்ந்திடும் 
மதுரை மல்லி.

ஆர் எஸ் கலா
மீள் நினைவாக

#புரட்சிக்கவிதை) 
 #நீயும்பாரடா)
 ****************

 வீரத்தின் உரமிட்ட நெஞ்சமடா / 
வீரியம் நிறைந்த 
பால் அருந்திய தமிழனடா/ 
விழுந்தாலும் எழுந்து விடுவானடா/ 
வீழ்ச்சி கண்டு முயற்சி தொலைத்திட மாட்டானடா/ 

உயிரைத் துச்சமென நினைப்பானடா/ 
உயிர் கொடுத்து 
தமிழை மீட்கும் தோழனடா/ உயிர்த்தெழுந்ததுமே உரிமையைக் கேட்பானடா / 
உறங்கும் வேளையிலும் விழியிலே உலாவிடும் வீரக் கனவு தானடா/ 

அச்சம் விதைக்காத ஈழ மண்னடா/ 
அழிவது தான் தமிழனுக்கே வெட்கமானதடா/ 
அடிமை வாழ்வை மீட்கத் துடிப்பவனடா/ அரக்கர்கள் இரத்தம் குடிப்பானடா/ 

எதிர்ச் சொல் உரைப்பானடா / 
எதிரியை எதிர்த்து நிற்பானடா / எரிமலையாய் வெடிப்பானடா / எருமைகளின் 
கோட்டையைத் தகர்ப்பானடா/

 நாடு காக்கத் துடிப்பானடா/ 
நாட்டுக்காக மாண்ட வம்சமடா/
நாடி நரம்பெல்லாம் எழும்புதடா/ 
நாளும் பொழுதும் நாங்கள் 
தமிழன் என்று உரக்கக் கூறும் 
வேளையிலே நீயும் பாரடா //

(#யாழ்சிறி  வானொலிக்காக
மாவீரர் தினம் அன்று எழுதியவை 
இன்று தான் போட முடிந்தன 
முகநூல்  பக்கம்.😊)
காந்தக் கண்ணழகி
====****=====******
காந்தக் கண்ணழகி 
பொல்லாத அகங்காரி /
கூடையோடு வருகையிலே
யெம்மனசு  சொக்குதடி/

ஊதாப்பூ தோட்டக்காரி 
ஊதுபத்தி உடம்புக்காரி/
உசும்புது காதலடி 
இசங்குது உயிரடி/

 வெள்ளரிக்காய்க் கன்னம் 
கண்டு  புல்லரிப்புடன் /
உள்ளுணர்ச்சி சொக்கட்டான்
வெட்கத்துடன் ஆடுதடி /

பார்த்தும் பாராது 
போல் போறவளே/
நோக்கையிலே திரை 
நீக்காதடி திரவியமே/

சுண்டியிலுக்கிறது உன் 
சுண்டக்காய் விழிகளடி/
மண்டியிட்டுக் கொள்கிறது
பாண்டியின் இதயமடி/

ஆர் எஸ் கலா
அழுவதிலும் தவறில்லை.
விழுவதிலும் தவறில்லை 
---------------------/---------------/--
என்னுயிரே நீயும்
கலங்குவதை நிறுத்திடு/
கண்ணீரைத் துடைத்திடு
என்னருகே அமர்ந்திடு/

அழுவதிலும் தவறில்லை
விழுவதிலும் தவறில்லை  /
இரண்டிலும்  இருந்து 
மெதுவாக மீண்டிடு/

எதனால் எங்கு 
தவறினோமென சிந்தித்திடு/
தவறினைத் திருத்தி 
வெற்றியைக் கைவசமாக்கிடு/

விழிகள் கொட்டிய 
துளிகளை உரமாக்கிடு/
இறந்து கொண்டிருக்கும்
நம்பிக்கையை வளர்த்திடு/

அழுமூஞ்சி என்னும்
சொற்றொடரை மாற்றிடு/
ஏளனமாக நோக்கியவர் 
முன்னிலே நிமிர்ந்திடு/

ஆர் எஸ் கலா
காதல் தந்த காயமே.
*********************

காதல் கீதம் கொண்டு 
காதலியே பாடவோ 
வாழ்த்து ஒன்று
வாழ்க நீ வாழ்க. காதல் 
தந்த காயமே நீ வாழ்க -/

ஈருடல் ஓர் உயிர் 
என்று ஆன பின்னே.
உதறி விட்டு சென்ற பெண்ணே.
துடிக்கும் இளமை தழரும் முன்னே.
முளைத்த தாடி நரைக்கும் முன்னே.
பிடிக்கும் கரங்கள் வலு இழக்கும் முன்னே.
பிறந்த மோகம் இறக்கும் முன்னே.
இணைந்து வாழ வாவென்று
அழைத்தேனே  கண்ணே .
மறுத்தவளே நீ வாழ்க./

