Tuesday 19 March 2019

தென் மாங்கு

சொக்க வைத்த சுந்தரியே
சொந்தமென்று வந்து விடு. /
உன் சுண்டு விரல் கொண்டு.
சூடு கொஞ்சம் ஏத்தி விடு. .../

தனியாக வந்து நின்று விடு. /
பனி பட்ட என் உடலுக்கு
துணையாக சேர்ந்து விடு. /
கனி இதழைத்  தந்து விடு./

விழி மொழியை நிறுத்தி விடு. /
மடி மீது இடம் ஒதுக்கி விடு. /
உன் கொடி இடை தொடும்  சேலைக்கு விடுதலை கொடுத்து விடு..../

கூடலும் ஊடலும்
நமக்குச்  சம பங்கு /
கூடி விட்டால்
உன் வெட்கமும் நாணமும்
அச்சமும் 
தயக்கமும்  பறந்து விடும் இங்கு/

அன்பே  என் நெஞ்சணை உமக்கு
பஞ்சணையாக   மாறிவிடும்  /
பெண்ணே நாம் பாடலாம் நித்தமும்
புதுப் புது   தென்மாங்கு /

     

Saturday 16 March 2019

ஏனிந்த மயக்கம்

காந்தக் கண் கண்டேன்
என் நாணம் மறந்தேன் /
அழகிய உரை கேட்டேன்
அனுதினமும் உனை நினைத்தேன் /

முறுக்கு மீசைக் காரா
முறுக்கி எடுக்கிறது உன்
மேல் எழும் ஆசையடா /
கருத்த கன்னத்திலே
கிறுக்குத்தனமாக ஓர்  முத்தம்
கேட்டிடவே ஆசை முட்டுதடா /

ஒரு நொடி உனைப் பார்த்தேன்/
மறு கனம்  மயக்கம் கொண்டேன் /
என்ன மந்திரம் செய்தாயோடா ?
தந்திரத்தில் வசியம் வைத்தாயோடா /

ச்சும்மா  ச்சும்மா  சிரிக்கின்றேன் /
மாமா என்று உன்னை தனிமையிலே
நின்று  ரகசியமாக அழைக்கின்றேன் /
ஊசி மிளகாய்  சொல் காரி என்னை
சொக்க வைத்து விட்ட கதை கேளடா /

மயங்கிய மங்கை கரம் பிடிப்பாயோ?
மயக்கம் மட்டும் கொடுப்பாயோ?
கட்டில் இடுவாயோ ?கட்டி அணைப்பாயோ? நான் அறியேன்/ பெண்மை உன்னைக்  கண்ட நாள்
முதல் மயங்கியவை உண்மையடா ./

Friday 15 March 2019

ஐத்தானே

கடல் போல் கற்பனை வளர்த்தேன் /
கடுகளவும் கவிதை எழுதவில்லை /
வானளவு கனவு கண்டேன் /
எடுத்துரைக்க வார்த்தை எழவில்லை/

அலை போல் ஆசை உசுப்பி விடவே/
புரண்ட படியே பல ராத்திரி உறக்கம் இழந்தேன் /
உருண்டு உருண்டு புரண்டு புரண்டு
பார்த்தும் /
தூக்கம் வர மறுத்தது /
விடியும் வரை விழித்திருந்தே/

அத்தானே அத்தனையும் உன்னிடம் சொல்லிடவே நினைத்திருந்தேன்/
உந்தன் முகம் பார்த்ததுமே  முத்தான வார்த்தையெல்லாம் வெட்கத்துக்கு சொத்தாகிப் போனதையா /

பஞ்சணையில் மூர்க்கம் மிஞ்சவேணுமே/
உன் அஞ்சு விரல் கெஞ்ச வேணுமே /
கஞ்சம் இன்றி முத்தம் சிந்த வேணுமே/
நீ மெல்ல மெல்ல காதில் சேதி
சொல்லச் சொல்ல  நான் சின்னச்
சின்ன நாணம் அள்ளிட வேணுமே/

என் ஐத்தானே இத்தனையும்
உரைத்திடவே நான் நாள் எண்ணி
எண்ணிக் காத்திருந்தேன் /
உன் கண்கள் பார்த்ததுமே அத்தனையும் வெட்கத்தின் பக்கத்தில் உறங்கிடிச்சே/

    

Thursday 14 March 2019

என்ன குறை கண்டாய்


ஈழத்து எழுத்திலே
என்ன குறை கண்டாய் /
இழுக்கான சொல் கொண்டு
குறை உரைக்கின்றாய் /

ஈழத்து எழுத்தில் எழில்ச்சி
பொங்க வில்லையா?
ஈழத்துக் கவிதையில்
புரட்சி தங்கவில்லையா?

