உன்னை நீயே கேளும்
************************
ஓர் உயிர் 
சேகரித்த சொத்தில் 
எத்தனை உயிரின்
ஆசைகள் தீருகின்றனர்.
புகைச் சட்டிக்கு 
புற முதுகு காட்டி 
முன்னாடி பொன் மின்ன 
கண்ணாடி பார்த்து 
துள்ளுதாம் வெள்ளைத் 
தோல்களின் உள்ளம் .
கொள்ளை அடித்து விட்டு 
கொன்று விடுவது ஒரு ரகம்.
கொன்று விட்டுக் 
கொள்ளை அடிப்பது 
இன்னுமொரு ரகம்.
கொல்லக் கொடுத்து 
கொள்ளையடிப்பது 
வேறு ரகம்.
தன்னைத் தானே 
கொல்ல வைத்து 
உள்ளதையெல்லாம்  
வாரிச் சுருட்டுவது 
ராஜ தந்திரத்தின்  முதல் ரகம்.
இதில் நீ எந்த ரகம் 
என்று உன்னையே 
நீ கேளும்.
கணக்குப் போட்டு நேரம் 
பார்த்து காலம் குறித்து 
கச்சிதமாகக் காய் நகர்த்தி
காத்திருந்து குறி வைத்து 
உயிரைப் பறித்து  உயிலை எடுத்து 
ஊருக்குள் தங்க மங்கையாக 
ஜொலிப்பது ஒரு வழி. 
அது பேராசையில் பிறந்த வழி.
கிடைத்த வரைக்கும் லாபம்
என எண்ணம்  எடுத்து 
பிறர் பெற்ற பிள்ளையின்  
உழைப்பைக் கொண்டு 
உல்லாச வாழ்வினில் 
மிதப்பது மானத்தை 
தொலைத்து வாழும் வழி .
இப்போது 
உங்களது பயணம் 
எவ்வழியே என்று 
உன்னை நீயே கேளும்.
இன்னும்  சொல்லலாம் 
அள்ளிக் கொடுத்தவன் 
ஆட்டி வைத்திடுவான் 
என்னும் எண்ணத்தில் 
சொல்லாமல்  வார்த்தைகளை 
மெல்லுகின்றேன்   
எல்லாம் அவன் செயல்  என 
  
No comments:
Post a Comment