Tuesday 6 November 2018

தீபத் திருநாள்

இருள்   நீக்கும்  ஒளி  விளக்கு
இறைவன்  ஆலயத்திலும்  ஒளி  விளக்கு
இல்லறம்  தொடங்கவும் ஒளி விளக்கு
இறந்த வீட்டிலும் ஒளி விளக்கு
இத்தனையும் மனிதனால் உருவாக்கிய
விடி  விளக்கு...!!!

இறைவனால்  வகுக்கப்பட்ட ஒரு விளக்கு
இறைவனை மறந்து மனிதனை துன்புறுத்திய
இரணியனை அழித்து நிம்மதி கொடுத்து
இன்பம்  கொண்டாடுங்கள்
இந்தத்  தீபாவளி  திருநாள்  விளக்கு....!!

இதயங்கள்  மகிழ்ந்து
இன்பங்கள் சூழ்ந்து
இணையாத உறவுகளும்
இன்று ஒன்றாக
இணைந்தே சந்தோசம் காணும்
விடிவிளக்கு...!!

இனிப்பு பகிர்ந்து  சலிப்பு மறந்து
இரவும் பகலும் உழைத்த ஏழையும்
இகழ்வான நிகழ்வுகள் நடக்க
இறைவனை வேண்டி வணங்கும்
இந்துக்களின் சொந்த விளக்கு
இந்த தீபாவளி  ஒளி விளக்கு...!!!

மறையட்டும் கவலைகள் பிறக்கட்டும் மகிழ்வு
ஏற்றட்டும் தீப ஒளி  கேட்கட்டும் சிரிப்பு ஒலி
தொடரட்டும்  சொந்தங்கள்  வரவு..!!!

==============================
முகநூல் நண்பர்கள்  உறவுகள்
சொந்த  பந்தங்கள்  அனைவருக்கும்
எனது இன்பத்தீபத்திருநாள்
நல் வாழ்த்துக்கள்.......♥♥♥♥♥

No comments:

Post a Comment