Thursday 28 February 2019

நெஞ்சம் விரும்பவில்லை

கூவி அழைத்தேன்
எதிர்க் குரல் கொடுக்கவில்லை /
கூட்டத்தில் சந்தித்தேன்
நேருக்கு நேர் பார்க்கவில்லை /

பசியோடு அமர்ந்திருந்தேன்
உணவு உண்ண அழைக்கவில்லை/
பழங்கதைகளை பேசி மகிழ்ந்தேன்
செவி கொடுத்துக் கேட்கவில்லை /

துன்பத்தில் விழுந்து துடித்தேன்
தோள் கொடுக்கவில்லை /
துயரத்தில் மாட்டித் துடித்தேன்
கரம் கொடுத்துக் காப்பாற்றவில்லை /

நோயில் சிக்குண்டு தவித்தேன்
ஆறுதல் வார்த்தை பிறக்கவில்லை /
நோவுற்ற மனசுக்கு ஒத்தனம்
போல் சொல் கிடைக்கவில்லை /

கவலை வழி மூடவும் இல்லை /
கண்ணீர்த்
துளிக்கு விடுதலையுமில்லை/
ஆத்மாவுக்கு எத்தனையோ தொல்லை/
அதனாலே மனசுக்கு நிம்மதியுமில்லை/

மோசம் ஒன்றும்
நான் பண்ணவில்லை/
நேசமதை
என்றென்றும் கொல்லவில்லை/

பாசத்தை பங்கிட்டேன்
நீ பகிர்ந்து கொள்ளவில்லை /
பாசனத்தை நான் கையில்
எடுத்தேன்  அருந்த முடியவில்லை /

வருந்தி தவித்தாலும் விசம்
அருந்தி மடிந்து உன்னை
மறக்க நெஞ்சம் விரும்பவில்லை /

  

Tuesday 26 February 2019

உயிரில் உறைந்திடும் நிலவே

குளிராக நுழைந்து /
குருதியுடன் கலந்து/
இறுதி சுவாசம் வரை இணைந்து /
இதயறைதனிலே அமர்ந்து/

பனிப் போல் உருக்கி/
கனியைப் போல் உரித்து/
நினைவலையை விரித்து/
நிழலோடு நிழலை இணைத்து/

நெஞ்சத்திலே மஞ்சம் விரித்து/
நித்தம் இதழ் முத்தம் பதித்து/
நெருங்கியே மூச்சால் எரித்து /
நித்திரையைக் களைத்து/

உடலெங்கும் உணர்ச்சித் தீ மூட்டி/
உள்ளூணர்வைத் தாக்கி/
மோக முத்தெடுத்து/
காமத் தட்டினிலே வைத்து/

ஆசைப் பூ(ப்)  பறித்து/
நேச மணி அடித்து /
அழகு சிலையாக  வந்து /
காதல் பூசை செய்து/

கனவுக்குள் காட்சி கொடுத்து/
கண்ணுக்குள் கலையாய் நின்று /
உள்ளத்தில் உதயமாகிய நீயே தான்/
என் உயிரில் உறைந்திடும் நிலவடி பெண்ணே/

Friday 22 February 2019

பூவே புயலாக மாறிடு

பெண்ணே எழுந்திடு /
பேதையே பயணத்தைத் தொடந்திடு /
நேர் வழியை தேர்ந்தெடு /
அதன் வழியே பயணித்திடு/

பெண் அடக்கம் பேணிடு/
தன்னடக்கம் காத்திடு/
நாவடக்கம் கொண்டிடு/
ஊக்கம் பெருக்கிடிடு/

விதையாக முளையிடு/
விழுதாய் எழுந்திடு/
விவேகம் வளர்த்திடு/
வீரம் கொண்டிடு/

பாரதிப் பெண்ணாய் மாறிடு/
பாரதி கண்ட
கனவை நினைவாக்கிடு/
தீப்பொறியாய் உருவெடுத்திடு/
தீய சொல் தொடுக்கும்
நாவை சுட்டெரித்திடு /

எதிரியை வென்றிடு /
துரோகியை அழித்திடு/
மரணத்தை ஏற்றிடு/
மரண வாசலிலும் சிரித்திடு/

Thursday 21 February 2019

தமிழ் மொழி வாழ்த்து

தமிழ் வாழ்த்துப்  பாடுவோர் எல்லாம்
தமிழை நேசிப்போரும் இல்லை/
தமிழ் வாழ்த்துப் போட மறுப்போர் எல்லாம் தமிழை வெறும் போரும் இல்லை /

