Friday 30 November 2018

ஓம் நமசிவாய


மூவுலகையும் ஆளும்
முக் கண்ணணுக்கு
முதல் வணக்கம்......\

முக் கண்ணணுடன்
இணைந்தே உள்ள
தேவிக்கு இரண்டாவது
வணக்கம்............\

அன்னை மடி அமர்ந்த
செல்லப் பிள்ளையாருக்கு
மூன்றாவது வணக்கம்......\

பல குறும்பு காட்டி
குமரனாக காட்சி
தரும் தந்தை மகனுக்கு
நாங்காவது வணக்கம்.....\

வணக்கங்கள் கோடி
வந்தணங்கள்  பாடி
முத்தி அறியா வயதில்
நித்திலங்கள் போற்ற
வந்தேன் உன் பாதம் நாடி....\

சிவ  சிவ  சம்போ
சிவாய  நமஹ தில்லை
நடராஐனே விந்தைகள்
பல காட்டி வல்லமை
கொடுக்கும் வல்லவனே....\

கங்கையை சடையில் வைத்து
மங்கையை பாகம் வைத்து
மக்களைக் காக்கும் மகாபிரவே....\

வரம் என்ற அரக்கனுக்கு
வரம் கொடுத்து கூடவே
அவன் அகங்காரம் அழிக்க
வழியும் வகுக்கும் நீல
கண்டனே.......\

சிதறும் தீப்பிளம்பை
முக்கண்ணாகிய
முதல் கண்ணில் அடைக்கி
வைத்து புன்னகை மலர
அமர்ந்திருக்கும் கங்காதரரே....\

ஆணும் பெண்ணும் சமம்
என்று உலகுக்கு உணர்த்திய
ஆதி பகவானே........\

விந்தையான வனே
விகாரம் அழிப்பவனே
வித்தைகள் பல காட்டி
மந்தையானவனையும் காப்பவனே
ஓம் என்ற மந்திரத்திலும் சக்தியை
இறுக்கப்பிடித்து இல்லற இன்பத்தை
புரிய வைத்த வல்லவனே.....\

கோடான கோடி நமஸ்காரம்
முக்கண்ணா என் குறையைத்
தீரும்  ஓம் சக்தி  நமசிவாயா
சிவாய நமஹ    சிவாய ஓம்
ஓம் சாந்தி  சாந்தி  சாந்தி
இன்பமே சூழ்க எல்லோரும்
வாழ்க  நமச்சிவாயா........\

அன்பான காலை வணக்கங்கள்
அன்பு உறவுகள் அனைவருக்கும்.

  

காதல் செய் கள்வனே

நான்கு  விழி
நோக்கிய வேளையிலே /
மான் விழி வழியே என்
உயிர் நுழைந்தவனே /

இரவு தூக்கத்திலே
கனவோடு கலந்து வருபவனே /
கசங்காத என்  சேலை
கசங்கிட வேண்டுமடா சின்னவனே /

யானை சுவைக்காத
செங்கரும்பு உடலடா மன்னவனே /
நுகர்ந்தவாறே மலர் மீது
ஊரும் தேனீபோல் /
நுகர்ந்து சுவைத்திட
நீ வந்து விடு நாயகனே /

செவ்வாழை நானடா /
உன் கரம் கொண்டு /
மாலை மாத்தடா மாதவனே/
உள்ளமதை கொள்ளையிட்டு /
உணர்ச்சியை திறந்து விட்டே சேவகனே /

நித்தம் நான் முத்தமழையிலே/
குளிக்க வேண்டுமடா  /
யுத்தமின்றி காதல் செய் கள்வனே /

  

எதை தூதாக விட காதலனே


ஓடும் மேகத்தை தூது விடவா ?
தாங்கும் வானத்தை  தூது விடவா?
சிரித்து இருக்கும் நட்சத்திரத்தை  தூது விடவா?
விழித்திருக்கும் நிலவை தூது விடவா?
நான் உன்னை நேசிப்பதைக் கூறி விட...\

