Friday 22 July 2022

உன்னை நீயே கேளும்
************************

ஓர் உயிர் 
சேகரித்த சொத்தில் 
எத்தனை உயிரின்
ஆசைகள் தீருகின்றனர்.

புகைச் சட்டிக்கு 
புற முதுகு காட்டி 
முன்னாடி பொன் மின்ன 
கண்ணாடி பார்த்து 
துள்ளுதாம் வெள்ளைத் 
தோல்களின் உள்ளம் .

கொள்ளை அடித்து விட்டு 
கொன்று விடுவது ஒரு ரகம்.
கொன்று விட்டுக் 
கொள்ளை அடிப்பது 
இன்னுமொரு ரகம்.

கொல்லக் கொடுத்து 
கொள்ளையடிப்பது 
வேறு ரகம்.
தன்னைத் தானே 
கொல்ல வைத்து 
உள்ளதையெல்லாம்  
வாரிச் சுருட்டுவது 
ராஜ தந்திரத்தின்  முதல் ரகம்.

இதில் நீ எந்த ரகம் 
என்று உன்னையே 
நீ கேளும்.

கணக்குப் போட்டு நேரம் 
பார்த்து காலம் குறித்து 
கச்சிதமாகக் காய் நகர்த்தி
காத்திருந்து குறி வைத்து 
உயிரைப் பறித்து  உயிலை எடுத்து 
ஊருக்குள் தங்க மங்கையாக 
ஜொலிப்பது ஒரு வழி. 
அது பேராசையில் பிறந்த வழி.

கிடைத்த வரைக்கும் லாபம்
என எண்ணம்  எடுத்து 
பிறர் பெற்ற பிள்ளையின்  
உழைப்பைக் கொண்டு 
உல்லாச வாழ்வினில் 
மிதப்பது மானத்தை 
தொலைத்து வாழும் வழி .

இப்போது 
உங்களது பயணம் 
எவ்வழியே என்று 
உன்னை நீயே கேளும்.

இன்னும்  சொல்லலாம் 
அள்ளிக் கொடுத்தவன் 
ஆட்டி வைத்திடுவான் 
என்னும் எண்ணத்தில் 
சொல்லாமல்  வார்த்தைகளை 
மெல்லுகின்றேன்   
எல்லாம் அவன் செயல்  என 
எண்ணித் தள்ளுகின்றேன்.

Wednesday 20 July 2022

இது என்ன புதுமையா
புதைக்கப் படும்
உடலுக்குப் பின்னால்
வன்கொடுமைகள்
மறைக்கப் பட்டு விடுவது.


காச்சி மூச்சி என்று
கூச்சல் இடுவோர் எல்லாம்
மிஞ்சி மிஞ்சி போனால்
ஒரு மாதகாலம்  நீடிப்பார்கள்
பெற்றவளுக்குத் தான்
துயரம் நெஞ்சில் நின்று இடிக்கும் .


கன்னித் தன்மை இழந்து தான்
கல்வி பயில வேண்டும் என்றால்
கற்புக்கரசி கண்ணகி பிறந்த நாடு என்ற பெருமை எதற்கு.


ஒன்றா இரண்டா கேட்டும் பார்த்தும்
நாம் கடந்து வந்து விட்டோம்
கல்லுரி வளாகங்களின் செயல்களை.

எரிக்காதீர்கள் உடைக்காதீர்கள்
கல்விக்கான உடமைகளை
அறுத்துப் போடுங்கள்
கடமை தவறியவனை
அடங்கி ஒடுங்கும் ஒழுங்கற்ற நிருவாகம்.

மாணவ மாணவிகளின்
இறப்பும் மக்களின் கொந்தளிப்பும் கள்ளக்குறிச்சியில் மட்டும் நிகழவில்லை .

மெனக்கிட்டு யாரெனும்
கணக்கிட்டுக் காட்டினால்
தினுக்கிட்டுப் போய் விடும் சமுதாயம் .

பல கனவோடும் இலட்சியத்தோடும்
கல்வி கற்றுக்க நுழைந்திடும்
எத்தனை உயிர்கள்
கயவர்களின் காமப் பசிக்கு இரையாகி மண்ணுக்கு விதையாகி விடுகின்றனர்.