தாய் தமிழ்  பேச வெட்கப் படுவோரும்
தாயை முதியோர் இல்லம் விடுவோரும்
தாயை தெய்வமாய் துதிப்போரும்
தாய்க்குப் பின் தாரம் என்போரும் /

கலந்தே உலாவும் உலகம் இது/
கலப்படமே இருப்பிடமான உலகம் இது/
கண்ட படி பிறரைத் தூத்தாமல் /
கண்ணா நீ போடு தமிழ் வாழ்த்தை நல்லா /

தமிழை நேசிப்போருக்காகவும் /
தமிழச்சி நான் என்பதாலும்/
தமிழையே பேசி மகிழ்பவள் என்பதாலும் /
தமிழுக்கு நிகர் தமிழே என்று கூறி 

வாழ்த்துப் பூக்களை தூவுகின்றேன்
தாய்த்  தமிழுக்கு ஆதி மொழிக்கு என்
இனிய வாழ்த்துகள் 🌹🌹🌹❤🙏

Wednesday 20 February 2019

நானாக நான் இல்லை

உன்னைத் தொட்டுச் செல்லும்
தென்றலைக் கேட்டுப்பார் என்
காதலைக் கூறும்..........\

நீ ரசித்துப் பார்க்கும்  மேகத்தைக்
கேட்டுப்பார் உன் மேல் உள்ள
மோகத்தைக் கூறும்........\

உன் தோட்டத்து மலர்களிடம்
பேச்சுக் கொடுத்துப்  பார்
என் பாசத்தை விளக்க மொழி இன்றி
மலரும் மௌனத்தால் தலை அசைக்கும் .\

இயற்கையைக் கேட்டுப்பார் 
அசைந்தே பதில் கூறும் என்
உள்ளே அலைமோதும் உன்
எண்ணத்தை...........\

உன்  அறைக் கண்ணாடியையும்
உன் ஆழ் மனதையும்
உன் விழியையும்  தனிமையில்
கேட்டுப்பார் என் அழகை அழகாவே கூறும் \

உன்  கன்னத்தைக் கேட்டுப் பார்
கனவில் நான் கொடுத்த முத்தத்தை
மெதுவாகச் சொல்லிச் சிரிக்கும்.......\

உன் மார்பைக் கேட்டுப் பார்
நான் சாய்ந்து கொள்ளத் துடிப்பதை
வெட்கப்பட்டு சொல்லி முடிக்கும்.....\

நிதானமாய் இக் கவிதையைப்
படித்துப் பார் உன் உருவத்தை
சிலை வடித்திருக்கும்..........\

உன்  தலையணையிடம் செவி
மடுத்துப்பார் அதன் இணை
என்னிடம் மாட்டி  படும் பாட்டை
சொல்லத் தவிக்கும்........\

உன் உள்ளத்தை நீயே கேட்டுப்பார்
கனவில்  நினைவில் உறக்கத்தில்
கற்பனையில்  நிழலாக என் உள்ளே
சிக்கி  தவிப்பது உன் பெயர்தான்
என்பதை உன் புத்திக்கு கொண்டு
உறைக்கும் படி உரைக்கும்........\

  

Monday 18 February 2019

என் பொன்ன மச்சானே

இயற்கைக் காட்டினிலே/
சல சலக்கும் ஓடையின் பக்கத்திலே/
உயர்ந்த மர நிழலின் கீழே/
குளிர்ந்த தென்றல் தடவும் வேளையிலே /

செயற்கை பாத்திரத்திலே/
கொதிக்கும் குழம்பிலே/
குதிக்கும் குளந்து மீனைப் போட்டு/
சுவையாக சமைத்து நான் தருவேன் /

உண்ட மயக்கம் தீர மலையருவியிலே/
மனம் வெறுக்கும் வரை குளிக்க
நான் விடுவேன்/
குட்டைக் கல்லில் நின்ற படியே
புகைப் படமும் எடுத்துக் கொள்ள
நானும் கூடவே இணைந்திடுவேன்/

கல்லோடு மோதி மலர் நீரில் விழுந்தோடையிலே /
காற்றுடன் நாத்து விளையாடையிலே
கரம் கோர்த்த படி நாம் பார்த்து
வியர்ந்திடவே வந்து
விடு என் பொன்ன மச்சானே/

