Thursday 30 July 2020

பிள்ளை அணிலே



பிள்ளை அணிலே நீ
மெல்லச் சொல்லு.
மஞ்சள் வண்ணக் கனியை
மென்ற பின்னே சொல்லு.

நெஞ்சத்திலே மண்டியிட்டு
மனசுக்குள்ஆசையைத் 
தூண்டி விட்டு.
காதல் கவிதையொன்றை
கிள்ளி விட்டு.
என்னைக் கவிஞர்களின்
கடலுக்குள்ளே தள்ளி  விட்டவனின்
தோட்டம் சென்றாயா.
அங்கே அவனைக் கண்டாயா.

வண்டி ஓட்டி வந்து 
தண்ணித் தொட்டியருகே நின்று.
கண்டிக் குளிரில் சிக்கிய உடல் போல
இந்தப் பெண்டியை நடுங்க வைத்துச் சென்ற அந்தப் பண்டிதர் முகம் கண்டாயோ 
இல்லை பட்டணம் தான்  சென்று விட்டாரோ.
நீயும் எட்ட நின்று பார்ந்து வந்திடுவாயோ?

Tuesday 28 July 2020

பூவே பூவே

பூவே பூவே உன் புன்னகை எங்கே..?
காதல் புயலடித்துப் போனதோ ...?
சோகப் புயல் புரட்டிப் போட்டதோ.... ?
கொடும் கோபம் கடும் சொற்கள்.... ?
கடுகு போல் தெறிக்கின்றதே ....?

பூவே பூவே கரு வண்டு சுற்ற வில்லையோ ...?
கரு மேகம்  மழை நீர் கொட்ட வில்லையோ ...?
காத்திருக்கும் நேரத்திலே 
சேர்த்தணைக்க கரம் நீளவில்லையோ....?

பூவே பூவே புதையுண்டு போன 
புன்னகையை விதை என்று 
நினைத்து  விடு அன்புக் கதை 
கொண்டு நீர் இடு முளையிட்டு வளர்ந்திடுமே ...../

பூவே பூவே வாடாதிரு 
பனி தொட்ட மலராய் மலந்திரு  கனி பிறக்கும் காலம் வரும் காய்த்து கனிந்து விட்டால் பூவுக்கு அதுதானே வரம் ...../


Saturday 25 July 2020

கம்பன் எழுதாத கவிதை

#ஓவியக்கவிதை

கம்பன் எழுதாத 
வரிகள் கொடுக்கின்றது.
உமது விழிகள்.

அவன் கரங்களில்
சிக்கிடாத சொற்களையெல்லாம் 
வாரிக் கொடுக்கின்றது.
உனது இதழ்கள்.

தேக்கு மரம் என்றான்
சின்ன யானை என்றான் 
ஓர் பெரும் கவிஞன்.

அத்தனையும் ஓரம் கட்டி
காமக் கடலை வாரிக் 
கொடுக்கிறது.
என்னிடம் உமது உடல்கள்.

உன் கட்டு மீசை குட்டிக்
கவிதை எழுதும் வண்ணம்.
கொட்டிச் செல்கிறது 
புதுப் புது வர்ணனைகள்.

விரிந்த மார்பில் 
தெரிந்து பாதி தெரியாமல் மீதி மறைந்திருக்கும் முடிகள் .

என் விழியின் பாதை நோக்கி  
ஓடி வந்து 
எனது மூடிய நெஞ்சத்தில்
கூடி நின்று.
கொடுக்கின்றது சுவையோடு
காதல் பாடல்கள்.

மின்னிடும் பொன்னும் 
மலந்திடும் மலரும்.
உந்தன் புன்னகை முன்னே 
வெறும் மண்ணுளிகள்.

கறுக்காத வானம் 
கறுத்திடும் மேகம் 
உறங்காத காற்று
ஓட்டம் நிறுத்தாத முகில்.

இத்தனையும் குறுக்கே வந்து
மறித்தாலும்  மறைத்தாலும் 
காத்திருக்கும் உந்தன் முகம் 
பார்த்திடவே எந்தன் விழிகள்.