மன்னிப்பு என்னும்
வார்த்தையை அழித்து விட்டு
மரணம் என்னும்
சாஸ்திரத்தை கிறுக்கி விட்டு
அவனின் மூச்சை நிறுத்தி 
இக் கொடுமைகள் தொடராமல்
மக்களே நீங்களே முற்றுப் புள்ளியிடுங்கள்.

Monday 18 July 2022

கதா பாத்திரம்
*********-******

பார்த்துப் பார்த்து 
ஓடர் பண்ணி 
போட்டு போட்டு 
மினிக்கிய  பொண்ணுக்கு .

கேட்டால் கூட 
கிடைக்க வில்லையாம் 
மேக்காப் போட்டுக்க பொருட்கள் .

கொழுத்த உடலும்
கொழுப்புக் கரைக்குயுதாம் 
கொடுத்த சலுகையும் 
மெது மெதுவாகக் குறையுதாம்.

கணத்த ஆசைகள் 
நிறைவேறாமல் கரையுதாம்.
பொறுத்து வாழ 
வேண்டிய கட்டாயம் 
துரத்தி விட்டால் 
போக்கத்த இடம் இல்லையாம். 

தினம் தினம் 
வீட்டுக்குள் கொலுவலாம் 
கலவரம் தொடருதாம்  
காற்று வாக்கில் கதைகளும் 
ஊருக்குள் பரவுதாம் .

கண்ணீரும் தண்ணீரும்
சோற்றோடு கலந்திடும் 
காலமாய் மாறுதாம்
இதில் என்ன விந்தை .

செய்த பாவம் மெது 
மெதுவாக பாய் விரிக்க 
உதறியிட முடியாமல் 
உள்ளம் துடிக்க

பழமை நினைவு 
மூளைக்குள் மீன் பிடிக்க
எக்கரையும் இல்லாப் படகாக 
வாழ்க்கை நடுக்கடலில் துடிக்க

வெந்து நொந்து  
நூலாய்ப் போய்  எந்நாளும்  
நாட்கள் கடக்க வேண்டும் .
மூச்சும் பேச்சும் 
வாழ்வை வெறுக்க வேண்டும்.

சூழ்ச்சம காரிகளுக்கு 
இவ்வரிகள் புரிந்தால் 
ஆத்திரம் வெடிக்கும் 
ஆத்திரம் என்னும் கதா பாத்திரம் 
எனக்கும் ரொம்பவே பிடிக்கும்)

(சாவங்கள் தொடரும் சாகும் வரை 😏
நம் நாடு 😊
**********

உலக மக்களையே 
திரும்பிப் பார்த்திட 
வைத்த நெடுங்காலப் 
போர்க்களம் நடந்த நாடும் 
நம் நாடே. 

நாட்டு 
வளர்த்தையெல்லாம் 
பங்கிட்டு 
மீண்டும்  அகில 
நாட்டையே திரும்பிப் 
பார்த்திட வைத்த நாடும்
 நம் நாடே. 

உயிர்க்கொல்லி 
துப்பாக்கியிடம்  பயந்து 
அகதிகளாக அழைந்தது 
அக்காலம்.
உணவுகள் இன்றி 
அகதியாய்ப் போவது 
இக்காலம்.

உரிமையைக் கேட்டு
போர்க்கொடி தூக்கியது 
அப்போது ஓர் 
இனம். 
அதனை வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்தது 
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்
இதயம் இல்லாமல் சில 
மனிதயினம்.

முன்னுக்குப் பின்  
முரண்பாடு 
மொத்தமாகப் போடுது 
இப்போது கூப்பாடு .

வேற்றுமையை  ஒளித்து 
ஒற்றுமையை வளர்த்து 
தேடுகின்றது   சாப்பாடு. 
 விசித்திரம் நிறைந்த நாடும்
நம் நாடே.

Sunday 17 July 2022

இதுதான் நாங்கள்
********************

உள்ளூரிலும் வசப்
பாட்டு .
ஊருக்கு வெளியிலும் அதே
பாட்டு .
உன் வாய் வலித்த பின்னே
நிப்பாட்டு.
கண்டுக்க மாட்டோம் நாங்கள்.