    

முறிந்த காதல்

காதலினாலே இன்ப நீர்
கசிந்த விழிகள் /
தோல்வியின் நோவிலே
சிவந்து கானல்நீர் வடிக்கிறது/

அன்று காதல்
களிப்புற்ற உள்ளம் /
இன்று சோர்வுற்றுப் போகிறது /

காதல் மகிழ்வினிலே
கொழுத்த உடல் /
மெழுகாய் உருகி மடிகிறது/

காதல் கடலில்
குளித்த இதயம் /
சதியின் வலையில்
சிக்கித் துடிக்கிறது/

காதலோடு
பின்னிய நரம்பு /
காமத்தோடு
சண்டையிட்டு நொறுங்கியது/

ஆசை நீர்
கலந்தோடிய செங்குருதி /
வேகம் குறைந்து
குருதிப்புனலோடு தங்கியது/

காதலிலே சிக்கிய நெஞ்சம்/
கவலையென்னும் தீக்
குழம்பில் குதித்து எரிகிறது/

முத்தங்கள் பரிமாறிய
கன்னங்கள் /
கண்கள் வடிக்கும் உப்புத்
தண்ணீரிலே ஊறுகாயானது /

இறுதி மூச்சு இன்னும்
இருக்கின்றது /
அது முறிந்த காதலின்
முகவரி தேடியே அலைகின்றது /

  

Sunday 17 February 2019

மன்னிக்காது

தன் பிள்ளைக்கும் /
அடுத்தவன் பெற்ற பிள்ளைக்கும் /
வேற்றுமை தெரியாத நீயும் /
ஓர் தாய் தந்தையாகிடலாமோ?

ஈழத்து மண்ணுக்காக /
மார்பை உயர்த்தி போர் இட்ட /
வேங்கைகளின் நிழல் படத்தை /
மாட்டி எல்லைச் சாமிகளுக்கு
வீர வணக்கம் /

என்னும் வாக்கியத்தோடு /
அஞ்சலி கவிதைகள் /
அடடா இவைதான் உங்கள் /
நாட்டுப் பற்றோ ?

தன் நாட்டுக்காக உயிர்
கொடுத்தவர்களை /
அடையாளப் படுத்த முடியாத /
நீயெல்லாம் உரைக்கின்றாய்
ஜெய்ஹிந்த் என்று /

ஈழத்து மண்ணில் புதைக்கப்பட்ட/
வீரர்களின் முக வெட்டுக்கள் /
எத்தனை ஆண்டு கடந்தாலும்/
மறைக்கப் படவோ -
மறக்கப் படவோ மாட்டாது/

ஈழத் தமிழன் கொண்டது நேசமட /
ஈழமே அவர்களின் சுவாசமடா/
நேற்று இறந்தவைனை /
இன்று அடையாளம் தெரியாத
அளவு நகர்கின்றது /
உங்கள் தேச பக்தி அடக் கொடுமையே /

புகைப் படம் கிடைக்கா விட்டால் /
என்ன ?கண்ணீர் அஞ்சலியை /
நெஞ்சோடு இணைந்த சோகத்தை /
பதிவாகப் போடலாமே?

இன்னொருவன் அவனது  நாட்டுக்காய்/
அவனது இலட்சியத்துக்காய் /
அஞ்சாமல் போரிட்டு /
பலர் நெஞ்சிலே ஒளி விட்டு/
இன்றும் எரிமலையாய் குமுறும் /
அந்த வீரர்களின் புகைப்படங்களைப்
போட்டு /

உங்கள் நாட்டுக்காய் இறந்த/
வீரர்களை அவமதிக்கவோ /
அவமானப் படுத்தவோ செய்யாதீகள்/ அவர்கள் ஆத்மாவும் /
உங்களை மன்னிக்காது /
👎👎👎👎👎👎👎👎👎

(சிரிப்பு வருகிறது பலரின்
அஞ்சலி பதிவில் உலாவும் புகைப்படங்களைப் பார்க்கையிலே)

Saturday 16 February 2019

அகதி

அகதி என்னும் சொல்
இன்றுவரை தொடர்கின்றது/
ஆறு கடல் எங்கும் படகு மூழ்கின்றது /
அங்கும் பிணங்கள் மிதக்கின்றது/
எங்கும் ஆபத்து எப்போதும் ஆபத்து
என்றுமே காக்க நிரந்தரக் கரம்  இல்லை/