கொட்டும் மழையை தூது விடவா?
தூவும் பனியை தூது விடவா?
மின்னும் மின்னலை தூது விடவா?
இடிக்கும் இடியை தூது விடவா?
நான் உன்னை நேசிப்பதைக்  கூறி விட...\

வளர்ந்து நிற்கும் மரத்தைத் தூது விடவா?
அதில் கூடு கட்டும் காகத்தைத் தூது விடவா?
கூடவே வாழும் குயிலை தூது விடவா?
மரத்துடன் காதல் கொள்ளும் காற்றை தூது விடவா?
நான் உன்னை நேசிப்பதைக் கூறி விட....\

மலர்ந்த மலரை தூது விடவா?
அதை நாடி வந்த வண்டைத் தூது விடவா?
மறைந்தே இருக்கும் காய்யைத் தூது விடவா?
இனிமை கொடுக்கும் கனியைத் தூது விடவா?
நான் உன்னை நேசிப்பதைக்  கூறி விட..\

பழத்தை புசிக்க வரும் கிளியை தூது விடவா?
திருடி உண்ண வரும் வவ்வாலை தூது விடவா ?
கடித்து அழிக்க வரும் குரங்கை தூது விடவா?
ஊர்ந்தே திரியும் அணிலை தூது விடவா?
நான் உன்னை நேசிப்பதைக் கூறி விட...\

படரும் கொடி யை தூது விடவா?
தாங்கிப் பிடிக்கும் கிளை தூது விடவா?
உதிர்ந்த மலரை தூது விடவா?
மிதித்துச்செல்லும் பாதங்களை தூது விடவா?
நான் உன்னை நேசிப்பதைக்  கூறிவிட....\

காலைக்  கதிரவனைத் தூது விடவா?
அவன் முகம் பார்த்து மலரும் கமலத்தை தூது விடவா?
கூவும் சேவலை தூது விடவா?
கீச்சிடும் பறவைகளை தூது விடவா?
நான் உன்னை நேசிப்பதைக் கூறி விட.\

கட்டி அணைக்கும் தலையணையை தூது விடவா?
எனக்கு அழகு மெருகூட்டும் பொருட்களை தூதுவிடவா?
நித்தமும் முத்தம் கொடுக்கும் உன் புகைப்படத்தை தூது விடவா?
தினம் தினம் முகம் பார்க்கும் கண்ணாடியை தூது விடவா?
நான் உன்னை நேசிப்பதைக் கூறி விட...\

என் இதயத் துடிப்பை தூண்டியே தூது விடவா?
என் மனதின் தவிப்பையும் தூதுவிடவா?
விழியின் காத்திருப்புக்களையும் தூது விடவா?
என் இதழ் புன்னகையோடு தூது விடவா?
நான் உன்னை நேசிப்பதைக் கூறிவிட....\

என் புலம்பல் கேட்கும் அறையின் ஒளியை தூது விடவா?
தவறாமல் வரம் கேட்கும் அம்மனைத் தூது விடவா?
ஓயாமல் நான் இசைக்கும் காதல் கீதங்களை தூதாக விடவா?
ஒவ்வெரு நாளும் நான் அனுப்பும் குறுஞ்செய்தியும் தூதாகவே விடவா?
நான் உன்னை நேசிப்பதைக் கூறி விட.....\

இத்தனை தூதுகள் தேவையில்லையடா/
நான் உன்னிடம் கொண்ட உரிமையும்/
நான் காட்டும்  அன்பும்/
என் குறும்பு பேச்சுமே போதுமடா/
நான் உன்னை நேசிப்பதை நீ அறிந்துவிட /

சிங்காரச் சென்னைக்கு நீ சென்றாலும்/
பேசும் சித்திரமாய் நான் இருப்பதை/
நித்திரையிலும் மறவாதேடா....\