தூத்துகின்றது  
நல்ல வாய் தொடக்கம் 
நாறவாய் வரைக்கும்.

காற்றோடு 
கலக்கின்றதாம் மானம் .
அதைக் கேட்வோருக்குத் தான் 
பெருத்த அவமானம்.

அட மானம் இல்லாத
பிறவிகள் எங்களுக்கு 
எவ்வழியில் பறந்திடும் 
அவமானம்.

வானுக்கும் பூமிக்கும் 
நீங்கள் குதித்தால் 
என்ன .
வரும் போதும் 
போகும் போதும்
காறி உமிழ்ந்தால் 
என்ன .

கடுகளவும் 
அசரமாட்டோம்.
கனவிலும் 
திருந்த மாட்டோம்.

நாளும் பொழுதும்
மானமும் நாணமும் 
பறந்தாலென்ன
அது எமக்கில்லை.

காணொளி வழியிலும்
வளைத்தெடுத்து
காண்போரையும் 
இழுத்தெடுப்பதில்
நாங்கள் 
கை தேர்ந்த பிள்ளை.

கையும் பையும் கணமாக
இருந்தால்.
எதையும் மறந்து கை கோர்த்து
நடந்திடுவோம்.

ஓட்டைச் சைக்கிளுக்கு 
டாட்டா காட்டிடுவோம்.
மோட்டார் 
பைக்கிக்கு 
வாய் வாய் சொல்லிடுவோம்.

கார் காரனுக்கு கண்
அடித்திடுவோம்.
ஏறப் பிலேன் ஏறிட எண்ணம் விதைத்திடுவோம்.

அயல் நாட்டு 
உழைப்பாளியின் தொடர்வு 
கிடைத்து விட்டால் .
காலம் நேரம் பார்க்காமல்
அரட்டை அடித்திடுவோம்.

ஒருவரை ஒருவர்
காட்டியும்  கொடுத்திடாமல்
எவரிடமும்
போட்டும் கொடுத்திடாமல் .

இவ் விசயத்தில்
உடன் பிறப்பாகிய இருவரும்
பிளவு இன்றி
ஒற்றுமையாய் இருந்திடுவோம்.

இளிச்சவாய் எவனாவது 
பார்த்துப் பழகி விட்டால்  .
காதல் கீதல்  
என்று  கதை கூறிடுவோம்
தேவையானதை வாங்கிச் சுரண்டி 
பையை நிறப்பிட முயன்றிடுவோம்.

தேவை முடிந்து விட்டால் 
கோளையாக மாற்றி ஆளையே
முடித்திடுவோம்.

(ஒரு சில ஜெம்மங்கள் இப்படியே😡)

Saturday 16 July 2022

காலம் கடந்த பின்  ஞானம்
****************************

ஆதரவு கொடுத்தவனே
அருவாள் தூக்குகின்றான்.
ஓட்டுப் போட்டவனே 
ஓட்டம் காட்டுகின்றான்.

தேர்வு செய்து வாழ்த்து
உரைத்தவனே 
கோத்தா கோ என்று 
உரக்கக் கோசம் போடுகின்றான்.

மகிந்தைக்கு நெஞ்சத்தில்
மாளிகை கட்டியவனே
அரளி மாளிகையை விட்டு
ஓட ஓட விரட்டுகின்றான் .

அவர்கள் விதைத்த 
வினையே விளைந்து விட்டது 
அவர்களது விரல்களே
அவர்களின் விழிகளை 
பதம் பார்க்கின்றது.

நாட்டை வித்தவர்களின் 
மூளையை நொங்கு குடித்திட 
ஆங்காங்கே படை திரண்டு விட்டது.

என்ன ஓர் விசித்திரம்
எந்த மாதத்தில்  
தமிழ் இனம் அழிக்கப் பட்டு 
வெற்றிக் கொடி நட்டானோ 
அதே மாதத்தில் 
அவனுக்கான எதிர்ப்புக்
 கொடி விரிக்கப் பட்டு விட்டது.

தமிழினம் அழியும் போது 
குமுறாத உள்ளங்கள் எல்லாம் 
எழுந்து  கொந்தளிக்கின்றது.
திக்கட்டுப் போய் தெருவினிலே நின்று தவிக்கின்றது. 