(ஓவியருக்கு வாழ்த்துகள்)

Tuesday 21 July 2020

அனாதையாக

கடந்த காலம் வாழ்வைப் 
புரட்டிப் போட்டது.
நிகழ் காலம் ஆசைகளை
உடைத்துப் போட்டது.
எதிர் காலம் பெரிதாக
எதைக் கொடுக்கப் போகின்றதோ?

உள்ளத்திலே 
ஒவ்வொரு நினைவுகளும் 
உளியாகக் குத்துகின்றது.
இதயத்திலே நிறுத்திய 
எண்ணமெல்லாம்
 ஊசி போல் தைக்கின்றது.

நெஞ்சத்திலே படர விட்ட 
கற்பனையெல்லாம் 
கரிகிப் போகின்றது.
ஆயிரம் ஆயிரம் எதிர் 
பார்ப்புக்கள் எல்லாம் 
கண்களோடு
நின்ற வாறே எரிகின்றது.

ஊமையாக மனம்
தனிமையிலே அழுகின்றது. 
உண்மையிலே என் ஆத்மா 
அனாதையாக அலைகின்றது. 

 

Friday 17 July 2020

காதல் கவிதை

கட்டழகு கண்ணாளனே

கட்டழகு கண்ணாளனே 
எனதுள்ளம் பெட்டகமானதடா/

எட்டி எட்டி நீ  நகர்ந்தாலும் /

உனைத் தொட்டிடவே வட்டமிட்டு ஏங்குதடா /

மயக்கிடும் தேக்குமர உடல் 
கண்டு/

பாக்கு மாத்திக்க என்னிதயம் 
துள்ளுதடா/


மடிப்புக் கலையாமல் வேட்டி 
கட்டி/

உடும்புப் புடியாய்க் கரம் 
கோர்த்து /

வட்டார மக்களெல்லாம் பார்த்து வியந்திடவே /

ஊர்வலமாய் உன்னோடு வந்திட வேண்டுமடா/

மறவு மாறாத பந்தமொன்று
கொடுத்திடுடா /

உருண்டு திரண்ட அங்கத்திலே 
நானும் /

மரவுக் கவிதையொன்று படித்திட வேண்டுமடா/

அங்கொன்று இங்கொன்று பருக்கள் பூத்த /
கன்னத்திலே வெக்கத்தோடு முத்தமிட வேணுமடா /

Wednesday 15 July 2020

15-7-2020

அரட்டைக்காகவா இல்லை
இடைவேளையில்  காமக் 
கதைத்  திரட்டுக்காகவா?
புறப்பட்டு வருகின்றனர்  
ஒரு சிலர்  பேதைகளின் 
முகநூல் பக்கங்களிலே.

நூல் விட்டு வால் விட்டு
பொய்களை அள்ளி விட்டு.
வட்டமிட்டு நோட்டமிட்டு
அப்பாவி பெண்களின்
மனவலிமையைக் கணக்கிட்டு.

கட்டுக் கதைகளை 
அவிழ்த்து விட்டு
கறந்திடப் பார்க்கின்றார்கள் 
காசுக்கட்டை.
அடியே  முட்டாள் பெண்ணே 
நீ அறிந்து உணர்ந்து நகர்ந்து 
எட்டிச் செல்லடி கண்ணே.

எறும்பைக் கரும்பு கற்பழிச்சு தாம்.
இது ஒரு விசித்திரக் கதை.
அதை விம்மலோடும் அழுகையோடும்.
சொல்லிக் கொண்டு படைக்கப் 
பார்க்கிரான் ஒரு சரித்திரதத்தை.

வேண்டாமடி பெண்ணே 
அந்தத் தரித்திரம் 
அதைத் துரத்தி விட்டு
திருத்தமான கருத்தை 
நேர்மைத் திருத்தியோடு 
உரைப்போரை சேர்த்தும் சேர்ந்தும் 
பயணப் பட்டுக்கோடி கண்ணே.