Wednesday 17 October 2018

அந்தி சாயும் நேரம்

அந்தி சாயும் வேளை
ஆலமரத்தின் மேலே
கூடி விடும் குருவிகளே
அந்தி சாய்ந்தாலும்
இத்தி பூத்தாலும் என்
நெத்திமேலே திலகம்
இடும் மன்னன் அவன்
வீடு சேர வில்லையே....////

செவ்வானம் சிரிக்கிறது
கரு மேகம் மறைகின்றது
உழைப்புக்கு சென்ற ஆண்
மக்கள் எல்லாம் தன் வீடு
தேடி வருகின்றார்களே....////

என்னவன் மட்டும் ஏன்
என் வீடு மறந்தான் சொல்லிச் செல்
கூடு செல்லும் காகங்களே....////

கன்னி நான் கலங்க காளை
அவன் தயங்க காரணம் இல்லாக்
கவலை ஏன் இந்தக் கொடுமை....////

என் மேல் காதல் இல்லையோ
காட்டிக் கொள்ள துணிவு  இல்லையோ இதை நின்று அவனிடம் கேட்டு கூறி விட்டு
சென்று விடு இளந்தென்றலே....////

அந்தி சாய்ந்தால் முந்தி விடும்
இரவு  இந்த இளம் நெஞ்சம்
படும் பாட்டை கொஞ்சம்
சொல்லி விடு என் தலையணையே
எப்போதும் எனக்கு உன்
துணைதானோ உனக்கும்
வேண்டாமோ விடுதலையும்....\\\\

No comments:

Post a Comment