இன்று சிங்கள மொழி 
உரைத்திடும் நாவிலும் 
இறந்தும் இறாவாமல் 
வாழ்ந்திடும் ஈழச்சுடரின் 
புகழ் ஒலிக்கின்றது.

காலம் கடந்து ஞானம்
பிறந்தவர்களாய்
சிறு பான்மையினரை 
வதைத்ததை நினைத்து  வருந்துகின்றார்கள்.

Friday 15 July 2022

சொந்த நாட்டில் 
இருந்திடும் வேளையில் 
உந்தன் ஞாபகம் வந்து 
எந்தன்  நெஞ்சத்தில் 
ஊற்றெடுத்திடும் .

என எண்ணி 
என்னைச் சேர்ந்தவர்கள் 
எல்லோரும் முடிவு 
பண்ணி விட்டார்கள்  

என்னைத் 
தேர்த்துவதாக நினைத்து 
அயல் நாட்குக்கு 
வழி அனுப்பியும் விட்டார்கள் .

மகனே உனக்கும்
எனக்கும் 
இறைவனுக்கும் 
மட்டுமே தெரியும் 
இங்கு தான் 
உந்தன் எண்ணம் 
எந்தன் உயிரை 
வாட்டி எடுத்திடும் என்று. 

ராத்திரி பதினோரு 
மணி ஆனதுமே 
மனதில் ஓடி 
வந்து விடுகின்றாய் .

அப்போது தானே 
உனது வேலை முடிந்து 
ஓய்வு நேரம்  
எடுத்துக் கொண்டு
என்னோடு 
அதிகமாய்ப்  பேசிய காலம் .

நான் கண்ணீர் சிந்தாமல்
இமை மூடி உறங்கிய நாளே
இதுவரை இல்லையெடா 

இது யாருக்குப் புரியும் 
யாருக்குத் தெரியும்
மௌனமாய் 
அழுதவாறே நான்
அமைதியிழந்து 
உறங்கி எழுவது. 

அயல் நாட்டிலும் 
அரவணைப் போடு 
வைத்திருந்த உன்னை 
வந்தெறங்கியதும் மறந்திட 
இயலுமோ  சொல்லடா .

நான் என்ன உன் 
இரத்தத்தை உறிஞ்சி 
உயிரைக் குடிக்க 
வந்த பொண்டாட்டியா? 

என் உயிரிலும் 
உதிரத்திலும் பங்கிட்டு
கரு சுமந்த அன்னை  
அல்லவா? இயலுமா
 எங்கு சென்றாலும் 
உன்னை மறந்து 
வாழ்ந்திட. நீயும் கூறடா.
😭😭😭😭😭😭😭

Tuesday 12 July 2022

நல்ல சோறு கறி இல்லை 
விலைவாசி கூடிய 
உடையில்லை .
நகைநட்டியில்லை 
மெத்தியிட்டுத் தூங்கிட 
வழியுமில்லை .

காவல் காரன் 
தொழிலுக்கு லாயக்கில்லா  
அப்பன் .
அதிகாரிகளே கழுத்தைப் 
பிடித்துத் தள்ளி விட்ட 
குப்பன் .

என்ன செய்திடுவாள்
இவளது அன்னை. 
நம்மைப் போல் வெளிநாட்டு
பணிப் பெண் தொழிலும் 
கை  கொடுக்கவில்லை. 

அப்பச் சட்டியும் 
அப்பப் போது தீயும் நிலை.
இந்த வேளையிலே 
தேவைக்கு மீறிய ஆசைகளை 
பிள்ளைக்கு எவ்வழியில் 
தீர்த்திடுவாள் அவளுக்கும் தொல்லை .

ஊரார் வீட்டு உடையை 
உடுத்தி.
அழகு ஓவியமாய் இடையைக்
காட்டி. 

பாவி என் மகன் 
நெஞ்சத்திலே காதல்  கடையை
 விரித்து. 
இவளின் உள்ளத்தில் 
வலை  விரித்த ஆசைகளை 
நிறை வேற்றிட முயன்றாள் .

முயற்சியில் வெற்றி 
கண்டாள் 
விரும்பியதையெல்லாம் 
அனுபவித்தாள் .