அல்லோலம்
கல்லோலம் குறையவில்லை /
ஆங்காங்கே  உயிர் இழப்பு மாறவில்லை/
பொன்னாசையை பெண்ணாசை வென்றது  /
அவ்வாசையை மண்ணாசை கொன்றது /

இயற்கைக்கும் எல்லை எதிர்ப்பு /
இரக்கம் அற்றவர்கள் போட்ட மறைப்பு/
அதி நவின வாகனங்கள் /
அதிவேகமாய் உயிரைக்
கொல்லும் ஆயுதங்கள் /

அறிவு இல்லாதோரால்
அமைதி இழந்தது தேசம் /
அகங்காரக்காரர்களின் தலை எடுப்பால் தங்கிட மறுக்கிறது நேசம்/
பாசங்கள் பாயாசமாய்
பரந்த உலகில் விரிந்து கிடக்கிறது/

கொலையைச் செய்து விட்டு  சிரிக்கான் /
குருதியிலே  உடல் நனையக் குளிக்கான் /
மனிதனை மனிதனே மிதிக்கான் /
உயிரைக் குடித்து தனக்கு மட்டு அனைத்தும் என்னும் சுயநலத்திலே குதிக்கான் /

கொடூரக் கொலைகளை புரிந்து/
ஈரக்குலையை நடுங்க வைத்து/
உள்ளூரிலும் அயல் நாட்டிலும் /
அகதி முகாம்களை அதிகரிக்க வைத்து/

உரிய பெயர் மாற்றப் பட்டு/ ஒட்டுமொத்தமாக அகதி என்னும்/
பெயரிலே அழைக்கப் பட்டு/
கம்பிக் கூண்டில் அடைக்கப் பட்டு /
கைதி போல் வாழ்க்கை வழங்கப் பட்டதே/

என்று மாறுமோ ????  இந்த நிலை/
அகதி என்னும் அவல நிலை  /
மனதினிலே எழும் ஏக்கங்களோ மலை/
விழியிலே தொடர் கண்ணீர் மழை/
இதற்குத் தீர்வு இல்லையோ ??  இறைவா/

Friday 15 February 2019

இணைத்துப் பிடி

ஒவ்வொரு கவிதையும்
உன்னை நினைத்து
ஒவ்வொரு  பாடலும்
உன் அழகை குறித்து
உலா வரும் வெண் மேகமாய் ....!

என்னை மறந்து மறந்து
உன் நினைவை விதைத்தேன்
என்  உள்ளம் காதல் கொண்டது
இல்லை அது அந்தக் காலம்
கால்கள் தரையில் இல்லை
இன்றைய இன்பக் கோலம் ....!

கவி வரிகளாலே
உன்னை அழைக்கின்றேன்
எந்தன் உயிரிலே
உன்னைக் கலக்கின்றேன்.

காலம் கனியாது கண்டு
கலங்கி முழிக்கிறேன்
நித்ததும் உன் முகத்திரையில்
விழிக்கிறேன் தூக்கம்
கலைக்கிறேன் துக்கம்  சுமக்கிறேன்
மழை சுமக்கும் மேகமாய் இருக்கின்றேன் ...!

தக்கம் பண்ண. தைரியம் இல்லை
தகுதியும் இல்லை
தகராறு பண்ணாது
நீ வா என்னிடம் காதல் வானிலே
கவிதை மேகமாய் அன்பே ....!

ஒத்தையடிப் பாதை தான்
ஒத்தையான பயணம் தான்
ஒத்துப்போக வேண்டும் என்று
ஒற்றுமையாக நான்
அழைக்கின்னேன் நின்று
சுற்றி வரும் பூமி பார்த்த வானமாய்
காற்றை தழுவும் முகிலாய் வா அன்பே....!

வெறுத்து நீ என்னை ஒதுக்காதே
மறந்து நீயும் ஒதுங்காதே உறவை
அறுத்து விட்டும் செல்லாதே பேச்சை நிறுத்தியும் என்னைக் கொல்லாதே....!

வெள்ளந்தி பிள்ளை நான்
உன் காதல் கண்ணை திறந்து
பார் உன் கருணை நெஞ்சினிலே
இடம் கொடு உன் கன்னியமான
வாழ்வோடு  என்னையும்
இணைத்து வாழ்ந்து முடி
வாழ்த்துவோரையும் தேடிக்
கண்டு பிடி  மறந்து விடாதே
என் கரங்களை   இணைத்துப் பிடி..!

