Wednesday 10 October 2018

தூதாக வருவாயோ கிளியே

கொவ்வைக் கனி உண்ணும் /
சிவந்த இதழ்காரியே /
கொஞ்சும் தழிழ் பேசும் /
பச்சை சட்டைக் காரியே /
மரத்தை விட்டு இறங்கி வருவாயோ?
என்னவளை நெருங்கி /
தூது ஒன்று சொல்லி வீடுவாயோ?

அடுத்த ஊர் கண்ணழகி /
எனதுள்ளம் எடுத்துச் சென்ற பேரழகி /
அவளது அங்க அடையாளம் /
நான் உரைக்கின்றேன் /
அங்கே சென்று எனது காதலை /
உரைத்து பதில் மொழி பெற்று
விரைந்து வருவாயோ?
மனம் நிகழ்ந்து/
கனி விருந்து படைக்கின்றேன்  /

     

No comments:

Post a Comment