ஆசை அலை போல் 
அதிகம் எழுந்திடவே 
அடுத்தடுத்து கற்பனையில் 
இறங்கினாள்  .
யார் யாரோ அறிமுகத்தை 
நாடினாள் .

இல் வாழ்வை உடைத்திட 
என் மகன் காதிலே 
தீக் கொள்ளியாய் சொற்களை 
ஏவி அவனின் 
உணர்வலைகளைக் கொன்று 
தன் உயிரை தானே மாய்த்திடும் 
நிலமைக்குத் தள்ளினாள்.

நாளு எழுத்துப் படிப்பையும் 
வெளுப்பு விழுந்த தோலையும்.
கொண்டு விளையாடுகின்றாள் 
பல ஆண்களின் வாழ்க்கை
என்னும் மைதானத்தில் நின்று.
இதில் பலியானது இரண்டு 
பைத்தியமானது எத்தனையோ ?

ஐந்து வருடகாலம் எங்களது 
இல்லத்து மருமகளாக வாழ்ந்தும்.
அவளது உள்ளத்தில் மறைத்திருந்த 
முன்னால் வாழ்க்கைக் கதை தனை சொல்லிடாமல் மறைத்து 
வாழ்ந்திட்ட சாமர்த்தியம் 
இவளைத் தவிர எந்தப் பெண்ணிடமும் இருக்கப் போவதில்லை.

இந்நாளில் பைக்கில் சவாரி எடுத்து பாதை கடந்திட கை கோர்த்திடும் 
அந்தப் பிள்ளை யார் பெற்ற 
பிள்ளையோ நான் அறியேன்  .
அவனின் ஆயுள் முடிந்து 
மூச்சு  நிறுத்தும் முன்னே 
அறிவுரை சொல்லி விடுங்கள்.

இல்லையெனில்    தேவைகள் 
எல்லாம் பூர்த்தியானாதுமே
இவளது அன்னை சென்று விடுவாள் 
குடிருப்பு சாஸ்திரியின் வீட்டைத் தேடி. 
 நிறுத்தம் கண்டு விடும்  உடன் 
நீடிக்காமல் அவனது உயிர் நாடி. 😭

Thursday 7 July 2022

இடுக்கண் தலை தூக்கி
கிடுக்கிப் பிடி
பிடித்திருந்த காலத்தில் 
உன்னை ஈன்று எடுத்த எனக்கு 
என்ன ஒரு துன்பத்தைக்
கொடுத்து விட்டாயடா மகனே. 

போர்க்களத்தில் 
நீ மாண்டிருந்தால் 
நெஞ்சம் நிமிர்த்தி 
நான் வாழ்ந்திருப்பேன்.

வழிப்போக்கில் நீ 
மாண்டிருந்தால் 
தாறுமாறாக 
வண்டி செலுத்திருப்பாய் 
தவறு உன்னிடம் என்று 
என்னை நானே 
தேர்த்திக் கொண்டிருப்பேன் .

கூடி விளையாடி 
கூட்டமாய் நீர்த்தாக்கில்
இருக்கும் போது மாண்டிருந்தால். 
உன்னை அறியாமல் 
நடந்த விபத்து என 
மனக் காயத்தை ஆத்திருப்பேன் .

நோயின் தாக்கம் கண்டு
பேயின் பார்வை பட்டு 
பாயில் வீழ்ந்து மடிந்திருந்தால்
காலத்தின் தண்டனையென 
ஏற்றுக் கொண்டிருப்பேன்.

இத்தனையும் உன்னை 
நெருங்கிட தயங்கி 
தள்ளியே நிற்க 
உன் கழுத்தை நீயே 
நெரித்து விட்டாயே 
அதைத்தான் ஏற்றிட
முடியவில்லையடா மகனே.

அவளை வைத்து 
எத்தனை எத்தனை 
கற்பனை வளர்த்தாய் 
அதனை நிறைவேற்றியதாக
கனவு கண்டு 
சொல்லியும் நகைத்தாய்.

#சாலு மாக்குப் பிறகு தான்
யாராயினும் எனக்கு என்று 
சொன்ன படியே இருந்தாய். 
உன் வார்த்தை 
உண்மையென உயிரை 
மாய்த்து நிரூபித்தும் விட்டாயெடா.

