Friday 28 August 2020

அத்தனையும் மாறும்

ஆட்சியும் மாறும் 
காட்சியும் மாறும்.
அரச பீடமும் மாறும்.

எதிரும் புதிருமாக 
இருந்தவர்கள்
இணைந்து நாடாளும் 
காலங்களும் மாறும்.

ஏறி மிதித்தவனும்
மிதி பட்டவனும்.
கையோடு கை குலுக்கி
தோளோடு தோள் தழுவி
பாராளுமன்றம் நுழையும் 
காலமும் மாறும்.

கண்டிப்போம் 
தண்டுப்போம் 
என்று நாக்கு வலித்திட 
வாக்குக் கொடுத்தோர்எல்லோரும் 
வாக்கு வழுக்கி சுயநலமாய் 
மாறும் காலமும் கூடும்.

மாற்றம் காணாமல் 
ஏற்றம் இல்லாமல்
தோற்றுப் போய்
இருளோடு இருளாக
மறைவோடு மறைவாக
வறுமை என்னும் ஓடத்திலே
துயரம் என்ற கண்ணீரிலே 
ஏழையின் வாழ்வு ஓடும்.


Thursday 27 August 2020

மரணத்திலும் மறவாது மனம்


படிப்போருக்கும் ரசிப்போருக்கும்
இவை கவிதை வரிகள்./
புரிந்தோருக்கு இவை ஏக்கத்தின்
வரிகள்./
அறிந்தோருக்கு இது சோக வரிகள்./
எனக்கு உண்மை வரிகள்./

உனக்கு மட்டும் இவை சொந்த வரிகள்./
வலிகளில் பிறந்த. வரிகள்./
விழிகளில் நீர் நிறைந்த வரிகள்./
வெகுளிப் பெண்ணை
சிக்கிப் பிடித்த கவலை வரிகள்./

உன் புன்னகைக்குள் புதையுண்ட ஆத்மாவின் வரிகள்./
உன் அகத்தின் உள்ளே குடி ஏற
நாடி வரும் ஜீவனின் வரிகள்./
இன்பத்தால சுடர் ஏற்ற நினைத்து
ஏமாற்றத்தால் இருண்டு இருக்கும்
இதயவரிகள்./

இருந்தும் உன்னை தேடி வரும் படி_வரிகள்./
உன் கரமே துணை  என ஓடி வரும் கொடி
வரிகள்.
நீர் இன்றி வாடும் செடி போல்
நீ இன்றி வாடும் என் வரிகள்./

உன் காந்தப் பார்வையில்
ஒட்டித் தவிக்கும் வரிகள்./
காலமெல்லாம் உன்னை 
சிக்கெனப் பிடிக்க நினைத்த வரிகள்./
உன் ஒவ்வொரு அசைவுகளையும் 
காவியம்  படைத்த  வரிகள்./

 

Tuesday 25 August 2020

வா விளையாடலாம்



நீயும் எழுந்து வா 
விளையாடலாம் பெண்ணே .
நீயும் ஒலிம்பிக் போட்டியில் 
தங்கம் வெல்லலாம் கண்ணே.
நீ அடுப்பங்கரை தான் அடைக்கலம்
என்று எண்ணலாமோ பெண்ணே.
நீ எடுக்கும் முயற்சி வெற்றி 
கொடுக்குமடி கண்ணே .

கட்டம் போட்ட விளையாட்டும் 
பல்லாங்குழியும் தான் பெண்ணின்
விளையாட்டு அல்ல பெண்ணே.
பலுத்தூக்கி உன் பலத்தைக் காட்டலாம் 
வா கண்ணே.
உமக்கும் வீட்டுக்கும் நாட்டுக்கும் 
பெருமை சேர்க்கும் விளையாட்டு 
எத்தனையோ உண்டு பெண்ணே.
உமக்கு நீயே வேலி இட்டு 
வாழாது விளையாட்டிலும் சாதனை 
புரியலாம்  வெளியே வா கண்ணே.