(என்ன குறை  நீ கண்டு விட்டாய் )

ஈழத்து எழுத்தாளர்கள் ஈரமிக்க
சொல் தொடுக்க வில்லையா?
ஈழத்து எழுத்துக்குள்
பெண்மை போற்றப் பட வில்லையா?

ஈழத்து பெண் எழுத்தாளர்களின்
வரிக்குள்ளே தீப்பொறி சொல்
திணிக்கப் படவில்லையா?
ஈழ மண்ணில் பிறந்தவன்
வார்த்தைக்குள் அகில உலக
மண்ணும் இணைக்கப் பட வில்லையா?

(என்ன குறை நீ கண்டு பிடித்தாய் )

ஈழத்துக் கவிஞன் கவிதையிலே
சமுதாய சிந்தனையும்
கலக்கப் படவில்லையா ?
ஈழத்தில் இருப்பவனின்
எழுதுகோல்  அவலங்களை
ஆழ்மனதினிலே வலியோடு
கிறுக்க வில்லையா?

(என்ன குறை நீ கண்டு பிடித்தாய்)

வீரம் பிறந்த மண்ணில் இருந்து
வேங்கையென பாய்கிறதே
பல பதிவுகள் இவைகள் உமது
கண்ணுக்குத் தென்படவில்லையா?
சாதி மடையர்களை சாடி சாட்டை போல் வரிகளோடு வரும் பதிப்புக்களை
நீ கண்ணுற்றதில்லையா?

(என்ன குறை நீ கண்டு பிடித்தாய்)

வன்முறையை தூண்டினால்
வன்மையாகக் கண்டித்தபடி
துடிப்போடு தொடர்ந்து எழுதும்
இளைஞர்களின் தொடர்களை
நீ படித்ததில்லையா?
எக்குறை நீ கண்டாய்  என்று
கொக்கரிக்கின்றாய் நின்று /

(கூறி விடு என்ன குறை நீ கண்டு பிடித்தாய்)

ஈழத்து உறவுகள் செதுக்கும்
பந்தியிலே சிசுக்கொலை
மங்கையர்களின் கற்பழிப்பு
கங்கை நீர் மறுப்பு 
எங்கும் விவசாயி களின்
கண்ணீர் கதையின் தவிப்பு
நாதி இன்றி வறுமையில்
ஏங்கும் முதியோர்களின் பராமரிப்பு
இவைகளை முன் நிறுத்தி
சொல் தொடுத்து பக்கம்
பக்கமாய் போடவில்லையா ?
இவைகளை இன்னும் உங்கள்
கண்கள் புரட்டிப் பார்க்க வில்லையா ?

(எக்குறை ஈழத்து எழுத்தாளர்களிடம் நீ கண்டு உரை என்னும் பெயரிலே குரைக்கின்றாய் பலர் முன்பு நின்று)


இழிவான பிறப்புக்கள்

காதல் என்று கூறியே
பெண்ணை அழைக்கின்றாய் /
காயங்கள் கொடுத்து
மனதை வதைக்கின்றாய் /
காகிதமாகவே நினைத்துக்
கசக்குகின்றாய் /
காமப் பசி தீத்து முடிக்கின்றாய் /

கலங்கும் கண்ணீரையும்
கண்டுக்காமல் /
கலங்கப் படுத்தி சிரிக்கின்றாய் /
கயவனே உன் நெஞ்சம்
கல்லாய்ப் போனதோ?
கறையான் அரித்து
இதயமும் வீணாய்ப் போனதோ ?

