Tuesday 6 November 2018

கோபக் கார கிளியே

கருமை வண்ணக் கண்ணனடி /
குயிலைப் போல் குரல் தானடி /
மௌனமாய் மொழி உரைக்கும் விழியடி/
காந்தம் போல் என் பார்வையடி /

கவர்ந்து விடும்  உடன்  உன்னையடி/
கணை தொடுக்கும் வேடனடி /
காடு அளர்ந்து வரும் வீரனடி /
காட்டாறு கடப்பேனடி/
காட்டு மல்லி நுகர்வேனடி /

பெண்மையை மதிப்பேனடி /
பெண்ணே உன்னை தினம் நினைப்பேனடி /
நாடாளும் அரசனடி /
நாட்டுக்கே நான் தான் மன்னனடி /
உமக்கு நான் காவலனடி /
உன்னைக் காதலிக்கும் காதலனடி /

எனது கட்டுடலைப் பாரடி /
அதனை அணைக்கப் போவதோ நீயடி /
வெட்டருவாள் நாவை அடக்கடி /
வெட்டுப் போல் சொல் எடுப்பதை நிறுத்தடி /

என் உள்ளம் தொட்டவள் நீயடி /
என் இல்லம் ஆளப்போவதும் நீயடி /
ஆந்தை போல் முழிக்காதேடி /
கூத்தாடி போல் குதிக்காதேடி /

பருந்து போல் பறக்காதேடி /
தோளுக்கு மாலையோடு வருவேனடி /
கோபக்காரக்  கிளியே கோடி சுகம் தருவேனடி /
நிலம் போல் உன்னை நெஞ்சில் விரும்பியே சுமப்பேனடி /

மலரைச் சுற்றும் வண்டாக உனையே தொடர்வேனடி /
முன்னாடி பின்னாடி உன்னோடு
உலாவும் காத்தாடி நான்தானடி /

 

No comments:

Post a Comment