Wednesday 31 October 2018

ஒரு தந்தையின் தியாகமும் வலியும்


என் துணை இறந்த பின்னே/
இன்னும் ஓர்  துணையை /
நான் நாடாமலே  உன்னை
வளர்த்தேன் என் மகளே./

தொட்டில் கட்டி தாலாட்டுப் பாட /
தெரியவில்லை  கட்டில் போட்டு/
சீராட்டி வளர்த்தேனடா என் மகனே /

கால்  வலிக்க மரம் 
ஏறிக் கள் எடுப்பேன் /
இரும்பு அடிப்பேன் /
பாதையில்  கல் உடைப்பேன் 
முதுகு வலிக்க மூட்டை சுமப்பேன் /
வீட்டுக்கு வந்ததும் உன்யைும்
சுமப்பேனடா மகனே /

தட்டிக் கொடுத்து
விட்டுக் கொடுத்து/
செல்லம் பொழிந்து /
பாராட்டி வளர்த்தேனடா மகனே /

நான் உண்ணாமல் இருந்து /
உன்னை உண்ண விட்டு
மகிழ்ச்சி கண்டேனடா மகனே /
படாத பாடு பட்டு பட்டப் படிப்பு
வரை பறக்க விட்டேனடா மகனே/

உன் அன்னை இருக்கும் வரை
நான் என் பணிவிடை செய்தவையில்லையடா மகனே /
ஆனால் இன்று உனக்காக அனைத்தும் கற்றுக்கொண்டேனடா மகனே/

சுவையாக  சமைத்து
பசியாற்ற அறியாதவன் தான் /
உன் பசிதீர்க்க சமைத்துப்
போட்டேனடா மகனே /
தந்தையான நானே
தாயுமாகவும் மாறினேன்/
இல்லறம் வரை கொண்டு வந்து/
இன்பமான வாழ்வை அமைத்துத்
தந்தேனடா மகனே /

அன்பு இல்லம்
ஒன்று இருப்பதையே/
நீ அறிந்ததேயில்லையடா மகனே /
என் அன்பு மழையில் நனைந்து /
மலர்ந்த மலர் தானேடா நீ மகனே /

இன்று என்னை விட்டுச் செல்ல/
வந்து விட்டாயேடா  முதியோர்
இல்லம்/ தேடியே என் மகனே /
எங்கங்கோ அழைந்து அறிந்து /
கண்டு பிடித்து விட்டாயேடா /
இல்லமதை என்னை அழைத்தும்/
வந்து விட்டாயேடா என் மகனே /

உன் ஆசைகள்  அனைத்தையும்
நிறைவேற்றிய நான் /
இன்று இவ்வாசையையும்
நிறைவேற்றி/
உன் ஆசைக்கு வைத்து
விட்டேன் முற்றுப்  புள்ளியடா மகனே /

மருமளேஒரு சிறு வேண்டு கோள்/
நீ என்னைப் பார்க்க வரும் போது /
உனது மகனை அழைத்து வராதே /
உன் பிள்ளை பின்னர் உனக்காக/
இடம் தேட இன்று முடிவு எடுப்பான் /

என்னைப்  போல் நீயும் /
அனாதையாக இங்கே அமர வேண்டாம்/ உனக்கும் இன்நிலை வர வேண்டாம் /
எப்போதும் நீங்கள்  சந்தோசமாக/
இருக்க இறைவனை வேண்டுகின்றேன் /

நீங்கள் இருவரும் இறுதி வரை
பிள்ளையுடன் இருக்க வேண்டும்
என்று இறைவனைப்  பிராத்தனை செய்கின்றேனம்மா மருமகளே /

விடு முறை எடுத்து வரவேண்டாம்/
என்னைப் பார்க நேரம் கிடைக்கும்/
போது  நீ மட்டும்  வந்து விடு மகனே/
சென்று வா மகனே  கவனமாக
பாதையைப் பார்த்துப் பயணித்து
விடு மகனே /