கன்னியர்களை எண்ணி எண்ணிக்
கலங்கப் படுத்தி விட்டு /
கன்னியமாய் உலாவிய கள்வனே /
திருமதியெல்லாம் வெகுமதியில்லாத
பொருளாக மாற்றி விட்டு/
திமிரான பேச்சோடு
வீராப்பு நடை போட்ட வஞ்சகனே /

நெஞ்சம் பதைக்குதையா
நஞ்சை  வாயில் தினித்து விடச்
சொல்லி  என் ஆத்மாவும் குமுறுதையா /
கரிச்சிக் கொட்டுகின்றது உன்னை நாடு/
புலம்பலும் அலம்பலுமாய் துடித்து அழுகின்றது பல பெண் பிள்ளை வீடு/

துணைக் கரம் பிடிக்க தடை போட்டு
சாதி வெறிக் கொடி பிடிப்பான் /
மோகம் தலைக்கு அடித்தால்
அத்தனை சாதிப் பெண்ணையும் முகர்ந்தும் நுகர்ந்தும் முடிப்பான் /
எளிய சாதியும் இழிவான பிறப்பும்
இவனே என நாம் சொல்லி முடிப்போம் /

Tuesday 12 March 2019

என்னுள் நுழைந்த காதல் செந்தேனே

கனவோடு வந்து கலந்தவளே.
காதல் நரம்பின் வழியே நுழைந்தவளே.
கலைந்து விடாத கலைமுகத்தழகானவளே.
கரைந்து வருகிறது எனது
மோகமடி என்னவளே ...../

இரவெல்லாம் உறக்கத்திலே இதழ் கடிக்கிறாய்.
இதமான இன்பத்துக்கு என்னை அழைக்கிறாய்.
இச்சையெல்லாம்  காதோரம் சொல்லி முடிக்கிறாய்.
இமை திறந்து பார்த்தால் இருட்டறைக் காட்சியே கொடுக்கிறாய் ..../

வெட்கம் துறக்க பக்கம் நெருங்கி வாயேன்டி.
பட்டுக் கன்னத்தில் முத்தம் பதிக்க பத்தினியே என் அருகே வாயேன்டி.
பருவ காலப் பனியும் படர்ந்திருக்குதடி.
பட்டு மெத்தை தான் விரித்து பர பரப்புடன் நான் காத்திருக்கின்றேனடி ....../

இடை தொட தடை போடுவாயோ
சடை போட்ட கூந்தலிலே என் விரல்
நடை போட விடுவாயோ.
படையில்லா காதல் மன்னன்  நானடி
சிற்பச்சிலையே உன்னை நான் விடுவேனோ.
இரு விழி வழியே இதயம்  நுழைந்த கிளியே
காத்திருக்கின்றேன் நான் ஏரிக்
கரையில் தனியே ...../

ஒரு தலைக் காதல்

நீண்ட நேரம் தூங்கி எழ
ஏங்கிய நாட்கள் பல .
தூக்கம் என்னை
நெருங்காத வாறு
இருந்தவை ஒரு பெரும் கத. ..!

சுமை தாங்கிய இதயம்
இன்று இறக்கி விட்டது
சுமைகள் சில.
வெறுத்த தூக்கம்
நெருங்கி வந்து விட்டது மனம்
மாறிய மனைவியைப் போல. ..!

கண்கள் நீர் வடிப்பதை
நிறுத்தி விட்டது .
இன்றோடு அவனுக்காக
கவிதை எழுதுவதில் இருந்து
விடுதலை பெற்று விட்டது
விரல்களும் கூட. ...!

பூவை நான் பூச்சூட அனுமதி
இன்றி வாழ்ந்த ஆண்டு
எத்தனையோ.
இன்று வண்ண மலர்கள்
என் மேல் அமர்ந்து விட்டதே
இவை எப்படியோ....!

நீண்ட பெருமூச்சை
இழுத்து விட்டு விட்டேன்.
நிம்மதியான உறக்கத்தை
தொட்டு விட்டேன்....!

இனிமேல் அவன் எண்ணம்
என்னைக் குட்டி எழுப்பாது .
அவன் முகம் கனவில் தோனாது.
அவன் நினைவில் கலங்கும் கண்
இமை திறக்காது. ....!

