Wednesday 30 January 2019

வாழ்வு என்னும் புதிர்

பாதை நோக்கி நடக்கையிலே/
நேருக்கு நேராக முகம் பார்த்தது/
விழி மெது மெதுவாக மொழி/
வழியே உரையாடல்  ஆரம்பித்து /

அவனுக்கும் அவளுக்கும் /
அறிமுகம்  அன்பாக மாறி/
அன்பு ஆழமானது /
அந்த ஆழ்கடலிலே காதல் /
படகு உருவானது /

உறவாக. உரிமையோடு /
மகிழ்வாக மணநாள்  கனவோடு
உலா வந்தது  /
எதிர் வீட்டுப் பெண்ணாள் /
இரு வீட்டுக்கும் செய்தி பறந்தது /

இறக்கை இல்லாமலே/
பறந்த செய்தி எரிச்சல்  மூட்டியது/
மாப்பிள்ளை  வீட்டிலே  பதட்டத்தையும்/
கண்ணீரையும் கூட்டியது  /

பெண்ணின் இல்லத்திலே  /
இரு வீட்டார் சந்திப்பு
நடுவராக நாட்டாமை /
விவாதம் ஆரம்பம்
விட்டுக்கொடுக்க வில்லை/ மாப்பிள்ளையின் அன்னை /

வெட்கம் விட்டுக் கெஞ்சினார்/
பெண்ணை பெற்ற தந்தை /விடாப்பிடியாக அவள் அள்ளுகிறாள்/ சீர்வரிசைகளை  வார்த்தையிலே/

மெது மெதுவாக மகனை/
தோளைப்பிடித்து தள்ளுகிறாள் /
நாட்டாமை எழுந்து விட்டார் /
எல்லாம் முடிந்து விட்டது/

அவன் அவளோடு இனிக்க இனிக்க/ பேசிய வார்த்தைகளும் /
இறுக்கி அணைத்த நாட்களும்/
மட்டும் அவள் மனதில் அமர்ந்து விட்டது/

நான்கு கண்ணும் நோக்கிய /
கடைசி நாள் அன்று முடிந்து விட்டது  /
அவள் விழி நிறைய நீர் கிறங்கி விட்டது / மொழி மறந்து இறகு உடைந்த
கிளியாக ஆனாள்  அவள்  /

சீர் கொடுக்க வழி இல்லை/
கூடி வரும் வயதை தடுக்க
இயல வில்லை  /
முதிர் கன்னியாய் இல்லத்திலே /
அந்த மங்கையின் வாழ்க்கை/
புரியாத புதிராக உள்ளத்திலே./
வாழ்வென்னும் புதிர் விடையறியா/
விதி அவளோ ஆனால் முதிர்கன்னியாய் ./


    

கள்வனே

கலையா ? நான் 
சிலையா? கள்வனே./
கலையாத கூந்தோலோடு
நிலையாக நின்று விட. /

என் மோகனப்
புன்னகை மறந்தேன்/.
மோதி விடும்
தென்றளிலும்
சூடு உணர்ந்தேன்./

விரல்களை அசைத்து
விரதமாக ஆடுகிறேன்./
விழிகளை விட்டு உன்
வரவைத் தேடுகிறேன்./

ராகமும் சுருதி மாறவில்லை. /
தாளமும் ஜதி தவறவில்லை. /
என் பாதம் மட்டும்
ஒரு நிலையில் இல்லை./

அரிதாரம் பூசி வந்தேன். /
குண்டுமல்லி சூடி நின்றேன். /
அழகு பதுமையாகக் காட்சி தந்தேன்./
ஆனாலும் என் கருவிழி 
இரண்டும் கலங்குதையா./

அதற்குக் காரணம் 
நீ  தான் என் கள்வனே./
உருகும் மெழுபோல்
இன்று நான் அரங்கினிலே /
தாங்கொன்னாத் என்
துரயத்தோடு கள்வனே/.

