Thursday 29 November 2018

ஏலேலங் கிளியே

தென்னந் தோப்புக் கிளியே
செவ்வாழைக் கனியே
வந்தாடும் மயிலே
என் மாமன் வந்ததைக் கண்டாயோ ?
அவர் சென்ற பாதை கூறாயோ ...?

ரிங்காரமிடும் சில்வண்டே
தென்னங்கீற்றுடன் ச
ண்டையிடும் தென்றலே.
வாடைக்  காற்றே
அசைந்தாடும் நாற்றே
இசைத்த வாறே என் மாமன் வந்தாரே
அவர் சென்ற திசை கூறாயோ ....?

வெட்கம்  விட்டு சிரிக்கும் மல்லிகையே
தொட்டுவிட வட்டமிடும் பட்டாம்பூச்சியே
பச்சைப் புல்லே அதில் உறங்கும் பனியே
உதிக்கும் சூரியனே உதிர்ந்த சருகே
இத் தெருவழியே என் மாமன் வந்தாரோ?
விழி நிறைந்த நீர் குறைய ஓர் வழி கூறாயோ ...?

கட்டவண்டி பூட்டி பள்ளம் குழி நிறைந்த
பாதையிலே கடகடவென்று ஓட்டி என்
பட்டிக்காட்டு மாமன் வந்தாரே?
தேங்கி இருக்கும் நீரிலே குதித்து
விளையாடும் தவளையே குறுக்கே
போகையிலே மாமனைக் கண்டாயோ?
சுறுக்காகக் கூறி விடு விறுக்கு நடை
போட்டு நான் தேடிடவே ..../

காணக்கருங் குயிலே அவரை
இன்னும் காணக் கிடைக்கலையே
சோலை இளங் குயிலே சோடி
இன்னும் கிடைக்கலையே
பாடி அழைக்கும் சின்னக் குயிலே
நான் பாசம் வைத்தவர்
இன்னும் கிடைக்கலையே
மாந் தோப்பு ஆண் குயிலே நான்
மாசக் கணக்காய் ஆசை வச்ச
மாமன் இன்னும்  கிடைக்கலையே
ஏங்க வச்ச மாமன் இன்னும்  கிடைக்கலையே ...../

No comments:

Post a Comment