கண்ணீர் துடைக்க கை துடிக்காது.
நீண்ட கவி வரிகள் உங்களை
நாடி வந்து தொல்லை கொடுக்காது.
என் உணர்வுக்கும் உணர்ச்சிக்கும்
ஆசைக்கும்  வேதனைக்கும் 
விடுதலை விடுதலை....!

கொண்டு செல்கின்றேன்
என்னோடு உன் மீது உருவான
ஒரு தலைக் காதலை....!!

   

ஆனந்த யாழம்

சுழண்டு வரும் காற்று
என்னை கிள்ளி விட்டுப்
போகிறது  .
கிள்ளிய காற்று வேகமாய்
நாற்றைக் கடக்கிறது....!

காற்றின் பிடியில் சிக்கிய
நாற்று நில்லாமல் நடனம்
புரிகிறது.
அதன் அருகே  மெல்லிய
மனம் பரப்பும் மல்லிகையும்
மலந்து சிரிக்கின்றது ...!

இரவு வேளையில் கொட்டும்
பனியில் குளித்து விட வளர்ந்த
மொட்டும் தயாராக எழுந்து
நிறைமதியாகவே இருக்கின்றது ...!!

கரு மேகமும் வட்டமிடுகிறது
நெடும் தூரம் பயணம்  செய்து
நீர் கொண்டு வருகிறது.
காலைக் கதிரவன்  உறங்கவே
நகர்கின்றான் ......!!

மாலைக் கருக்கல் நெருங்குகிறது.
சோலைக் கருங் குயிலும் கூவுகிறது.
கூண்டுக் கிளியும் பேசுகிறது.
மாலை வேளையிலே  நான்
கண்ட கோலம்  ஆனந்த யாழம்
என் கண்ணில்  அமர்ந்த வண்ணக் கோலம்..!

தமிழ் மொழியே மூச்சுடா

தமிழர் மீது எத்தனை 
எத்தனை  கோபம்.
தமிழ் மொழி உரைப்போருக்கு
எத்தனை விதமான சாபம்.
தமிழன் அத்தனையும்
பொறுக்க வில்லையா ?
தமிழால் அதை அடித்து
நொறுக்க வில்லையா ? .

சர்வதேச மட்டத்தில் இன்றும்
தமிழை மதிக்க வில்லையா?
அதை அவமதித்தோரும் கேட்டு
ரசிக்க வில்லையா ? .

தமிழ் வீரத்திலகம்
கட்டபொம்மனின் வரலாறு
உலகம் எங்கும் பரவவில்லையா ?
திருக்குறளை வேற்று
மொழியில் வகுக்கவில்லையா ?
ஈழத்து மண்ணிலும் தேசியகீதம்
தமிழ் மொழியில் ஒலிக்க வில்லையா?.

அழிக்க முடியாது தமிழையடா.
அழிந்து விடாது
தமிழனின் கொள்கையடா.
கூலியாக வாழ்ந்தாலும்
தலை குனியாத தமிழனடா.

மறைந்து  இருந்தாலும்
கதிரவன் போல் ஒளி
கொடுக்கும் தமிழ் மொழியடா.
ஆய்வு  நடத்தியே அறிந்த விடை
ஆதி மொழி தமிழ் மொழியடா.

என்றும் மரவு
காப்பவன் மரத்தமிழனடா.
மொழிக்கு எல்லாம் தாய்
மொழி தமிழ் தானடா.

முறத்தால் புலியை விரட்டியவள்
தமிழச்சி தானடா.
பிறமொழி உரைத்து வயிறு
வளர்த்தாலும் தமிழனுக்கு
தமிழ் மொழி மூச்சுடா.