யார் கவிஞன்


எழுதுகோல் எடுத்தவர்கள் /
எல்லோரும் எழுத்தாளன் இல்லை/
கவிநூல் தொகுத்தவர்கள்
எல்லோரும்   கவிஞனும் இல்லை /

சிறு பிள்ளை தனமாக
கிறுக்குவது எல்லாம் /
இலக்கணக் கவிக்கு
ஒப்பானதும்  இல்லை /
இருந்தும் இதை நான்
தப்பாகக் கூறவுமில்லை/

இலக்கணம் படித்ததில்லை/
தலைக்கனம் எனக்கு இல்லை
இவைகள்  வைரமுத்துவின்
சிறு வரிகள்/
நானும்  இலக்கணம் பயின்றதில்லை
அதனால்  தானோ நான் அறியேன்/ தலைக்கனம்  என்னை நெருங்கவில்லை/

திறமையான எழுத்தாளர்கள் /
எத்தனையோ பேர்   எங்கங்கோ 
ஒரு  ஓரமாக இருந்து எழுதிக்
கொண்டு  தான்  இருக்கின்றார்கள்/

உண்மை நிலவரங்களை
கவிதையாக தொகுத்தபடியே /
ஒளி கொடுக்க தனக்கும் ஒரு வழி
பிறக்க வில்லையே என்று ஏக்கத்தோடு / அந்த ஏக்கத்தையும் கவிதையாகக்  கொடுத்தவண்ணமே/

உயர்ந்த  உள்ளமே இவர்களுக்குக்
கொடுங்கள் பிடி போல் ஒரு தடி /
உனக்கும் கிடைக்கும் வெற்றிப் படி/

இதை  விடுத்து நல்ல பாம்பு 
ஆடுகிறது  என்று மண்புழுகும்
ஆடிச்சாம் என்னும்  கதைபோல்  /
கவிதை  என்னும் பெயரில்  சில சில்மிஷதண்மை   கொண்ட
கிறுக்கல்களுக்குக் கவிஞர்  பட்டமும்/
பணமும் வாரிக் கொடுப்பதால்/
மன நிறைவான. ஒரு நிலை
உனக்குக்   கிட்டப்போவதில்லை \

உணர்வுக் கவிஞர்கள் எல்லோரும் /
எட்டி நின்று  புன்னகைக்கின்றார்கள்/
இந்தக்  கவி பட்டத்தையும் கேலிக் கூத்தையும் கண்டு /
புரிந்து செயல் படுங்கள்
புகழ்ச்சி  நாடி  ஓடும் மண்டுகளா/

     

மாமனே

உன் தோள் சாய வேண்டும் /
உன் முத்தம் தின்னும்
பாவை நானாக வேண்டும்/
உன் கன்னம் கிள்ளும்
குழந்தை நானாக வேண்டும் /

உன் மடி சாய்யும்
பெண்  நானாக வேண்டும்/
உன் உடலோடு உடல்  உரச
அமரும் மங்கை நானாக வேண்டும்/

உணவில் பங்கு கொடுத்து /
படுக்கையறையில் பங்கு எடுத்து/
உன்னை பொம்மை போல் /
அள்ளி அணைத்து /
தள்ளி விளையாடும் /
பதுமை நானாக வேண்டும் /

உன் கனவில் தோன்றும்
முகம்  என் முகமாக வேண்டும் /
உன் கவிதை வரிகளின்
கருப் பொருளாய் நானே
இணைந்திருக்க வேண்டும் /

இத்தனை கற்பனையோடு /
அடியெடுத்து வைக்கையிலே /
பாதத்தில் ஆழ் முத்தம் பதித்தது /
மலரோடு மறைந்திருந்த முள்ளடா மாமனே /

  

தமிழன்

இரத்தத்தோடு கலந்து
ஓடுபவை தான் தமிழ் /
பற்பொடியாக நினைத்து
வாயோடு மட்டும் நிறுத்திக்
கழுவி விட்டுப் போனால்
நீ என்ன தமிழன் /