ஆர்  எஸ்  கலா(2014 ஆர்வமாய் ரசித்து எழுதிய கவிதை 😃)

Thursday 29 November 2018

வாழ்க்கை ஒரு போர்க்களம்

வாழ்க்கையே ஒரு போர்க்களம்/
வாழ்வாதாரத்துக்கு எத்தனையோ அமர்க்களம்./
அடிப்படை வாழ்வுக்கே திண்டாட்டம் /
தெருவுக்குத் தெரு கொட்டகையிலே தூக்கம் .../

பிச்சை பாத்திரம் ஏந்தும் .
மழலை முகம் பார்க்கையிலே.
மனதிலே எழுகிறது துக்ககளம் /
உடல் வருந்தி  உழைத்து தகுந்த
கூலி கை வசம் கிடைக்காத கூலிக்கு
தினமும் நடக்கிறது வறுமையோடு போர்க்களம் .../

வாழ்க்கை மாறலாம் /போர்க்களம்  மாறாது/
உலகம் உருளும் போதும் /
உலக மக்கள் திருந்துவதில்லை /
உயிர் பலி கொடுக்கின்றான் /
இருப்பதை அழிக்கின்றான் /
யுத்தகளம் அமுல் படுத்துகின்றான் /
அது இரத்த வெறி கொண்ட புத்தி மங்கியவனின் போர்க்களம் ..../

கசங்கிய துணியும் /
உடலோடு ஒட்டிய வயிறும் /
கலங்கிய விழியும் /
பாத அணியும் இன்றி /
தினம் தினம் உயிர் காக்க பசியோடு அலையவே /
அமைக்கின்றான் போர்க்களம்  /
பரம ஏழையாக மண்ணுலகில்
உரு எடுத்து விட்டோம் /
விண்ணுலகுக்கு ஆத்மா பறக்கும்
வரை /
மனித வாழ்வே ஒரு போர்க்களம் தான் .../

    

(ஏதோ ஒரு குழுமம் கொடுத்த தலைப்பு)

ஏலேலங் கிளியே

தென்னந் தோப்புக் கிளியே
செவ்வாழைக் கனியே
வந்தாடும் மயிலே
என் மாமன் வந்ததைக் கண்டாயோ ?
அவர் சென்ற பாதை கூறாயோ ...?

ரிங்காரமிடும் சில்வண்டே
தென்னங்கீற்றுடன் ச
ண்டையிடும் தென்றலே.
வாடைக்  காற்றே
அசைந்தாடும் நாற்றே
இசைத்த வாறே என் மாமன் வந்தாரே
அவர் சென்ற திசை கூறாயோ ....?

வெட்கம்  விட்டு சிரிக்கும் மல்லிகையே
தொட்டுவிட வட்டமிடும் பட்டாம்பூச்சியே
பச்சைப் புல்லே அதில் உறங்கும் பனியே
உதிக்கும் சூரியனே உதிர்ந்த சருகே
இத் தெருவழியே என் மாமன் வந்தாரோ?
விழி நிறைந்த நீர் குறைய ஓர் வழி கூறாயோ ...?

கட்டவண்டி பூட்டி பள்ளம் குழி நிறைந்த
பாதையிலே கடகடவென்று ஓட்டி என்
பட்டிக்காட்டு மாமன் வந்தாரே?
தேங்கி இருக்கும் நீரிலே குதித்து
விளையாடும் தவளையே குறுக்கே
போகையிலே மாமனைக் கண்டாயோ?
சுறுக்காகக் கூறி விடு விறுக்கு நடை
போட்டு நான் தேடிடவே ..../

காணக்கருங் குயிலே அவரை
இன்னும் காணக் கிடைக்கலையே
சோலை இளங் குயிலே சோடி
இன்னும் கிடைக்கலையே
பாடி அழைக்கும் சின்னக் குயிலே
நான் பாசம் வைத்தவர்
இன்னும் கிடைக்கலையே
மாந் தோப்பு ஆண் குயிலே நான்
மாசக் கணக்காய் ஆசை வச்ச
மாமன் இன்னும்  கிடைக்கலையே
ஏங்க வச்ச மாமன் இன்னும்  கிடைக்கலையே ...../