Friday 8 March 2019

பெண்மை

கரு மேக மூட்டம் போல்
இருளுது மோகம் /
அதனாலே செங்கதிராய்
சிவக்கின்றதே  வதனம் /

அடி வானத்தின் பிடியில்
ஆழ் கடலைப் போல் /
காட்சி  கொடுக்கிறது
கண்ணில் ஏதேதோ ஆவல் /

சிதறிய முத்துக்களாய் /
உதறியெறிந்த நட்சத்திரமாய் /
படர்ந்த கொடியில்
மலர்ந்த முல்லையாய் /
உள்ளமெங்கும் பரப்பிலே
கிடக்கின்றது
உன் மேலான ஆசைகள்/

கொம்புத் தேனாய்  நீ இருக்க /
முடவனாய் நான் இருக்க /
இடையிலே காலம் கடக்க /
நெடு மரத்து தேன் எடுத்து
சுவைக்கத்தான்
காலம் கை கொடுக்குமோ ?

என்னென்ன
யாழங்கள்  செய்தாலும் /
எப்படி எப்படியோ
மாயங்கள் செய்தாலும் /
நோய் வந்து தேய்
பிறை போல் ஆனாலும்/
நெஞ்சத்தில் பாய்
போட்டு அமர்ந்த உன்னை /
போ என்று
விரட்டாது இந்தப் பெண்மை /

   

Thursday 7 March 2019

உதவா உறவு

உதவாத உறவென்று யாரைச் சொல்வேன்./
உதவுவோர் யார் என்று எண்ணிப்பார்த்தேன்/.
உதவாதோர் இருப்பதாய்
உணர்ந்து கொண்டேன் /
உதவாதோர் யார்
என்று சொல்ல வந்தேன்./

உறவு உண்டு உரிமை
உண்டு உண்மையோடு./
உறவு என்னு
உதவுவோர் யார் உண்டு./
உரிமையென வந்து உபத்திரம் கொடுப்போர் உண்டு./
உரி நேரத்தில் சென்று
அன்புக் கரம் நீட்ட எவர் உண்டு./

கோடி பணம் இருந்தால்
ஓடி வருவோர் உண்டு./
நாடித் துடிப்பு நின்ற பின்னும்
கூடி அழுவோர் உண்டு./
தேடிவந்த சொந்தங்களிலே
சொத்தைக் கணக்கிடுவோர்
தான் உண்டு./
வாயாடி போராடி பங்கு கேட்டே குதிப்போரே அதிகம் உண்டு. /

ஏழையானால் எளக்காரப்
பார்வையயை வீசுவோர் உண்டு./
ஏழை உறவு என்றால் பார்த்தும்
பாராது நடப்போர் உண்டு./
ஏற்ற தாழ்வை கண் எதிரே
காட்டி வலி கொடுப்போர் உண்டு./
ஏராளம் தாராளம் இவர்கள்
போல் நாட்டில் பலர் உண்டு./

பணத்துக்கு முன்
பாசம் கசப்பது உண்டு./
பணத்தைக் கண்டால்
வேசம் போடுவோர் உண்டு./
பத்துக்குப் பத்து கபட நாடகம்
போடுவோர் தான் அதிகம்  உண்டு./
பத்தி எரிகிறது மனம்
இவர்களின் போலி பாசம் கண்டு./

இந்த உறவுகளை அடையாளம் காண்பதில் சிரமம் உண்டு. /
இவைகளை உதறி விட்டு
வாழ வழி ஏது உண்டு./
இவர்கள் நடவடிக்கைகளை
கண்டு ஏங்குவோரும் உண்டு./
இவைதான் உறவுகளின் செயல்பாடு என்று தாங்குவோரும் உண்டு./

இது பற்றி விரிவாக சொல்ல விரும்பாதோர்
பெயர் பட்டியலில் நானும் உண்டு./
அடையாளப்படுத்தவோ நான் அவர்களைக் கொட்டு /
வேண்டாம் என்று விட்டு
விட்டேன் மன உறுதி பூண்டு./

Monday 4 March 2019

கன்னங் கருப்பழகி வெள்ளைச் சிரிப்பழகி

கன்னம் கருத்த புள்ள
கன்னத்திலே மச்சம் பதிச்ச புள்ள
கட்டழகு நிறைந்த புள்ள
சுட்டித் தனமான கன்னிப் புள்ள ...///

வெட்டருவாள் விழி அழகி
சுட்டெரிக்கும் சொல்காரி
வெள்ளைச் சிரிப்பழகி
தட்ட வடைக் கடையோரத்து
தெருக் காரி ......///

