Saturday 6 October 2018

பணம் பத்தும் செய்யும்

மதிக்கவும் செய்யும்/
மிதிக்கவும் செய்யும்/
செம்மையாக செதுக்கவும் செய்யும்/
சிதைக்கவும் செய்யும்/

புத்தியை வளர்க்கவும் செய்யும்/
யுத்தியை கையாளவும் செய்யும்/
மதியை வீழ்த்தவும் செய்யும்/
மதி மயங்கவும் செய்யும்/

வாழ்க்கையிலே
தலை நிமிரவும் செய்யும்/
வாழ்க்கையதை தடம்
புரட்டிப் போடவும் செய்யும்/

பலரின் மரியாதையை
பரிசாகவும் கொடுக்கும்/
சில நயவஞ்சகர்களை 
எதிரியாகவும் மாற்றும்/

நல்லவன் கையில் கிடைத்த
பணம் நல்ல வழியை நோக்கும்/
கெட்டவன் கையில் மாட்டிய
பணம் மாற்று வழியைக் காட்டும்/

நூறு ரூபாய் நோட்டு
எண்ணியே நொந்து நூலாகப்
போகும் மனிதனும் உண்டு/
நூறுபாய்க்கு வழியின்றி
வெந்து நொந்து போகும் மனிதனும் உண்டு/

இந்த நூறு ரூபாய் நோட்டால் போடும்/
ஆட்டம் ஆளையே காழியாக்கும்/
ஒரு வகையில் பார்த்தால் பணமும்/
மனிதனின் எமனே\😊

No comments:

Post a Comment