Thursday 14 March 2019

என்ன குறை கண்டாய்


ஈழத்து எழுத்திலே
என்ன குறை கண்டாய் /
இழுக்கான சொல் கொண்டு
குறை உரைக்கின்றாய் /

ஈழத்து எழுத்தில் எழில்ச்சி
பொங்க வில்லையா?
ஈழத்துக் கவிதையில்
புரட்சி தங்கவில்லையா?

(என்ன குறை  நீ கண்டு விட்டாய் )

ஈழத்து எழுத்தாளர்கள் ஈரமிக்க
சொல் தொடுக்க வில்லையா?
ஈழத்து எழுத்துக்குள்
பெண்மை போற்றப் பட வில்லையா?

ஈழத்து பெண் எழுத்தாளர்களின்
வரிக்குள்ளே தீப்பொறி சொல்
திணிக்கப் படவில்லையா?
ஈழ மண்ணில் பிறந்தவன்
வார்த்தைக்குள் அகில உலக
மண்ணும் இணைக்கப் பட வில்லையா?

(என்ன குறை நீ கண்டு பிடித்தாய் )

ஈழத்துக் கவிஞன் கவிதையிலே
சமுதாய சிந்தனையும்
கலக்கப் படவில்லையா ?
ஈழத்தில் இருப்பவனின்
எழுதுகோல்  அவலங்களை
ஆழ்மனதினிலே வலியோடு
கிறுக்க வில்லையா?

(என்ன குறை நீ கண்டு பிடித்தாய்)

வீரம் பிறந்த மண்ணில் இருந்து
வேங்கையென பாய்கிறதே
பல பதிவுகள் இவைகள் உமது
கண்ணுக்குத் தென்படவில்லையா?
சாதி மடையர்களை சாடி சாட்டை போல் வரிகளோடு வரும் பதிப்புக்களை
நீ கண்ணுற்றதில்லையா?

(என்ன குறை நீ கண்டு பிடித்தாய்)

வன்முறையை தூண்டினால்
வன்மையாகக் கண்டித்தபடி
துடிப்போடு தொடர்ந்து எழுதும்
இளைஞர்களின் தொடர்களை
நீ படித்ததில்லையா?
எக்குறை நீ கண்டாய்  என்று
கொக்கரிக்கின்றாய் நின்று /

(கூறி விடு என்ன குறை நீ கண்டு பிடித்தாய்)

ஈழத்து உறவுகள் செதுக்கும்
பந்தியிலே சிசுக்கொலை
மங்கையர்களின் கற்பழிப்பு
கங்கை நீர் மறுப்பு 
எங்கும் விவசாயி களின்
கண்ணீர் கதையின் தவிப்பு
நாதி இன்றி வறுமையில்
ஏங்கும் முதியோர்களின் பராமரிப்பு
இவைகளை முன் நிறுத்தி
சொல் தொடுத்து பக்கம்
பக்கமாய் போடவில்லையா ?
இவைகளை இன்னும் உங்கள்
கண்கள் புரட்டிப் பார்க்க வில்லையா ?

(எக்குறை ஈழத்து எழுத்தாளர்களிடம் நீ கண்டு உரை என்னும் பெயரிலே குரைக்கின்றாய் பலர் முன்பு நின்று)


No comments:

Post a Comment