பட்டாசு  பேச்சழகி
பார்வையிலே பட்டமிளகாய்க்காரி
முல்லை மலர் குணத்தழகி
கண்டபடி பார்த்துப் புட்டா
கன்னாபின்னா  என்னு
திட்டித்தீர்க்கும் மோசக்காரி ....///

அடர்ந்த கூந்தல் காரி
அடுக்குமொழிக் காரி
விறுக்கு நடைக் காரி
எதிரியை வறுத்தெடுக்கும்
அழுத்தமான மனசுக்காரி .../

வெள்ளந்தியான சிங்காரி
செவ்வந்தி இதழ்காரி
மையிட்ட கண்ணிலே பொய்
உரைக்காத மகிழம் பூக்காரி  ..../

சிறு சந்தேகம் தான்

முன்னூறு எண்ணூறுறாக உயரலாம் /
எண்ணூறு இன்னும் ஒரு படி ஏறலாம்/
தப்பு இல்லை தக்க தண்டனை
என்று கூறுவதில் ஐயம் இல்லை /

முள்செடியை மட்டும் அறுத்தீர்களா?
விஷக் கொடியை மட்டும் எரித்தீர்களா?
என்ற வினாவுக்கு விடை மட்டுமே தேவை /
வீழ்த்தப் பட்டவை கொடிய மிருகங்கள் மாத்திரமா?
அப்படியானால் மகிழ்ச்சி உங்கள்
வீர முயற்சிக்கு வாழ்த்து/

விழும் நிலையிலான ஓலைகளையும் /
சிரித்து மகிழ்ந்திருக்கும் வளரும் மொட்டுக்களையும் /
சேர்த்து அழித்து விட்டு
உயிர்க்  கொல்லி நோய்களை அழித்து விட்டோம்  எனச் சொல்லி மார்பு உயர்த்திருந்தால் வெட்கப் படுங்கள் /

பாரத மாதாவும் மன்னிக்க மாட்டாள் /
ஜெய்ஹிந் என்று உரைக்காதீர்கள்/
ஈழத்து நிகழ்வு இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை /
அன்று கண்ட காட்சி கண்ணை விட்டு அழியவில்லை /

ஈழம்

எங்கும் உடைந்த வீடு /
ஆங்காங்கே சிதைந்த பாதை /
பார்க்கும் இடமெங்கும் முள்வேலி /
நடக்கும் வழியெங்கும் அடிக்கிய
மண் மூட்டை/

அதன் அருகே முறைத்த வாறு /
துப்பாக்கியை நீட்டிய படி ஒருத்தன் /
எத்திசை நோக்கினாலும் பாதுகாப்பு/
பகலிலும் பட படப் போடுதான்
வாழ்க்கைப் பயணம் /

பூமிக்கு இடியோடு மழை வர மறுத்தது/
செல் வெடியோடு குண்டு மழை /
பூமியை  தினம் துழைத்தது /
தென்னங் குலைகளோடு தென்னை
மரமும் சாய்ந்தது/

மரத்தோடு சேர்த்து தோட்டக் காவலனையும் கொன்றது /
நிலத்திலே வெள்ளம் பெருகி ஓட அனுமதியில்லை /
இரத்தோட்டம் மண்ணை அபகரித்தது/

இன்று புதிய தோற்றம் கண்டது /
மாடி வீடும் அரண்மனைபோல் இல்லமும் /
தெருவெல்லாம் புதுமையானது 
ஏற்றங்கள் பல தோற்றங்களானது /

ஆனாலும் ஏமாற்றம் மாறவில்லை /
ஏழையின் வறுமைத் தோட்டம் மலரவில்லை/
தமிழ் உரிமை பிறக்கவில்லை /
சமத்துவமான வாழ்வையும் காணவில்லை /

/நாடு செழிப்புற்றவை ஒன்றே
தான் உண்மை /

(புகைப்படம் மட்டக்களப்பு நுழை வாசல் )

   

Friday 1 March 2019

அயல் நாட்டுக் காதல்

மனம் திறந்தேன் மனதினில்
உனை வைத்தேன் மனம் கவர்ந்த
மணாளனாக நினைத்தேன்
மறைத்தே உன்னைக் காத்தேன்.....////

