Sunday 18 September 2022

மேக்காலத் தோப்புக்குள்ள
**************************
என்னை பார்த்துக்காம போறாயே
தாயி /
கார்கால மேகக்கூட்டமும் கொல்லுது 
என்ன/
எங்க ராக்காயி பெத்துக்கிட்ட தலப்
புள்ள /
நானும் ஒன்னைய கேட்டுக்கவா 
ஒன்னு/
ஊட்டான்டா பக்கம் கூட்டமாக்கும் 
அங்குட்டு /
சாத்தான் கண்ணும் பார்த்துக்கும்
 எம்மல/
ஆத்தா காதில் போட்டுக்குவான் 
பயவுள/
அய்யோ ஒய்யோயென கத்திக்கும்
ஆத்துக்குள்ள/
நாக்கை கடிச்சிக்கிட்டு முறைக்காதே 
மூக்காயி/
மேக்காலத் தோட்டத்துக்குள வாயேன் 
சின்னத் தாயி /

    ஆர் எஸ் கலா

Tuesday 13 September 2022

வக்கணையா பேசி பேசி வடம் போட்டு இழுத்த மச்சான்

வக்கணையா பேசிபேசி 
வடம் போட்டு இழுத்த மச்சான்./
%%%%%%%%%%%%%%%%%%%%/

வெண்டக்கா விரல 
தொட்டுக்க போறேன்/
வெள்ளரிக்கா வித்துக்கிட்ட 
காசில பொன்னு 
போட்டுக்க போறேன் /
கண்ணுக்கு பட்டுக்கிட்ட 
இடமெல்லாம் 
பார்த்துக்கப் போறேன் /
கருவாச்சி பொண்ணுக்கு 
பூ வச்ச ரவுக்க தச்சிக்க போறேன் /

குண்டூசியும் கேட்டுக்க மாட்டேன் /
கொண்ணுகிட்டு வந்தாலும் 
ஏத்துக்க மாட்டேன் /
கருப்பட்டி சொல்லழகி 
கருவண்டு கண்ணழகி 
ஒன்னைய சேத்துக்க போறேன் /
காத்து கருப்பு அண்டிக்காம 
கருகமணி போட்டுக்க போறேன் /
யே  நெஞ்சத்த ஒனக்காக 
பஞ்சனையா மாத்திக்க போறேன் /

சோக்காத்தான் இருக்கு மச்சான் /
நீ சொல்லிக்கிட்ட அம்புட்டும் /
இம்புட்டும் நாவோடு 
நின்னுடிச் சென்னா /
நான் யென்ன செய்வேன் மச்சான் /

பல்லு விழுந்த அப்பாத்தா 
விடியக்காலயில   கூப்புட்டு  /
அடியே அருக்காணி 
பவளத்தோட மவந்தான் 
உனக்கு சரியான 
சோடி என்னனுச்சி மச்சான் /

எப்பாத்தா பார்த்தா அவயல 
என்னு  கேட்டுகிட்டேன் மச்சான்  /
ஊட்டாண்டா நேத்தைக்கு வந்துடிச்சி 
யென  சொல்லிடிச்சு மச்சான் /
திக்கட்டு போனேன் நானும்  மச்சான் /

குச்சி எடுத்துக்கையிலே
ஒளிஞ்சி ஒளிஞ்சி 
பார்த்துகிட்டது போதும் மச்சான் /
யெங்க வீட்டாண்டா பக்கம் 
நோட்டம் போட்டுக்காதே மச்சான் /
கொய்யா தோப்புக்க நின்னுக்க மச்சான் /
ஆத்தோரம் போய்க்க 
அங்கிட்டு வாறேன் மச்சான் /

வக்கணையா பேசி பேசி 
வடம் போட்டு இழுத்த மச்சான் /
பாக்கு வெத்தல தட்டோடு வந்தாக்கா  சத்தியமா  பக்கத்திலே வந்து 
நின்னுக்குவேன் சின்ன மச்சான் / 

