Thursday 26 August 2021

சோறு கொண்டு போறவளே


சோறு கொண்டு போற 
புள்ள /
சோக்கான சின்னப் 
புள்ள /
சோடி போட்டுக்கத்தான் ராசி 
இல்ல நமக்குள்ள /
சோகமும் வந்து 
தேங்குது நெஞ்சுக்குள்ள /

உம் பேச்சோ கருவாட்டு வாசம் 
புள்ள/
ஒம் பின்னாடி நானும் நாயி போல 
புள்ள /
ஒங் கை பட்ட சாதமும் அமிர்தம் 
புள்ள/
உக்காந்து உண்ணத் தான் 
நேக்கும் கொடுப்பன 
இல்ல/

மின்னல் பார்வையும் அன்ன
 நடையும் அள்ளுது 
புள்ள /
மினுக்கிய சேலையும் 
தழுக்குடம்பும் கொல்லுது 
புள்ள/
பின்னிய சடையும் 
கிள்ளிச் செருகிய பூவும்  மயக்குது 
புள்ள/
பிரிஞ்சுட்ட சொந்தத்தில் 
புறந்ததை எண்ணி வருந்துறேன் 
புள்ள/

மாமன் மகளே காத்திருப்பேன் 
மாமாங்கம் ஆனாலும் 
புள்ள/
மாற்றான் மவ கழுத்துக்கு 
மாலை ஏற்றிக்க மாட்டேன் 
புள்ள /
மாசி படியா மனசு
புள்ள /
மச்சான் யென்னை நேசி 
புள்ள/
ஒன் தூக்கு சட்டிக்க மாட்டிக்கிட்ட 
பிடி கொழுக்கட்டையானேன் 
புள்ள /

சட்டையிலே ஒட்டிக்கிட்ட நாயுருவி 
போல/
கட்டையிலே பூத்துக்கிட்ட காளான் 
போல /
மட்டையிலே கிறுக்கிக்கிட்ட ஓவியம் 
போல/
தட்டையான ஏன்  மார்பில் நீயும்  
பச்ச குத்திகிட்டாய் கன்னிப்  
புள்ள/



(தவறுகள் தென் பட்டால் கூறுங்கள் 😊/