     

Tuesday 29 January 2019

நிறைவேறாத திட்டம்

தேர் ஓடுது தெவோரம்
சேர்ந்தே ஓடுது
திருவிழாவில்  கூட்டம்.......\

கார் ஓடுது தார் ரோட்டிலே
பின்னாடி துரத்தி ஓடுது
கரும் புகை மூட்டம்.........\

நீர் ஓடுது  ஓடையிலே
அதனுடன் சேர்ந்தே
ஓடுது துள்ளும் மீன்கள்
கூட்டம்..............\

நண்டு ஓடுது பொந்தை நாடி
பின்னாடியே பதுங்கி
ஓடுது நரிகள்கூட்டம்..........\

காற்று ஓடுது
தடையைப் பாராமல்
இடையில் மோதியே
ஆடுது
மரத்தோட்டம்...........\

கல்லுரி வாசலில்
பெண்கள் நடமாட்டம்
அதை நோட்டமிட்டே
சுத்துகின்றன
இளைஞர்கள்
கூட்டம்.................\

அவளின் வண்டுக் கண்
அவனைப் பார்த்ததுமே
அவன் உள்ளம் போட்டது
கொண்டாட்டம்................\

அவள் விட்டு விலகி
நின்றதுமே மனம்
காட்டியது வாட்டம்........\

சித்திரச் சோலையிலே
அவளின் மதி முகம்
பார்த்ததுமே நெஞ்சம்
காட்டியது ஒரு தடு
மாற்றம்.............\

அதை வெளியில்
காட்டாமலே துள்ளிக்
குதித்தான்
முயலாட்டம்..........\

அவள் விரல் சித்திரம் தீட்ட
உள் நெஞ்சில் பாராட்டு
பாடினான்
அருவியாட்டம்............\

காட்டிக் கொள்ளவும்
முடியவில்லை
கடந்து செல்லவும்
இயல வில்லை
ஆசையாமல்
நின்று விட்டான்
அடிச்சு ஏற்றிய
ஆணியாட்டம்.......\

வட்டம்  போட்டு வட்டம்
போட்டு திட்டம்
தீட்டியும்  நகர
வில்லை  கால்கள்
கல்லாட்டம்......../

தழுவும் கரங்கள்

கன்னித்தாய் காலமானாள்.
கன்னித்தமிழிலே காவியமானாள்.
தமிழரின் கண்ணீரிலே ஓவியமானாள்.
தமிழகத்தின் அன்னை அவள்... !

வங்கக்கடலின் தாலாட்டிலே உறங்குகிறாள்.
தங்கத்தமிழிலே முழக்கமிட்ட மங்கை அவள்.
எழுந்திடாமலே உறக்கத்தில் கலந்து விட்டாள்.
மக்களை ஆறாத் துயரத்தில் தள்ளி விட்டாள்..!

இரண்டு விரல்களையும் மடக்கி விட்டாள்.
இருண்ட குழிக்குள் இறங்கி விட்டாள்.
மக்களுக்காக நான் எனக்காக மக்கள்  என்றவள்.
மக்கள் கதறும் ஓசைக்குச் செவி சாய்க்காது படுத்து விட்டாள்...!

கற்பம் தாங்காமலே அன்னையானாள்.
நாட்டைக் கட்டிக்காக்கும் தலைவியானாள்.
இல்லற வாழ்விலே துறவியானாள்.
வெண்ணிற ஆடைக்கு விதிவிலக்கானாள் ...!

மண்ணறை இறங்கி கல்லறை கொண்டாள்.
அதற்கு முன் எண்ணற்ற சாதனை பூண்டாள்.
அஞ்சா நெஞ்சம் கொண்டவள்.
அடக்க ஓங்கும் கரங்களையும் வென்றாவள் /

சாதித்தவை  போதும் என்று சரிந்து விட்டாள் .
சாகவரம் பெற்ற புகழ்பெற்று மறைந்துவிட்டாள்.
வாய் விட்டு அழுதும் மார்பு தட்டி அழுதும் அவள்
மீண்டும் ஆட்சிப்பீடம் ஏற மறுத்து விட்டாள் .

காட்சிப்பிளம்பாக நிலைத்து விட்டாள்
புரட்சித் தலைவி   அவள்
ஓய்வு தேவையென்று ஓய்ந்து விட்டது
ஏழை மழலைகளைத் தழுவும்  கரங்கள் .