காதல் கீதம் கொண்டு 
காதலியே பாடவோ
 வாழ்த்து ஒன்று
வாழ்க நீ வாழ்க. 
காதல் தந்த காயமே நீ வாழ்க -/

   சரணம் (1)

புன்னகையால் வளைத்துப் போட்டு.
கண்அசைவால் கசக்கிப் போட்டு.
இடை காட்டி. தொடை காட்டி.
தொப்புள் வரை வித்தை காட்டி
மயக்கிப்புட்டு.
கட்டும் தாலியும் வேண்டாம்.
கட்டில் சொந்தமும் வேண்டாம் 
என்று வெறுத்தாவளே  
பெண்ணே. நீ வாழ்க கண்ணே நீ வாழ்க/

காதல் கீதம் கொண்டு 
காதலியே பாடவோ 
வாழ்த்து ஒன்று
வாழ்க நீ வாழ்க. 
காதல் தந்த காயமே நீ வாழ்க -/

    சரணம் (2)

தென்னந் தோப்பு .வாழைத் தோப்பு.
நாம் தொட்டு விளையாடிய மாந் தோப்பு.
அத்தனையிலும் உன்னைத் தேடித் தேடி
அழைந்தேனடி. கவலைக் கூண்டில் நுழைந்தேனடி.

சுகமான வாழ்வு இழந்தேன்.
சொத்தான மானம் இழந்தேன்.
சொர்க்கம் மதுவென உணர்ந்தேன்.
மதுக் கடைப்  பக்கமே அமர்ந்தேன்.
கள்ளுக்கடைக்கு வாடிக்கையானேன்.
தெருமுனை நாய்க்கு நண்பனானே.
கன்னி உன்னால் 
போதைத் தண்ணீருக்கு இரையானேன்.
இத்தைனை பரிசு அளித்த தேவதையே வாழ்க நீ பல்லாண்டு வாழ்க/

காதல் கீதம் கொண்டு 
காதலியே பாடவோ 
வாழ்த்து ஒன்று
வாழ்க நீ வாழ்க. 
காதல் தந்த காயமே நீ வாழ்க -/

ஆர் எஸ் கலா 

(என்றோ எழுதியவை 
இன்று கண்ணில் பட்டது  )
காத்திருக்கேனடி குயிலே
-------------------------------------------

அக்கரைச் சீமையரை/
ஆத்தோரம் நான் கண்டவரை/
ஆகாய வழி வந்து சென்றவரை/
ஆத்தா வழி  பிறந்த உறவினரை /

காத்திருக்கேனடி குயிலே /
இரு இமை பூத்திருக்கேனடி குயிலே/
தூக்கம் துறந்திருக்கேனடி குயிலே/
இதயத்திலே ஏக்கம் தேக்கமடி குயிலே/

வந்தவர் கருமை வண்ணக் கண்ணனடி /
மனதைக் கொள்ளையிட்டது  உண்மையடி  /
நெஞ்சத்தில் மஞ்சம் போட்டானடி /
பெண்மைக்குள் கலக்கம் விதைத்தானடி/

பல வார்த்தை உரைத்து /
பாவி ஆவியை ஆசையிலே புதைத்து /
அடுத்த நொடியே சென்றானடி /
கொடுத்த மனசும் எடுத்த மனசும்/ 
துடிப்பதை நீயும் கேளடி குயிலே /

நித்திரைக்கு எதிரியானேனடி /
எக்கரை கடந்து நான் போவேனடி /
சக்கரை போல் என் வாழ்வு இனித்திடவே /
எங்கே வாழ்வின் சொர்க்கறையென தேடிடுகின்றேவேனடி குயிலே /

ஆர் எஸ் கலா
பாடல் முயற்சி😜
***************
உயர்ந்த மாங் கிளையில். 
கூடி வாழ்ந்த பூங்குருவி.
நீ பறந்த தேசம் என்ன?
பிரிந்த கோபம் என்ன?
மறந்த மாயம் என்ன ?
காதல் துறந்த கோலம் என்ன?
இனி என் நிலை தான் என்ன?
என் நிலை தான் என்ன?  
நிலை தான் என்ன?