தரை தொடும் ஆடை தமிழர் பண்பாடு தான் 
அதற்காக தடை தாண்டி ஓட்டத்துக்குத் 
தடை போடலாமோ பெண்ணே.
வெள்ளி வென்றாலும்
வெங்களம் வென்றாலும் 
அது உமக்கான அடையாளச் சின்னமடி கண்ணே.
அதை அடைய வேண்டும் என்று விளையாடத்
துணிந்து வாயேன்டி கண்ணே ..

கரண்டி பிடிக்கும் கரம் விமானம்  ஓட்டுகிறது.
காப்பு போட்ட. கைகள் துப்பாக்கி  தூக்குகின்றது
கொலுசு போட்ட கால்கள் மட்டும் ஏன் 
தயங்க வேண்டுமடி பெண்ணே.
தைரியம் கொண்டு ஓடிடு 
வெற்றியைக்  கண்டிடு கண்ணே. 

விளையாட்டை விளையாட்டாக நினைக்காமல் 
விவரமாக அறிந்து புரிந்து சரிவரக் கற்று 
எதிரியை வென்று சாதனை புரிந்தால் 
நாளை உன் பெயரும் சரித்திரம் படைக்குமடி 
இதில் விசித்திரம்  இல்லையடி பெண்ணே.
சாதனைப் புத்தகத்திலும் (கின்னஸ்)
உனக்கு  என்று ஓர் இடம் காண்பாயெடி  
கண்ணே வா விளையாடலாம். 

     

தூக்கம் தவறிய இரவுகள்



விண்ணில் நிலவு மண்ணை 
நோக்கிய படி உலாவையிலே 
எண்ணற்ற மகிழ்வோடு
குடும்பமே திண்ணையிலே 
உறங்கும் வேளையிலே.....///

இரைச்சலோ சிறு விமானம் 
இறக்கியதே பல வெடிகள் 
இருண்டது இன்பம் எழுந்தது 
இறைவா என்னும் ஓலம்....///

சிதறியது குடும்பம் வாரிச் 
சுருட்டியபடி திசை அறியாமல் 
கால்கள் எடுத்தது ஓட்டம். 
காடு மேடு கடக்கையிலே 
இரவுத் தூக்கம் ஏது....///

கண்ணும் கருத்துமாக 
வளர்த்த பிள்ளை தவறிய 
பின் கண்ணில் உறக்கம் ஏது 
தவிப்போடும் துடிப்போடும் 
பயத்தோடும் ஓடும் போது 
தூக்கம் என்பது ஏது  தூக்கம் 
மறந்த இரவுகள் ஏராளம்.....///

பசியில் வதங்கியே 
வயிறும் குடலும் எரியும் 
போது தேடி வருமோ 
விழியில் தூக்கம்....///

     

காதல் செய் கள்வனே



நான்கு  விழி நோக்கிய வேளையிலே /
மான் விழி வழியே என் உயிர் நுழைந்தவனே /
இரவு தூக்கத்திலே கனவோடு கலந்து வருபவனே /
கசங்காத என்  சேலை கசங்கிட வேண்டுமடா சின்னவனே /
யானை சுவைக்காத செங்கரும்பு உடலடா மன்னவனே /
நுகர்ந்தவாறே மலர் மீது ஊரும் தேனி போல் /
நுகர்ந்து சுவைத்திட நீ வந்து விடு நாயகனே /
செவ்வாழை நானடா உன் கரம் கொண்டு மாலை மாத்தடா மாதவனே/
உள்ளமதை கொள்ளையிட்டு உணர்ச்சியை திறந்து விட்ட  சேவகனே /
நித்தம் நான் முத்தமழையிலே குளிக்க வேண்டுமடா/
யுத்தமின்றி காதல் செய் கள்வனே /

       

#நன்றிகள்  #நடுவர் #அவர்களுக்கு ❤🙏

Monday 17 August 2020

பொல்லாத சமூதாயம்

இனிக்க இனிக்கப் 
பேசுவோர் எல்லாம் 
இதயத்தில் நம்மை 
வைத்திருப்பதில்லை.