வீர வணக்கம்

பதைக்கின்றது மனம் /
அங்கும் இங்கும் உலாவும்
பதிவுகளை நோக்கையிலே/
துடிக்கின்றது ஆத்மா உதிரம்
சிந்தி உயிர் அற்ற உடல்களின்
புகைப் படங்களைப் பார்க்கையிலே/

கக்கத்தான் சொல்லுகின்றது
மனம் விசமச் சொற்களை /
நாவடக்கம் செய்து விட்டேன் /
நோவு அடங்கவேயில்லை
இன்னும் நெஞ்சினிலே /

ஜெய்ஹிந்த் என்று வீர முழக்கமிட்டு/
பீரங்கி குண்டுகளை வேகமாய்
பறக்க விட்டு /
உடலுக்கு மரியாதை செய்தாலும்/
பிரிந்த உயிர் திரும்பிடுமோ?
இழந்த சொந்தம் எழுந்து வந்திடுமோ?

அக்கினிக் குச்சுகளை
அக்கினிக்கே இரையாக்கி விட்டு/
அடங்கிப் போகலாமோ?
பாரதி சொல் போலே
போர் தொடுக்க வேண்டுமடா /

பதற வச்சு கதற வச்சு/
கலங்க வச்சு நடுங்க வச்சு/
ஒடுங்க விட்டு ஓட்டம்
காட்ட வேண்டுமடா /

இரங்கல் தெரிவிப்பது பெரிதல்ல /
இறங்கி அடிக்க வேண்டுமடா/
இறந்தவன் ஆத்மாக்கு சாந்தி கிடைக்க அவைதான் நாம் செய்ய வேண்டுமடா/

தமிழா தலை நிமிரடா /
தொலையும் உரிமையை
துழாவித் தேடி வெல்லடா/
இறப்பு என்பது உறுதியே /
உரிமைக்காக உயிர்
கொடுப்பதில் பெருமையே /

உயிர் திறந்த
வீரர்களுக்கு வீரவணக்கம் 💪
அனைவரின் ஆத்மா சாந்திக்கு
இறைவனைப்  பிராத்திப்போம் 🙏😢

    

Wednesday 13 February 2019

என் உயிர் தோழியாய்

உன் குறுஞ்செய்தி /
எனக்கு ஒரு சீண்டலாக.
தோன்றியது /
உன் தொடர் உரையாடல் /
என் பணிக்கு இடையூறாக/
இருப்பது போல் எரிச்சல் மூட்டியது /

என்னைப்பற்றிய கற்பனையோடு /
நீ எழுதும் நெடுங் கவிதை எல்லாம்/ பெரும் தொல்லை போல்  /
எண்ணம்  தோன்றியது/

நான் ஆண் என்ற ஆணவம்
தலைக்கேறியது  /
சாதி மதம் பிரிக்கும் குணம்
தலை விரித்தாடியது /
பணம் படிப்பு என்ற கர்வம் /
என் நெஞ்சில் நிலைத்து நின்றது /

தாய்க்கு ஒரு மகன் என்ற
காரணத்தால் /
கலியாணக் கற்பனை
பெரும் அளவே /
இறகு அடித்துப் பறந்தது /

நீ வாழ்வு இளந்தவளாச்சே/
என்ற ஏளனம் எனக்குள்ளே படர்ந்தது /
உன் உணர்வான வார்த்தைகளையும் /
உணர்சியான கெஞ்சல்களையும் /
என் ஆண் மனம் திரை போட்டுத் தடுத்தது/

நீ தொடர்ந்து செய்தி அனுப்பினாய் /
விடாது அன்பு வளர்த்தாய் /
உன் மூச்சு நிறுத்தி பேச்சு மறந்து /
உன் உயிர் பூதவுடல் விட்டு /
பிரிந்து பூலோகம் மறந்து /
விண் உலகை அடையும் வரை
நிறுத்தாமல்/
என்னை அழைத்தாயே வெறுக்காமலே/ உன் உயிர்  திறந்தாயே (தேவி )

இப்போது என் இரு விழி
கலங்குகின்றது /
வெறுப்பு விருப்பாக மாறியது /
சாதி மதம் இவைகளைத் தாண்டி/ உன்னை மறுமணம் செய்ய/ சாதனைபோல் என் மனம் தேடுகிறது /