           

Monday 28 January 2019

கலைந்த கனவுகள்


என்ன சொல்வேன்
எந்த மொழியில் சொல்வேன்
என்னவருக்கும்
எனக்கும் இடையில் விழுந்த
விரிசலை...!!!!

விதையாய் வந்த ஆசை
காதலாய் வளர்ந்து
திருமணமாய்ப் பூத்து
நறுமணம் வீசும் வேளையிலே
விழுந்த விரிசலை நான் என்னவென்று
கூறுவேன் எப்படிக்கூறுவேன் ..!!!

வெள்ளை மனம் பிள்ளைக் குணம்
கொண்ட கள்ளம் இல்லாக் காவலந் தான்
என்னவன் சிலரின்  பெரு மூச்சியினால்
அடித்த புயலில் விழுந்ததே விரிசல்...!!!!

என்னை அறிந்த அவரும் அவரை
உணர்ந்த நானும் விரிசலின் இரு
பாதையிலும் நின்று தவிக்கும் கதை
யார் அறிவார் .....!!!!

முழுமதியாக என்னை ரசிப்பார்
முழுமையான இன்பம் கொடுத்தார்
முக்கனியும் உன் செவ்விதழ் போல்
இல்லையடி சுவை என்று குளிர்
மூட்டுவார் இன்று விரிசலினால்
தவிக்கவிட்டார்...!!!!!

இரு மனம் இணைந்த இல்லறத்தில்
இடையிலே வந்து விழுந்தது வறுமை
என்னும் நோய் அவையால் வந்த வினை
தான் விரிசல் ஆனது .!!!!

இந்நோயை வைத்தே அத்தை
வளர்க்க ஆரம்பித்தாள் வரதட்சணை
என்னும் விஷச் செடியை அதைப் பிடுங்கப்
பலம் இல்லாத் தந்தை மனம் இன்றி
அழைத்து வந்தார் என்னை தன்னுடன்..!!!

தாயா?  தாரமா?   என்று தடுமாறிய படி
என்னவர் கலங்கி நிற்கின்றார்
அங்கே...!!!!!

விரிவாக நான் உரைத்து விட்டேன்
எங்கள்  பிரிவின் காரணத்தை
என் எண்ணமே  அவர் தான்
பல கனவுகளோடு கரம் பற்றி
கலைந்த கனவுகளோடு
அன்னை இல்லத்தில்  வருந்திய
படியே   நான் .........!!!

               

தாயும் சேயும்

பாப்பா தட்டி சுட்ட பிட்டு /
தேங்காய்  சுரண்டி எடுத்த
சுரட்டை கொண்டு  சுட்ட பிட்டு/ 
ஈர மண்ணை தொட்டு எடுத்து
சுட்டாள் இரண்டு பிட்டு /

துட்டுக்கு கூவி விற்கின்றாள் /
அதை வாங்கும் படி அன்னையிடம்
அடம் பிடித்து நின்கின்றாள்  /
துட்டைக் கொடுத்து பெற்றுக்
கொண்டாள் அன்னை  /
அதை உண்டு சுவையைக்
கூறும் படி குதித்து அழுகிறாள் பாப்பா /

தன் மழலையின் அழுகையை
முடிவுக்குக் கொண்டு வரவே /
ஈர மண்ணை எடுத்து வாயிலே
போட்டாள் அன்னை /
ஈர மண்ணை விட தாய் உள்ளம்
ஈரமானது /
என்று அறியாத மழலை 
சிரித்து மகிழ்கின்றாள் /

அன்னையை  அணைத்து /
தோளிலே தொங்கி மகிழ்கின்றாள் /
அன்பு முந்தம் பதித்து  மகிழ்கின்றாள் / பாப்பா தன் பிட்டை தாய் உண்டது கண்டு /
பத்து மாதம் சுமந்த தாய் மனம் /
பூரிப்புக் கொள்கின்றது நின்று/

Saturday 26 January 2019

என் அத்தானே

தென்னங்கீற்றோடு
விளையாடும் தென்றலே/
செவ்வாழையைத்  தடவும் தென்றலே/
மாங்கிளையை மோதும் தென்றலே/
என் அத்தான் வரவுதனை உரைப்பாயோ?  அவரின் உடலின் திரவிய வாசனையைத்
திரட்டியே கொண்டு வந்து /

விண்ணிலே உலாவி மண்ணுலகம்
நோக்கும் வெண்நிலவே /
ஓர் இடத்தினிலே தங்காமல்
ஓடியே உலாவும் வெண் முகிலே/
கருக்கல் வேளையிலே /
கரும்புக் காட்டுக்குள்ளே/
சென்ற என் அத்தான் வரவை
விரைந்து வந்து உரைப்பீர்களோ  ?