உன் குடும்பம் மட்டும் இன்றி 
ஊரில் பலரின் வருத்தம் 
ஒன்றே ஒன்று தானடா மகனே 
உன் அன்புக்கும் நம்பிக்கைக்கும்
தகுதி  அற்ற  ஒருத்திக்காக 
உன் மூச்சை நிறுத்தி விட்டாயென. 

பிரிவை பொறுத்திருக்க முடியாமல் விழிகளை இறுக்க மூடி குழிக்குள் 
நீ இறங்கிப்  படுத்து விட்டாய்.
பளிங்கு கற்களைப் போல் 
அவள் மினிக்கிக் கொண்டு 
உலாவுவதை  காணாமல் 
நம்பி கெட்டு விட்டாயேடா .

உன் வியர்வை வாடை
அவளின் உடலில் மாறும் முன்னே
வேற்று கிரகவாசியாய் 
மாற்று மானிடர்களுடன் 
நீ பார்த்து வாங்கிக் கொடுத்த 
உடை அணிந்த படியே 
கை கோர்த்து பயணிக்கத் 
தொடங்கி விட்டாளடா .

உனது மெய்யான காதலை 
மையாகக் கரைத்து விட்டு 
தேவைகளைப்  பூர்த்தி செய்திட 
பொய்யான காதலை விரித்து
தொய்யாமல் நகர்ந்திட 
தொடங்கி விட்டாளடா.

நீ தான் முதல் காதல் 
முதல் கணவன் என்றால் 
அவள் முக வாட்டத்தோடு 
வாழ்ந்திருப்பாள் .
எண்ணிக்கையில் 
நீ இரண்டாமிடம்
இரண்டையும் கொன்று விட்டு 
அவள் போடுகின்றாள் 
கன்னி வேடமடா.😭

Monday 4 July 2022

அழகு ஆபத்து 
என்பார்கள் பலர் 
அதனை  ஏற்கவில்லை 
அப்போது என் மனம் 
அதனாலே பேதை 
இவளின்  முகம் கண்டு 
சந்தேகம் கொண்டு அலசி 
ஆராய வில்லை  எனது குணம்./

ஓடி வந்தவளை போடி 
என்று விரட்டாமல் 
பெற்ற மகளோடு 
ஒப்பிட்டு பார்த்தேன் 
உப்பிட்ட உணவை
பங்கிட்டு ஊட்டியும் விட்டேன். /

மூளிக்காதோடு  அனாதை 
போல் வந்தவளுக்கு  
திருமண பந்த 
உத்தரவாத பத்திரமிட்டு 
அங்கிகாரமும் கொடுத்தேன்./

பொருளோடு 
உடையும் கொடுத்து 
ஆடம்பர வாழ்க்கைக்கு
தடையும் போடாது 
விட்டும் கொடுத்தேன்./

பெண்ணுக்கு நிகராக
சொத்தோடு என் ஒற்றை 
மகனையும் கொடுத்தேன் .
மருமகள் என்னும் பந்தத்தோடு 
மனை கொடுத்து 
தனிக்குடித்தனமும் வைத்தேன்./

அப்பன் பெயர் 
தெரியாத பிள்ளை போல் 
அரசு அடையாள அட்டை 
இல்லா பொம்மையாக 
வந்தவளுக்கு மகனின் 
பெயரை முத்திரையிட்டு 
அடையாள அட்டையோடு 
நடமாடவும் விட்டோம்./

தாய் வீட்டுச் சீர் 
இன்றி வந்தவளுக்கு 
 (21)ஆவது பிறந்த நாளையும் 
தாய்க்குத் தாயாக இருந்து 
என் உறவுகளோடு 
செய்தும் முடித்தேன்/

இன்னும் எத்தனை எத்தனை 
சுதந்திரம் கொடுத்தேன் 
இவளின் தங்கையையும் 
இணைத்துக் கொண்டாள் 
ஆசைப் பட்ட 
இடமெல்லாம் சென்றாள் 
கண்ட கடையெல்லாம் 
அழைத்துச் சென்று உண்டாள் 
என் பிள்ளை உழைப்பை 
உப்புக் கல்லாய் கரைத்து முடித்தாள்.

