Tuesday 5 February 2019

ஆளுமை

ஆளுமை என்பது அழகான பெயர் /
அதில் ஆண் ஆதிக்கம் /
ஓங்கும் போதுதான் /
அழகு சிதைக்கப்படுகின்றது/

ஆற்றல் எங்கு உண்டோ ?
போற்றப்பட வேண்டும் /
அறியாமைத் தனத்தால் /
ஆற்றல் மிக்கவரை தூர்த்துவது /
மடையர்களின் செயலாகும் /

பிறக்கும் போது
உடையின்றிப் பிறந்தோம் /
என்பதற்காக யாவரும் உடை
உடுத்தாமல் வாழ்வதில்லை/
அரைகுறை உடையாவது /
உடை என்று ஒன்று உடலில் உண்டு /

இதிலே ஆண் பெண் பேதம்
இல்லாத போது /
எதற்காக. ?இன்னும் பெண்ணை
அடிமையாகவே
நடத்துகின்றது  இந்த உலகம் /
நூற்றில் ஒன்று இரண்டு தான் /
தெளிவான சிந்தனையில் /
மீதம் உள்ளவை தெளிவற்ற சாக்கடையில் /

முரட்டுத்தனமான செயல்களால் /
காட்டில் வாழும் மிருகத்தையே
மிஞ்சிய மனிதர்களால் /
பல வீட்டில் நிம்மதி தொலைக்கப் படுகிறது/
கண்ணீர் மழையில் பெண்கள் விழி மிதக்கின்றது/

படிக்காத ஒரு சில முட்டாள்களால்/
படித்தவனும் அடங்கிப் போகும் /
அவல நிலை உலகில் பல மூலையிலே/
விரல் இடுக்கில் பீடி பிடித்து/
விரும்பியவாறு மதுபானம் குடித்து/

பெற்றவர்களின் தோளுக்குப் பாரமாய்/வெட்டித்தனமாக வலம் வரும்/ வெட்டியானுங்களுக்குப் பயந்தே/
எட்டி நிற்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றனர் /
பட்டிக்காட்டுப் பாதையிலே/

குபிந்து கிடக்கிறது ஆதங்கம் /
கொட்டி தீர்க்க முடியவில்லை /
குட்டிக் குட்டி தீப்பொறி சொல் வந்து/
முட்டி முட்டி சுட்டுச் சுட்டுப் போவதால்/

  

No comments:

Post a Comment