Saturday 26 January 2019

என் அத்தானே

தென்னங்கீற்றோடு
விளையாடும் தென்றலே/
செவ்வாழையைத்  தடவும் தென்றலே/
மாங்கிளையை மோதும் தென்றலே/
என் அத்தான் வரவுதனை உரைப்பாயோ?  அவரின் உடலின் திரவிய வாசனையைத்
திரட்டியே கொண்டு வந்து /

விண்ணிலே உலாவி மண்ணுலகம்
நோக்கும் வெண்நிலவே /
ஓர் இடத்தினிலே தங்காமல்
ஓடியே உலாவும் வெண் முகிலே/
கருக்கல் வேளையிலே /
கரும்புக் காட்டுக்குள்ளே/
சென்ற என் அத்தான் வரவை
விரைந்து வந்து உரைப்பீர்களோ  ?

காலையிலே என் இல்லம்
கடந்து சென்று /
மாலையிலே மீண்டும் பறந்து
வரும் மாடப்புறாவே /
நெடும் தூரம் சென்றீரோ?
நெடுஞ்சாலையோரம் மர
நிழலில் அமர்ந்தீரோ  ?
அங்கே  களத்து மேட்டிலே
என் அத்தானைக் கண்டீரோ  ?

அத்தான் வரவைக் கண்டறியவே/
கண்டீரோ ?கண்டீரோ ?என்று /
நான் கதறுகின்றேன் /
நின்று பதில் சொல்லாமல் /
அத்தனையும்  நகர்கின்றதே ?
எத்தனை ஏமாற்றம்  அத்தானே /
உனது  உத்தமிப்  பொண்டாட்டி
எனக்குத்தான் என்   அத்தானே / 😜

No comments:

Post a Comment