வண்ணத் தமிழை
எண்ணப் படி கொண்டு /
எண்ணில் அடங்காக் கவி புனைந்து /
காண்பவர் கண் வியக்கும் வண்ணம் /
கலப்பில்லாத் தமிழ் மொழியில் /
சொல்லி முடிப்பான் திறம் பட தமிழன் /

விந்தை புரியும் தமிழன்/ மந்தையில்லையென
சொல்லி நிற்பான் /
அடுத்தடுத்து எத்தனையோ மொழி /
அத்தனைக்குள்ளும் நுழைந்து பார் /
சுவைமிக்க மொழி தமிழ் மொழியென /
தலை நிமிர்ந்து உரைப்பான் /
தமிழ் பற்று உள்ள தமிழன் /

தமிழ் அன்னையின் கருவில் உருவெடுத்து/
தமிழ் பால் குடித்து / தமிழையே பயின்று/
தாய்க்கு நிகரான தமிழை சாகடித்து /
அடுத்தவன் மொழியை இரவல் பெற்று /
உரைத்து மகிழ்ந்திடவே நினைத்திட  மாட்டான் /உண்மையான தமிழன் /

 

Monday 29 October 2018

கைம்பெண்

பாப்பாவுக்கும் பொட்டு உண்டு./
பாப்பா வைத்துள்ள பொம்மைக்கும்
பொட்டு உண்டு./
தாப்பா போட்ட அறையினுள்ளே
இருக்கும் பாட்டி படத்துக்கும்
பொட்டு உண்டு./

இவைகளுக்கு பார்த்துப் பார்த்து
பொட்டு வைக்கும் அவள் நெற்றிக்கு
என்ன ? உண்டு./
தொட்டு வைக்க விபூதிக்கு மட்டும்
அனுமதி உண்டு./

கல்லான சிலையும் பட்டுத்
துணி கட்ட./
அசையாத நாற்காளிக்கும்
பட்டு மெத்தைபோட./
ஆடும் ஊஞ்சலுக்கும் பட்டுத்
துணி விரிப்பாக./
அவளுக்காக  காத்திருக்கு /
அடிக்கிய படியே வெள்ளைத் துணிகட்டிக்க/

பூ பறிக்க அனுமதி உண்டு /
பூச்சரம் கட்ட அனுமதி உண்டு./
பூவாலே பூஜிக்க அனுமதி உண்டு./
பூத உடலுக்கும் பூத்தூவ அனுமதி உண்டு/
அவள் சூடிக் கொள்ள மட்டும் தடை என்றும்/

தவறாது அவள் உசுப்புகின்றாள்.
கண்ணீர்ப்  பூவை./
தினம் தோறும் அணைக்கிறாள்
தலையணையை \
வலியோடு சிரிக்கிறாள் /
வெளியுலகுக்கு மறைக்கிறாள் /

2013. எழுதியவை சிறு மாற்றத்தோடு

 

விதவை


நான் அமைதியானவள்  -அல்ல
அமைதியாக்கப் பட்டேன்/
நான் அடங்கிப் போகின்றவள்  இல்லை
அடைக்கி ஒடுக்கப்பட்டேன்/

நான் கூண்டுக் கிளி அல்ல
ஊராரின் சம்பிரதாயம் என்னும்
வேலிக்குள் அடைக்கப்பட்டேன் /

நான் நாகரிகம் தெரியாதவள் இல்லை
நடை உடை பாவனைக்கு சமுதாயம்
தடை போட்டு  விட்ட பாவியானேன்/

ஆயிரம்  எதிரி எதிரே  வந்தாலும்/ எதிர்த்து நின்று போரிடும் பிறவி நான்./
ஊர் வாயால் வெளியாகும் /சொற்களை எதிர்க்க முடியாத கோளையானேன்/

பொல்லாத  சமுதாயத்தைக்  கண்டு  குமுறுது நெஞ்சம் என்றென்றும்/
எரிமலையாக வெடித்துச் சிதறினால். தாங்குமா?   இன்றும்  /