    ஆர் எஸ் கலா

Sunday 11 September 2022

இவனைத் தொழுதால் நவகிரகங்களும் பிடியை தளர்த்திடும். 
***-***************************************
வினை தீர்க்கும்  யானை 
முகத்தோனுக்கு ஒரு தாலாட்டு /
மோதகப் படையலிட்டு 
நான்  பாடுவேன்  ஒரு பாட்டு/

தொந்தி விநாயகருக்கு  
உரக்கப் பாடிடுவேன் 
தந்திப் பாட்டு /
சந்தி அமர்ந்த 
தனையனுக்கு வேதம் 
ஓதும் முதல் பாட்டு/

ஆறுமுகன் அண்ணனிடம் 
ஆசிர்வாதம்  கேட்டு /
இசைத்திடுவேன் பணிவுடன் 
எத்தயோ  பாட்டு /

சக்தி மைந்தனின் 
சக்தியிலே  மகிழ்ந்து 
பாடிடுவேன் நானும் 
ஓர் புராணப் பாட்டு /

ஐங்கரனை அழைத்து 
அரோகரா கோசமிட்டு /
ஐம்புலனையும்  அடைக்கி 
பாடிடுவேன் 
செந்தமிழில் புதுப் பாட்டு/

முக்கண்ணனுக்கு 
முந்திய இறைவா /
அள்ளியிறைத்திடு
கருணைக் கடலை தலைவா /

என கருணை மனுவோடு 
கண் கலங்கிப் பாடிடுவேன் 
பிள்ளை உனக்கான துதிப்பாட்டு /

அம்பிகையின் மகனே 
நம்பி ஆண்டான் நம்பியே
தும்பிக்கை கொண்டு  
ஆசிர்வதித்து  துயர் துரத்தி 
நம்பிக்கை கொடுத்திடும் கஜமுகனே  /

நீ அவதரித்த. இந்நாளை
ஆராதனையோடு
வண்ணப் பூ தூவி வணங்கி நின்று பாடுகின்றேன் உமக்காக 
வாழ்த்துப் பாட்டொன்று /

Thursday 8 September 2022

என்னுயிர் மன்னவா
*******************

உள்ளம் கொள்ளையிட்ட அழகிய தமிழ்மகனே/
உணர்ச்சியை தூண்டி விட்ட 
கள்வனே/
உயிரோடு கலந்திட வந்த 
சின்னவனே/
ஊசிக்கு நூலாக இணைந்திடு 
நாயகனே/

இறந்த மூங்கில் இசைப்பது 
போல்/
வாடிய தாழம்பூ மணப்பது 
போல்/
அறுந்த சலங்கை ஓசையிடுவது 
போல்/
விழுந்த விதை செடியாவது 
போல்/

பிடிவாதம் வேண்டாம்  என்னுயிர்
மன்னவா/

இணைந்தே வாழ்ந்திடுவேன் 
நீ வாவா/

ஆர் எஸ் கலா

Tuesday 6 September 2022

கவிச்சரம்

உன் வாக்கு எனக்கு வரம்/
நீதான்  என் பொக்கிஷம்/
உன்னோடு வாழ்வதே இலட்சியம் /
இணைந்திடுபோம் நாம் நிச்சியம் /

மௌனமான நேரம்

அழைப்பு மணி 
ஓசை கேட்கவில்லை /
அழைத்துப் போகும் 
நோக்கம் உமக்கில்லை/

தொலைவினில் அந்த 
நீல வானம்/
தொலைந்து போனது 
ஆசையும் வெகுதூரம் /

இணைந்து பயணித்தது 
ஓர் கனாக்காலம்/
நினைத்து ஓடுகின்றது 
வாழ்வு இக்காலம் /

நீளும் மௌனமான
இரவு நேரம் /
என்னுள்ளே தனிமையில்
ஒரு ராகம்/ 

Monday 5 September 2022

முக்காட்டு முழுநிலவு


மேலோட்டப் 
பார்வையிலே கண்டேன்
பூவாட்டம் பெண்ணொருத்தி/
நாவுன்டி நான் பேசிட எத்தனித்தேன் 
போனாளே பின் முதுகு காட்டி/

அழகான குட்டி அடடா 
எனக்கேற்ற தண்ணித் தொட்டி /
துள்ளியோடாதே கன்னுகுட்டி /
துரத்தியே வந்திடுவான் 
இந்தக் கந்தக் குட்டி/

மேனியிலே  சூடெறைக்கி 
நெஞ்சத்திலே   குளிர் மூட்டிடும்
நீதான் அதிசயப் பனிக்கட்டி /
பொண்டாட்டி என அழைத்திட நினைக்கையிலே /
நாவிலே சுருக்கென 
இனித்திடும் வெல்லக் கட்டி/

ஓரப் பார்வையில் உரசி 
விழியிரண்டையும் 
வேர்க்கடலையாய் 
அவித்திடும் தீப்பெட்டி /
ஊரைக் 
கூட்டி பந்தலொன்று  போட்டு /
சொந்தமாக்கிடப் போறேன் தாலி கட்டி/

அரை குறையாய் பார்த்து 
விட்டு /
தடம் புரளுது கற்பனை பாதை 
தாண்டி /
ஆழ ஆசையைத் தோண்டி
கோலக் கிளியே நகராதே 
காளை  முகம் காணாமல் /

முக்காட்டு முழுநிலவே 
ஏர்க்காட்டு பெண்ணிலவே 
கோளை மனம் 
கலங்குதம்மா தங்கத் தேரே .
திரை நீக்கி முகம் 
காட்டம்மா கன்னி மலரே/

  

Saturday 3 September 2022

பொய்மை

பூவின் மென்மை  
பாசத்தின் உண்மை 
அள்ளி அணைத்திடும் தாய்மை 
பெண்மை உயர்மை 
என்றெல்லாம் 
சொல்லிடும் வார்த்தையில்
மறைவில் நிறைந்தே 
கிடக்கின்றது பொய்மை.

பெண்களில்-
நாசக் காரியும் உண்டு.
மோசக் காரியும் உண்டு.
வேசக் காரியும் உண்டு. 
இறப்பை ரசித்திடும் 
காந்தாரியும் உண்டு. 

கொன்று இன்பம் காணும்
அரக்கியும் உண்டு.
பசி தீர்க்க பிசச்சை பாத்திரம் 
ஏந்திடும் பத்தினியும் உண்டு.

பகட்டு வாழ்வுக்கு கட்டியவனை 
பலி கொடுத்து பலரது படுக்கை 
அறை தேடி வாழ்ந்திடுவோரும் 
சிலர் இல்லை பலர் உண்டு.

ஆளை மாற்றிக் கொண்டே 
ஆண்களை வலைத்துப் போடும்
அழகான பெண்கள் ஏராளம் தாராளம்.
அதனை சொல்லிப் புட்டா நம்மைத் 
தாக்கிடும்  வெட்கம் கொண்டு.

போற்றப் படும் தாய்க் குலம் 
எத்தனையோ உண்டு.
அத்தனையும் இணைக்கவில்லை 
நான்  இங்கே கொண்டு.
அசிங்கத்தோடு அழகை இணைத்தால் 
அழகிக்கும் மதிப்பற்றுப் போயிடும்
என எண்ணம் கொண்டு.

ஆர் எஸ் கலா

Friday 2 September 2022

அத்தை மகனே

அத்தை பெத்த மகனே 
உன் வரவு எப்போ?
சித்திரைப் பாவை நான் 
சத்தமாய் ஓர் செய்தி உன்
காதில் உரைப்பதுதான் எப்போ?

சிந்தும் காதலோடு நீ
முந்தானை தொடுவது எப்போ? 
சந்தையிலே வாங்கி மாட்டிய
கண்ணாடி வளையல் 
உடைவது தான் எப்போ?

மல்லிகை அமர்ந்த கூந்தலதை
உன் விரல் கோதுவது எப்போ?
மஞ்சள்  இட்ட கன்னத்திலே
முத்தங்கள் பதிப்பது தான் எப்போ?