காலையிலே என் இல்லம்
கடந்து சென்று /
மாலையிலே மீண்டும் பறந்து
வரும் மாடப்புறாவே /
நெடும் தூரம் சென்றீரோ?
நெடுஞ்சாலையோரம் மர
நிழலில் அமர்ந்தீரோ  ?
அங்கே  களத்து மேட்டிலே
என் அத்தானைக் கண்டீரோ  ?

அத்தான் வரவைக் கண்டறியவே/
கண்டீரோ ?கண்டீரோ ?என்று /
நான் கதறுகின்றேன் /
நின்று பதில் சொல்லாமல் /
அத்தனையும்  நகர்கின்றதே ?
எத்தனை ஏமாற்றம்  அத்தானே /
உனது  உத்தமிப்  பொண்டாட்டி
எனக்குத்தான் என்   அத்தானே / 😜

சாரதிப் பெண்ணாள்

குளத்து மீன்
போல் துள்ளுகிறாள் /
என் உள்ளக்
குளத்தினிலே நீந்துகிறாள் /
கிணற்றுத்தவளை போல் விளையாடுகிறாள் /
என் விழிக்
கிடங்கினிலே உலாவுகிறாள்/

சிரிப்பினாலே கொட்டும்
பனி போல் குளிர் மூட்டுகிறாள் /
காதல் நரம்புக்குத் தீ காட்டுகிறாள் /
வங்கக் கடலாக பொங்குகிறாள்/
எனது இதயக்
கரையைத் தாக்குகிறாள்/

உணர்வுமிக்க உரை நடத்துகிறாள் /
உடலுக்குள்ளே உணர்ச்சியைத் தூண்டுகிறாள் /
ஊர்வன
போல் நெஞ்சினிலே ஊர்கிறாள்/
ஊருக்குள் வினை தேடுகிறாள் /

சாரதிப் பெண்ணாள்  /
தன் கண்ணால் போதை ஏற்றுகிறாள்/ சரக்கடித்தவனைப் போல்
எனக்குள்  தடுமாற்றம் காட்டுகிறாள் /

    

Friday 25 January 2019

பிள்ளை வரம்

அன்னையைப் போல் தன்
அத்தையை நினைத்தால் /
மாற்று எண்ணம் தோனாது
மருமகப்  பொண்ணுக்கு /

மகனைக் கரம் பிடித்து வந்தவள் கருணையோடு நடந்தால் /
கருவறை கொடுத்தவளுக்கு முதியோர் இல்லத்தின் முகவரி கிடைக்காது /

கட்டியவளின் சொல்லுக்கு
கட்டுப் பட்டு தொட்டில்
இட்டவளை தள்ளி வைத்தால் /
நாளை கொள்ளி வைக்கவும்
உமக்கு பிள்ளை வரம் கிட்டாது/

Thursday 24 January 2019

தூது ஒன்று

ஏற்றத்திலே நீர் இறைத்து /
இளஞ்சூடாக்கி விட்டேன் /
முற்றத்திலே பாய் விரித்து/
முறுக்கோடு
தேனீரும் எடுத்து வைத்தேன் /

கலைந்த கூந்தலை சடையிட்டு /
வட்ட முகத்திலே பொட்டும் இட்டேன் /
கொட்டப்பாக்கும்
கொழுந்து வெத்தலையும் போட்டு /
இதழ் இரண்டையும் சிவக்க விட்டேன் /

மாமானின் வரவைக் காணோமே  ?
நேரமும் கடக்கிறது பொழுதும் மறைகிறது/
ஏதேதோ எண்ணி மனம் துடிக்கிறது /
யார் கொண்டு வருவார் தூது ஒன்று/

             