உன் விரல்களை தீண்ட
எண்ணம் எழுகிறது /
உன் செய்தியை எதிர் பார்க்கிறேன் /
உன் நிழல் படம் சேகரிக்கின்றேன் /
அதில் கள்ளம் இல்லாத உன்
புன்னகை கண்டு /
என் கல்லான நெஞ்சம்
புண்ணாகிவலிக்கிறது  இன்று. /

காலம் கடந்து வந்த காதல் /
கனவையும் தடுத்து /
கண்ணீரை வரமாகக் கொடுக்கின்றது/
உன் உடலையும் நெருப்பு
சொந்தமாக்கிய பின் /
உன் மேல் வந்தது விருப்பு  /
தவிக்கின்றேன் உன்னை
நெருங்கையடி /
என் உயிர்த் தோழியாய் வந்த காதலியே./

   

Tuesday 12 February 2019

அந்திமாலை


அந்திமாலை  வேளையிலே /
தொந்தி விநாயகர் சாலையிலே/
சந்திக்குச் சந்தி பார்க்கையிலே /
மந்தி மாமனார் வீட்டினிலே /
நந்தி நாதர் அழைப்பிதலே /
பந்தி பறிமாறும் விசேசத்திலே /

கந்திப் பாட்டிக்கு குந்திக் கொள்ள
இடம் கிடைக்கலையே /
விந்தியா சம்மந்தியை அழைத்து/
சிந்திய கண்ணீரோடு விவாதம் வைத்தாள் /
சாந்தி தலையிட்டு தீர்த்து விட்டாள் /

பந்தியிலே சாதம் முடிந்தது /
தொந்தி விநாயகர் தெருவிலே
பர பரப்பு மூட்டது /
மந்தி மாமானார் ஓரமாய் /
குந்திய படி தலையிலே கையை வத்தார் /😜

Monday 11 February 2019

ஒற்றுமையே பலம்

ஒற்றுமையாக வாழ்ந்திடு.

உரிமைக்குக் குரல் கொடுத்திடு.

உண்மையானவனாக நடந்திடு.

உயிர்களை மதித்திடு.

அறிவை வளர்த்திடு.

அறிவாலே உலகை  நீ அளந்திடு.

மனிதம் போற்றிடு.

மனிதனாக வாழ்ந்திடு.

ஊக்கம் எடுத்திடு.

ஆக்கம் பெருக்கிடு.

ஏக்கம் களைத்திடு.

எதிரியை விரட்டிடு.

இயற்கையைக் காத்திடு.

ஒற்றுமையே பலமெனக் காட்டிடு.

காலிக் குடத்துடன் காவந்து தானோ?

காலிக் குடம் தூக்கி
காவந்து செய்வானோ.?
காணி நிலம் இருக்கு
நீர் இல்லாத இடத்தில்
பயிரிட்ட விதையானேன்..../

நீர் இறைக்கக் கரம் உண்டு /
நீர் கிடைக்க இடம் இல்லையே../

கால் வலிக்க நடை போட்டும் /
காலிக் குடம் நிறம்பவில்லை...!/

நிறை குடம் சுமக்க என்
இடை காத்திருக்க /
ஏனோ அதன் ஏக்கம் /
தீரவும் வழி கிடைக்கவில்லையே./

காலிக் குடம் தூக்கி /
வேலி தாண்டி விட்டேன்  /.
ஓடை நீர் தேடி உறவுகளோடு
புறப்பட்டேன்../

வாடி விட்டேன்  /
வடித்துக் குடிக்கும் /
அளவும் நீர் கிட்டவில்லை./
காலிக் குடத்தோடு /
காவந்து தானோ காலம்
பூராவும்  இறைவா?.