மருத நிலத்து மரிக் கொழுந்தே


மனம் நொந்து போச்சு மாமா.
மனசு எல்லாம் வலி நிறைஞ்சு போச்சு மாமா.
மருத நிலத்தில் கருகிய வேளாண்மை போல்.
மனசு எல்லாம் வெறுமையாச்சு மாமா .../

இந்த மரிக் கொழுந்து உள்ளத்திலே
இன்று தீப்பிளம்பாய் எரிகிறது மாமா
இறந்து விட நினைக்கையிலே
இறவாத  உன் நினைவு இறுக்கப்பிடிக்கிறது மாமா ..../

நெல் எடுக்க வந்து நெஞ்சை எடுத்துப் போனாயே மாமா.
கல் எறிந்த குளமாய் கலங்கி நிக்கிறேன் மாமா.
நில் என்று தடுக்க. முடியாத வாறு உள்ளேன் மாமா.
நல்லவன் என்று நினைத்தேன்
சொல் அறுத்துப் போனாயே மாமா...../

மரிக் கொழுந்து இதயம் நொறுங்கிப் போச்சு மாமா.
மறந்து விட்ட காரணத்தை நீ கூறி விடு மாமா.
வேர் ஓடும் மரவள்ளி போல் மோகம் உனைத் தேடுது மாமா.
மத்தவங்க பெத்தவங்க அறிந்து என்னைத் திட்டும் முன்னே வந்து மாலை மாற்று மாமா...../

Monday 26 November 2018

புரிதல் இல்லாத நரிகளுக்காக

நாதாரி பெத்தவனே
உன் தாயாரு உத்தமியோடா.
உன் தந்தை யார் என்று
கேட்டறிந்து கூறடா
மறவாமல் எத் தேசத்து  மைந்தன்
அவன் என்று சொல்லடா ....!

ஈழத்தின் சுடர் விளக்காய் 
அணையாத ஒளி விளக்காய்.
தமிழன் போற்றுவது
பிரபாகரனைத் தானடா ....!
விரால் இல்லாத குளத்துக்கு
குறட்டை மீன் அதிகாரி என்னும்  தோரணையோடா....!

நல்ல பாம்பு  ஆடிய இடத்தில்
நாக்குப்பூச்சி நீ வந்து நெளியாதேடா.
உருக்குலைந்து போய் விடுவாயெடா
நின்ற இடம் தெரியாமல் அழிந்து விடுவாயடா.....!

ஈழத்தமிழன் இதயத்தில்
எரிவது மெழுகு திரி இல்லையடா
விரைந்து அணைந்து விட
அது தீப் பிளம்படா
நின்று நீ  புலம்பி அதில் வெந்து
கருகாமல் கிளம்படா....!

மீண்டு வர வழி வேண்டும்

பட்ட வலி தான் கண்ட கோலம் தான்.
கொண்ட வேதனை தான் நெஞ்யினில்
தீப்பிழம்பாக எரியும் கொடுமை தான்.
மனம் பட படத்த தர்னங்கள் தான் 
கண்ட அனுபவம்  பெரியவை தான்
சிறு வயது முதல் உள் நாட்டிலே .........//////

இருந்தும் மனம் பதைக்கின்றது
என் மகனை இழந்து விட்டேன்
என் கணவரை கொன்று  விட்டனர்
என் அப்பாவை காணவில்லை
தங்கை  கண்ணை இழந்து விட்டாள்
பிறந்த  சிசு இறக்கும் நிலையில் கரங்களிலே என்று கதறும் போது...///