 இத்தோடு இவள் நிறுத்தி இருந்தாள் பெத்தவள் நான் இப்போது 
கலங்கி இருக்க மாட்டேன். 
உடன் பிறந்தவள் உடன்பிறப்பை 
இழந்து தவிர்ப்புக்குள்ளாக மாட்டாள்  
தூக்கி வளர்த்த உறவெல்லாம்  
கதறிக் கலங்கிட  மாட்டார்கள். 

வேலி தாண்டிட தடையாக 
இருந்த தாலியை 
அறுத்திட  நினைத்தாள் 
அவளின் போலிக் காதலின் 
முகத்திரையைக் கிழித்தாள்  

நம்பிக்கையின் தோல்வி 
கண்ட என் பிள்ளை 
கயிற்றுக்கு 
கழுத்தைக் கொடுத்து 
அவமானத்தில் இருந்து 
விடுதலை எடுத்தான்/

மொத்தமாய் பெற்ற மகனை 
அழித்து விட்டாள் 
கொத்தோடு குடும்பத்தை 
சோகத்தில் வீழ்த்தி விட்டாள் 
அவளைத் தாங்கிப் 
பிடித்தமைக்கு தலைமேல் 
இடியை இறக்கி விட்டாள் ./

நன்றி கெட்டவளுக்கு  
மறு பிறவியிலும் சரி 
இப் பிறவியிலும் சரி  
நல்ல வாழ்வும் 
கிடைக்கப் போவதில்லை
நல்ல சாவும் 
கிடைக்கப் போவதில்லை
இறைவன் நீதி 
உள்ளவனாய் இருந்தால் 
இவள் நாசமாய் போவாள் .

(இவளின் முகம் 
பார்த்து இனியும் யாரும் 
ஏமந்து விடாதீர்கள்  
கடைசியாக ஏமந்தது 
என் பிள்ளையாக இருக்கட்டும்😭😡)

Saturday 2 July 2022

அன்பு மகனே
***************
அன்பு மகனே நீ
ஆசை திறந்ததும் ஏனடா.
இவ்வுலகை விட்டு நீ
விரைந்து சென்றதும் ஏனடா 

ஈன்றவள்  என்னையும்
மறந்த காரணம் ஏதடா. 
ஈரம் வற்றாத எனது 
விழிகளைப் பாரடா. 

உள்ளம் உப்பாய்க்  கரைந்திடும் 
கதை தனைக் கேளடா.
அதன் உள்ளே உன் எண்ணம்
வைரக்கற்கலாய்  மின்னுவதும் உண்மையடா 

எத்தனை எத்தனையோ 
வழி தேடி விட்டேன் நானடா .
எந்த வழியிலும் உன்னை மறந்து
வாழ்ந்திட வழி தென்படவில்லையடா.

ஏதேதோ சொல்லிப் புலம்புகின்றேன் 
காண்போரிடமெல்லாம் தானடா. 
ஒவ்வொருத்தரும் சொல்லிடும் 
ஆறுதல் வார்த்தைகளும்
ஆழியாய் உன் நினைவலைகளை 
மீண்டும் என் நெஞ்சக்கரை நோக்கித் தள்ளுதடா.

ஐயோ அம்மா என்ன 
செய்திடுவேன்  சொல்லடா 
 பாவாளி ஆகிடுவேனோ நானும் 
என மனம் ஐயம் கொள்ளுதடா. 

ஓயாமல் கூக்குரல் எழுப்பி அழைக்கின்றேன் உன் பெயர் சொல்லியடா.
ஓடி வந்து  தங்கமே நீ  இன்னும்
பதில் கூறவில்லையடா. 

இளவட்டக் குரல் எல்லாம் 
உனது ஏக்கத்தை தூண்டிச் செல்லுதடா 
இதனாலே ஔடதம் தீர்க்கா 
நோயாளி ஆனேன் நானுமடா.

அன்பு மகனே இன்னும் எத்தனை எத்தனை  காலமடா 
நான் கண்ணீரைக் 
குத்தகை எடுத்திட வேண்டுமடா .
😭😭😭😭😭😭😭😭😭😭