Thursday 29 November 2018

வாழ்க்கை ஒரு போர்க்களம்

வாழ்க்கையே ஒரு போர்க்களம்/
வாழ்வாதாரத்துக்கு எத்தனையோ அமர்க்களம்./
அடிப்படை வாழ்வுக்கே திண்டாட்டம் /
தெருவுக்குத் தெரு கொட்டகையிலே தூக்கம் .../

பிச்சை பாத்திரம் ஏந்தும் .
மழலை முகம் பார்க்கையிலே.
மனதிலே எழுகிறது துக்ககளம் /
உடல் வருந்தி  உழைத்து தகுந்த
கூலி கை வசம் கிடைக்காத கூலிக்கு
தினமும் நடக்கிறது வறுமையோடு போர்க்களம் .../

வாழ்க்கை மாறலாம் /போர்க்களம்  மாறாது/
உலகம் உருளும் போதும் /
உலக மக்கள் திருந்துவதில்லை /
உயிர் பலி கொடுக்கின்றான் /
இருப்பதை அழிக்கின்றான் /
யுத்தகளம் அமுல் படுத்துகின்றான் /
அது இரத்த வெறி கொண்ட புத்தி மங்கியவனின் போர்க்களம் ..../

கசங்கிய துணியும் /
உடலோடு ஒட்டிய வயிறும் /
கலங்கிய விழியும் /
பாத அணியும் இன்றி /
தினம் தினம் உயிர் காக்க பசியோடு அலையவே /
அமைக்கின்றான் போர்க்களம்  /
பரம ஏழையாக மண்ணுலகில்
உரு எடுத்து விட்டோம் /
விண்ணுலகுக்கு ஆத்மா பறக்கும்
வரை /
மனித வாழ்வே ஒரு போர்க்களம் தான் .../

    

(ஏதோ ஒரு குழுமம் கொடுத்த தலைப்பு)

No comments:

Post a Comment