     

காலைப்பொழுது

அடிவானம்  சிவக்க /
அந்த நொடியே ,
பறவை இறக்கை விரிக்க/
கல கலப்பு ஓசையோடு ,
என் இல்லமதைக் கடக்க /
படித்த நாள் ஏட்டை மடித்த படியே,
நான் பார்த்து வியக்க /
சொற்ப வேளையிலே ,
சொக்கித்தான் போனது என் மனம் /

காலைப் பனியோடு கலந்த காற்று /
மெது மெதுவாக வீசி /
ஆடை இல்லாத இடம் பார்த்து /
நுழைந்து என் மேனியைத் தடவி/
நழுவி விலகிடவே நானும் /
அதற்குள்ளே மூழ்கித்தான் போனேன்/

சுற்றி வர இருந்த
இல்லங்களில் இருந்து /
புறப்படும் ஒலிகள் /
காதுக்கு இனிமையையும் /
மனசுக்கு எரிச்சலையும் /
கலந்தே கொடுக்கின்றது /
அதட்டலோடு அன்னையின் குரல்/
தூக்கக்  களைப்போடு பிள்ளையின் குரல் /
வேடிக்கையும் வேதனையும்/
மனதில் கலந்தே பிறக்கும் /
வாழ்வை மனம் பின் நோக்கி இழுக்கும்/

காலைப் பொழுதைப் பற்றி
களைப்பு இன்றிக் கூறலாம் /
காலைக் கடமை எனக்கும் உண்டு/
காலைப் பணி நிறைந்தே உண்டு/
நெற்றியில் வந்து முட்டியது
நினைவலை கொண்டு /
மண்டு என்று என்னை நானே
திட்டிக் கொண்டு எழுந்து விட்டேன் /
கடமைகளை முடிக்கத் தொடங்கி விட்டேன் /

  

Saturday 9 February 2019

சொக்க வைத்த ராமா

இந்தப் பெண்ணின் மனம்
சொக்கிப் போச்சு/
என்ன சொக்குப் பொடி/
போட்டாயோ? ராமா ....அட ராமா.......\

இந்தக் கன்னி உள்ளம்
கெட்டுப் போச்சு/
கண்டபடி ராமா....அட ராமா......\
பிண்ணிப் புரண்டு இருக்கும்/
இரட்டை நாகம் போல் /
உன் வட்டமுகமும் என் விழிகளிலே/
உருளுகின்றதடா ராமா...அட  ராமா.......\

காற்று  நிறைப்பிய பலூண் போலே/
உன் ஆசை என் இதயத்தை
நிறப்பி விட்டதடா ராமா...அட ராமா.....\
கட்டி இழுக்கிறது கற்பனை கட்டில் வரை/
வெட்கம் விட்டு உன்னைக் கட்டி
அணைக்கவே ராமா....அட ராமா.......\

நீயும் குட்ட நொட்ட சொல்லாமல்/
கிட்ட வந்து விடு ராமா...அட ராமா......\
பட்டம் போல் என் திட்டமெல்லம்/
வட்டமிடும் வேளையிலே ராமா..அட ராமா\

படிக்கப்  பல பாடம் உண்டு /
நாமும் படிப் படியாகப் படிக்கலாமா?
ராமா....அட ராமா.....\
சொக்கத் தங்கமடா நான் /
தொட்டு எடுக்காத தங்கமடா
ராமா....அட ராமா......\

மல்லு வேட்டி நாட்டாமை மகனே ராமா/
உன் மேலே வந்து விட்டது
காதலடா ராமா........அட ராமா.....\
காடு நாடு ஆழ வேண்டாமடா/
ராமா நீ வந்து விடு என்னை
ஆளவே  ராமா.....அட  ராமா.....\

கனவில்  நீ  வந்தாயெடா ராமா /
மயங்கி நின்றேன் ஏக்கங்கலும்
தந்தாயெடா ராமா /
கலங்கி நிற்கின்றேனடா ராமா.அட  ராமா\

ராத்திரியில் நான் ராமா ராமா
என்று புலம்புவதைக்  கண்டு /
என்  தலையணையும் பொறுமை இழந்து/
நழுவி விட்டதடா இன்று ராமா..அடராமா...\

  

வானமே எல்லை

விதியை வென்றிடு /
பகைவனை திருத்திடு /
எதிரியை வரவேற்றிடு /
எதிர்ப்பதற்குத் துணிவை வளர்த்திடு /

துன்பத்தை மறந்திடு /
துயரத்தை மென்று விழுங்கிடு/
இன்பத்தை பகிர்ந்திடு /
சோகத்தை மறைத்திடு /

கூடிப் பேசும் போது சிரித்திடு /
தனிமையில் அமர்ரும் போது அழுதிடு /
முடிந்த நிகழ்வை மடித்திடு /
எதிர்கால எண்ணத்தை விரித்திடு /

ஊக்கத்தோடு எழுந்திடு /
ஊணம் உள்ள குணத்தை மாற்றிடு /
ஊர் பார்க்க உயர்ந்திடு /
உறவு போற்ற வாழ்ந்திடு /