Tuesday 22 January 2019

வேம்பு சோலையிலே /
நடு ராத்திரி வேளையிலே /
அடுக்கு மல்லிப் பூ எடுத்து /
துடுப்பு இடுப்புக் காரி நீ அமர /
மஞ்சம் ஒன்று போடுவேன் /

தொட்டு இழுத்து கட்டி அணைத்து /
வட்ட நிலவோடு ஒப்பிட்டு /
செந்தமிழ் சொல் தொடுத்து /
கவி ஒன்று பாடுவேன் /

அண்டமெல்லாம் எட்டிப் பார்த்து /
அடுத்த நொடியே மேலே நோக்கி /
விண்ணிலே கொட்டிக் கிடக்கும் /
நட்சத்திரத்தைக் கொண்டு வந்து /
உன் கொண்டையிலே சூடுவேன் /

உனது அங்கமதை கொட்டும் /
பனி தொட்டு விடாமல் /
ஓடும் முகிலை விரட்டி விட்டு /
நீல வானில் ஓர் துண்டை வெட்டி
வந்து அங்கமெல்லாம் மூடுவேன் /

நுரையோடு கரை
தொடும் அலை போலே/
தினம் தினம் உனைத்
தழுவிடவே நெருங்கிடுவேன் /

இமை மூடி மூடித்
திறக்கும் விழிக்குள்ளே /
குட்டிக் குட்டிக் கனவை
கொண்டு வந்து நிறுத்திடுவேன் /

ஆசை வார்த்தை பேசிப் பேசி 
மோகத் தீயை மூட்டிடுவேன் /
அன்பு வார்த்தை வீசி வீசி /
அளவு  இன்றி இல்லையில்லா
ஆனத்தம் கொடுத்திடுவேன்/

பதினாறு வயது பருவ கேங்கையே/
(மங்கையே) உன்னை பருக வரும் /
அரும்பு மீசைக் காரன் நானடி/
என் காதல்  காவியமதைக் கேளடி/

 

Monday 21 January 2019

மன்மதரே

தக்காளி  தோட்டத்திலே
வைத்து சோக்காளி மகளே
என்று கன்னம் கிள்ளியவரே ..../

மல்லிகைத் தோட்டத்தில்
வைத்து மார்வுச் சேலை
நீக்கிடவே நெருங்கி வந்தவரே .../

மாந் தோப்பில்
மறைந்திருந்து
இழுத்து அணைத்தவரே .../

கரும்புத் தோப்பில்
வைத்து குறும்பு 
பண்ணிய சின்னவரே..../

வாழைத் தோப்பில்
வைத்து வாழ்க்கை 
கொடுப்பேன் என்று
சத்தியம்  செய்தவரே ../

வேம்பு நிழல் அமர்ந்து
வெட்கம்  திறந்து
என்ன என்னமோ
கதை  அளந்தவரே .../

கெண்டைமீன் கொண்டு வந்து
கண்ட படி கண்ணை மேய விட்டு
என்னைக் கடந்து செல்கையிலே காத்திருக்கின்றேன்
ஆற்றங்கரை ஓரத்திலே
எனக் கூறிச் சென்றவரே ..!

சாலை ஓரத்து பனை
மரத்தின் ஓரம் நின்று
சர சரப்பு இல்லாமல்
என்னை முன் பின் தொடர்ந்தவரே ....!

முன் இருட்டு வேளை
வந்து கொல்லைப்புரம் நின்று
கரடு முரடான பிடியோடு
என் கையைத் தொட்டு
கண்ணாடி  வளையல்களை
நொறுக்கிய மன்மதரே ..!

மருமகள்

மருமகள்  அவள் மறு மகள்
கண்ணால் ஈன்று  எடுக்கும்திருமகள் 
உறவு என்று உரிமையாக வரும் மகள்  உள்ளத்தில் பல கனவுகளை  சுமந்து இல்லத்தில் நுழைவாள் அவள்  ...!

பிறந்த வீட்டு உரிமையை இழந்து
புகுந்த வீட்டுக்கு வரும்  மணமகள் அவள்  பெற்ற அன்னையின்  கரம் விட்டு
தத்து அன்னையென அத்தையை
எண்ணி வரும் பெண் அவள் ....!