(மா)  (பலா)  என்ன சுவை
உன் வார்த்தை தானே இனிமை
அருளாக வேண்டும் உன் அன்பு தானே
ஆறுமுகன் பெயர் கொண்டவனே.....///

கண்ட இடமெல்லாம் காணும்
ஆலயத்தில் கையேந்திக் கேட்பது
வரமாய் உன் உறவைத்தானே
நான் தொழில் புரியும் வேளையிலும்
என் விழியில் ஒளியாக தோன்றுவதும்
உன் எழில் முகம் தானே. ......////

வட்டமிடும் பட்டாம் பூச்சு உனை
எதிர் பார்த்து வாட்டமுடன் இருக்கும்
செங்கமலம் நான்தானே.....////

வாழ்க வாழ்க என்று வாழ்த்துவோர்
வேண்டாம் வாழ்வோம்  நாம் வந்து
விடு மன்னவனே......//////

பிறந்த. நாடு எந்த நாடாகவும்
இருந்துட்டுப் போகட்டும்
இறக்கும் போது வேண்டும்
உன் வீடுதானே....../////

பிறந்த மண்ணில் புதையுண்டு
விட ஆசைதான் அதற்கு முன்
முகம் புதைக்க வேண்டும்
உன் மார்பினில் தானே......./////

உன் பாதம் தொடரும் துணையாக
வேண்டும் நான் கல்லறை சென்ற
பின்னும்  அங்கே அந்த நினைவினில்
மகிழ்ந்திட வேண்டும் என் ஆத்மா தானே.....////

     

கரு வண்டுக் கண்

சில்லென்று வீசிய காற்று
நில்லென்று சொன்னது நேற்று/
என்னவென்று வினாவினேன் /
பொன் வண்டுக் கண் ஒன்று
கண்டேன் என்றது என்னைப் பார்த்து/

தென்னங்கீற்றோடு மோதிய காற்று /
சொன்ன செய்தியைக் கேட்டு/
வியர்ப்போடு நான்கு திசையும் நோக்கினேன் /

கிழக்கே இருந்து சிட்டாக வந்தாள் ஒருத்தி/
மொட்டான வாயிதழ் திறந்தாள் /
சங்குப் பல்லைக் காட்டி புன்னகைத்து நின்றாள் /

வட்ட முகத்திலே வளைந்தபுருவம் /
புருவத்தின் அருகே ஒட்டியவாறு
நானும் கண்டேன் /
காற்று என்னிடம் உரைத்த
இரு கருவண்டுக் கண்களை /

தூக்கு வாளி

தூக்கு வாளியிலே
கேப்பைக் கூழ் எடுத்து /
தேக்க மர நிழல் வழியே
விறுக்கு நடை போட்டுப் போறாள்/ தூக்கணாங்குருவிக்கூடு கொண்டைக் காரி /

மண்ணை நோக்கி /
என்னைக் கடந்து அவள்
நடக்கையிலே இறங்கித்
துடிக்கிறது  எனது மனசு /

நிமிர்ந்து பார் அவளை எனச்
சொல்லியே நச்சரிக்கிறது என் வயசு/
ஓரக்கண்ணால் ஆரம்பித்து
ஏற இறங்க முழுமையாய்ப்  பாத்துப்புட்டேன்/

புறமுதுகு காட்டிப் போறாள்/
நெஞ்சத்தில் புரளியைக்
கிளப்பிப் போறாள்/

பேச்சுக் கொடுக்கத்தான் ஆசை /
வரம்புக் காட்டில் அலசல் புலசலாய்
காதில் விழுந்த கதை  /
அவள் வாய் திறந்தால் /
அரளிவிதையாய் விழுமாம் வார்த்தையென/

கன்னம் வெளுப்பான புள்ள/
கறுப்பு மச்சம் வைத்த புள்ள /
முறைத்துப் பேசலாமோ  ?
இந்த மச்சான்கிட்ட நீ சொல்லு புள்ள
புலம்பிக் கொண்டேன் தனிமையில்
நின்று கொண்டு நானுமடா மச்சி /😁