இள மச்சி இதக் கேளடா

##கொச்சைத்  #தமிழில்
#கிராமத்துக்  #கவிதை
#இருக்க. #வேண்டுமாம் 😊

#முயற்சி  #பண்ணி  #உள்ளேன்
#தவறை  #சுட்டிக்  #காட்டுங்கள்
#என்  #அருமை  #வாசகர்களே

ராத்திரி நடு சாமத்திலே
தூக்கம் எல்லாம் கலைஞ்சிரிச்சி/
கோபமா போனவ மூஞ்சி
கனவுல வந்திருச்சி  மச்சி /

ஏங் கதயே ஓடுற தண்ணில மீன்
புடிக்க தூண்டி போட்ட கதயாச்சி/
வூட்டுல ஒண்ணுமே இல்ல
உடுத்துக்க நல்ல துணிமணி இல்ல /

காச்சு மூச்சு என்னு கத்திட்டு
கோபிச்சிக்கிட்டு போனா அந்தப் புள்ள /
மாஞ்சி மாஞ்சி ஒழச்சும்
சேத்திக்கிட்டது ஏதுமேயில்ல/
கூடிக்கிட்டே போச்சி
கட்டிக்கிட்டவ தொல்ல/

சந்தைப் பக்கம் போனா
கண்ண மூடிக்கிட்டே அள்ளுவா /
கிட்டப் போய் ஏதாச்சும் சொன்னா /
கண்ணக் கசக்கிக்கிட்டு நிப்பா/

கையில நாளு காசு சேக்காம/
கண்ணானம் வேணான்னா/
ஆத்தா என்ன வுட்டிக்கிச்சா /
கண்ணை மூடுறத்துக்குள்ள
கட்டிக்கோ என்னு கத்திக்கிச்சே/

வெதச்ச நெல்லும் போச்சி/
வெத நெல்லு வாங்க
வச்ச நகையும் போச்சி /
வட்டி குட்டி எல்லாம் கட்டி /
கையையும் சுரண்டிடிச்சி /
பொட்டி சட்டி பானை எல்லாம்
சேந்தவை  முடிஞ்சிபோச்சி/

காதுல கழுத்துல மூக்குல காழி /
இத்துக்குள்ள இன்னா தீவாளி /
என்னு மூச்சியை தூக்கிக்கிட்டா /
நானும் இன்னா பண்ணுவேனாக்கும் /

காரசாரமாய் திட்டிப் புட்டேன் /
புசுக்கென்று புட்டியைக் கட்டிக்கிட்டு
சொல்லாமக் கொள்ளாம அவ
ஆத்தா வூட்டுக்கு போய்த்தா மச்சி

Saturday 27 October 2018

பாண்டு வரைந்த மடல்📩

சீரகச்சம்பா அரிசி குத்தி எடு /
சிதறாமல் சேதமின்றி சாதம் செய்திடு/
விடக்கோழி விரட்டிப் பிடித்து பிரட்டிடு /
வெண்டக்காய் வதக்கிடு /

ஆற்று நண்டு வறுத்தெடு /
குளத்து மீன் பொரித்திடு /
கிள்ளிய கீரையை கடைந்திடு /
வெட்டிய காயை அவித்திடு /

புடுங்கிய கிழங்கை சுட்டெடு /
காரக் குழம்பு வைத்திடு /
அதிலே கருவாடு போட்டிடு /
அப்பளமும் வைத்திடு /
மோர்மிளகாய் சேர்த்திடு /

பறித்த கனிகளை நறுக்கிடு /
சாத்துக்குடி பழம் தோலை உரித்திடு /
அதனோடு பனிக்கட்டி சேர்த்திடு /
இனிப்பையும் இணைத்திடு /

கணக்கப்பிள்ளை கையிலே கொடுத்திடு/
சரக்குப் போத்தலை உள்ளே தினித்திடு/
பீடி பையையும் வைத்திடு /
கொட்டப் பாக்கு கொழுந்து
வெத்தைலை சுண்ணாம்போடு /
ஏலக்காய் போட்டு மடித்திடு /

தோட்டத்து மல்லிகை எடுத்திடு/
முற்றத்து வாழைநார் வெட்டிடு/
பூக்களை சரமாய் முடித்திடு /
உன் கரும் கூந்தலில் சூடிடு/

