Wednesday 10 October 2018

சிந்தனைக் கவி

காயானவை கனியும் போது .
வண்ணங்கள் மாறும் /
இலையுதிர் காலம் வந்தால்.
அவையும் வண்ணம் மாறும் /

சுட்ட பின்னே சங்கும்.
அதிக வெண்மையாகும் /
பாலோடு கலப்படம் செய்யும் போது /
பாலும் வண்ணத் தோற்றம் கொடுக்கும் /

இவைகளின் மாற்றம் /
ஏமாற்றம் கொடுப்பதில்லை /
மனசை வருத்துவதில்லை /
உறவைப் பிரிப்பதில்லை /

கொடுமைகள் புரிவதில்லை /
உயிரைப் பறிப்பதில்லை /
கெடுதல் செய்வதில்லை /
வஞ்சம் தீர்ப்பதில்லை /

வன்மம் வளர்ப்பதில்லை /
முயற்சியைத் தடுப்பதில்லை
புரளி பேசுவதில்லை /
கர்வம் கொள்வதில்லை /

பாவச் செயலில் இறங்குவதில்லை /
எளியோர் தியோரை
வெறுப்பதில்லை /

ஆனால்!

காசைக் கண்டும் /
பதவியைக் கண்டும் /
புகழ்ச்சிக்காகவும் /
ஆட்சிக்காகவும் /

மனிதன் மாறுவான் பார்
அவனின் வண்ணமும் தென்படாது/
எண்ணமும் தென்படாது /
நல்லவைகளை மரணிக்கச் செய்து /
தீமையை உயிர்ப்பிக்கச் செய்து /
உலகினிலே மாற்றத்தால் /
அழிவைப் பெருக்கும்
ஒரே இனம் மனித இனமே /

No comments:

Post a Comment