Monday 1 October 2018

அமைதி இழந்த மனம்

பொம்மைக்கு உயிர் கொடுத்து /
பொய்யான அன்பை விதைத்து/
மெய்யாக அழ விட்டு /
சொல்லாமல் சென்றால் 
என்வாகும் அந்தப்  பேதை உள்ளம்......!/

கருணையின் நிறம் காணத நெஞ்சத்திலே/
கருணை மழையைப் பொழிந்து /
இன்பத்தை தழைக்க விட்டு /
சொல்லாமல் நிறுத்திக் கொண்டால்/ கருகாதோ அந்தப் பேதை நெஞ்சம்.....!/

தந்தை அன்புக்கு அபாக்கியவதி/
சகோதரர்கள்  பாசத்துக்கு துரதிஷ்ர சாலி/
கணவன் அன்போ கற்பனையோடு/
தொடரும் என்ற உன் அன்பும்  விட்டுச் சென்றால் /
அந்தப் பேதை இதயம் தாங்குமா ? கொஞ்சம்.....!/

காசுக்காக மட்டும் என  உறவும் /
கண்ணாக இருக்கையிலே /
அழைப்பின் வழி நலம் கேட்டு /
அமைதி  இழந்த  மனதை/
அமைதியாக்கிவிட்டு  /
நீ மௌனமானால் /
நொறுங்காதோ  அவள் மனம்./

பெண் உறவோ  கிடைக்காத பிறவி  நீ /
பெண் மனதை சற்று அறியும் அறிவாளி நீ/
புண்   பட்ட   மனதுடன்   வலம்  வரும்/
பெண்ணவளை நோகடிப்பதில் என்ன?
பயன் உமக்கு......!/

விளைந்து  இருக்கும் வலிகளை/
மறைக்கவே விதைக்கின் றாள்
வெகுளித் தனமான மொழிகளை....!/

கண்ணீர் கணக்கும் வேளையிலே/
சொல்லி அழ  வாய் உண்டு /
செவி கொடுக்க நீ இல்லையே /
இவையும் அவளுக்குப் பெரும் சோதனை /
போதும் போதும் நீ கொடுக்கும் வேதனை/ தொடரட்டும்  எப்போதும் உன் போதனை/

No comments:

Post a Comment