கஞ்சியிட்ட  காஞ்சுப் பட்டு உடுத்திடு/
மஞ்சள்  போட்டு  பொட்டு வைத்திடு /
அம்சமாய் காட்சி கொடுத்திடு /
அடுத்த ஊரில் நண்பன்  வீடு/

அவனின் தங்கைக்குத்  திருமணமாம் /
நமக்கும்  குடும்பத்தோடு /
வரும் படி அழைப்பு உண்டு /
விபரமாய்  மடலைப் படித்து அறிந்திடு /
புறியாத வரிகளை மீண்டும் படித்திடு/

இப்படிக்கு உன் கணவன்  #பாண்டு /

    

வெட்கமே பரிசாகியது


பொன் நகை அணியாத
பெண் முகம் பார்த்தேன் /
பூலோகக்  கண்ணழகியென
வியர்ந்தேன்/

செவ்விதழ் சிந்திய
சிறு புன்னகை பார்த்தேன் /
நெஞ்சம் மயங்கி
கவிதையில் விழுந்தேன்/

மெல்லிய வண்ணச்  சேலை /
சிக்கனப் பிடித்துள்ள /
சிறு இடை பார்த்தேன் /
அசையும் வண்ணமலர்  /
தோட்டமென நினைத்தேன் /

கலைந்த கூந்தல் /
அதில் நுழைந்து விளையாடும் /
தென்றலைப் பார்த்தேன் /
அன்றோடு அதை வெறுத்தேன் /

கொன்றை மலர் கொண்டைக்காரி/
கொஞ்சும் தமிழ் கேட்டு விருப்பானேன்/
தெள்ளுப் போல் தெறிக்கும் /
குறும்புக் காரியென நகைத்தேன் /
அவள் மேலே காதல் கிறுக்க நானேன் /

வெண்ணை போல் மேனிக்காரியை /
விருப்போடு அழைத்தேன் /
தென்னை போல் நிமிர்ந்தாள்
நாணல் போல் வளைந்தாள்
பட்டாம்பூச்சியாய்ப்  பறந்தாள் /
பருவமங்கையவளின் வெட்கத்தையே பரிசாகக்  கொடுத்தாள் /

 

Friday 26 October 2018

#முகநுலில் #கடவுள் #இருந்தால்

வரம் ஒன்று கேட்பேன்.
முகநூல் கடவுளிடன்/
கண்டும் காணாதவை போல்.
கடந்து செல்லும் குணத்தைக் கொடு /

கனக்கும் மனசுக்கு விடுதலை
கொடு /
நட்பாக நெருங்கி நயமாய்ப் பேசி /
வலி கொடுத்து விலகும் நவர்களை /
எண்ணிக் கலங்காமல்
இருங்கும் இதயம் கொடு /

நேற்று உரையாடி இன்று
உறவைத்  துண்டிக்கும் /
மனிதர்களை உடனுக்குடன்
தண்டிக்கும்  வல்லமையைக் கொடு /

விருப்போடு உறவாடி /
உரிமையோடு  கதை கூறி /
காரணம் கூறாது வெறுப்போடு
விலகுவோரை கடுகாய் வறுத்தெடுக்க
வீரியமான வார்த்தைக் கொடு /

நடிப்புக்கு குறைவு இல்லை /
பிடிப்பு என்று சொல்ல யாருமில்லை /
அகத்தில் தூய்மை இல்லை /
முகத்தில் ஆயிரம் முல்லை/

தோள் கொடுக்கும் தோழனுமில்லை /
துணையாய் வரும் தோழியுமில்லை /
இது போலிகள் உலாவும் எல்லை /
உண்மைகள் நுழைய அனுமதியில்லை /

நல்லதோர் நட்பு நல்லதோர் தளம் /
நல்ளோர் உலவும் நிலம் /
நியாயமான மனிதர்களின் இருப்பிடம் /
நிச்சயம் நிம்மதி  இங்கே மலரும் /
என்று நம்பிக் கெட்டது இந்தப்பிள்ளை /

