Monday 28 January 2019

கலைந்த கனவுகள்


என்ன சொல்வேன்
எந்த மொழியில் சொல்வேன்
என்னவருக்கும்
எனக்கும் இடையில் விழுந்த
விரிசலை...!!!!

விதையாய் வந்த ஆசை
காதலாய் வளர்ந்து
திருமணமாய்ப் பூத்து
நறுமணம் வீசும் வேளையிலே
விழுந்த விரிசலை நான் என்னவென்று
கூறுவேன் எப்படிக்கூறுவேன் ..!!!

வெள்ளை மனம் பிள்ளைக் குணம்
கொண்ட கள்ளம் இல்லாக் காவலந் தான்
என்னவன் சிலரின்  பெரு மூச்சியினால்
அடித்த புயலில் விழுந்ததே விரிசல்...!!!!

என்னை அறிந்த அவரும் அவரை
உணர்ந்த நானும் விரிசலின் இரு
பாதையிலும் நின்று தவிக்கும் கதை
யார் அறிவார் .....!!!!

முழுமதியாக என்னை ரசிப்பார்
முழுமையான இன்பம் கொடுத்தார்
முக்கனியும் உன் செவ்விதழ் போல்
இல்லையடி சுவை என்று குளிர்
மூட்டுவார் இன்று விரிசலினால்
தவிக்கவிட்டார்...!!!!!

இரு மனம் இணைந்த இல்லறத்தில்
இடையிலே வந்து விழுந்தது வறுமை
என்னும் நோய் அவையால் வந்த வினை
தான் விரிசல் ஆனது .!!!!

இந்நோயை வைத்தே அத்தை
வளர்க்க ஆரம்பித்தாள் வரதட்சணை
என்னும் விஷச் செடியை அதைப் பிடுங்கப்
பலம் இல்லாத் தந்தை மனம் இன்றி
அழைத்து வந்தார் என்னை தன்னுடன்..!!!

தாயா?  தாரமா?   என்று தடுமாறிய படி
என்னவர் கலங்கி நிற்கின்றார்
அங்கே...!!!!!

விரிவாக நான் உரைத்து விட்டேன்
எங்கள்  பிரிவின் காரணத்தை
என் எண்ணமே  அவர் தான்
பல கனவுகளோடு கரம் பற்றி
கலைந்த கனவுகளோடு
அன்னை இல்லத்தில்  வருந்திய
படியே   நான் .........!!!

               

No comments:

Post a Comment