Thursday 1 November 2018

மாற்றம் காணா ஏமாற்றம்

எத்தனை வண்ண மலர்கள் ஆனாலும்/
அதில் இருக்கும் தேன் /
வேற்றுமை காட்டுவது இல்லை/ இனிப்பைத்தான்  கொடுக்கின்றது/

ஆனால் ஒரே இனமான மனிதனிடம்/
நெருங்கிப் பழகும் போது தான்/
புரிகின்றது அவனின் விசமத்தனம்/
அவன்  கொட்டித் தீர்க்கும்/
கடும் வார்த்தை கண்டு  /
ஒரு அடி எட்டியே நிற்க வேண்டும் /

எட்டி நின்றாலும் விடுவது இல்லை/
இரக்கம் என்ற மனம் /
தவிக்கும் போது  நம்மை அழைக்கின்றான் /
தேவை முடிந்த பின்னே
வெறுக்கின்றான்/
மதி கெட்ட மாந்திரரிடம்/
விதி  விட்ட வழி என்று/
வாழ்கின்றனர் சில உறவுகள் இன்று/

பணம் காட்டும்
பகட்டுக்கு பந்தங்களை
இரையாய்க் கொடுக்கின்றான் /
சொகுசு வாழ்க்கைக்கு /
சொந்தத்தை ஒதுக்கியே வாழ்கின்றான்/ போதை என்னும் பாதையில்/

எத்தனையோ மதம் /
அத்தனை மதத்திலும்
உள்ள போதனைகளையும் /
தள்ளி வைத்து விட்டு /
அடவாடித் தனத்தையே கையில்
எடுக்கின்றான்./

பார்வைக்கு இத்தனை பேரும்/
மலர் போல் மனிதன்/
சில நாள் வாழும் மலருக்குள் /
உள்ள புனிதம் பல ஆண்டு
வாழும் மனிதனுக்குள்/
இல்லாமலே போய் விட்டவை புதினம் /

மாற்ற முடியாத ஏமாற்றம் இது/
உலகம் என்று ஒன்று
உருவான நாள் முதலாய்/
அரசன் இருந்து ஆண்டி வரை/
மிருகம் இருந்து மனிதன் வரை/
ஒன்றை ஒன்று அழித்தே /
வாழத் துடிக்கும் உலகம் இது/

தினமும் தடுக்க முடியாமல்/
பார்த்துக் கொண்டு இருக்கும்/
இறைவன் பொறுமை இழக்கும்  போது /
வருகின்றது இயற்கைப் பேரிடர்/
அழித்து அள்ளி வாரி எடுத்துப்
போகின்றது/

அதை மறந்து மீண்டும்/
பாம்பின் விசத்தை விட விசமாக மாறுகின்றான்/
மனிதன் வார்த்தையிலும்/
வாழ்க்கையிலும்/

திருந்தா ஜெம்மம்
திருந்தப் போவது இல்லை/
நாம் இறந்த பின்னும்/
இது நடக்கப் போவது இல்லை/
என்பதில் ஐயம் இல்லை/

No comments:

Post a Comment