Monday 26 November 2018

மீண்டு வர வழி வேண்டும்

பட்ட வலி தான் கண்ட கோலம் தான்.
கொண்ட வேதனை தான் நெஞ்யினில்
தீப்பிழம்பாக எரியும் கொடுமை தான்.
மனம் பட படத்த தர்னங்கள் தான் 
கண்ட அனுபவம்  பெரியவை தான்
சிறு வயது முதல் உள் நாட்டிலே .........//////

இருந்தும் மனம் பதைக்கின்றது
என் மகனை இழந்து விட்டேன்
என் கணவரை கொன்று  விட்டனர்
என் அப்பாவை காணவில்லை
தங்கை  கண்ணை இழந்து விட்டாள்
பிறந்த  சிசு இறக்கும் நிலையில் கரங்களிலே என்று கதறும் போது...///

உடையைக் காணோம்  உறவைக் காணோம் என்று  கண்ணீரோடு  கொடுத்த பேட்டியை செய்தித் தாளில்  படிக்கும் போதும் புதிதாய்  பிறக்கின்றது மீண்டும் ஒரு வலி
இந்த உயிர்ப் பலிக்கு முடிவு  காண இன்னும் பிறக்க  வில்லையே ஒரு வழி ......../////

வரும் காலம் கழியுக காலம் என்று
கணித்து வைத்தான்  அன்று
கனியும் மனங்களை  மறைத்து
மனிதனை படைத்து  விட்டான்  இன்று ....//////

ஒன்றை ஒன்று அடித்து  வீழ்த்தி
இன்பம் காண்பது மனித இனம் தான்
என்று  பலராலும் (நம் )  நாவாலும்
கூறும் போது சுருக்கென  குத்துகின்றது ஊசி போன்று  நடு நெஞ்சினிலே ...../////

தினமும் நாள் இதழ்  புரட்டும் வேளையிலே
ஏதோ ஒரு பக்கத்தில்  இருக்கும் செய்தி பறிக்கின்றது  கண்ணீர்த் துளிகளை
விழியை வெறுத்து விடு  என்று கூறுகின்றது  அச்சடித்த ஒரு மொழி  வெறுக்க முடியாமல் கேள்விகளைத்  தொடுக்கின்றேன் நான் தமிழ்  மொழியில் மீள முடியா வலிகளுக்கு தேடுகின்றேன் மீண்டு வர புது வழி...........////

               

No comments:

Post a Comment