உடையைக் காணோம்  உறவைக் காணோம் என்று  கண்ணீரோடு  கொடுத்த பேட்டியை செய்தித் தாளில்  படிக்கும் போதும் புதிதாய்  பிறக்கின்றது மீண்டும் ஒரு வலி
இந்த உயிர்ப் பலிக்கு முடிவு  காண இன்னும் பிறக்க  வில்லையே ஒரு வழி ......../////

வரும் காலம் கழியுக காலம் என்று
கணித்து வைத்தான்  அன்று
கனியும் மனங்களை  மறைத்து
மனிதனை படைத்து  விட்டான்  இன்று ....//////

ஒன்றை ஒன்று அடித்து  வீழ்த்தி
இன்பம் காண்பது மனித இனம் தான்
என்று  பலராலும் (நம் )  நாவாலும்
கூறும் போது சுருக்கென  குத்துகின்றது ஊசி போன்று  நடு நெஞ்சினிலே ...../////

தினமும் நாள் இதழ்  புரட்டும் வேளையிலே
ஏதோ ஒரு பக்கத்தில்  இருக்கும் செய்தி பறிக்கின்றது  கண்ணீர்த் துளிகளை
விழியை வெறுத்து விடு  என்று கூறுகின்றது  அச்சடித்த ஒரு மொழி  வெறுக்க முடியாமல் கேள்விகளைத்  தொடுக்கின்றேன் நான் தமிழ்  மொழியில் மீள முடியா வலிகளுக்கு தேடுகின்றேன் மீண்டு வர புது வழி...........////

               

Friday 23 November 2018

வீரவணக்கம்

வீரவணக்கம் முழங்குகின்றது./
வீட்டுக்குள்ளேயும்.நாட்டுக்குள்ளேயும். /
வீரமரணம் தழுவிய. வேங்கைகளின்/ நினைவு கூர்ந்து /

புறப்பட்ட வேங்கைகள் /
அன்னியனிடம் சிறைப்படாமல் / ஈழமண்ணில் விதைக்கப்பட்டவை/
தமிழனுக்குப் பெருமையே /

அன்று கருவறை தாங்கி /
மார்பினிலே பிள்ளையை  ஏந்திய ஒருத்தி/
இன்று ஓர் கல்லறையிலே  /
தன் தலை முட்டி அழுகின்றாளே /
யார்  அவள் நாட்டுக்காக தன் மகளை/ விட்டுக் கொடுத்தாள் /
வேட்டையாடி வென்று வா மகளே /
என்று அந்த வீரத்தாய் தான் இவள் /

தாய் மண்ணை மீட்டெடுக்க./
தன் தாயின் சொல்லை தட்டி விட்டு /
தலை தெறிக்க ஓடிச் சென்ற /
எத்தனையோ  வேங்கைகளுக்கு /
ஈழ மண்ணில் கல்லறை கட்டப்பட்டு விட்டது /
நினைத்துப் பார்த்தால் உதிரம் கொதிக்கிறது. /
கல்லறையை நேரில் பார்க்கையிலே /
இதயம்  வெடிக்கிறது /

தாய்க்குத் தலை மகனாகப் பிறந்து /
விடுதலைக்குத் தோழனாக இணைந்து /
தலைவருக்கு துணை மகனாக வாழ்ந்து / வெற்றி ஒலி கேட்கும் முன்னே சதி போட்ட/
வழியால்  விதைக்கப் பட்டு விட்டாயெடா / கல்லறை என்னும்  முள்ளறையினிலே /

கார்த்திகை மாதமதை  ஈழத்தமிழரின் /
விழி நீர் தெளித்தே அழைக்கப் படுகிறது / வெளிச்சம்  இழந்த இருட்டு /
மாதமாகவே  நினைக்கப் படுகிறது /

