பச்சரிசி 1 1/2 ஆழாக்கு
கடலைபருப்பு 1/4 ஆழாக்கு
பயத்தம்பருப்பு ஒரு கைபிடி
உளுத்தம்பருப்பு பருப்பு 1 கைபிடி
இஞ்சி ஒரு சிறு துண்டு
பச்சைமிளகாய் 2
சிவப்பு மிளகாய் 5
வெங்காயம் 1 பெரியது மெலிதாக அரிந்தது
மணதக்காளி கீரை ஆய்ந்து அரிந்தது
உப்பு
சுட்டு எடுக்க எண்ணெய்
செய்முறை
அரிசி பருப்புகளை 2 மணி நேரம் ஊறவைத்து இஞ்சி மிளகாய்கள் சற்று நற நற வென
அரைத்து எடுத்துக்கொள்ளவும்
உப்பு மற்றும் வெங்காயம் கீரை சேர்த்து கலந்து வைக்கவும்
எப்போது வேண்டுமோ மொறு மொறு என தோசை போல சுட்டு எடுக்கவும்
இது புரதசத்துடன் நார்சத்தும் கலந்த உணவு
தக்காளி சட்னியுடன் அருமையாக இருக்கும்
Monday, 1 October 2018
மணத்தக்காளி அடை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment