Friday 23 November 2018

வீரவணக்கம்

வீரவணக்கம் முழங்குகின்றது./
வீட்டுக்குள்ளேயும்.நாட்டுக்குள்ளேயும். /
வீரமரணம் தழுவிய. வேங்கைகளின்/ நினைவு கூர்ந்து /

புறப்பட்ட வேங்கைகள் /
அன்னியனிடம் சிறைப்படாமல் / ஈழமண்ணில் விதைக்கப்பட்டவை/
தமிழனுக்குப் பெருமையே /

அன்று கருவறை தாங்கி /
மார்பினிலே பிள்ளையை  ஏந்திய ஒருத்தி/
இன்று ஓர் கல்லறையிலே  /
தன் தலை முட்டி அழுகின்றாளே /
யார்  அவள் நாட்டுக்காக தன் மகளை/ விட்டுக் கொடுத்தாள் /
வேட்டையாடி வென்று வா மகளே /
என்று அந்த வீரத்தாய் தான் இவள் /

தாய் மண்ணை மீட்டெடுக்க./
தன் தாயின் சொல்லை தட்டி விட்டு /
தலை தெறிக்க ஓடிச் சென்ற /
எத்தனையோ  வேங்கைகளுக்கு /
ஈழ மண்ணில் கல்லறை கட்டப்பட்டு விட்டது /
நினைத்துப் பார்த்தால் உதிரம் கொதிக்கிறது. /
கல்லறையை நேரில் பார்க்கையிலே /
இதயம்  வெடிக்கிறது /

தாய்க்குத் தலை மகனாகப் பிறந்து /
விடுதலைக்குத் தோழனாக இணைந்து /
தலைவருக்கு துணை மகனாக வாழ்ந்து / வெற்றி ஒலி கேட்கும் முன்னே சதி போட்ட/
வழியால்  விதைக்கப் பட்டு விட்டாயெடா / கல்லறை என்னும்  முள்ளறையினிலே /

கார்த்திகை மாதமதை  ஈழத்தமிழரின் /
விழி நீர் தெளித்தே அழைக்கப் படுகிறது / வெளிச்சம்  இழந்த இருட்டு /
மாதமாகவே  நினைக்கப் படுகிறது /

காடு கரம்பு குளம் குட்டை கடந்து நடந்து/ தோள் கடுக்க கை வலிக்க ஆயுதங்கள் தூக்கி நடந்து ./
சோறு இன்றி தூக்கம் இன்றி /
உரிமைக்காக துணிந்து நின்று போரிட்டு/ செங்குருதியிலே குளித்தெழுந்து  /
வீர நடை போட்ட ஈழத்து வேங்கைகளே/ கல்லறையில் அடைக்கப்பட்டாலும்/ கண்மணிகளே நீங்கள் ஈழத்து /மண்ணின்  பொக்கிஷங்கள் /

மாண்டும் மாண்டு விடாத வீரர்களே /
மடிந்த பின்னும் மனதில் ஒலி
அடிக்கும் வேங்கைககளே /
நீங்கள் வீழ்த்தப்பட்ட கிளை இல்லை /
விதைக்கப்பட்ட விதைகளடா /

கல்லறையில் துயில் கொள்ளும்
போதும் /
பலர் எண்ணறையில் 
விழித்திருக்கும் தோழர்களே /
வீரவணக்கத்தை சமர்ப்பிக்கின்றோம் /
விழி நீர் பெருக்கெடுக்க /
கார்த்திகை மலர் தூவியவாறே ./
உறங்கடா நீ உதயமாகும் /
தமிழனுக்கும் நன் நாள்  ஓர் நாள் /

(வீரவணக்கம்)

No comments:

Post a Comment