Monday 15 October 2018

பயற்றம் பலகாரம்

தே.பொருட்கள்

பாசிப்பயறு 1கிலோ
வெல்லம் 1/2 கிலோ
சர்க்கரை 3/4கிலோ
கோதுமை மா 1/4 கிலோ
நிலக்கடலை பருப்பு வறுத்தது 1/4கிலோ
பேரீச்சம்பழம் 1/4கிலோ
ஏலக்காய் பொடி 1தே.கரண்டி
டயமன் கற்கண்டு 100கிராம்
மஞ்சள் 2சிட்டிகை
நீர் தே.அளவு
மிளகு 1 தே.கரண்டி
சீரகம் 1தே.கண்டி
சோம்பு 1தே.கரண்டி
தேங்காய் 1துருவியது
தேங்காயெண்ணெய் 1லீ

செய்முறை

பயறை நன்கு வறுத்துக்கொள்ளவும். அதனுடன் மிளகு சீரகம் சோம்பு சேர்த்து வறுத்து இறக்கி ஆறியதும் மா அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அதனுடன் நிலக்கடலை  பருப்பை சிவப்பு தோல் நீக்கி உரலில் லேசாக இடித்து எடுத்துக் கொள்ளவும்.

அதனை பாசிப்பயறு மாவுடன் சேர்க்கவும்.
வெல்லம் கழுவி சிறு துண்டுகளைக்கி எடுக்கவும்.
பேரீச்சம்பழம் விதை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி எடுக்கவும். துருவிய தேங்காயை நீர் வற்றி வறண்ட பருவத்திற்கு வறுத்து எடுத்துக்கொண்டு...

பின்னர் சர்க்கரையை சிறிது நீர் சேர்த்து காய்ச்சி கம்பிப்பதம் ஆரம்பிக்கையில் பேரீச்சம்பழம் வறுத்த தேங்காய் கற்கண்டு  ஏலக்காய்ப் பொடி சேர்த்து பிரட்டி இறக்கி அதனுள் பாசிப்பயறு மா வெல்லம் சேர்த்து பிசைந்து எடுக்கவும்.

பின்னர் மற்றுமொரு பாத்திரத்தில் கோதுமை மா மஞ்சள் உப்பு நீர் சேர்த்து தோசை மா பதத்திற்கு கரைத்தெடுத்துக்கொள்ளவும்...

மற்றுமோர் கடாயை சூடாக்கி எண்ணெய் ஊற்றவும்
எண்ணெய் காய்ந்ததும் பிசைந்த மாக்கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி கோதுமை மா கரைசலில் தோய்த்து பொரித்து பொன்னிறமானதும் இறக்கிக் கொள்ளவும். ஆறியதும் பரிமாறலாம்....

குறிப்பு..:-  பாகு காய்ச்சாமலும் செய்யலாம்.
பாகு காய்ச்சி செய்தால் ஒரு மாதத்திற்கு மேற் பழுதாகாமல் இருக்கும்...

இதே போல் பாசிப்பயறிற்கு பதில் ரவை பாவித்தும் செய்துகொள்ளலாம். தனி நிலக்கடலை பருப்பிலோ முந்திரி பருப்பிலோ செய்தால் சுவை அதிகம் கிடைக்கும்....

திருமதி பிரிந்தா புஷ்பாகரன்

No comments:

Post a Comment