மகிழம்  பூ  மேனி 
நுகர்வது  எப்போ?
என் செவ்விதழ்
சுவைப்பவை தான் எப்போ?

செங்கரும்பு வெள்ளக்கட்டி
செல்லக் குட்டி சின்னக் கண்ணா
என்று அழைத்திடவே தொட்டில் 
ஒன்று இடுவதுதான் எப்போ? 

பட்டு மெத்தை காத்திருக்க.
பவள மங்கை பூத்திருக்க.
இருண்ட வானம் நீர் தெளிக்க.
குளிர்ந்த தென்றல் கூத்தடிக்க.
அத்தை மகனே சேர்த்தணைக்க 
உமது வருகை அது எப்போ? எப்போ? 

அங்கிருந்து  துடித்தால் 
செங்கரும்பு வெள்ளக்கட்டி
செல்லக் குட்டி சின்னக் கண்ணா
என்று அழைத்து தொட்டில் 
ஒன்று இடுவதுதான் எப்போ?

               பதில்
                *****
இப்போதே கத்துக் குட்டி நானும்
வாறேன்டி/
வாள் வெட்டு பட்டேனும் தாலி ஒன்று தாறேன்டி/
அதட்டி விட்ட அப்பனை தட்டிப்புட்டு 
மச்சான் உன் நெஞ்சத்திலே 
ஒட்டிக்கப் போறேன்டி /

Thursday 1 September 2022

தண்ணீர்க் குடம் எடுத்து தனியாகப் போறவளே


நேர் வழிப்  பாதையிலே 
நேர் கொண்ட பார்வையுடன் /
நித்தமும் தண்ணீர்க் குடம் 
எடுத்து தனியாகப் போறவளே /
ஏரிக் கரையோரமாய்  அமர்ந்து /
ஏற இறங்க நான் பார்க்கையிலே /

அன்ன நடையினிலே என்னைக்
கொல்லும் நீயே என் சுகராசி /
அளந்து பேசி என்னுள்  
வெறுப்பையேற்றாதே மகராசி /
அவஸ்தைகள் பல 
எனது நெஞ்சத்திலே ஏத்தி/
அலட்டிக்காமல் நீயும் என்னைக் கடந்திடலாமோ ராசாத்தி /

கொடுக்கான் போல் சொல் அடுக்கி /
கொட்டுவது போல் நாக்கை நிறுத்தி/
இடுக்கும் நண்டாக இதழைப் பிதுக்கி/
கடுகடுப்பாக முகத்தை போக்கி /
தடுப்புச் சுவரொன்று எனக்குப் போட்டு தப்பிக்க நினைக்காதேம்மா  தேவகி /

உன் மதி ஒளியோ ஆண்மையை 
வெல்லும் பால் தேக்கமடி /
உனது கருவிழியோ ஆளைக் 
கொல்லும் தாக்கமடி/
துள்ளி ஓடிடும் கெண்டைக்காலுக்கு 
தண்டையாவேன் நானடி/
அசைந்து வெறுப்பேற்றிடும் இடையினிலும் ஊர்ந்து விளையாடிடப் போவதும் நானடி/

இதமாக நான் சொல்வதை 
மெதுவாகக்  கொஞ்சம் கேளடியோய் /
வெள்ளிக் குடத்தில் அள்ளிய நீரோ 
கிள்ளிச் செல்கின்றாய்
என்னிதயமதையு பாரடியோய் /
குலுங்கிடும் போது தழும்பும் நீரிலே 
விழுந்து கிடக்கிறேன் நானடியோய் /

தள்ளாத வண்டி நகராதம்மா/
சொல்லாத காதல் வெல்லாதம்மா/
தூறிய சாரலில் ஊறிய 
காகிதம் போல் ஆன கதை தெரியுமா/
உன்னாலே நானும்  பித்தனாய் 
பக்தனாய் சித்தனாய் மாறிடலாமா
கர்த்தர் போல் வந்து பதிலொன்று கூறிடம்மா/