Friday 1 March 2019

தூக்கு வாளி

தூக்கு வாளியிலே
கேப்பைக் கூழ் எடுத்து /
தேக்க மர நிழல் வழியே
விறுக்கு நடை போட்டுப் போறாள்/ தூக்கணாங்குருவிக்கூடு கொண்டைக் காரி /

மண்ணை நோக்கி /
என்னைக் கடந்து அவள்
நடக்கையிலே இறங்கித்
துடிக்கிறது  எனது மனசு /

நிமிர்ந்து பார் அவளை எனச்
சொல்லியே நச்சரிக்கிறது என் வயசு/
ஓரக்கண்ணால் ஆரம்பித்து
ஏற இறங்க முழுமையாய்ப்  பாத்துப்புட்டேன்/

புறமுதுகு காட்டிப் போறாள்/
நெஞ்சத்தில் புரளியைக்
கிளப்பிப் போறாள்/

பேச்சுக் கொடுக்கத்தான் ஆசை /
வரம்புக் காட்டில் அலசல் புலசலாய்
காதில் விழுந்த கதை  /
அவள் வாய் திறந்தால் /
அரளிவிதையாய் விழுமாம் வார்த்தையென/

கன்னம் வெளுப்பான புள்ள/
கறுப்பு மச்சம் வைத்த புள்ள /
முறைத்துப் பேசலாமோ  ?
இந்த மச்சான்கிட்ட நீ சொல்லு புள்ள
புலம்பிக் கொண்டேன் தனிமையில்
நின்று கொண்டு நானுமடா மச்சி /😁

  

No comments:

Post a Comment