காடு கரம்பு குளம் குட்டை கடந்து நடந்து/ தோள் கடுக்க கை வலிக்க ஆயுதங்கள் தூக்கி நடந்து ./
சோறு இன்றி தூக்கம் இன்றி /
உரிமைக்காக துணிந்து நின்று போரிட்டு/ செங்குருதியிலே குளித்தெழுந்து  /
வீர நடை போட்ட ஈழத்து வேங்கைகளே/ கல்லறையில் அடைக்கப்பட்டாலும்/ கண்மணிகளே நீங்கள் ஈழத்து /மண்ணின்  பொக்கிஷங்கள் /

மாண்டும் மாண்டு விடாத வீரர்களே /
மடிந்த பின்னும் மனதில் ஒலி
அடிக்கும் வேங்கைககளே /
நீங்கள் வீழ்த்தப்பட்ட கிளை இல்லை /
விதைக்கப்பட்ட விதைகளடா /

கல்லறையில் துயில் கொள்ளும்
போதும் /
பலர் எண்ணறையில் 
விழித்திருக்கும் தோழர்களே /
வீரவணக்கத்தை சமர்ப்பிக்கின்றோம் /
விழி நீர் பெருக்கெடுக்க /
கார்த்திகை மலர் தூவியவாறே ./
உறங்கடா நீ உதயமாகும் /
தமிழனுக்கும் நன் நாள்  ஓர் நாள் /

(வீரவணக்கம்)

Thursday 15 November 2018

வெடி

வெஞ்சினம் தகர்க்க
வேங்கை
வெந்தணல் விழிகள்
பொங்கித் தீர்த்தது
கண்டீர் வெடி/

தமிழ் சரண்

மனம் எங்கே பாசம் எங்கே

மனிதனே மனம் எங்கே பாசம் எங்கே?
மனிதம் இழந்த உலகிலே மறைந்து போனதோ எங்கோ?
மானம் கெட்ட மனிதர்களால் மாண்டு விட்டதோ பாசமடா ../

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
மனமே இல்லாத மானிடர்கள்
வாழ்க்கை நடத்தும் உலகமடா
தாய் பாசம் மறந்து சேயை குப்பைத்
தொட்டி சேர்க்கும் பெண்மை வாழும் நாடடா
எட்டு வயதுச் சிறுமியை கூண்டோடு
சேர்ந்து கெடுப்போர் பாசமாக
வேசம் போட்டு வாழும் அகிலமடா ..../

மனமோ கல்லாகப் போனதால்
பாச மலர் மலராமல் போனதடா
மனமும் குணமும் மனிதனிடம்
மாண்டு விட்டதால் பாசமும் நேசமும்
பிறக்கவில்லை அவனோடு கேளடா .../

பணத்திமிரிலும் ஆட்சி வெறியிலும்
போதையிலுய் பேதை மேல் மோகத்திலும் புரண்டால் மனமும் பாசமும் நிலைத்திடுமோ இங்கே கூறடா .../

மறைந்து * போனதடா *பசுமைக்கிராமம்

பறக்கும் விமானம் ஏறி /
பகட்டு வாழ்வைத்தேடி
சென்ற பின்னும் /
கிராமத்து மண்ணின் மகிமை/
பசு மாட்டின் பால் சுவை /
உறக்கத்தைக் களைக்கும் 
குயில்  ஓசை /
தூங்க விடாமல்  ஒலிக்கும் மணி ஓசை /
விட்டு விட்டுக் கூவும் சேவலின் குரல் /

தட்டித் தட்டி எழுப்பும்  அமாமாவின் தொல்லை/
திட்டிய வாறு அழைக்கும் தந்தையின்
கோபம் /
பொறுமை  இழந்து எழுந்து
வந்தவுடன் /
முறித்து எடுத்து பல் துளக்கும்
வேப்பங் குச்சி/
அன்றாடம்  நடக்கும் காலைக் காட்சி/
கிராமத்து வாழ்வை  மறக்க முடியுமா? மச்சே /

