Sunday 11 September 2022

இவனைத் தொழுதால் நவகிரகங்களும் பிடியை தளர்த்திடும். 
***-***************************************
வினை தீர்க்கும்  யானை 
முகத்தோனுக்கு ஒரு தாலாட்டு /
மோதகப் படையலிட்டு 
நான்  பாடுவேன்  ஒரு பாட்டு/

தொந்தி விநாயகருக்கு  
உரக்கப் பாடிடுவேன் 
தந்திப் பாட்டு /
சந்தி அமர்ந்த 
தனையனுக்கு வேதம் 
ஓதும் முதல் பாட்டு/

ஆறுமுகன் அண்ணனிடம் 
ஆசிர்வாதம்  கேட்டு /
இசைத்திடுவேன் பணிவுடன் 
எத்தயோ  பாட்டு /

சக்தி மைந்தனின் 
சக்தியிலே  மகிழ்ந்து 
பாடிடுவேன் நானும் 
ஓர் புராணப் பாட்டு /

ஐங்கரனை அழைத்து 
அரோகரா கோசமிட்டு /
ஐம்புலனையும்  அடைக்கி 
பாடிடுவேன் 
செந்தமிழில் புதுப் பாட்டு/

முக்கண்ணனுக்கு 
முந்திய இறைவா /
அள்ளியிறைத்திடு
கருணைக் கடலை தலைவா /

என கருணை மனுவோடு 
கண் கலங்கிப் பாடிடுவேன் 
பிள்ளை உனக்கான துதிப்பாட்டு /

அம்பிகையின் மகனே 
நம்பி ஆண்டான் நம்பியே
தும்பிக்கை கொண்டு  
ஆசிர்வதித்து  துயர் துரத்தி 
நம்பிக்கை கொடுத்திடும் கஜமுகனே  /

நீ அவதரித்த. இந்நாளை
ஆராதனையோடு
வண்ணப் பூ தூவி வணங்கி நின்று பாடுகின்றேன் உமக்காக 
வாழ்த்துப் பாட்டொன்று /

No comments:

Post a Comment