Thursday 4 October 2018

எரிந்தது நூலகமா இல்லை தாயகம்

நூலகம் எரிந்து விட்டால்  மூடனே ..!
தமிழ்  வீழ்ந்து  விடுமோ கூறடா...!
எண்ணற்ற நூல்கள் நிலத்தோடு போனதே...!
எழுத்துக்கள் கரும்புகையாக விண்ணோடு கலந்ததே...../

தீயிட்டு எரித்தும் தோற்றுப் போனாயடா...!
தேசமெங்கும்  அழிவுற்ற  காகிதத்தின்  பேச்சுதானடா...!
அக்கினிக் குஞ்சுகள் வாழும் நாடடா...!
எரித்த  புத்தகத்தால் எழிச்சி கண்டோர் .."
இன்னும் வீழ்ச்சி கொண்டதில்லை கேளடா....../

வண்ணத்திலான வடிவ  அட்டைக் குறிப்புக்கள்...!
வரலாறு கூறும் பல ஏடுகள் ....!
வழக்காடா வழி காட்டும் பதிப்புக்கள் ....!
வந்து  அமர்ந்த வெண் சுவர்கள் ...../

தோற்றம்  மாறிக் காட்சி கொடுக்கிறதே....!
தாயக மக்கள் மனம் வாடுகிறதே.....!
புண் பட்ட நெஞ்சங்களும் கண்....!
வியர்க்கப் பார்த்து மகிழ்ந்த இடமெடா.../

ஊர்கள்  தேசங்கள் நாடுகள் கடந்து....!
எத்தனையோ  வாசிப்புத் தாள்கள்  அடுக்கிய ...!
அற்புத  அறைகள் கறுப்பாய் போனதடா...!
ஆன்றோர் சான்றோர் ஆட்சி புரிந்தோர்...!
அத்தனை பேரின் புகழ்களையும் ஏந்தியவையடா ...../

மண்ணுக்குப் போர் இட்டு மண்டியிடாதவன் ! மணலிலே மதிப்பு உள்ள ஆக்கங்கள் ! எரியூட்டப்  பட்டவை கொடுமையடா....!
அறிவுப் பாதை திறக்கும் அறிஞ்சியத்தை...!
கரியாக்கியவன்  இன வாத மடையனடா....../

ஆசியாக்  கண்டத்திலே தலை சிறந்த...
குறுந் தொகுப்புக்களை  இழக்க நேர்ந்ததடா ....!
பார்த்ததுமே தமிழன் விழிகளுக்கு வலியடா...!
எரிந்தது நூலகமா?  இல்லை தாயகமடா ..!
புரிந்தவர் நெஞ்சத்தில் வேதனை பூகம்பமானதடா....../

No comments:

Post a Comment