பாசத்தில் கொஞ்சம் /
அக்கறை உள்ளது போல் /
அப்பாவிடம் நடிப்பது கொஞ்சம் /
மாட்டுக்   கொட்டகைக்குள்/
சென்று மாடுகளை தடாவி  விட்டு /ஆட்டுக் குட்டியுடன் விளையாடி /
அப்பா வெளியேறி தலை மறையும்
வரை காத்திருந்து/
மட்டைப் பந்து விளையாட ஓடியதை/
மறக்க முடியுமாடா ? மாப்பிள்ளை/

தந்திரங்கள் பல செய்து /
பக்கத்துக் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு ;
திருவிழா பார்க்கப்  போய் /
தாவணிக் கண்ணுங்களுக்கு /
டாவடித்து செம்மையா வாங்கிய/
செய்தியை சொல்லிச் சொல்லி சிரித்தாளேடா நம்ம கருவாச்சி /
அவள் நினைப்பு இப்போது எங்கோ போச்சு./

சொந்தங்கள் ஒன்று கூடும் வேளை /
நம் கையில் கிடைத்த சில்லறையை
வைத்து/
கோலிக் குண்டு ஆடி சண்டை இட்ட/ கதையை எப்படிடா மறக்க முடியும்? மச்சான்/

தாத்தா கூறும் கதை கேட்பது போல் /
பாசாங்கு செய்து அவர் கையில் /
உள்ள மிட்டாயை எதிர் பார்த்து /
இருந்த மழலைப் பருவக் காலத்து  நினைவு /
மலை போல் அசையாமல் /
மனதில்  உள்ளதடா நண்பா./

பணம் தேடி பட்டணம் வந்த பின்னே /தவற விட்ட சொந்தங்களை /
பல நாள் எண்ணி கண்  தினமும் /
நீர் வடிக்கின்றதடா தோழா/

பல ஆண்டு சென்ற பின் /
இன்று சென்று பார்க்கையிலே /
பச்சை சோலையாக இருந்த/
வேளாண்மை மறைந்து  போன நிலம் / கண்டு நான் கலங்கி நின்றேனடா/

    இ,சாந்தா

புகைப்படம்  (ஆதவன்)

மீள் நினைவு  (இது எந்த ஊர் )

வீட்டிலும் நல் நெறி உண்டு

அன்பு நிறைந்த வீடு
ஊக்கம் கொடுக்கும் பாரு /
துன்பம் துறந்த வாழ்வு
முயற்சியைப் பெருக்கும் பாரு /

நல்லினக்கத்தைக் கூறும் வீடு
நல்லோரை மதிக்கும் பிள்ளை பாரு /
பங்கிட்டு உண்ணக் கற்றுக் கொடுக்கும்  வீடு /
எங்கும் அதனைத் தொடரும் பாரு /

பழங் கதை உலாவும் வீடு
பண்பாட்டைக் காக்கும் பாரு /
பல வகைக் குணம் கொண்டோர் வீடு
மன உளச்சலோடு வாழ்வதைப் பாரு /

மக்களைப் போற்றும் வீடு
மனசுக்கு மருத்துவமாய் மாறும் பாரு /
எளியோரை ஏழைகளை வரவேற்கும் வீடு
வீழ்ச்சி இன்றி எழில்சியோடு மேல் ஓங்கும் பாரு /

உன் வேகம் குண்றாதே என்னும்
தாரகை மந்திரம் ஒலிக்கும் வீடு /
உதாரணப் பொருளாய் நாவில்
உலாவும்  பாரு /

உழைத்து உண்ணும் வீடு
உழைப்பின் பெருமைக் கூறும் பாரு /
நிலை உயரும் போதும்
சீர்நெறியோடு வாழும் வீடு
நிலமை தடுமாறிய பின்னும்
நிலையான நற்பெயரோடு வாழும் பாரு /

  

Monday 12 November 2018

ஆருயிர் காதலியே

வெண்ணெய் எடுத்து/
நெய் உருக்கி ஒளி ஏற்றி /
கண்ணை அகல விரித்து  /
உனை நோக்கி ரசிக்கவா ? கண்ணே /