பாசத்தை பெரிதாக நினைத்து
பாதம் தூக்கி படி ஏறி வரும் மங்கை அவள்
மாமி மருமகள்  உறவு அன்னை பிள்ளை
போல் வளரும் வரை  இல்லத்தில் இன்பம் விளையாடும்  அமைதி நிழலாடும் 
இல் வாழ்வு  நல் வாழ்வாகும். ....!

மருமகளை மாற்றான்
விட்டுப் பிள்ளையாக மாமியாரும்
மாமியாரை  தனக்கு சுமையான
உறவாக மருமகளும்  நினைக்க ஆரம்பித்தால் அங்கே  பருத்தி  போல் வெடித்து சிதறி விடும் அத்தனை சந்தோஷமும்  .......!!

அதற்கு காரணம்  ஈட்டிக்குப்
போட்டியாக உரையாடுவது
விட்டுக்கொடுக்கா மனமும்
வேற்றுமை காட்டும் குணமும் 
தனக்கு மட்டும் அனைத்தும்
உரிமை என்ற தவறான கோட்பாடும்....!!

இவைகளை தட்டி விட்டால் 
மகன் வழி தொட்ட சொந்தம்
சொர்கத்தைக் கொடுக்கும்
பக்கத்து வீட்டுக் கண்ணுக்கும்
பொறாமை பிறக்கும் 
மாமி மருமகள் உறவுக்கு உதாரணமாக உங்கள்  பெயர் சிறக்கும் ......!

அன்னைக்கு நிகர் அத்தையும் 
தந்தைக்கு சமம் மாமனாரும்
என்று வரும் மருமகள் நினைத்தால்
எங்கும் பிறக்காது மாமி மருமகள்  சண்டை.
தெருவில் பறக்காது குடும்ப கௌரவம்.....!!

உள்ளத்தை தூய்மைப் படுத்து

ஊரை உலவு பார்ப்போர்
உள்ளத்தைத் தான் முதலில்
உழுவ வேண்டும் /  .ஏன்? எனில்
அங்கே தான் புல்லோடு
முள் செடியும் முளைத்திருக்கும் /
கூடவே விசக் கொடியும் படந்திருக்கும் /

உள்ளம் தூய்மையானால்  /
வெள்ளோட்டம் போல் பேச்சு இருக்கும் /
மனமோ கள்ளத் தோணி ஓட்ட மறுக்கும் /
உண்மை செழிப்புற்று மலர்ந்திருக்கும் /

சொல்லப் போனால் நல்லவைகளையே
நாடும் குணம் இருக்கும் /
அடுத்தவனை வேகு பார்க்கும்
எண்ணம் அறுக்கப் பட்டிருக்கும் /

ஆராய்ந்து பார்த்து இரு பக்க
நியாயம் பார்த்த பின்பே தான் /
தூற்றவோ போற்றவோ
புறப்படும்  புரிதல் விரிந்திருக்கும் /

தைப்பூசம்

இன்று முருகனுக்கு பெரும் விழாவாம் /
தெருவெங்கும் வெள்ளி ரதம் உலாவாம்/
கோலகலமான கொண்டாட்டமாம் /
கோலலம்பூரிலும் மக்கள் கூட்டமாம் /

போக்கு வரத்து பெரும் நெருசலாம் /
பாதை எங்கும் சிதறு தேங்காய்க் குபியலாம் /
வீதியெங்கும் அணிவகுக்கின்றது தண்ணீர்ப்  பந்தலாம் /
கையை நீட்டிப்  பெற்றுக் கொண்டால்
தட்டி விட்டு நுழைகின்றார்களாம்
மந்தை போல் மனிதர் கூட்டமாம் /

ஆறு முகனுக்கு பாலால் அபிசேகமாம் /
இவை தைப் பூசத் திரு நாள் விசேசமாம் /
படியேறி பாத யாத்திரைப் பயணமாம் /
பாலகன் முருகனிடம் பக்திப்பரவசத்துடன் 
வைக்கின்றனர் சிறு வேண்டு கோளாம் /

தைப் பூசத் திரு நாள் வாழ்த்துகள் ❤🙏

Sunday 20 January 2019

ஈர மனம்

பழமை காக்க
படையெடுக்கும் தமிழர்களே.
பழமைக்காக பல இடங்களில்
குரல் கொடுக்கும் மானிடர்களே. முன்னோர்கள் வழி வழியாக
கொண்டு வந்த விளையாட்டை
கை நழுவ விடமாட்டோம் .என்று கொந்தளிக்கும் இளைஞர்களே. ....!