எல்லோர் போலும் போலிக்குப் போலியாய் /
பொய்யனவர்களுக்குப் பொய்யானவளாய் /
சந்தர்ப்பவாதிகளில் நானும் ஒருத்தியாய் /
உயிரான உறவுக்கு  உயிர் கொடுப்பவளாய் /

உதறித் தள்ளியோரை மதியாதவளாய் /
மதிப்பற்றோரை மிதித்து நடப்பவளாய்/
பிரிந்த நொடியே மறந்து சிரிப்பவளாய் /
நட்புஎன்னும் போர்வை போர்த்தியவளாய் /

நானும் இங்கே வலம் வர வேண்டும் /
அதற்கு எந்த வகை வரம் உண்டோ?
அதில் கொஞ்சம் கொடுத்தருள்வாய் /
என்று வரம் கேட்பேன் கண் மூடி நின்று  /🙏

   

ஓவியருக்கு வாழ்த்துகள்

தூக்கம் மறந்தேன்

நானே நானேதான்/
என்று எண்ணி இருந்தேன்./
அத்தனையும்  மாற்றியது நீதானே\
ஒவ்வொரு தடவையும் /
இதயம் துடிக்கும் போது எனக்காகவே/
என்று எண்ணி இருந்தேன்/

அது இல்லை என்று ஆகிப் போச்சு /
அதன் துடிப்பானது /
உனக்காகவே  மாறிப் போச்சு /
என்று அறிந்து கொண்டேன்/

எலும்பு கொண்டு வேலி இட்ட பின்னும் /
உள் மனதிலே முழுமையாக நீ தான் /
என்று உணர்ந்து கொண்டேன்.\
வேலி தாண்டி சென்றாயா?
இல்லை  விழினியிலே குழி  தோண்டி /பாதை அமைத்துச் சென்றாயோ ? நான்அறியேன் /

உலாவுகின்றாய் உடலினிலே/ குருதியோடு சேர்ந்து ஊர் அறியாமலே/
உள் இருந்து குடிக்கின்றாயே நீ என் உணர்வுகளை /
வளர்க்கின்றாயே உணர்ச்சிகளை /
துடிக்கின்றேன் தூக்கம் மறந்து  நான் /

    

      

எரியும் மனம்

நான் அமைதியானவள்  -அல்ல
அமைதியாக்கப் பட்டேன்/
நான் அடங்கிப் போகின்றவள்  இல்லை
அடைக்கி ஒடுக்கப்பட்டேன்/

நான் கூண்டுக் கிளி அல்ல
ஊராரின் சம்பிரதாயம் என்னும்
வேலிக்குள் அடைக்கப்பட்டேன் /

நான் நாகரிகம் தெரியாதவள் இல்லை
நடை உடை பாவனைக்கு சமுதாயம்
தடை போட்டு  விட்ட பாவியானேன்/

ஆயிரம்  எதிரி எதிரே  வந்தாலும்/ எதிர்த்து நின்று போரிடும் பிறவி நான்./
ஊர் வாயால் வெளியாகும் /சொற்களை எதிர்க்க முடியாத கோளையானேன்/

பொல்லாத  சமுதாயத்தைக்  கண்டு  குமுறுது நெஞ்சம் என்றென்றும்/
எரிமலையாக வெடித்துச் சிதறினால். தாங்குமா?   இன்றும்  /
இந்த உலகம் எனக் கேட்கின்றேன்/

அனல் தெறிக்கும் தீப்பொறி
சொல் எடுத்து /
சுட்டெரிக்கும் வார்த்தைகளைக்
கொண்டு விட்டெரிப்பேன்/
வீனாய்ப் போன சமுதாயத் தடைகளை/
விதவை என்ற ஏற்ற  தாழ்வான
மூட நம்பிக்கையை
விட்டொழிக்கும் வரை /
காட்டுத் தீயாக நின்று எரிப்பேன் /