ஊரும் இல்லை  
உறவும் இல்லை.
உரிமை என்று சொல்ல
உன்னை இன்றி யாருமில்லை 
உன்னை இன்றி யாருமில்லை.
துன்பம் துணையில்.
இன்பம் தொலைவில். 
நீ இல்லை .
வாழ்வு இல்லை. 
இனி எனக்கு  அது இல்லை/

          சரணம் (1)

வங்கக் கடல் விழி அருகே. (2)
என் ஜீவன் அதன் உள்ளே.
நீ மறுத்தால் மூச்சு நிறுத்தம்.
கரம் கொடுத்தால்  பேச்சு பிறக்கும்.
காமம் இல்லை.
மோகம் இல்லை.
காதலிலே கள்ளம் இல்லை.
உள்ளத்திலே நீ தான் முல்லை.
நெஞ்சோடு அணைக்க வந்தேன்.
கண்ணே நெஞ்சோடு அணைக்க வந்தேன்/

ஊரும் இல்லை  
உறவும் இல்லை.
உரிமை என்று சொல்ல
உன்னை இன்றி யாருமில்லை 
உன்னை இன்றி யாருமில்லை.

உயர்ந்த மாங் கிளையில்.
கூடி வாழ்ந்த பூங் குருவி /
     

        சரணம் (2)

உணர்வலையோ பிணைந்திருக்க. 
உறவு வழி உதறிச் செல்ல.
கூத்தும் ஒரு நாள் முடியும்.
உன் வேடம் அன்று கலையும்.
பூவில் வாசம் உண்டு.
பூவை நெஞ்சில் பாசம் இல்லை.
தொடும் தொலையில் நிலவும் இல்லை.
தொடும் நிலையில் நீயும் இல்லை.
தொடர்வேன் நானும் உன்னை.

காலம் கொண்டு போகும் வரை.
கட்டை தனில் வேகும் வரை.
கண் மணியே காத்திருப்பேன்.
ஆவியான பின்னும் பாவி நான்
உனக்காகக் காத்திருப்பேன் 

ஊரும் இல்லை  
உறவும் இல்லை.
உரிமை என்று சொல்ல
உன்னை இன்றி யாருமில்லை 
உன்னை இன்றி யாருமில்லை.

உயர்ந்த மாங் கிளையில். 
கூடி வாழ்ந்த பூங்குருவி.
நீ பறந்த தேசம் என்ன?
பிரிந்த கோபம் என்ன?
மறந்த மாயம் என்ன ?
காதல் துறந்த கோலம் என்ன?
இனி என் நிலை தான் என்ன?
என் நிலை தான் என்ன?  
நிலை தான் என்ன?

ஆர் எஸ் கலா
பார்த்திங்களா-
மச்சான் -
பஞ்சாங்கத்தை.
*****************

இடை நோக்கிக்கும்
கொடை வள்ளலே/
கிடையாமல் நானும்
போய்க்கும் முன்னாலே/

நடையைக் கட்டிக்க
சோசியரிடம் தன்னாலே/
சோடியாக நம்மள
ஊராரும் பார்த்துப்புட்டாலே/

சோழி முடிஞ்சிருஞ்சு
கேட்டுக்கோ காதாலே/
நெஞ்சுக்குள்ள துடிக்குது
உசுரும் உன்னாலே /

நேத்தைக்கு 
சொன்னேனே
கூழாங்கலாட்டம் 
கிடந்ததுக்காம /

வேளாவேளை 
பாத்துக்கோங்க 
நன்னாள் ஒண்ணும்/

என்றேனே பார்த்திங்களா   
மச்சான் பஞ்சாங்கத்தை/
குறிச்சிக்கிட்டிங்களா  நாமும்
மாலைமாத்திக்கும் காலத்தை /

ஆர் எஸ் கலா
சின்னப்பூவே மெல்லப்பேசு
*****************************

மல்லிகைப்பூ வசியக்காரியே
மகிழம்பூ பாசக்காரியே/
அல்லிப்பூ கெண்டைக்காரியே
ஆலம்பூ கொண்டைக்காரியே/

வாழைப்பூ இடையழகியே
தாழம்பூ சடையழகியே/
தென்னம்பூ பல்லழகியே 
மிளகாய்ப்பூ சொல்லழகியே/

சங்குப்பூ கழுத்தழகியே
சாமந்திப்பூ சிரிப்பழகியே/
ஊர்க்குருவி கண்ணழகியே
உள்நாக்கின் நெல்லிக்கனியே/

தேக்கம்பூ வாக்குக்காரியே
தெவட்டாத பாட்டுக்காரியே/
கொடிமுல்லைப்பூ நளினக்காரியே
புளியம்பூ முறைப்புக்காரியே/

கொவ்வை இதழில்
தேனாகா மொழியெடுத்து/
தானாக நெருங்கி
சின்னப்பூவே நீ மெல்லப்பேசடி/

ஆர் எஸ் கலா