Tuesday 6 November 2018

தீபாவளி வாழ்த்து


முற்றத்தில் வண்ணக் கோலமிட்டு /
பல தீப ஒளி அதில் ஏற்றி /
இல்லமெங்கும் அலங்கரித்து /
உள்ளமெல்லாம் மகிழ்வை நிறுத்தி /

பட்டாடை உடுத்தி  /
தமிழர் பண்பாட்டை நினைவுறுத்தி /
கரை வேட்டியிலே 
கலையாய் காட்சி கொடுத்து /
பட்டாசு வெடிகள் ஒளி ஒலி திறக்க /

குட்டீஸ்களின் விளையாட்டு 
ஓசையும் மேலோங்க /
குல தெய்வத்தின் வழிபாட்டோடு /
முதியோர் பாதம் தொட்டு 
ஆசீர்வாதம் பெற்ற பின்னே
குதுகலத்துக்கு  ஏது பஞ்சம் /

ஒன்று கூடும் உறவுகள் /
தேடி வரும் நட்புக்கள் /
சாதி மறந்த சந்தோசம் /
மதம் மறந்த மகிழ்ச்சி /
இனிப்போடு காரம் 
பகிர்ந்துண்டு  தொடரும் பேச்சு /

ஆனந்தம் அளவு கடந்து போகும் 
நாளாச்சு /
அந்த வேளை ஏழையின் 
முகத்தையும் பாரும் /
விருந்தோம்பல் நேரம் நாளு 
பேருக்குப் போடு சாதம் /
ஏழை மனதிலும் இன்பமது சேரும் /
துன்பமதை அன்றைய நிகழ்வு தீர்க்கும் /
உள்ளம் திறந்து வாழ்த்து /
இன்பத் தீபாவளியாய் மாற்று 

சேர்ந்துண்டு பகிர்ந்துண்டு 
கொடுத்துண்டு மகிழ்பவையில் தான்
தான் முழுமையான இன்பம்  உண்டு /

அனைவருக்கும் தீபத் திருநாள் 
நல் வாழ்த்துகள் 🙏🙏

No comments:

Post a Comment