Thursday 25 October 2018

கலங்காதிரு மனமே

கலங்காது இரு மனமே/  -நீ
கலங்குவதால்  ஏங்குது என் மனமே/ -நீ
கலங்கிடலாமோ தமிழ் மகளே/  -நீ
கலங்கரைவிளக்கம் விளக்கமாக
கற்றவள் தானே /

கப்பல்  ஓட்டிய தமிழனின்
இளைய மகளே /
இதயபலம் உமக்கு  வேண்டுமடி
சிறியவளே /
நெஞ்சு நிமிர்த்தி நின்று போர் புரியும் /
என் துணைக்கரமாக இணைந்த
இனிய மகளே /

வெற்றி வாள் கொடுத்து நெற்றித்
திலகமிட்டு/  -நீ
வாழ்த்தி வழி அனுப்பி வைக்க
வேண்டியவள்  அல்லவா ? என் தர்மபத்தினியே /
முகவாட்டத்தையும் கலங்கும் விழி
நீரையும் விரட்டடி என்னவளே./

வீர முழக்கம் தான் எழுப்பும் ஒலி
கேட்டவுடன் /
வெகுண்டு எழ வேண்டும் எனக்கு  முன் /
நீ அல்லவா?  மாவீரத் தமிழ் மகளே /
கலங்கி நீ தயங்குவது ஏற்புடையதோ ? சொல் மகளே /

தண்ணீருக்கே தமிழன் தவிக்கும் இன்நாளிலே /
தடையைத் தகுத்து நல் வழி திறக்க புறப்படும் வேளை/  -நீ
கண்ணீரை அழைத்து என்னை தடுக்கலாமோ ?
தொடை நடுங்கி மன்னன் நான்
இல்லையடி பெண்ணே./

போதுமடி என் உயிரே உன் மயக்கம் / வேண்டாமடி  கலக்கம்/
பெரும் இழப்புக்களை தடுப்போமடி /விளக்கம் கூறிய பின்னும்  ஏன் தயக்கம்/ வெற்றிவாகை சூடி வீரத்திருமகனாக
வந்து விடுவேனடி நீ  கலங்காத இரு மனமே /

     

போட்டிக்கு எழுதி தேர்வாக வில்லை
இன்று என் பார்வைக்கு வந்தன
பதிவு பண்ணி விட்டேன் 😊

Wednesday 24 October 2018

உணவே மருந்து

வல்லாரை துவையல் உண்டிடு /
அதிலே ஞாபக சக்தியைக் கண்டிடு /
அறுகம்புல் சார் அருந்திடு /
அதிலும் ஞாபக சக்தி உள்ளதை அறிந்திடு /

தூதுவலையை மென்றிடு/
நெஞ்சுச் சளியை வென்றிடு /
துளசிச் சாரைக் குடித்திடு /
கூடவே கற்கண்டையும் சேர்த்திடு/
லொக்கு லொக்கு இருமலைக் குறைத்திடு /
அதனுடன்   தொண்டைக் கர கரப்பை விலக்கிடு /

முடக்கத்தான் கசாயம் சுவைத்திடு /
மூட்டு வலிக்கு முற்றுப் புள்ளியிடு /
அகத்திக் கீரை பிரட்டிடு /
அதிலே வயிற்றுப் பூச்சைக் கொன்றிடு /
முருங்கைக் கீரை அரைத்தெடு /
மூச்சு அடைக்கச் செய்யும்
ஆஸ்துமாவைத் துரத்திடு /

கிளிசறியைக் கசக்கி எடு /
முகப்பருக்களுக்கு முடிவு கட்டிடு /
கரும் சீரகம் வறுத்தெடு /
கட்டுக்கடாங்காத இனிப்பு
நோயைக் கட்டிடு /

பச்சை மஞ்சள் கிழங்கு சாப்பிடு /
இதயமதைக் காத்திடு /
வெள்ளை எள்ளு தின்றிடு /
இளைத்த உடலை மீட்டிடு /
கொள்ளைக் கொஞ்சம் சேர்த்திடு /
கொழுப்பைக் கொஞ்சம் கரைத்திடு /