மறவு காக்கப் பட வேண்டும்.
எழிச்சி பொங்க வேண்டும்.
என்று புரட்சி கரமான வசனம் .
உரைக்கும்  அன்றைய முதியோர் -வரை இன்றைய இளையோர்களே. ....!

சல்லிக்கட்டு  (ஜல்லிக்கட்டு)
நடத்த வேண்டும் என்று ஒட்டு மொத்த இந்தியாவும் கை கோர்த்து நின்று
இப்போது போராட்டத்தில்
குதித்தது கண்டு வருந்துகிறது
என் மனமும் ஏன்?  என்று அதைக்
கொஞ்சம் செவி சாய்த்துக் கேளுங்களேன்...!!

தமிழன் உணர்வில்
கலந்த ஓர் விளையாட்டு
வீரத்தைக் காட்ட மல்லுக் கட்டும்
ஒரு போட்டி வென்றால் புகழ் உண்டு பெருமை உண்டு
வென்றவருக்குச்  சன்மானம்  உண்டு
மதிப்பு உண்டு இவைகள் தானே உண்டு சரிதானே கூறுங்களேன். ...!!

அதை நான் குறை கூறவில்லை
என் கேள்வியே வேறு
இதற்காக ஒன்று கூடிய நீங்கள்
இரத்தமும் தசையுமாக உயிரோடு
உலாவிக் கொண்டு இருந்த
இலங்கை மக்களின் உயிர்
காக்க உங்கள் கரங்கள்
இணையவில்லையே ஏன்?
பதில் உரையுங்களேன்.....!!

தொப்புள் கொடி சொந்தம்
என்று கூறும் நீங்கள் 
அந்த தொப்புள் கொடி அறுந்து
உயிர் துடிக்கும் போது நீங்கள்  வெடிக்கவில்லையே 
வெடிப்பட்டு உயிர்கள் மடியும்
போதும்  வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த இந்திய அரசிடம் ஒன்று
கூடி சென்று ஏதாவது கோரிக்கை 
முன் வைத்தீர்களா கூறுங்களேன்.

ஏன் அப்போது கல்லுரி
மாணவர்கள் இல்லையா
பல்வேறு அமைப்புக்கள் இல்லையா
தைரியம் பிறக்கவில்லையா
இல்லை துணிச்சல் இருக்கவில்லையா இரத்தம் கொதிக்க வில்லையா
அன்று துடிப்பான இளையோர்கள்
தான் இல்லையா அனைத்தும் உண்டு இரக்கமான மனந்தான் இல்லாமல்
போனது இதை மறுக்கின்றீர்களா?

ஒரு சிலர் குரல் கொடுத்தார்கள்
அது அவர்கள் சுயநலத்துக்காக
அரசியல் வாழ்வை காப்பாற்றவும் கைப்பெற்றவும் ஒரு ஆயுதமாக
இலங்கை மக்களின் அவல
நிலமையைத் தங்களுக்கு
சாதகமாக்கிக் கொண்டார்கள்.
இதை உண்மை  என ஒப்புக்கொள்ளுங்களேன். ...!!

உங்களால் எங்கள் நாட்டையோ
இல்லை சுதந்திரத்தையோ
நிச்சயம் பெற்றுத் தர முடியாது
அதை நான் ஒப்புக் கொள்கின்றேன்
ஆனால் நீங்கள் ஒன்று கூடி நின்று
முயன்று இருந்தால் சுடுகாட்டுக்கு
சுமை குறைந்திருக்கும்
விதவை பெயர் பட்டியல்
சரிவு கண்டு இருக்கும்
இலங்கையிலும் ஆண் மக்கள்
கொஞ்சம் அதிகமாக
இப்போது இருந்திருப்பார்கள் 
தந்தையை இழந்து வாழும்
மழலைகளுக்கு தந்தையோடுவாழும்  பாக்கியம்   ஒரு சிலருக்காவது கிடைத்திருக்கும்  என் கருத்து தவறா கூறுங்களேன்.....!!!