எள்ளு  எடுத்து /
செக்கு மாடு போட்டு  கடைய விட்டு/ அதிலே வாழைத் திரி போட்டு
எரிய விட்டு /
நீ வரும் வழியில் ஒளியோடு /
தவம் இருக்கவா ? பெண்ணே /

விளக்கெண்ணெய் நான்  எடுத்து / விழியை துளக்கி  விட்டு /
விடிய விடிய காவல் காத்து /
உன்னில் இணையவா ? மானே/

தேங்காய் எண்ணெய்யிலே /
நூல் திரி போட்டு /
ஐந்து முக குத்து விளக்கு  ஏற்றி /
தேவதை உன் அழகை/
நான் மட்டும் பார்க்கவா? என்  பார்வதமே /

இத்தனையும் தள்ளி  வைத்து விட்டு / பௌர்ணமி நிலா  ஒளியிலே /
அல்லி முக. அழகுடன் /
பால் வண்ண உடலயும் /
சேர்த்து பாவை மேனியாக /
நான் அள்ளி  அணைத்து மகிழவா ?
சொல்லு என் ஆருயிர் காதலியே /

மல்லிகைப்பூ மெத்தை இட்டு /
மாங்கனியை பக்கம் வைத்து/
பால் கிண்ணம் கையில் கொண்டு /
வரும்  உன்னை  இழுத்து /
செல்லமாய் கெஞ்சி மெல்லமாய் மிஞ்சி/
வெல்லமாய் உன்னை நினைத்து /
எறும்பு போல் மொய்த்து /சுவைக்கவா ?
என் செங்கரும்பே /

சளிக்காமல் நான் ருசிக்க /
மறுக்காமல் நீ பரிமாற /
நிறுத்தாமல் முத்தம்  பதிக்க /
தடுக்காமல் நீ எடுக்க /

நான் கொடுக்கின்றேன் ;
என் துணைக்குத்  துணையாக
தங்கத்தாலி/
மங்கை உன் கழுத்துக்கு /
குங்குமத் திலகமுமிட்டு / சொந்தாமாகவும் ஆக்கிரமித்து விட்டு  /
வைக்கின்றேன்டி கச்சேரி /
நீயும் பாரேன்டி என் பச்சரிசிப்  பல்லழகியே/

Friday 9 November 2018

உன்னால் ஒரு மயக்கம்


உன்னால் ஒரு மயக்கம் /
என்நாளும் ஒரு ஏக்கம் /
தன்னாலே எழுகிறது மனத்தாக்கம் /
உன்னைக் கண்டவுடன்அளவு
இல்லா வெட்கம் /
உள்ளதைச்  சொல்லி விடத் தயக்கம் /

சொல்லாமல் பெரும் துக்கம் /
மறைத்தே வாழ்வதால் நெஞ்சத்தில் ஏக்கம் /
உனது ஞாபகம் தினம் வந்து மோதுகிறது என் பக்கம் /
கரையும் ஆசை உள்ளே நடத்துகிறது தர்க்கம் /
கரங்கள் இணைந்தால் எனக்குச் சொர்க்கம் /

எதனால் வந்தது இந்த மாற்றம் /
எனக்குள்ளே எத்தனையோ மாயத் தோற்றம் /
விழி கொடுத்த ஏமாற்றம் /
காதலில் விழுந்தது இந்தச் சிற்பம் /

நெஞ்சத்தில் மஞ்சமிட்டு /
கற்பனையை வளரவிட்டு /
கஞ்சம் இன்றி முத்தம் சேர்த்து விட்டு /
அன்பு மொட்டை மலர விட்டு /
காம இறகை விரித்து விட்டு /
ஆசையோடு காத்திருக்காள்
உனக்காக ஒரு  சின்னச்  சிட்டு/