Friday 1 March 2019

கரு வண்டுக் கண்

சில்லென்று வீசிய காற்று
நில்லென்று சொன்னது நேற்று/
என்னவென்று வினாவினேன் /
பொன் வண்டுக் கண் ஒன்று
கண்டேன் என்றது என்னைப் பார்த்து/

தென்னங்கீற்றோடு மோதிய காற்று /
சொன்ன செய்தியைக் கேட்டு/
வியர்ப்போடு நான்கு திசையும் நோக்கினேன் /

கிழக்கே இருந்து சிட்டாக வந்தாள் ஒருத்தி/
மொட்டான வாயிதழ் திறந்தாள் /
சங்குப் பல்லைக் காட்டி புன்னகைத்து நின்றாள் /

வட்ட முகத்திலே வளைந்தபுருவம் /
புருவத்தின் அருகே ஒட்டியவாறு
நானும் கண்டேன் /
காற்று என்னிடம் உரைத்த
இரு கருவண்டுக் கண்களை /

No comments:

Post a Comment