நெருங்கி நெருங்கி 
வருவோர் எல்லாம்
நெஞ்சத்தில் ஏற்றுவதில்லை.

முன்னும் பின்னும் 
பார்த்து விட்டு.
உதட்டோரம் 
புன்னகையை வீசி விட்டு.

முன்னாடி சென்ற பின்னே
பின்னாடி ஏதேதோ 
கதைகளைக் கட்டி விட்டு.

வஞ்சகம் சூது விதைப்பார்கள்.
காழ்புணர்ச்சி பொறாமை
வளர்ப்பார்கள்.

பில்லி சூனியம் வைப்பார்கள்.
ஏவல் பிசாசுகளை
அழைத்து விடுவார்கள்.

அடுத்தவன் வாழ்வின் 
மேல் அக்கறை 
கொள்வதாய் நடிப்பார்கள் .
நோட்டமிட்டு அந்தக் 
குடியைக் கெடுப்பார்கள்.

எதிரி எதிரே நிற்பான் 
துரோகி கூடவே நிற்பான் 
கூடியே நடப்பான்  
நம் வாழ்வுக்குக் குழி 
போட்டு முடிக்கும் 
வரை  விழிக்குள்ளே 
நம்மை வைத்திருப்பான் .😡


Friday 14 August 2020

தேர்தல்

ஓட்டுப் போட்டோர் எல்லோரும் கொக்கரிக்கவில்லை.
கொக்கரிப்போர் எல்லோரும்
ஓட்டுப்போட்டோரில்லை.

ரோட்டுக்கு வந்து 
கோசமிட்டோர் எல்லோரும் 
பணம் பெற்றவர்கள் இல்லை.
பணம் பெற்றுக் கொண்டோர் 
எல்லோரும் விசுவாசிகளும் இல்லை.

அரசியும் ஆட்சியும் ஐந்தாண்டு 
வளர்ந்து மலர்ந்து மடியும் கிளை.
அதைச் சொல்லிக் கொண்டு 
கொசுக்களே இடையில் நீங்கள்
கொடுக்காதீர்கள் 
மக்களுக்குப் பெரும் தொல்லை.

பொதுநலத்திற்காக மட்டும் தேர்தல்
 களம் குதிப்போர் எவரும் இல்லை.
இதில் சுயநலமும் தேனைப் 
போன்று கலந்து மணக்கும் மாலை.

இவகளைச்  சிந்திக்காமல் 
இங்கே எத்தனையோ பேர்கள்
 புலம்பலோடு பதிவுகளை
முகநூல் தலையில் 
கொட்டுவதை நிறுத்தவில்லை.

பதிவுகளில் சாதி மத 
வேற்றுமை வாடை வீசுகிறது 
ஆனாலும் உதட்டோரம் 
உறவு என்னும் சொல்  பிறக்கிறது 
இது ஒரு நாடக மேடை என்பதை 
நாம் உணர்ந்தால்  நன்மை.😏

  

Tuesday 11 August 2020

சோகப் பாடல்

#இது #ஓர் #அழகிய #காதல் #சோகப்பாடல் 
#ஆண் #குரலில் #ஒலிப்பவை #நான் #வார்த்தைகளை #மாற்றி #அமைத்துள்ளேன் #என்ன? 
#பாடல் #கண்டு #பிடியுங்கள் 😊

பொன்னையா
பொன்னையா 
உன்னை நினைச்சு 
இருந்தேன் பொன்னையா. 
உன்ன பார்க்காம பார்க்காம 
நீர் வடிக்கிறது கண் அய்யா  (பொன்னையா)

