Thursday 29 October 2020

சொல் பெண்ணே சொல்

உன் -அங்கம் தொட்ட 
மழைத்துளிகளை எங்கும்
நகராமல் வங்கு அமைத்திடவா...?

நீ-பாதம் சலவை செய்த
ஓடைநீரை ஓட விடாமல் 
அடைப்புப் போட்டு விடவா...?

உமது -பொன்னான 
மேனியைப் படம் பிடித்த 
மன்னலை வரவழைத்து
கண்களால் கைது செய்திடவா ..?

உனது- கார்காலகக் கூந்தலை
தொட்டுக் கற்பழித்த 
வாடைக் காற்றை சாடியினுள்
இட்டு மூடிக் கொள்ளவா ..?

இல்லை -தேவியுமது அழகு 
கண்டு தேவலோகப் பக்தன்
பூ மழை தூவி  பாதம் 
தொட்டதாய் எண்ணி 
அனைத்தையும் விட்டு விடவா ..?

சொல் கண்ணே சொல்
செவ்விதழ் திறந்து 
செங்கரும்பின் 
சுவை போல் ஓர் சொல் 
சொல் பெண்ணே சொல்./


Tuesday 27 October 2020

மதுரை மல்லி



ஆளைத் தூக்கிடும் குண்டு
மல்லி.
வாழாக் குமாரி நட்ட
மல்லி.
வாழைத் தோப்பு பக்கத்து 
மல்லி.
என்னை வளைச்சுப் போட்ட 
சின்னமல்லி.

வாடைக் காற்று தொட்ட 
மல்லி.
பருவ மழை முத்தமிட்ட 
மல்லி.
காலைப் பனி போர்த்திய 
மல்லி.
மாலையிலே மலர்ந்திருந்த 
வெள்ளை மல்லி.

சாரைச் சடையில் ஏறிடும் 
மல்லி.
சாமத்துச் சல்லாபம் கண்டிடும்
மல்லி.
சங்கதியின் போது கசங்கிடும் 
மல்லி.
சங்கோசம் கொண்டு உதிர்ந்திடும் 
மதுரை மல்லி.


Monday 26 October 2020

விடை கொடு அன்பே

தூங்கிடும் விழிகளுக்குள் .
தூங்காமல் கனவு 
தூண்டில் போட்டால்.
ஏங்கிடும் நெஞ்சம் 
என்ன செய்திடும்.

விளைந்திடும் 
கற்பனையெல்லாம்.
காதலாய்ப் பூத்தால்.
அனர்த்தம் கொண்ட மனம் 
எப்படி வாங்கிடும்.

சுத்திகரித்த குருதியும்.
உன்னைக் கொண்டு 
மூளையிலே நிறுத்தினால்.
மத்தியிலே இருக்கின்ற 
சிந்தனை எங்கு சாந்திடும்.

இரவும் பகலும் 
செவிகள் இரண்டும்.
இளையராஜா 
இசையிலே மயங்கினால்.
ஆசைகள் பெருகாமல்
எப்படி அடங்கிடும்.

வாடைக் காற்றும் 
கோடை மழையும்
ஆடை களைத்து 
இடையைக் கிள்ளினால்.
பாவம் அந்த மடமைப் பெண்
மண மேடை தேடிடும் 
எண்ணத்தை  எப்படி 
உள்ளத்தால் அடைத்து வைப்பாள்.

Thursday 8 October 2020

மௌன ராகம்



உன் நினைவில் ஒரு 
சோகம்.
அதிலே எழுகின்றது 
தனிமையில் ஓர் இனிய 
ராகம்.

கனியாத காயாக
நானும்.
கனி தேடிடும் கிளியாக
நீயும்.

புலரும் பொழுதெல்லாம் 
ஏமாற்றம்.
பொழுது செல்லச் செல்ல 
தடுமாற்றம்.

உன் குரல் தேன் தமிழில்
உரைத்திடையிலே .
எனக்குள் நிறைகின்றது 
இன்ப வெள்ளோட்டம்.

நீ நிறுத்தி சென்று விட்டால் 
மறு கனம் வறட்சி 
நோக்கி  விரைகின்றது
 எந்தன் மன வாட்டம். 

ஒத்தையிலே நித்தம் 
நான் பாடும் ராகம் 
உன் நினைவினால்
பிறந்திடும் மௌனராகம்.


Tuesday 6 October 2020

பைங் கிளியே பேசு புள்ள


கத்தாழக் கண்ணு புள்ள /
குத்தாலப் பார்வப் புள்ள/
வெத்தலயப் போட்ட புள்ள /
விவரம் அறியாத புள்ள /
சுத்தலில விடாத புள்ள /

நேத்து வரை நீ சின்னப் புள்ள/
இன்றிருந்து நீ கன்னிப் புள்ள/
மாத்தணும் நான் மால புள்ள/
போர்த்திக்கணும் ஒரு போர்வ புள்ள/

என்னோடு கொம்பு தீட்டாதே புள்ள /
ஆத்தோரம் வம்பு இழுப்பேன் புள்ள /
பெத்த ஆத்தா சொன்னா புள்ள /
நீ  என்   சொத்தாம்   புள்ள /

தாக்கத்தி எடுத்த கை புள்ள /
பூக் கொத்து பறிக்குது புள்ள /
பட்டமிளகாய் போலே  முறைக்கும் புள்ள /
கடுகைப் போல் வெடிக்காதே புள்ள/
மவுனம் கலைச்சு  என்னிடம் நாலு/ வார்த்தையேனும் பைங்கிளியே 
பேசு புள்ள/


தன்பிக்கை

அடுத்தடுத்து 
தோல்விகளைக் கண்டவன் .
அத்தி வாரம் 
உறுதியான 
கட்டிடமாய்  மாறுவான்.

அடி எடுத்து எடுத்து 
வைத்திட வைத்திட 
ஏமாற்றம் கொண்டவன்.
பலமான மரமாய் ஆகிறான்.

முயற்சி பண்ணப் 
பண்ண வீழ்த்தப் படுபவன். 
இடி தாங்கும் நிலமாய் 
பிடிவாதம் கொள்கிறான்.

விழுந்து எழுந்த பின்னே 
விடா முயற்சியிலே 
முழுமை அடைகிறான்.

தோல்வியைத்  தோளில் 
சுமந்து  சென்றே 
இறுதியில் தலையில் 
கிரீடம் ஏற்றுகிறான்.

இதற்குக் காரணம் 
வேறு ஒருவர்  இல்லை 
அவன் உள்ளே 
இருக்கும் தன் நம்பிக்கை.