Sunday 20 January 2019

ஈர மனம்

பழமை காக்க
படையெடுக்கும் தமிழர்களே.
பழமைக்காக பல இடங்களில்
குரல் கொடுக்கும் மானிடர்களே. முன்னோர்கள் வழி வழியாக
கொண்டு வந்த விளையாட்டை
கை நழுவ விடமாட்டோம் .என்று கொந்தளிக்கும் இளைஞர்களே. ....!

மறவு காக்கப் பட வேண்டும்.
எழிச்சி பொங்க வேண்டும்.
என்று புரட்சி கரமான வசனம் .
உரைக்கும்  அன்றைய முதியோர் -வரை இன்றைய இளையோர்களே. ....!

சல்லிக்கட்டு  (ஜல்லிக்கட்டு)
நடத்த வேண்டும் என்று ஒட்டு மொத்த இந்தியாவும் கை கோர்த்து நின்று
இப்போது போராட்டத்தில்
குதித்தது கண்டு வருந்துகிறது
என் மனமும் ஏன்?  என்று அதைக்
கொஞ்சம் செவி சாய்த்துக் கேளுங்களேன்...!!

தமிழன் உணர்வில்
கலந்த ஓர் விளையாட்டு
வீரத்தைக் காட்ட மல்லுக் கட்டும்
ஒரு போட்டி வென்றால் புகழ் உண்டு பெருமை உண்டு
வென்றவருக்குச்  சன்மானம்  உண்டு
மதிப்பு உண்டு இவைகள் தானே உண்டு சரிதானே கூறுங்களேன். ...!!

அதை நான் குறை கூறவில்லை
என் கேள்வியே வேறு
இதற்காக ஒன்று கூடிய நீங்கள்
இரத்தமும் தசையுமாக உயிரோடு
உலாவிக் கொண்டு இருந்த
இலங்கை மக்களின் உயிர்
காக்க உங்கள் கரங்கள்
இணையவில்லையே ஏன்?
பதில் உரையுங்களேன்.....!!

தொப்புள் கொடி சொந்தம்
என்று கூறும் நீங்கள் 
அந்த தொப்புள் கொடி அறுந்து
உயிர் துடிக்கும் போது நீங்கள்  வெடிக்கவில்லையே 
வெடிப்பட்டு உயிர்கள் மடியும்
போதும்  வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த இந்திய அரசிடம் ஒன்று
கூடி சென்று ஏதாவது கோரிக்கை 
முன் வைத்தீர்களா கூறுங்களேன்.

ஏன் அப்போது கல்லுரி
மாணவர்கள் இல்லையா
பல்வேறு அமைப்புக்கள் இல்லையா
தைரியம் பிறக்கவில்லையா
இல்லை துணிச்சல் இருக்கவில்லையா இரத்தம் கொதிக்க வில்லையா
அன்று துடிப்பான இளையோர்கள்
தான் இல்லையா அனைத்தும் உண்டு இரக்கமான மனந்தான் இல்லாமல்
போனது இதை மறுக்கின்றீர்களா?

ஒரு சிலர் குரல் கொடுத்தார்கள்
அது அவர்கள் சுயநலத்துக்காக
அரசியல் வாழ்வை காப்பாற்றவும் கைப்பெற்றவும் ஒரு ஆயுதமாக
இலங்கை மக்களின் அவல
நிலமையைத் தங்களுக்கு
சாதகமாக்கிக் கொண்டார்கள்.
இதை உண்மை  என ஒப்புக்கொள்ளுங்களேன். ...!!

உங்களால் எங்கள் நாட்டையோ
இல்லை சுதந்திரத்தையோ
நிச்சயம் பெற்றுத் தர முடியாது
அதை நான் ஒப்புக் கொள்கின்றேன்
ஆனால் நீங்கள் ஒன்று கூடி நின்று
முயன்று இருந்தால் சுடுகாட்டுக்கு
சுமை குறைந்திருக்கும்
விதவை பெயர் பட்டியல்
சரிவு கண்டு இருக்கும்
இலங்கையிலும் ஆண் மக்கள்
கொஞ்சம் அதிகமாக
இப்போது இருந்திருப்பார்கள் 
தந்தையை இழந்து வாழும்
மழலைகளுக்கு தந்தையோடுவாழும்  பாக்கியம்   ஒரு சிலருக்காவது கிடைத்திருக்கும்  என் கருத்து தவறா கூறுங்களேன்.....!!!

எத்தனை பெண்கள் இளம் வயதிலே கணவனை இழந்து இன்ப
துன்பங்களை இழந்து வீடு வாசல் இழந்து சமுதாயத்தில் ஒதுக்கப்பட்ட பாவிகளாக ஏக்கத்தோடும் வேதனையோடும்
வலிகளை நெஞ்சில் சுமந்த படி
கண்ணீர் சிந்தினாலும் போலியான புன்னகையோடு எத்தனை எத்தனை பெண்கள் இலங்கையில்
நடமாடுகின்றார்கள் இதை
எண்ணிப் பாத்தீர்களா .?

வேதனையை சொல்ல
ஒரு உறவு இல்லை
ஆறுதல் கூற ஒரு நண்பன் இல்லை
நல்ல நாள் பெரு நாளுக்கு
அழைப்பில்லை எத்தனையோ
அவலங்களை சுமந்து கொண்டு
வாழும் ஈழத்துப் பெண்களுக்காக
ஒரு நாள் இது போன்று ஒன்று திரண்டீர்களா?

இன்னும் சொல்லப் போனால் 
இலங்கை  அரசால் மட்டும்
ஈழத்துப் பெண்கள் கொடுமையை அனுபவிக்கவில்லை
வேலியே பயிரை மேய்வது போல் உதவுவதாக கூறி இலங்கைக்குள்
நுழைந்த இந்திய இரானுவத்தால்
தான் பல பெண்கள் கற்போடு சேர்த்து கணவனையும் பறி கொடுத்தார்கள் .

ஆனால் அதை எல்லாம்
ஒரு ஓரமாக வைத்து விட்டு
இன்று உங்களோடு இணைந்து
இந்தியன் என்று இல்லை தமிழன்
என்று தமிழ்  கலாச்சாரத்தை மீட்கவே
தமிழனோடு தமிழனாக குரல் கொடுக்கின்றார்களே
அதுதான் ஈழத்து மக்கள்
தாய் ஒதுக்கினாலும் சேய்
ஒதுங்கவில்லை
என்றும் ஈரம் உள்ள இதயம்
தான் ஈழத்து தமிழனின் இதயம்.

         

No comments:

Post a Comment