கண் இமையும் வெட்ட வெட்ட
அன்னை அவள் திட்டத் திட்ட 
கண் இமையும் வெட்ட வெட்ட
அன்னை அவள் திட்டத் திட்ட 
நான் பார்த்திருந்தேன் விடி
வெள்ளி தோணலை.....யே
பாதையை நோக்கி இருந்தேன் 
தேவன் நீ வரவில்லை....யே / (பொன்)

பாறையில கால் அடிச்சு 
விரலுக்கும் தான் வலிக்கலையே
ஓடைத்தண்ணீர் கூட எடுத்து
ஒரு முடர் தான் குடிக்கலையே 
கொவ்வைப் பழம் போல் 
கண் இரண்டும் நிறம் மாறி போனதையா  உன்னாலே என் மனசும் இப்போது
விரதம்  இருந்து தவிக்குதையா 
விழி ஊற்றிய நீர் மண்ணுக்குள் 
முத்தாகப் போனதையா 
நித்தம் நித்தம் உன் எண்ணம் 
நிழலாக தொடருதையா (பொன்னையா)
 

நடுக்கடலில் படகு போல 
ஏங்குதையா என் நெஞ்சம்
இருள் சூழ்ந்த என் வாழ்வை
நெருங்கிடுமோ ஓர் வெளிச்சம்.
நீரிலே கொழுத்தி போட்ட மெழுகாக 
மாறிப் போச்சு  எனது காதல் கத
குளத்து மீன் போல போச்சு ஏ...ன் வாழ்வு 

உறைபனியாய் 
போனதையா என் குருதி.
உதட்டோரம் கொடுத்து 
விடையா அன்பு முத்தம் 
நான் என்றென்றும் போடும் 
சத்தங்கள் விழவில்லையா
உன் காதில் மட்டும்.

பொன்னையா பொன்னையா
உன்னை நினைச்சி இருந்தேன் பொன்னையா.
உன்னை பார்க்காம பார்க்காம. நீர் வடிக்கிறது என் கண் அய்யா 
கண் இமையும் வெட்ட வெட்ட
அன்னை அவள் திட்டத் திட்ட
நான் பார்த்திருந்தேன் விடி
வெள்ளி தோணலையே......யே
பொன்னையா பொன்னையா உன்னை நினைச்சி இருந்தேன் பொன்னையா.....யா

   

மின் இதழ் வெளியீடு

தேத்தி விடு

#ஓவியக்கவிதை

வாடாத நெஞ்சம்
ஓடாகத் தேயும்.
மாண்டாலும் கூட
உனது நாமம் கூறும்.

உன்னைச் 
சேராத சொர்க்கம்
உமது 
கரங்களின் பக்கம்.

தீண்டிடாத உன் 
விரல்களைக் கண்டு
வெவ்வேறு  வினாக்களோடு
மனசுக்குள்ளே தர்க்கம். 

இது வெள்ளாடு 
திண்ணாத முல்லை.
உனக்காகவே மலர்ந்து
வளர்ந்திருக்கும் பிள்ளை.

இவள்  எத்தனையோ 
ஆடவர் கண்கள் 
தீண்டிய வெண்ணை.
ஆனாலும் கற்பு 
இழக்காப் பெண்மை.

ஒவ்வொரு 
சொற்களையும் 
கவிதைகளாக நிறுத்தி.
ஓயாமல் 
ஓலைச்சுவடில் கிறுக்கி.
உனக்காகவே அனுப்பி 
விடுகின்றாள்  ஓர் காதல் தந்தி.

கிழித்திடாமல் விரித்து
உதிராமல் படித்து
உதிரத்தில் பத்திரப் படுத்தி 
விரைந்து  தூது விட்டு விடு 
அவளது  ஏக்கங்களைத் தேத்தி.

(ஓவியருக்கு வாழ்த்துகள்)