வாய்ப்பை சிக்கனமாகப் பிடித்திடு /
தவறினால் முயற்சியைத் தொடந்திடு /
திருட்டை எதிர்த்திடு /
திருடுவோரை உமிழ்ந்திடு /

நாளை நமதே என்று போற்றிடு /
நாளும் பொழுதும் நன்மை புரிந்திடு /
அனுபவப் பாடம் கற்றிடு /
அதை அனுதினமும் நினைவில் வைத்திடு/

கண்ணியம் தவறாமல் வாழ்ந்திடு /
பெண்ணியம் காத்து மகிழ்ந்திடு /
மனிதம் மிக்க மனிதனாக உலாவிடு /மானிடர் மாறவாப் புகழோடு மறைந்திடு/
அவர்களது  மனதினிலே  நினைவுக் கோட்டை கட்டிடு /

 

Friday 8 February 2019

காந்தி தேசமே காவல் இல்லையா

காந்தி தேசமே காவல் இன்றி போனதே /
அகிம்சை போராட்டாம் புறம்பாகி போனதே /
புரட்சிப் படை வளர்ச்சி காணுதே /
நீதியெல்லாம் தரம் கெட்டுப் போனதே /
அநீதியெல்லாம் தரத்தோடு உலாவுதே /

உரிமையெல்லாம் பறிக்கப் படுகிறதே /உண்மையெல்லாம் மறைக்கப் படுகிறதே /
காவல் துறையும் கலங்கப்பட்டுப் போனதே /
ஊழல் ஓங்குகின்றதே /
உழவுத்  துறைக்குளும்  அவை  தங்கி விட்டதே /

காந்தி தேசம் நாசமாகி போனதே /
ஐயா கலாமின் ஆசையும் அசிங்கப்
பட்டுப் போனதே/
ஒற்றுமை இழந்து போனதே /
மதப் பிரிவு இனப் பிரிவு (பேய்) மண்டையிலே நின்று ஆடுதே /
சுதந்திர தேசம் கூவம் போல் நாறுதே /

துன்பங்கள் பரவுகின்றதே /
துயரங்கள் தொடர்கின்றதே /
ஏழைக்கு விடிவு இல்லமல் போனதே /
எடுத்துரைப்பவனின் உயிருக்கு உத்தரவாதம் இன்றி (ப்) போனாதே /

உத்தமன் எத்தனையோ ஆண்ட பூமி /
கூக்குரல்  ஓசையிலே சுற்றுகிறதே/
ஆட்சி தரம் கெட்டுப் போனதே /
காந்தி தேசத்தின் பெயரும் கெட்டு போனதே/

ஓடை நீர்

ஓடை நிறைந்து வாய்க்கால்
தழுவும் நீரைக் கண்டேன். /
ஓசை எழுப்பிய வண்ணம்
மலையேறி துள்ளுவதைக் கண்டேன்./
தடைகள் போட்டு மறைக்க
முடியாதவை நீர் என்றேன். /
தடையமே இல்லாது அழிவை நோக்கும் விவசாயத்தை எண்ணி நின்றேன்/

இரவு தூக்கத்திலும் மனத்தாக்கம் உணர்ந்தேன். /
இதயமது அதிகமாகவே
வலிக்கக் கண்டேன்./
தானம் கொடுக்கும் நதியை
கனவில் மட்டும் கண்டேன் ./
தாகம் தீர்க்க காத்திருந்த பூமி வறண்டு இருப்பதையும் நோக்குகின்றேன். /

வேதமும் வேற்றுமையும்
விவசாயத்தில் இல்லை என்றேன்./ வேதனையான செயல் நீர்
மறுப்பு என்று கூறி நின்றேன். /
நதியாகும் மழை நீருக்கு
தடை போட்டவன் மனிதன் தான்./
நட்ட மரங்களை எல்லாம்
வெட்டிய பாவியும்  நாம் தான். /

வானம் பார்த்த பசுமையை
இழந்தோம் என்றேன். /
வறட்சி  காணும் வண்ணம் நிலத்துக்குக் கொடுமை புரிந்தோரும் நாமே தான்  என்றேன். /
விவாதம் பண்ணுகின்றான்
என்னோடு புரியாத ஒருவன். /
விபரம்  அறிந்தவன் ஏற்றுக் கொண்டான்./ 😊