காரத்தைக் கணக்காயெடு /
கோபத்தைக் குறைத்திடு /
குழம்புக் கறியை குறைத்திடு /
வயிற்றுப் புண்ணின்  வரவைத் தடுத்திடு /
எண்ணெய் துளிகளாய் இடு /
கூடி வரும் வியாதியை களைத்திடு /

சின்ன வெங்காயத்தை அதிகம் அள்ளிடு /
நுரையீரலைக் கிள்ளும் வியாதியை தள்ளிடு /
வேம்பு குச்சு கொண்டு பல்லைத் துலக்கிடு /
சங்குப் பல்லைக் பாதுகாத்திடு /
செம்பருத்தி இலையை 
முடிக்குப் போட்டுக் குளித்திடு /
கருமையோடு நீள் கூந்தலைப் பெற்றிடு /

பூண்டு வறுத்து உண்டிடு /
வயிற்றுப் உப்பளை விரட்டிடு /
வெந்தையத்தை அதிகம் சேர்த்திடு /
அதிலே உடல் சூட்டைத்  தனித்திடு /
உப்பைக் குறைத்திடு /
இதய அடைப்பை நிறுத்திடு /

கடல் மீன்களை சுவைத்திடு /
கண் பார்வையை காத்திடு/
பச்சைக் கீரை உணவோடு சேர்த்திடு /
இரத்தத்தை அதிகரிக்கச் செய்திடு /

 

Tuesday 23 October 2018

யாரோ இவன்

உற்று உற்று நோக்குறான் /
பார்வையாலே விருந்து கேட்கிறான் /
கொத்துக் கொத்தாக வியர்வையை அழைக்கிறான் /
கொத்தடிமையாக்கவே நினைக்கிறான் /

அகல விழியைத் திறக்கிறான் /
புருவம் உயர்த்திக் கண்ணை சிமிட்டுகிறான் /
அடுக்குப் பல்லைக் காட்டி இளிக்கிறான் /
முரட்டு மீசையதை முறுக்கி மிரட்டுறான் /

கறுத்த மேனிக் காரன் /
விரிந்த மார்புக் காரன் /
வியர்ப்பூட்டும் பேச்சுக் காரன் /
கண்டதுமே கதி கலங்க வைக்கிறான் /

நின்ற இடத்தை விட்டு
நகர முடியாதவாறு என்
கால்களை நடுங்க வைக்கிறான் /
இவன் என் கற்புக்கு காவல் காரனா?
இல்லை கற்பையே சூரையாடும்
வேட்டைக் காரனா? கண்ட படி
கற்பனையை ஓட வைக்கிறான் /

Monday 22 October 2018

சிப்பிக்குள் மூத்தெடு

விழியை உற்று நோக்கிடு /
விருப்பு நீரை ஊற்றிடு /
இதயறை தனில் நுழைந்திடு /
இரவைப் பகலாய் மாற்றிடு /
உள்ளத்தை வாங்கிடு /
உணர்ச்சியைக் கொடுத்திடு /

காதோரம் அமர்ந்திடு /
காதிலே காதல் சங்கு ஊதிடு /
ஆசை அணுக்களை உசுப்பி விடு /
இரத்த ஓட்டத்தை அதிகரித்து விடு /

உடல் எங்கும் குளிர் மூட்டி விடு /
விரல் தங்குமிடமெங்கும் சூடு ஏற்றி விடு /
அங்கமதை அளர்ந்திடு /
தங்கமென புகழ்ந்திடு /

செங்கரும்பாய் சுவைத்திடு /
செந்தேன் எனக் கதை விடு/
மச்சமதைக் கணக்கெடு /
கிச்சுகிச்சு மூட்டி சிரிக்க விடு /

நெஞ்சத்திலே மஞ்சமிடு /
சிப்பியாய் என்னை எடு /
சிப்பிக்குள் முத்தாய் தங்கிடு /
உயிராய் என்னுள் கலந்திடு /
கற்பக் குடல் நிறைத்திடு /
தாய்மை என்னும் வரத்தைக் கொடுத்திடு/