எத்தனை பெண்கள் இளம் வயதிலே கணவனை இழந்து இன்ப
துன்பங்களை இழந்து வீடு வாசல் இழந்து சமுதாயத்தில் ஒதுக்கப்பட்ட பாவிகளாக ஏக்கத்தோடும் வேதனையோடும்
வலிகளை நெஞ்சில் சுமந்த படி
கண்ணீர் சிந்தினாலும் போலியான புன்னகையோடு எத்தனை எத்தனை பெண்கள் இலங்கையில்
நடமாடுகின்றார்கள் இதை
எண்ணிப் பாத்தீர்களா .?

வேதனையை சொல்ல
ஒரு உறவு இல்லை
ஆறுதல் கூற ஒரு நண்பன் இல்லை
நல்ல நாள் பெரு நாளுக்கு
அழைப்பில்லை எத்தனையோ
அவலங்களை சுமந்து கொண்டு
வாழும் ஈழத்துப் பெண்களுக்காக
ஒரு நாள் இது போன்று ஒன்று திரண்டீர்களா?

இன்னும் சொல்லப் போனால் 
இலங்கை  அரசால் மட்டும்
ஈழத்துப் பெண்கள் கொடுமையை அனுபவிக்கவில்லை
வேலியே பயிரை மேய்வது போல் உதவுவதாக கூறி இலங்கைக்குள்
நுழைந்த இந்திய இரானுவத்தால்
தான் பல பெண்கள் கற்போடு சேர்த்து கணவனையும் பறி கொடுத்தார்கள் .

ஆனால் அதை எல்லாம்
ஒரு ஓரமாக வைத்து விட்டு
இன்று உங்களோடு இணைந்து
இந்தியன் என்று இல்லை தமிழன்
என்று தமிழ்  கலாச்சாரத்தை மீட்கவே
தமிழனோடு தமிழனாக குரல் கொடுக்கின்றார்களே
அதுதான் ஈழத்து மக்கள்
தாய் ஒதுக்கினாலும் சேய்
ஒதுங்கவில்லை
என்றும் ஈரம் உள்ள இதயம்
தான் ஈழத்து தமிழனின் இதயம்.

         

Monday 14 January 2019

வாழ்த்து

பாலோடு அருசி போட்டாச்சு /
பயறுடன் பேரீச்சையைக் கொட்டியாச்சு/ சக்கரையோடு ஏலக்காயும் கலந்தாச்சு /
அகப்பை கொண்டு துலாவியாச்சு /

அடுத்த வீட்டில்  தலைவாழையிலை
எடுத்து மூடியாச்சு/
சாதி மதம் பாராமல் அத்தனை பொருட்களையும் வாங்கி வந்து
ஒன்றாகக் கலந்தாச்சு /
சக்கரைப் பொங்கல் தயாராச்சு /

இனிப்புண்டு விவசாயியையும்
நினைவில் கொண்டு /
மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு/
பொங்கலை பங்கிட்டு  உண்டு /
மனிதனே நீ வாழ்ந்திடு / (உன் )
மனதினிலே மனிதம் நிலை கொண்டு /

அனைவருக்கும்  இனிய
பொங்கல் திரு நாள் நல்
வாழ்த்துகள் 😊❤❤🌹🌹🌹🌹

    

போகிப் பண்டிகை

போகிப்பண்டிகை  போயாச்சு /
எரித்த பொருள் எல்லாம் வீனாச்சு/
எறிந்த பொருட்கள் எல்லாம் என்னாச்சு  ?
இல்லாத ஏழைகள்  அபகரித்தாச்சு /

உள்ளத்துக் குப்பைகளை /
அகற்றவே போகி வந்தாச்சு /
இல்லத்து பொருட்களிலே
நாம்  அதைத் தினிச்சாச்சு /
உள்ளத்துத்  தூய்மையை மறந்தாச்சு /

பழமை விரோதம் மறந்து
புதிய சண்டை மறந்து
நாளைய நாளை நன்நாளாய் 
வரவேற்கவே போகி என்னும்
பண்டிகை  உருவாச்சு /